அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா - 5
ஒரு கிளி கண்ணாடியில் அழகு பார்த்தது; அடுத்து
ஒரு காட்டுக் கோழி, மிக அவசரம் போல் திரிந்தது!
நெட்டை உருவோடு நடை பயின்று வந்தது, அங்கே
ஒட்டகச்சிவிங்கி ஒன்று; அதன் துணை அதனருகில்!
இரு நிறங்களும் வேறாக விளங்குவது ஆச்சரியம்!
வரிக்குதிரை பொம்மையில், ஒரு தண்ணீர்க் குழாய்!
வரிக்குதிரையும் நெருப்புக் கோழியும் நண்பர்களே;
வரிக்குதிரைக்கு அருகிலேயே நெருப்புக் கோழிகள்!
காட்டில், தன் பார்வைத் திறனால், எதிரிகள் வரவை
நோட்டமிட்டு அறிவிக்குமாம், நெருப்புக் கோழிகள்!
கேட்கும், நுகரும், திறன் மிக்க வரிக்குதிரைகளோ,
கேட்டு, நுகர்ந்து, எதிரிகள் வரவை அறிவிக்குமாம்!
'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை', என மனிதருக்குக்
கோடி காட்டும் வகையில் இவைகள் வாழ்கின்றன!
அங்கங்கே பாம்புப் புற்றுகள் இருந்தன; பாம்புகளும்
அங்கே உலவுமாம்; மான்களும் கூட உலவிடுமாம்!
அறிவிப்புப் பலகைகள் வைத்தும் கூட, பயத்தையே
அறியாததுபோல், காதல் ஜோடிகள் காட்டினுள்ளே!
பள்ளிப் பருவப் பிள்ளைகள் ஜோடியாக உலவினர்!
பள்ளியிலே என்ன கூறி விடுமுறை எடுத்தனரோ?
பசி எங்களுக்கு மெதுவாகத் தோன்றி வருத்த, எம்
பசி ஆற்றிட, நுழைவாயில் அருகில் அமைந்த ஒரு
உணவகத்திற்குச் சென்ற பின்பு, இரண்டு மணிக்கு,
உலவும் சிங்கங்கள் காண, சீட்டுகள் வாங்கினோம்!
தொடரும் ..................... :thumb: