போகாத ஊருக்கு வழி - 2
கல்கத்தாவில் என்னவரின் உற்ற நண்பரின்
இல்லம் இதுவரை நான் பார்த்ததில்லை. இது
மிகவும் பெரிய குறை அவருக்கு; இப் பயணம்
மிகவும் முக்கியம் நண்பரிடம் செல்லுவதால்!
சிங்காரச் சென்னையில் சுற்றுலாத் துறைகள்
பாங்காக வைத்துள்ளன சேவை மையங்களை.
அழகிய இடங்கள் பற்றிச் செய்திகள் அடங்கிய
அழகிய புத்தகம், இலவசமாகவே கிடைத்தது!
நாம் செல்லும் ஊர்கள் பற்றிய விவரமறிந்தால்,
நாம் செல்லும் பயணமும் எளிதாய் இருக்குமே!
புத்தகப் புழுப் போல, முதல் பக்கம் ஆரம்பித்து,
புத்தகம் முழுதும் படித்து மகிழ்ந்தேன்! திருப்தி!
ஜீப், யானை, படகு என வகை வகைச் சவாரிகள்,
ஜீன்ஸ், பான்ட், சுடிதார் போல உடைகளில் மிக
எளிதாகுமே என்ற எண்ணம் வர, முதலிரண்டும்
எப்போதும் அணியா உடைகள் என்பதால், புதிய
உடைகள் சுடிதார் செட்டுகளாகத் தைத்து, அந்த
உடைகள் கசங்காமல் இஸ்திரியும் செய்தேன்!
கணினியுடன் பல மணி நேரங்கள் செலவாக்கி,
இனிய புதிய செய்திகள் நிறையத் திரட்டினேன்!
பயண ஏற்பாடுகளில் மனம் மிக மகிழ்ந்து, எங்கள்
பயணம் பற்றி எல்லோரிடமும் சொல்ல, ஓரிரவு
நல்ல தூக்கம் என்னவருக்குக் கலைந்தது! ஒரு
சொல்ல ஒண்ணாத வலி வயிற்றிலே வந்தது!
:decision: தொடரும் .............