பயணக் க(வி)தைகள்...

This picture scared me!! :scared:

D-zoxDly0Lxgd7W4wPqwgDl72eJkfbmt4t8yenImKBVaiQDB_Rd1H6kmuBWtceBJ


Picture courtesy: Google images
 

இது பயணக் க(வி)தை அல்ல!

பயணம் செல்லும் வாகனங்களுக்கு ஏன் இந்த கதி என்ற ஐயம்!!

வாகனங்கள் எரிவது ஏன்?


அக்னி பகவானுக்கு என்னதான் கோபமோ!
அக்னி பரவி வாகனங்களை எரிக்கின்றது!

'பெட்ரோல்' பிடிக்கச் செல்லும் மகிழ்வுந்து,
'பெட்ரோல்' பங்க் அருகிலே பற்றி எரிகிறது!

புதிதாக வாங்கிய மகிழ்வுந்துகள், இவ்வாறு
எளிதாகத் தீயில் வெந்து கருக, இப்பொழுது

ஒரு புதிய பேருந்து ஒன்றும் கருகிப் போனது,
ஒரு புதிய செய்தியாக வந்தடைந்தது! அதன்

ஓட்டுனர் தீயைக் கண்டு, நிறுத்தி, பயணிகள்
ஓட வழி வகுத்ததாகச் செய்தி வெளியானது!

அதன் நிஜக் கதையை நேற்றே அறிந்தேன்!
அந்தப் பேருந்தில் தீப் பற்றியதைப் பார்த்து,

இரு சக்கர வாகனத்தில் அருகில் சென்றவர்,
இருக்கும் தீயைப் பற்றிக் கூறியது கேளாது,

பேருந்தை ஓட்டுனர் நிறுத்தாமலே சென்றிட,
பேருந்தை நிறுத்த 'அவர்' புதிய வழி கண்டார்!

ஒரு கல்லை வீசிக் கண்ணாடியை உடைத்திட,
ஒரு கோபப் பார்வையுடன் ஓட்டுனரும் திட்ட,

தீப் பிடித்த விஷயத்தை அப்போது உரைத்திட,
தீ பரவிடும் முன்பே அனைவரும் இறங்கினர்!

தீப்பொறி வந்தால்தான் இயந்திரம் இயங்கும்;
தீப்பொறி வர வைத்திடும் SPARK PLUG - களை

நல்ல விதமாகத் தயாரிக்காமல் போவதுதான்
அல்லல் தரும் தீ விபத்துகளுக்குக் காரணமா?

:car: . . . . . :flame:


 

பொருத்தமான பெயர்!

துள்ளித் துள்ளி ஓடுவதினால், அது
'துள்ளுந்து' என்று அழைக்கப்பட்டது!

'தானி' எனப் பெயர் பெற்றது, தமிழ்

ஞானிகளாலே, 'துள்ளுந்து' என்பது!

துல்லியமான் 'மீட்டர்' இருந்தாலும்,
எள்ளளவும் அதை பற்றி நினையாது,

தான் தோன்றித்தனமாக, மக்களிடம்
தான் நினைத்த காசை, ஓட்டுனர்கள்

தானே கேட்டு வதைப்பதால், இதைத்

'தானி' என்று அழைப்பதே சரியாகும்!

வெறும் எட்டு கிலோ மீட்டர் பயணம்;

தரணும் நாம் இரு நூறு நோட்டுக்கள்!

இனிய இல்லத்திலிருந்து இருவரும்

தானிப் பயணம் செய்து சென்ற பின்பு,

திரும்பும் பொழுது, கால் டாக்ஸியை

விரும்பி அழைக்க, அதே தூரத்திற்கு,

அந்த மீட்டர் காட்டியது நூற்றி அறுபது!

இந்த விஷயம் விநோதமாக இல்லை?

:decision: . . . :confused:
 

கும்பாபிஷேகம் - அடுத்த பயணம்.

ஒரு கோவில் கும்பாபிஷேகத்தை நடத்தினால்,
ஒரு பிறவியின் பயனாகும் அது என்றிடுவார்!

