கண்ணனின் கதை இது.

Status
Not open for further replies.
பாபிஷ்டா பேஹி (2)

"அடேய் மகா பாவி! சீக்கிரமாக வழியை விட்டுத் தூரமாக நில் !" என்ற உங்கள் வாக்கைக் கேட்டு நிஷ்ட்டூரமும், கோபமும் அடைந்தான் மாவுத்தன். அவனுடைய ஏவலினால் யானை அதிக வேகத்துடன் வந்து தங்களைப் பிடித்தது. விளையாட்டாகவே அதனிடமிருந்து விடுவித்துக் கொண்டீர்கள். கோபிகைகளின் கலசம் போன்ற ஸ்தனங்களுடன் வெகு நாளாகப் போட்டிபோடும் யானையின் மத்தகத்தில் நன்றாக அடித்துவிட்டு, அதன் கால்களுக்கு அடியில் தாங்கள் ஒளிந்துகொண்டீர்கள்.
பிறகு மந்த ஹாசம் செய்த வண்ணம் வெளியில் வந்தீர்கள் அல்லவா?
 
ஹஸ்த ப்ராப்ய: அபி (3)

முனி ஜனங்களுக்குக் கையில் கிடைக்கக் கூடியவராக இருந்த போதிலும் துதிக்கையால் பிடிக்க முடியாதவராகி, விரைந்து யானைக்கு எதிரில் ஓடிச் சென்று, விளையாடிக் கொண்டும், மறுபடியும் நிலத்தில் வீழ்ந்தும், தங்களை எதிர்த்து வந்த யானையின் உயிருடன் கூடிய தந்தத்தை வேருடன் பிடுங்கி விட்டீர் . அக்கொம்புகளின் அடிப்பகுதியில் இருக்கும் பெரிய முத்துக்களை சிநேகிதனிடம் கொடுத்துவிட்டு, "இவைகளைக்கொண்டு உண்டு பண்ணப்பட்ட அழகான மாலையை ராதிகைக்குக் கொடு!" என்று சொன்னீர்கள்
அல்லவா?
 
க்4ருஹ்ணானாம் தந்தமம்ஸே (4)
ஹே கிருஷ்ணா! பிறகு தோளில் யானைத் தந்தத்தை வைத்துக் கொண்டு, பலராமனுடன் யுத்தத்துக்குச் செல்லும் தங்களைக் கண்ட ஜனங்கள்; மங்களகரமான தங்கள் அவயவயங்களைக் கண்டு பலவந்தமாகக் கவரப்பட்ட கண்களையும் மனதையுமுடையவர்கள் ஆனார்
கள்.
"ஆச்சரியம் ஆச்சரியம்! மூன்று உலகங்களிலும் நந்தகோபன் பாக்கியசாலி. இல்லை இல்லை யசோதா தான் பாக்கியசாலி. இல்லை இல்லை கோபிகைகள் தாம் பாக்கியசாலிகள்! இல்லை இல்லை இல்லை இவனைக் காணும் பாக்கியம் பெற்ற நாமே பாக்கியசாலிகள்" என்று பலவாறு புகழ்ந்தனர் அல்லவா?
 
பூர்ணம் ப்3ரஹ்மைவ (5)

எங்கும் நிறைந்து இருப்பவரும்; நித்தியமானவரும்; பரமானந்தரூபியும் விஞ்ஞான கன ரூபியும் ஆனவரும்; பரப்ரஹ்ம ஸ்வரூபியாகவே இருக்கின்றவரும் ஆகிய தாங்கள் பிரத்யக்ஷமாக அந்த கோபர்களுக்கு இடையில் பிரகாசித்தீர்கள் அல்லவா? அநேகம் ஜனங்கள் தாங்கள் எவ்விதமானவர் என்பதை அறியவேயில்லை. புண்ணியம் பலனைக் கொடுக்கும் தருணம் வந்தபோது முதல் முதலாகத் தங்களை தரிசித்த உடனேயே பாவம் நீங்கியவர்களாகி, ஆனந்தம் நிறைந்தவர்கள் ஆகி, அப்போது நினைவுக்கு வந்த தங்கள் லீலைகளை ரசமாகப் பாடினார்கள் அல்லவா?
 
ஸ்ரீமன் நாராயணீயம் தசகம் 75

கம்ச வத வர்ணனம்

சாணூரோ மல்ல வீர: (6)

அதன் பின்னர் கம்சனின் கட்டளைப்படி மல்ல வீரனான சாணூரன் , முஷ்டி யுத்தத்தில் திறமை வாய்ந்த முஷ்டிகன் பலராமனையும், சட சட என்ற சத்தத்துடன், முஷ்டியைக் கொண்டு இடித்து பயங்கரமாக எதிர்த்தனர் அல்லவா? உந்தி எறிவது, கீழே தள்ளுவது, பிடித்து எழுப்புவது போன்ற பலவித போர்களிளும் சரியே மல்லர்களின் அரசனான சாணூரன் அவன் மரணத்திற்கு முன்பே பலமுறை பந்தங்களையும் மோக்ஷங்களையும் (கட்டுதலையும் , விடுதலையையும் ) அடைந்தான் அல்லவா?
 
