மயக்கி மருட்டும் சில சொற்கள்.

Status
Not open for further replies.
ஆற்றில் ஒரு காலும், சேற்றில் ஒருகாலும்,

அமைத்துக்கொண்டு அல்லாடும் எனக்கு

கிடைக்கும் நேரமோ மிகவும் குறைவு!
:frusty:

முடிந்தவரையில் முயன்று செய்கின்றேன்.

விடுபட்டப் பொருளையும் அளிப்பவருக்கு
விரும்பி அளிப்
பேன் நன்றிகள் பல நூறு.:clap2:
 

#116.
மாரி = மழை.
மாறி = மாற்றம் அடைந்து.
#117.
விரகு = தந்திரம்.
விறகு = கட்டை.
#118.
விரல் =கை விரல்கள்.
விறல் = வலிமை.

#119.
அரன் = சிவன்.
அரண் = கோட்டை.
#120.
அன்னம் = சோறு.
அண்ணம் = மேல் வாய்.
 
#121.
அனை = தாய்.
அணை = அணைக்கட்டு, தழுவு.
#122.
ஆனி = ஒரு தமிழ் மாதம்.
ஆணி = இரும்பு ஆணி.
#123.
ஆனை = யானை.
ஆணை = கட்டளை, சத்தியம்.

#124.
ஆன் = பசு.
ஆண் = ஆண் மகன்.
#125.
இனை = வருத்து.
இணை = ஒப்பு, சேர்த்தல்.
 
#125.
இனை = வருத்து.
இணை = ஒப்பு, சேர்த்தல்.

இணை கோடுகள் என்பதில் 'இணை' = ஒப்பு
இணை கோடுகள் சேராத கோடுகள் என்பதுதான் வியப்பு!
 
ஒருவேளை ஒப்பு, சேர்த்தல் என்ற இரு பொருளும் வருவதால்,

இணை கோடாய்ச் செல்லும் ரயில் தண்டவாளங்கள்,

தூரத்தில் போய்ச் சேருவதுபோலத் தெரிகிறதோ! :decision:
 
"உனக்கு இணை யாரும் இல்லை!" என்னும் போது
"உனக்கு ஒப்பாக யாரும் இல்லை!" என்ற பொருளில் வருகின்றது.

"இணையும் இதயங்கள்" என்னும் போது
"ஒன்று சேருவது" என்ற பொருளில் வருகின்றது.

"இணைகோடுகள் இணை பிரியாதவை."
அவைகள் ஒன்று சேர்ந்தால் ஒரு கோடு ஆகிவிடும்,
இரு கோடுகளாக இரா.

ஒன்றும் சேர
வும் கூடாது, இணை பிரியவும் கூடாது என்பதனால்
அவை எப்போதும் இணைந்தே செல்கின்றன.
:laser:
 
பொருள் புரியாததால் கேட்கவில்லை!!

தண்டவாளங்கள் தரும் பிரமையைக் குறிப்பிட்டேன்! :bowl:

ராஜி ராம்
 
தகுந்த சந்தர்ப்பம் வந்ததால்,

தண்டவாளங்களும் நம்மை

மயக்கியும் பின் மருட்டியும்
மன மகிழ்கின்றன போலும்!
:laugh:
 
#126.
உன்னி = நினைத்து.
உண்ணி = ஒரு பூச்சி.
#127.
உன் = உன்னுடைய.
உண் = சாப்பிடு.
#128.
உன்னுதல் = நினைத்தல்.
உண்ணுதல் = சாப்பிடுதல்.

#129.
ஊன் = மாமிசம்.
ஊண் = உணவு.
#130.
என்ன = ஒரு கேள்வி.
எண்ண = நினைக்க.
 

#131.
எவன் = யார்.
எவண் = எவ்விடம்.
#132.
னை = மற்றை(ய) .
ஏணை = தொட்டில்.
#133.
கன்னன் = கர்ணன்.
கண்ணன் = கிருஷ்ணன்.
#134.
கனம் = பாரம்.
கணம் = கூட்டம், வினாடி.
#135.
கனி = பழம்.
கணி = சோதிடன்.
 
Last edited:

#136.
கனை = ஒலி எழுப்பு.
கணை = அம்பு.
#137.
கன்னி = மணமாகாத பெண்.
கண்ணி = மாலை.
#138.
கான் = காடு.
காண் = பார்.
#139.
குனி = வளை(தல்).
குணி = குணத்தையுடையது.
#140.
சோனை = அடைமழை.
சோணை = ஒரு மலை.
 

#141.
தனி = தனிமையான.
தணி = குறைப்பாய்.
#142.
தன்மை = இயல்பு.
தண்மை = குளிர்ச்சி.
#143.
தினை = ஒரு தானியம்.
திணை = ஒரு ஜாதி.
#144.
தின் = உண்.
திண் = வலிய.
#145.
துனி = வெறுப்பு, துன்பம்.
துணி = ஆடை, வெட்டு, முடிவுசெய்.
 

#146.
துனை = விரைவு.
துணை = உதவி.
#147.
நானம் = கஸ்தூரி.
நாணம் = வெட்கம்.
#148.
நான் = யான்.
நாண் = கயிறு, நாணம்.

#149.
பன்ன = சொல்ல.
பண்ண = செய்ய.
#150.
பனி = குளிர்ச்சி.
பணி = ஆணை, கட்டளை, வேலை.
 

#151.
பனை = ஒரு மரம்.
பணை = பருத்த.
#152.
பானம் = குடிக்கும் பொருள்.
பாணம் = அம்பு.
#153.
புனை = அலங்கரி.
புணை = தொப்பம்.
#154.
பேன் = ஒரு சிறு பூச்சி.
பேண் = காப்பாற்று.
#155.
மன் = அரசன்.
மண் = பூமி.
 

#156.
மனம் = உள்ளம்.
மணம் = வாசனை.
#157.
மனை =வீடு.
மணை = பலகை.
#158.
மான் = ஒரு வி
ங்கு.
மாண் = பெருமை.
#159.
மானி = மானமுள்ளவன்.
மாணி = குருவடிவம், பிரம்மச்சாரி.
#160.
வன்மை = வலிமை.
வண்மை = கொடை.
 
# 161.
அந்நாள் = அந்த + நாள்.
அன்னாள்= அத்தகையவள், போன்றவள் .
# 162.
இந்நாள் = இந்த + நாள்.
இன்னாள் = இத்தகையவள்.
# 163.
எந்நாள் = எந்த + நாள்.
என்னாள் = என்று சொல்ல மாட்டாள்.
#164.
எந்நாள் = எம் + நாள் = எமது நாள்.
என்னாள் = என் + நாள் = என்னாள்.
 
#165.
எந்நாடு = எம் + நாடு = எமது நாடு.
என்னாடு = என் + நாடு = எனது நாடு.
# 166.
எந்நிலை = எம் + நிலை = எமது நிலை.
என்னிலை = என் + நிலை = எனது நிலை.
# 167.
முந்நாள் = மூன்று + நாட்கள்.
முன்னாள் = முன் + நாள் = முற்காலம்
#168 .
முந்நூறு = மூன்று + நூறு.
முன்னூறு = முன்பு + நூறு.
 

# 163.
எந்நாள் = எந்த + நாள்.
என்னாள் = என்று சொல்ல மாட்டாள்.
#164.
எந்நாள் = எம் + நாள் = எமது நாள்.
என்னாள் = என் + நாள் = என்னாள்.
என் ஆள் என்பதும் 'என்னாள்' ஆகுமோ?

'புதுமைப்பெண் எந்நாளும், "என்னால் என்னாளைப் பணிய முடியும்", என்னாள்!' எனலாமோ?

:noidea:
 
பழமைப் பெண் எந்நாளும்

"என்னால் என்னாளை என்னாள் பணிய வைக்க முடியும்?"


என்னாள்!' எனலாமோ?


இது எப்படி இருக்கு?
:eyebrows:
 
Last edited:
#137.
கன்னி = மணமாகாத பெண்.
கண்ணி = மாலை.

கண்ணி என்றால் பல வேறு பொருட்கள் உள்ளன:

1. குறும் வளைவு (சங்கிலிகளில் காண்பது)

2. பொறி (கண்ணி வைத்துப் பிடித்தல், கண்ணி வெடி)

3. கண்களை உடையவள் (அங்கயற்கண்ணி)
 
பழமைப் பெண் எந்நாளும்

"என்னால் என்னாளை என்னாள் பணிய வைக்க முடியும்?"


என்னாள்!' எனலாமோ?


இது எப்படி இருக்கு?
:eyebrows:

"உனக்கு முந்தைய, மூத்தவள் நான்!
நான்தான் கெட்டியான முதல் புளிக்கரைசல்!
நீதான் நீர்த்த இரண்டாவது புளிக்கரைசல்!!"

என்னவரின் பெரியம்மா, எல்லா விவாதத்தின்போதும்,
என்னவரின் அம்மாவிடம் சொல்லுவது, இந்த வாசகம்!

:laser:.....:pout:
 
ஏன் புளிக் கரைசலோடேயே நிறுத்திவிட்டார் பெரியம்மா??:croc:

"நான் தான் கெட்டியான முதல் காபி டிகாஷன்!

நான் தான் அரைத்துப் பிழிந்த முதல் தேங்காய் பால்!

நான் தான் மிக்ஸியை அலம்பிவிடும் தண்ணீருக்கு முன்பே

எடுத்து வைத்த
கெட்டிச் சட்னி!" என்றும் சொல்லி இருக்கலாமே!:boink:
 
ஒரு, ஓர், என்ற சொற்கள் வேறுபாடின்றி
மக்களால் வழங்கப்படுகின்றன.
அவைகளைச் சரியானபடி வழங்கினால்
பேச்சிலும், எழுத்திலும் சுவை கூடும்.

ஓர் + அணில் = ஓரணில்.
ஒரு+கதவு = ஒரு கதவு.

ஓர் + ஆண்டு = ஓராண்டு.
ஒரு + கால் = ஒரு கால்.

ஓர் + இரவு = ஓரிரவு.
ஒரு + கிண்ணம் = ஒரு கிண்ணம்.

ஓர் + ஈசல் = ஓரீசல்.
ஒரு + கீரி = ஒரு கீரி.

ஓர் + உழவன் = ஓருழவன்.
ஒரு + சுருட்டு = ஒரு சுருட்டு.

ஓர் + ஊஞ்சல் = ஓரூஞ்சல்.
ஒரு + கூட்டு = ஒரு கூட்டு.

ஓர் + எருமை = ஓரெருமை.
ஒரு + மெத்தை = ஒரு மெத்தை.

ஓர் + ஏர் = ஓரேர்.
ஒரு + மேடை = ஒரு மேடை.

ஓர் + ஐவர் = ஓரைவர்.
ஒரு + பை = ஒரு பை .

ஓர் + ஒட்டகம் = ஓரொட்டகம்.
ஒரு + பொய் = ஒரு பொய்.

ஓர் + ஓலை = ஓரோலை.
ஒரு + கோவில் = ஒரு கோவில்.
 
Last edited:
எளிய முறையில் நினைவில் வைக்க:

ஒரு சொல்லுக்கு, உயிர் எழுத்து ஆரம்ப எழுத்தானால், 'ஓர்' என்பதையும்,

உயிர்மெய் எழுத்து ஆரம்ப எழுத்தானால், 'ஒரு' என்பதையும் உபயோகிக்க வேண்டும்..
 
ஒன்று சொன்னாய் பெண்ணே!
அதுவும் நன்று சொன்னாய் கண்ணே!
அதுவும் இன்றே சொன்னாய்! நீ வாழ்க!!

Formula ஆகக் கொடுக்காவிட்டாலும் முயன்று
friends எத்தனை பேர் அதை கண்டுபிடிக்கின்றார்கள்
என்ற கண்டு பிடிக்க விரு
ம்பினேன்! வெற்றி உனக்கே!

:cheer2:
 
Last edited:
Status
Not open for further replies.
Back
Top