சொந்த ஊர்க் கோவில் கும்பாபிஷேகம் செய்ய,
சொந்தபந்தங்களோடு முயலும்போது, அதுதான்

எத்தனை மன மகிழ்ச்சியைத் தருகிறது! ஆனால்,
அத்தனை மகிழ்ச்சியையும் மீறி, நடுக்கம் ஒன்று!

ஒரு காலத்திலே சோழ மன்னன் தனது நோய் தீர,
ஒரு முறை வைகை நீரில் நீராடிட, உபாதை தீர,

சோழன் மனம் உவந்ததால், அந்த ஊரின் பெயரே
'சோழவந்தான்' என்று ஆனதாம்! இது பழங்கதை!

இப்படி வளமாக இருந்த ஊர்! நீரெல்லாம் வற்றி,
எப்படி வறண்ட பூமிபோல மாறியது? கொடுமை!

பலர் ஊரில் குழாய்க் கிணறும் போட்டுவிட்டனர்;
சிலர் இயற்கையை மதித்துப் போடவேயில்லை!

முனிசிபாலிடி தயவால் நல்ல தண்ணீர் வருகிறது!
இனிதே கும்பாபிஷேகம் நடக்கும்; நம்புகின்றேன்!

:thumb: . . . :pray2:
 

செல்லக் கண்ணனுக்காகச் சின்னப் பயணம்... 1


திருமணம் ஆன பெண்ணுக்கு, கணவனின் ஊரும்

ஒரு சொந்த ஊர் போல மாறுவது இயற்கைதான்!

அந்த ஊரிலே திருவிழா என்றால், அதைக் காண
எந்தப் பெண்தான் விரும்பமாட்டாள்? எங்களது

தென்கரை கிராமத்தில், எங்கள் செல்லக் கண்ணன்
சின்னக் கோவிலில் உள்ளான், துணைவியருடன்.

நவனீதம் என்ற வெண்ணையைக் கையிலேந்திய
நவனீத கிருஷ்ணனவன்; நடமாடும் திருக்கோலம்!

கும்பாபிஷேகம் செய்ய அனைவரும் முனைந்து,
குறைவின்றி ஏற்பாடுகளும் செய்திட, நாங்களும்,

பொருளுதவி செய்தால் போதாது; அங்கே சென்று
இரு நாட்களும் திருவிழாவில் கலந்து மகிழ்ந்திட,

ரயில் டிக்கட்கள் வாங்க விழைந்தோம்; மதுரைக்கு
ரயில்கள் எத்தனை இருந்தாலும் நிரம்பி வழியுமே!

எளிதாக 'டொரண்டோ' ரயிலில் இடம் கிடைத்தும்,
எலிகள் தொல்லை அதில் உண்டென எச்சரிக்கை!

உற்சாகமாகப் புறப்பட்டோம், பயத்தை ஓரம் கட்டி!
உற்சாகம் அதிகரித்தது ரயிலின் வண்ணம் கண்டு!

சின்னக் குழந்தைகளி
ன் ரயிலைப் போல, பளீரென
வண்ணங்களைக் குழைத்து மேலே பூசியிருந்தனர்!

எங்கள் ரயில் பெட்டியும் புதிது போல இருந்ததால்,

எங்களை எலி தொல்லை செய்யாதென நம்பிக்கை!

மதுரைக்குச் சென்றிடும் பயணிகளே இருப்பதால்,
மதுரை வரை வேறு யாரும் ஏற, இறங்க மாட்டார்!

தொடரும் .................. :)
 

சின்னக் குழந்தைகளின் ரயிலைப் போல, பளீரென
வண்ணங்களைக் குழைத்து மேலே பூசியிருந்தனர்!

IMG_4047.JPG
 

செல்லக் கண்ணனுக்காகச் சின்னப் பயணம்... 2


எலித் தொல்லை இல்லை என்ற மகிழ்ச்சி வந்தது

எழிலான புதிய ரயில் பெட்டியில் ஏறியதும்! இந்த

மகிழ்ச்சி வரும் முன் இருந்தது 'திரில்' அனுபவம்,
மகிழ்வுந்து ஓட்டுனரின் மெத்தனப் போக்கினாலே!

