• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...


செல்லக் கண்ணனுக்காகச் சின்னப் பயணம்... 11

மதுரையை நோக்கிச் சீருந்து செல்லும் நேரத்தில்,
எதிரே வந்தாள் அர்ச்சகர் மனைவி, கைப்பையுடன்.

பேருந்துக்காகக் காத்திருந்த அவளை எங்களுடனே
சீருந்திலே மதுரைக்கு வந்திட அழைக்க, மகிழ்ந்தாள்.

இப்போது வசதியுடன் வாழ்வதாகச் சொன்ன அவள்
எப்போதாவது தம் இனிய இல்லம் வர அழைத்தாள்!

பெட்டிகளில் சக்கரங்கள் பொருத்துவதால், இப்போது,
பெட்டிகளைத் தூக்கும் கூலிகளுக்கு வேலை குறைவு!

பிரசாத லட்டுக்களால் நிரப்பிய பெட்டியை, எளிதாக
பிறரது உதவியை எதிர்பாராது உருட்டிச் சென்றோம்!

கற்பூர நாயகி போல எப்பொழுதுமே வைத்திருப்பேன்
கற்பூரப் பாக்கட் ஒன்றைக் கைப் பையிலே, அடியேன்!

எப்போது, எங்கு வந்து தாக்கும் கொசுப்படை என்பதே
எப்போதும் இருக்கும் ஒரு ராணுவ ரகசியம் போலவே!

சிறு கல்லை வைத்து அடிப்பது போல வந்து தாக்கின
பெரு வடிவக் கொசுக்கள், மதுரை ரயில் நிலையத்தில்!

நான்கு கற்பூர வில்லைகளைப் பொடித்துத் தூவியதும்,
இங்கு நம்மைத் துரத்துகிறார் என அறிந்தன கொசுக்கள்!

ரயில் நடைமேடை அருகில் வந்து நின்றவுடன், நாங்கள்
அதில் ஏறி, எங்கள் 'பெர்த்'களைத் தேடி அமர்ந்து, டிக்கட்

பரிசோதகர் வந்து கூடுதல் கட்டணம் பெற்றதும், படுத்து,
சரியான தூக்கமில்லாது, சிங்காரச் சென்னை வந்தோம்!

இறைவன் அருளால், இனிய இல்லத்தை மறந்து, மனம்
நிறைந்த இரு நாட்கள், இனிதே இனி நினைவில் நிற்கும்!


உலகம் உய்ய வேண்டும்,

ராஜி ராம் :pray2:
 
IMG_4215.JPG
 

மெட்ரோ ரயில்!


பெங்களூருவாசிகள் பலர் செல்லாத ஒரு பயணம்,
பெங்களூரு சென்ற சமயத்தில் நாங்கள் செய்தோம்!

ஒரு மணிக்கும் மேல் ஆகும் சாலை வழி தூரத்தை,
ஒரு சில நிமிடங்களிலே கடந்ததால் மகிழ்ந்தோம்!

நெருக்கடியான மகாத்மா காந்தி சாலை; அங்கிருந்து
பறக்கிறது மெட்ரோ ரயில், ஐந்து ஸ்டேஷன்களுக்கு!

பதினைந்து ரூபாய்தான் டோக்கனின் விலை; நமக்கு
எதிரே நிற்கும் பாதுகாவலர்களின் சோதனைக்குப்

பின்பு, செல்லலாம் ஸ்டேஷனின் உள்ளே! மிகவும்
நன்கு அமைக்கப்பட்ட விரிவான இடம் அது. மக்கள்

எளிதாகச் செல்ல எஸ்கலேட்டரும், லிப்டும் உண்டு;
புதிதாக வருவோருக்கு வழி காட்டவும் சிலர் அங்கு!

நழைவுக் கதவருகில் டோக்கனை ஓரிடத்தில் வைக்க,
அழகாகத் திறக்கிறது அங்குள்ள் தானியங்கிக் கதவு!

மெட்ரோ ரயிலில் கொஞ்சம் பெட்டிகளே உள்ளன;
மெதுவாக அதிகரிப்பார் மக்கள் அதிகமாகும்போது!

பத்துப் பேர்கள்தான் இருந்தனர் ரயிலில் ஏற! சின்னக்
கொத்துக் கொத்தாகச் சென்றனர் பெட்டிகளுக்குள்!

நானும் என்னவரும் மட்டும் முதல் பெட்டியினுள்ளே;
தானாகக் கதவு ட்யூன் இசைத்தபடி மூடிக்கொண்டது!

அடுத்த ஸ்டேஷன் வரும் முன்பே அதன் அறிவிப்பு.
எடுத்திடும் சில நொடிகளிலேயே ரயில் அதிவேகம்!

வளைந்து செல்லும் தண்டவாளத்தில் போகும்போது,
வளையும் ரயிலின் அழகு மனத்தை மகிழ வைக்கும்!

வெளியேறும்போது, உண்டியல் போலத் துவாரத்தில்
எளிதாக டோக்கனை இட்டால், வழி கிடைத்துவிடும்!

மேலை நாட்டுப் பாணியைப் பின்பற்றி அமைந்துள்ள
மேலான அந்த மெட்ரோ ரயில் பயணம் மிக இனிதே!


:dance:
 
hi RR madam,
this is called light rail in USA...only 4 compartments....this is part of local bus system....so that use the same ticket for local bus,metro/

light rail.....
 
dear raji,

i am glad that you enjoyed the metro rail. we need hundreds of these in india, not only in very large cities, but also in med sized like kovai and madurai, where the city centre is getting crowded through commercialization.

personally, i am looking forward to the metro rail in chenai in 2014, God Wiling. the nice thing is that these are built over existing roads, so that the roads can still be used. one of the nicest and extensive ones is in bangkok, though i should say the one is kuala lumpur is equally good. i prefer over the ground metro anyday to underground ones. :)
 

Dear Kunjuppu Sir and TBS Sir,

Yes! It was only a ten minutes journey from M G Road to Biyappanahally. Ram's nephew is living

near M G road and my mAmA and Ram's mAmi live on either side of the Biyappanahally station!

So we stayed with nephew and went to visit the elders on consecutive days, just to enjoy the

nice metro rail ride! There are four compartments and absolutely no crowd because it plies only

between five stations, which is about one fifth of the complete project. We are also awaiting the

project to finish in Sing. Chennai. Right now the 'AkAsa rail' which functions to connect a few

places is not very popular because the stations seem to be very poorly kept and night journeys
are risky because of anti social elements! :fear:
 

Dear Kunjuppu Sir and TBS Sir,

Yes! It was only a ten minutes journey from M G Road to Biyappanahally. Ram's nephew is living

near M G road and my mAmA and Ram's mAmi live on either side of the Biyappanahally station!

So we stayed with nephew and went to visit the elders on consecutive days, just to enjoy the

nice metro rail ride! There are four compartments and absolutely no crowd because it plies only

between five stations, which is about one fifth of the complete project. We are also awaiting the

project to finish in Sing. Chennai. Right now the 'AkAsa rail' which functions to connect a few

places is not very popular because the stations seem to be very poorly kept and night journeys
are risky because of anti social elements! :fear:
hi RR madam,
i know bypanahally very well....when i was in benguluru some years back....i think this metro is called....NAMMA METRO....
 
..i think this metro is called....NAMMA METRO....

We call this 'AkAsa rayil' in Sing. Chennai! :)

elevated1.jpg


Photo courtesy: Google images.


According to information available on the official Web site, the preliminary information memorandum

for the O & M contract says in the first phase of the project, two corridors totaling 45 km including a

23-km stretch from Washermanpet in North Chennai to the Airport Via Chennai Central Station and

Anna Salai and a second corridor of 22 km from Chennai Central to St Thomas Mount via Anna Nagar

and Koyambedu have been taken up for work in the first phase, which will be ready in three stages.

By the end of next year, Chennai is to get a 11-km metrorail from Koyambedu to St Thomas Mount.

This will be followed up with an 8 km stretch between Chennai Airport to Little Mount and from the

Airport to Koyambedu in mid 2014. The entire first phase is expected to be in operation in 2015.

CMRL is jointly owned by the Government of India and the State Government.


Source:
CMRL steps up financial outlay for metro rail
 

செல்லக் கண்ணனுக்காகச் சின்னப் பயணம்... 11



பேருந்துக்காகக் காத்திருந்த அவளை எங்களுடனே
சீருந்திலே மதுரைக்கு வந்திட அழைக்க, மகிழ்ந்தாள்.

பேருந்துக்காக காத்திருந்த அவளை எங்களுடனே
மகிழுந்திலே மதுரைக்கு வந்திட அழைக்க மகிழ்ந்தாள்

இது நன்றாய் இருக்கும்

 

வருக நண்பரே!

தங்கள் பின்னூட்டதிற்கு நன்றி.

எதுகை
க்காகப் 'பேருந்து' என்பது அடுத்த வரியில் 'சீருந்து' எனத் தொடர்ந்தது! :)
 

உந்துகள் பல விதம்!


பல பேர்கள் ஒரே நேரத்தில் பயணிக்க உதவும்,

பல இருக்கைகள் கொண்ட பெரியது 'பேருந்து'!

சீராக ஓடி, சிலர் வசதியாய்ப் பயணிக்க உதவும்
'சீருந்து'; அதுவே நடுத்தர வர்க்கம் நாடும் உந்து!

உடல் குளிரக் குளிர் சாதனம், செவிகள் குளிரப்
பாடல் என்று மனம் மகிழ வைப்பது 'மகிழுந்து'!

பணக்கார வர்க்கத்திற்கு மகிழுந்து பல உண்டு;
பண பலத்தைக் காட்டிடுவர் அவற்றில் சென்று!

துள்ளித் துள்ளி ஓடி, வீதியெங்கும் விரைவது
'துள்ளுந்து'; இதுதான் எளியவர் மகிழும் உந்து!

உந்து எதுவாயினும், பழுதடைந்துவிடின், 'தள்
ளுந்து' என்ற பொதுப் பெயரைப் பெற்றுவிடும்!

:ballchain:
 
உந்து எதுவாயினும், பழுதடைந்துவிடின், 'தள்
ளுந்து' என்ற பொதுப் பெயரைப் பெற்றுவிடும்!
 
ராஜி ராம் அவர்களுக்கு மிக்க நன்றி உங்களுடன் எங்களையும் மலேசியா அழைத்துச்சென்றதற்கு நண்பர் ப்ரம்மண்யன் அவர்கள் ஏதோ படங்களைப்பற்றி குறிப்பிட்டுள்ளார் அவைகளை காண முடியாவிட்டாலும் காட்சிகளை விளக்கிய பாங்கு மிக அருமை தங்கள் இனிய பணி தொடரட்டும்
 
ராஜி ராம் அவர்களுக்கு மிக்க நன்றி உங்களுடன் எங்களையும் மலேசியா அழைத்துச்சென்றதற்கு......
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!
மற்ற பயண அனுபவங்களையும் படித்து மகிழுங்கள்! :ranger:

 

வடக்கும், இடக்கும்!

வடக்கே செல்வது இந்த சமயத்தில்
இடக்கே ஆயினும், மனம் விரும்பி

அன்புக்கு உரியவர் அழைக்கும்போது,
அன்புடன் செல்வதே நியாயமல்லவா?

தன் மகன் திருமணத்திற்கு வருமாறு
என்னவரின் மாமன் மகன் அழைத்திட,

செல்லுவோம் வடக்கு திசை நோக்கி;
எண்ணுவோம் எம் பயணம் இனிதாக!

புதியன இறையருளால் கண்டு வந்தால்,
புதிதான அனுபவங்களைப் பகிர்வேன்!

:)
 

வருக நண்பரே!

தங்கள் பின்னூட்டதிற்கு நன்றி.

எதுகை
க்காகப் 'பேருந்து' என்பது அடுத்த வரியில் 'சீருந்து' எனத் தொடர்ந்தது! :)

Raji Ram I couldn't post my forums...will you please help me?
 

வடக்கும், இடக்கும்!

வடக்கே செல்வது இந்த சமயத்தில்
இடக்கே ஆயினும், மனம் விரும்பி

அன்புக்கு உரியவர் அழைக்கும்போது,
அன்புடன் செல்வதே நியாயமல்லவா?

