சிந்தை கவர்ந்த வட இந்தியப் பயணம் - 9
மலைக் காற்று மேலே வீசாவிடினும், பேருந்தினுள்
அலையாக வந்து மோதிய ஏ சி காற்றும், வயிற்றில்
நிறைந்த உணவும், உண்ட மயக்கத்தை ஏற்படுத்த,
அரைகுறைத் தூக்கத்தில் அனைவரும் இருந்தோம்!
இரவு பத்து மணி; கார் ஒன்று பாதை ஓரத்தில்; அதை
இலகுவாகத் தாண்ட முயன்ற சமயம், எம் பேருந்தின்
முன் சக்கரம் பாதாளத்தின் மிக அருகில் சென்றுவிட,
உடன் sudden brake இட, நாங்கள் அனைவரும் துள்ள,
வழிகாட்டி மிகத் தைரியமாக கீழே இறங்கி, ஓட்டுனர்
வழி மாறிக் கீழே பேருந்தை உருட்டாமல் காப்பாற்றி,
மெதுவாகப் பின்னே செல்ல வைத்து, இதயத் துடிப்பை
மெதுவாக இறக்கிவிட, வந்த உறக்கம் ஓடிப் போனது!
இவ்வளவு ஓரத்தில் கார்களையெல்லாம் நிறுத்திவிட
எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்? ஏதேனும் ஒரு
வண்டி மிக லேசாகத் தட்டினாலும், பாதாளத்தில்தான்
உருண்டு செல்லும், வேலிகள் இல்லாத காரணத்தால்!
சிம்லா மக்களுக்கு 'தில்' அதிகம்! மலை ஓரமாகவே
ஜம் என்று நிற்கின்றன, சிறிய பெரிய சீருந்துகள் பல!
இந்த மலையில் ஜனங்கள் மிகவும் குறைவாகத்தான்
வந்து வாழ்வார்கள் என்று எண்ணியிருந்தது தவறே!
இந்திராகாந்தி மருத்துவமனை மிகப் பெரியது. நமது
இந்தியாவின் சிறந்த கல்வி நிலையங்களும் உண்டு!
சுற்றுலா வரும் பயணிகளுக்கென பற்பல விடுதிகள்
சுற்றிலும் இருப்பதும் ஒரு பெரும் வியாபாரமாகும்!
தொடரும் ......................