சிங்காரச் சென்னையின் 'மெட்ரோ ரயில்' வேலை,
பங்கம் செய்கிறது வேகமான சாலைப் பயணத்தை!

பத்தரை மணி ரயிலுக்கு நாங்கள் 'புக்' செய்தோம்,
எட்டரை மணிக்கு வேண்டிய மகிழ்வுந்து ஒன்றை.

வர வேண்டிய நேரத்திற்கு சில நிமிடங்கள் முன்பே
வர வேண்டும் ஓட்டுனரின் தொலைபேசி அழைப்பு!

அப்படி அழைப்பு ஏதும் இல்லை! உரிமையாளரிடம்
அப்போது பேசி, ஓட்டுனரின் 'செல்' நம்பரை வாங்கி,

'எங்கு இருக்கின்றீர்?' எனக் கேட்க, நிதானமாக அவர்,
'அங்கு வருவேன் விரைவில்; இப்போது கிண்டியை

நோக்கி வருகிறேன்!' எனக் கூற, போனது நம்பிக்கை!
தேங்கி நிற்கும் வண்டிகளின் கூட்டங்களைத் தாண்டி,

எங்கள் இனிய இல்லம் வர, ஒரு மணி நேரமாகுமே!
எங்கள் பயணம் எனவே துவங்கியது, துள்ளுந்திலே!

'அதிகப் பணம் கறக்கின்றாரே', எனப் புலம்பினாலும்,
அதி வேகத்திலே செல்லத் துள்ளுந்தே நமக்குக் கதி!

அரை மணி நேரத்தில் ரயில் நிலையம் வந்து சேர,
நிறைய நேரம் இருந்தது ரயில் நடைமேடைக்கு வர!

வண்ண மயமாக ரயில் வந்து நின்றதும், காமராவை
என்னையும் அறியாமல் என் கை எடுத்தது, கிளிக்க!


:photo: . . தொடரும் ..................

 

செல்லக் கண்ணனுக்காகச் சின்னப் பயணம்... 3


துள்ளுந்தில் ரயில் நிலையம் அடைந்த பின், மனம்

துள்ளியது ரயிலின் வண்ணமயமான தோற்றத்தால்!

வசதியான புதிய இருக்கைகள்; டிக்கட் பரிசோதகரின்
வரவை எதிர்பார்த்து, காத்திருந்து, டிக்கட் விலையின்

ஏற்றத்தால் வந்த தொகையைக் கொடுத்து, அதன் பின்
சற்றே கண் அயரலாமென்று சயன நிலையில் சரிந்திட,

என்று எனக்கு யோகம் இருந்தது ரயில் உறக்கத்திற்கு,
அன்று மட்டும் வந்திட! ஒரு ஓட்டுனர்; ஒரு ஆட்டுனர்!

அரை மணி நேரத்திற்கு ஒரு முறை அவர்கள் மாறிட,
அரைகுறைத் தூக்கமும் அன்றிரவு பறி போய்விட்டது!

சல்லடை போல் சலித்து ரயில் ஓட்டுகின்ற இவர்களை
சல்லடை போட்டுத் தேடி எடுப்பார்களோ, என்னவோ!

இந்தப் பாடு போதாது என்று தொடங்கிவிட்டது உடன்
வந்த குண்டு மனிதர்கள் மூவரின் குறட்டைக் கச்சேரி!

நடு 'பெர்த்'தில் ஒருவர் ஏறியதுமே நான் இறைவனை
நடுங்கி வேண்டினேன் 'பெர்த்' சங்கலி அறுபடாதிருக்க!

இந்த பயத்தையும், சல்லடை ஆட்டத்தையும் சேர்த்து,
வந்த குறட்டைச் சத்தமும் நடு நடுங்க வைத்தது! இனி

செவிப் புலனைக் காக்க, கச்சேரிக்கு எடுத்துச் செல்லும்
செவி காக்கும் பஞ்சு உருண்டைகள் ரயிலிலும் தேவை!

மிதமாக வைத்திருந்த ஏ ஸி குளிரும் தாங்காத யாரோ
இதமாகக் காற்று வீசிய மின் விசிறியை நிறுத்திவிட,

குறட்டைச் சத்தம் நிசப்தத்தில் இன்னும் மேலோங்கிட,
குறை சொல்லக் கூடாது என, மௌனமாய்க் கிடந்தேன்!

:tape: . . . :sleep:

தொடரும் .......................

 
hi RR madam,
you are enjoying train journey.....we are enjoying 3 feet snow in BOSTON /new england area....more than 36 inches of snow...

குறை சொல்லக் கூடாது என, மௌனமாய்க் கிடந்தேன்!
 

Dear TBS Sir,

I know! Ram and I saw the trees and plants covered with thick snow fall, during weekly skype chat!
Real coooooooooool!! :smow:
 

செல்லக் கண்ணனுக்காகச் சின்னப் பயணம்... 4


விடியலுக்கு முன்னே எழுந்து தயாராகி, கிழக்கிலே

விடியலின் செங்கிரணங்களை எதிர் நோக்கி அமர,

அடர் பனிப் பொழிவு உதய சூரியனை மறைத்துவிட,
தொடர்ந்து காத்திருந்தேன் ஆதவன் தரிசனத்திற்கு!

நன்கு மெலெழுந்த பின்பு, அவன் வட்ட வடிவத்தில்,
தங்க நிறத்தில் தகதகக்க, அத் தோற்றம் காமராவில்!

வைகை ஆற்றுப் பாலத்தைத் தாண்டுகிற நேரத்தில்,
வைகை ஆறு அழுக்குக் குட்டையாகத் தெரிந்ததில்

மனம் மிக சஞ்சலப்பட்டது! தன் நாட்டில் பெருகி ஓடி,
தினம் மக்களின் தாகம் தீர்த்த நதிதானா இது என்று

வருத்தம் எழ, வறண்ட ஆற்றையும் படமெடுத்தேன்.
வருத்தம் அதிகமானது அங்கு நிரம்பிய குப்பையால்!

அதிகம் தாமதம் செய்யாது, ரயில் மதுரையைச் சேர,
எதிரில் வந்து டாக்ஸி ஓட்டுனரும் அழைத்துச் செல்ல,

எங்கள் ஊரில் என்னென்ன மாற்றங்கள் இருக்குமென
எங்கள் மனம் அசை போட, இனிய இல்லம் வந்தோம்!

அழகாகப் பந்தல் போட்டு, விளக்குகள் ஒளி பரப்பிட,
அழகான கோலங்கள் தெருவிற்கு அழகு சேர்த்திட,

மகிழ்ந்தது மனம்; ஆனால் கிணறு வற்றியது கண்டு
மகிழ்ந்த மனம் கொஞ்சம் துணுக்குற்று வருந்தியது!

தண்ணீர் அளவைப் பஞ்சாயத்து அதிகரித்துத் தந்து,
தண்ணீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க மிக உதவியது!

தொட்டியில் தண்ணீர், சிறு பாய்லரில் வெந்நீர் எனத்
தொடங்கியது எங்கள் கிராமத்து எளிய வாழ்க்கை!

தொடரும் .....................
 

செல்லக் கண்ணனுக்காகச் சின்னப் பயணம்... 5


நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழைமையான வீட்டில்,

வேறு சில மாற்றங்கள் செய்திருந்தார் இளையவர்!

என்னவரின் தந்தையில் காலத்தில் உள்ளது போல,
தன்னிடம் வைத்திருக்கிறார் பசு மாடு கன்றுகளை!

சென்ற ஆண்டு, பசு மாட்டுடன் வந்த கன்று, உயர்ந்து
நின்ற கோலம் கண்டு அதிசயித்தோம்! இப்பொழுது

குட்டிக் கன்று ஒன்று, கரிய பெரிய விழிகளேடு, தன்
சுட்டித்தனத்தால் அனைவரையும் கவர்ந்தது நன்கு!