தன் மகன் திருமணத்திற்கு வருமாறு
என்னவரின் மாமன் மகன் அழைத்திட,

செல்லுவோம் வடக்கு திசை நோக்கி;
எண்ணுவோம் எம் பயணம் இனிதாக!

புதியன இறையருளால் கண்டு வந்தால்,
புதிதான அனுபவங்களைப் பகிர்வேன்!

:)

still waitin, now that you are back..:)
 

இனிய பயணம்!

இறை அருளால் இனிய பயணம் முடிந்தது
குறை ஏதும் இல்லாது! எல்லாம் அவனருள்!

நிறைத்து வந்தேன் என் குட்டிக் காமராவை
நிறையப் படங்களைச் சுட்டுத் தள்ளியதால்!

சுட்டித் தனம் செய்ய ஒரு மாத காலம், எம்
குட்டிக் கண்ணம்மா எம்முடன் இருப்பாள்!

அவள் தயவிருந்தால் கணினியில் நேரம்
அழகாக எனக்குக் கிடைத்திடும்! நிஜம்தான்!

அனுபவங்கள் பலப் பல இந்தப் பயணத்தில்;
அவற்றைப் பகிர்கிறேன் இரு வரி வடிவில்!

அருமையான நண்பர்கள் இம்முறை மட்டும்
பொறுமை காக்க வேண்டுகிறேன்; வணக்கம்!

உலகம் உய்ய வேண்டும்,
ராஜி ராம் :pray2:
 

சிந்தை கவர்ந்த வட இந்தியப் பயணம் - 1

இறை அருள் வேண்டி, மீண்டும் திட்டமிட்டோம்
இனிய ஒரு பயணத்தை வட இந்திய தேசத்தில்.

சென்ற முறை முயன்ற பயணம், ரத்து ஆனதால்,
இந்த முறை வேண்டுதலும் அதிகமானது நிஜம்!

பயணிக்க Tour package எளிதாக இருக்கும் என்று,
பணிக்கர் டிராவல்ஸ் ஏஜன்டை நாங்கள் சென்று

சந்தித்து, அளவளாவி, இரு வேறு பயணங்களை
சிந்தித்து, ஏற்பாடு செய்யச் சொல்லி, அருகிருந்த

Yathra dot com உதவியுடன் விமான டிக்கட்டுகளை
யாத்திரை டெல்லிக்குச் சென்று வர வாங்கிவிட்டு,

இரு மாதங்கள் காத்திருந்தோம் பயணத்திற்காக!
இரு மாதங்கள் பறந்தன இரு மணி நேரம் போல!

புறப்படும் நாள் நெருங்க நெருங்க, அட்ரினலின்
சுரப்பும் அதிகரித்துவிட்டது போலவே தோன்றிட,

இனிய ஒரு காலை வேளையிலே ஆரம்பமானது,
இனிய ஆறு நாட்கள் நமது வட நாட்டில் பயணம்.

சரியான நேரத்தில் விமான நிலையம் அடைந்து,
சிறியதான ஒரு பெட்டியைச் செக் - இன் செய்து,

இரு கைப் பைகளை மட்டும் எம்முடன் வைத்து,
இருவரும் அமர்ந்தோம் எமது இருக்கைகளிலே.

பன்னாடு செல்லும் ஏர் இந்தியா விமானம்; எமது
இன்நாட்டுப் பயணமும் அருமையாக அமையும்!

அதிவேகத்திலே ரன் - வேயில் ஓடி, மேலெழும்பி,
அழகான மேகக் கூட்டத்தின் மேலே பறந்தோம்!

:plane:

தொடரும் ......................
 

அதிவேகத்திலே ர
ன் - வேயில் ஓடி, மேலெழும்பி,

அழகான மேகக் கூட்டத்தின் மேலே பறந்தோம்!

IMG_4673.JPG
 
ஓடுதளத்தில் ஓயாமல் ஓடி
தேடு தளத்தில் தினமும்
உங்களைத் தேட வைத்தீர்
ராஜி ராம் அவர்களே !
 
Last edited:

Latest ads

Back
Top