விரைவில் குளியலை முடித்து, அனைவரும் நடந்து
விரைந்தோம் கோவிலை நோக்கி, மிக ஆவலோடு!

யாக சாலை அழகு வடிவிலிருக்க, கலசங்களின் நீர்
யாக சாலையின் ஹோமங்களால் சக்தியை அடைய,

உத்சவ மூர்த்திகளை அலங்கரித்து வைத்திருக்க, நம்
உலகாளும் கண்ணன், இரு தேவியருடன் காட்சி தர,

இப்போது அவன் வெறும் சிலை வடிவே என்பதால்,
ப்போது எல்லோருமே அவனைத் தொட முடியும்!

அலங்காரத்துடன் எப்பொழுதும் காணும் மூர்த்தியை
அலங்காரம் இல்லாது பார்த்ததும், என்ன வேறுபாடு!

வலது திருக்கரத்தில் வெண்ணை உருண்டை ஒன்று;
வலது பாதம் நாட்டியமாடுகிறது தாமரையின் மீது!

சிறு பிள்ளையாகத் திகழும் கண்ணனுக்கா, அருகில்
இரு தேவியர், என்ற வியப்புக்கு, அன்று மாலையில்

கதை சொன்ன முகுந்தாச்சாரியார் விடையளித்தார்!
கதையை கட்டாயம் உங்களுடனும் பகிர்ந்திடுவேன்!

தொடரும் ........................

 

செல்லக் கண்ணனுக்காகச் சின்னப் பயணம்... 6


நம் செல்லக் கண்ணனுக்கு விழா எடுத்தோம் என்றால்,
நம் வீட்டில் சமைத்துச் சாப்பிடத் தகுமோ? தகாதே!

ஊர் முழுதும் சாப்பிட்டது ஒரு வீட்டில்; தனது சொந்த
ஊர் மீது அன்பு கொண்ட என்னவரின் தங்கையினது!

அமெரிக்காவில் செட்டில் ஆனாலும், விடுமுறைகளில்
அமைதியாகத் தங்குவது இந்த கிராமத்து வீட்டில்தான்!

மாடு கட்டுவதற்கென அமைத்த தொழுவம், அப்போது
ஏதுவானது இந்தச் சமையலை எளிதாகச் செய்துவிட!

எட்டு சமையல் வல்லுனர்கள் பணியிலே ஈடுபட்டனர்;
எட்டு திசையும் மணக்கும் உணவு வகைகள் செய்தனர்!

சமபந்தி போஜனம் போல எல்லாக் குலத்தினரும் வந்து
சமமாகத் தரையில் அமர்ந்து உணவுண்டது அதிசயம்!

சமைக்க நல்ல தண்ணீர் வாங்கிவிட்டதால், யாருக்கும்
சமையலால் வயிற்றில் உபாதைகள் வர வழி இல்லை.

ஊர் முழுதும் மலரும் நினைவுகள்! சிறு வயதில் அந்த
ஊர்ப் பள்ளியில் படித்து, பிரிந்து போனவர்கள் பலர்.

'நாப்பது வருஷமாச்சேப்பா உன்னையப் பாத்து!' என்று
நாற்பது ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த நண்பர்கள் சிலர்!

அடையாளம் கண்டு சிலர் அளவளாவி மகிழ, நண்பனை
அடையாளம் காண முடியாது மருண்டு போயினர் சிலர்!

வேடிக்கைப் பேச்சுக்களும், பழைய கதைகளும், அதோடு
வெடிக்கும் சிரிப்புச் சத்தங்களும் என்று ஒரே கலகலப்பு!

பல்வேறு ஊர்களில் வாழும் அந்த கிராமத்தினர், அங்கே
இவ்வாறு கூடி மகிழ்ந்தது கண்கொள்ளாக் காட்சிதான்!

:grouphug: . . . தொடரும் .....................
 
Back
Top