ஹாதி4க்கஷ்டம் (7)

"கஷ்டம்! கஷ்டம்! குழந்தைகள் ஆகிய ராம, கிருஷ்ணர்கள் கோமள சரீரம் உடையவர்கள்! மல்ல வீரர்கள் இருவரும் மிகவும் முரடர்கள்! சமம் இல்லாதவர்களின் போரை நாம் காண வேண்டாம்! விரைவாக நாம் வெளியேறிவிடுவோம்!" என்று என்று ஜனங்கள் பேசிக் கொண்டிருந்தனர். அந்தத் தருணத்தில் கையில் பிடித்துச் சுழற்றியதால் முற்றிலுமாக உயிர் இழந்துவிட்ட சாணூரனைத் தரையில் ஓங்கி அடித்தீர்கள் அல்லவா? அதன் பின்னர் முஷ்டிகனும் பலராமனால் நசுக்கபட்டான். இறந்தவர்களைத் தவிர மற்ற அனைவரும் விரைந்து ஓடினார்கள் அல்லவா?
 
கம்ஸ: ஸம்வார்ய (8)
துர்புத்தியுடைய அந்தக் கம்சன் பேரிகையை நிறுத்தச் செய்தான். என்ன செய்வது என்று அறியாமல் சாதுக்களாகிய நந்தன், வாசுதேவன், உக்ர சேனன் முதலியவர்களைக் கொல்லவும், எங்கும் நிறைந்துள்ள தங்களை வெகு தூரத்துக்கு விரட்டவும் கட்டளையிட்டான். தீய சொற்களால் கோபமடைந்த தாங்கள், கருடன் மலைமீது பாய்வதுபோல சிம்மாசனத்
தின் மீது பாய்ந்தீர்கள். வாளை உயர எடுத்து வீசுவதால் பிடிக்க முடியாதவனாக இருந்தும் கூட அந்தக் கம்சனை பலாத்காரமாகப் பிடித்தீர்கள் அல்லவா?
 
ஸத்3யோ நிஷ்பிஷ்ட (9)

அப்போதே சந்திபந்திகள் நொறுங்கின. கம்சனைத் தரையில் தள்ளித் தாங்களும் அவன் மேல் விழ, தேவர்கள் பூமாரி பெய்தனர். பரமாத்மனே என்னவென்று கூறுவேன்? இடைவிடாத பயத்தினால் தங்கள் மீது இடைவிடாது மனத்தைச் செலுத்திய அந்தக் கம்சனும் அப்போதே சாயுஜ்யத்தை அடைந்துவிட்டான். இவ்விதம் சாயுஜ்யத்தை அடையக் காரணம் காலநேமியை தங்கள் கொன்றதால் உண்டான முன் ஜன்ம வாசனைதான்
 
தத்3 ப்4ராத்ரூன் அஷ்ட பிஷ்ட்வா (10)

குருவாயூரப்பா! அதன் பிறகு விரைவாக கம்சனின் தம்பிகளான எட்டுப் பேர்களையும் கொன்று, தாய் தந்தையாராகிய தேவகி வசுதேவரை வணங்கி, உக்ரசேனரை அரசராக்கி, யதுகுலத்தவர் எல்லோருக்கும் அவர்கள் விரும்பியவற்றைக் கொடுத்து, மனங்களை மகிழ்வித்து, பக்தர்களில் சிறந்தவரும் தேவகுருவும் ஆகிய பிருஹச்பதியிடம் இருந்து நீதி சாஸ்த்திரம் கற்றவரான உத்தவரையும் தோழராக அடைந்து, மிகவும் சந்தோஷம் அடைந்தவராக, மதுராபுரியில் வசித்து வந்த தாங்கள் எனது வியாதிகளை எல்லாம் அகற்ற வேண்டும்.
 
ஸ்ரீமன் நாராயணீயம் தசகம் 76

உத்தவர் தூது வர்ணனம்

க3த்வா ஸாந்திபனி (1)

அதன் பிறகு சர்வஞனான தாங்கள் பலராமனுடன் ஸாந்தீபனியிடம் சென்று அறுபது நான்கு நாட்களில் எல்லா வித்யைகளையும்ம்கற்றுக் கொண்டீர். குருதக்ஷிணைக்காக அவருடைய இறந்து போன பிள்ளையை யமலோகத்தில் இருந்து மீட்டுக் கொண்டு வந்து அவருக்குக் கொடுத்தீர். பாஞ்சஜன்யம் என்ற சங்கை ஊதிக்கொண்டு மதுராபுரி திரும்பிச் சென்றீர்கள்.
 
ஸ்ம்ருத்வா ஸ்ம்ருத்வா (2)

பிரேமையின் மேன்மையால் பரவசம் அடைந்த கோப ஸ்திரீக்களை நினைத்து நினைத்து தாங்களும் கருணையால் பரவசர் ஆனீர்கள்.
அது மட்டுமின்றி பக்தர்களில் சிறந்தவரும், பிரிய சிநேகிதரும் ஆகிய உத்தவரை கோபிகைகளிடம் அனுப்பினீர்கள். உலகம் முழுவதும் ஒருவராலும் அடைய முடியாத கோபிகைகளின் பக்தியின் மேன்மையை நீங்கள் உத்தவருக்குக் காண்பிக்க விரும்பினீர்கள்
 
த்வன் மாஹத்ம்யம் (3)

அந்த உத்தவர் சாயங்காலத்தில் தங்களின் மகிமையயை நிரூபிக்கின்ற கோகுலத்தை வந்து அடைந்தார். தங்கள் விருத்தாந்தங்களைச் சொல்லி நந்த கோபரையும் யசோதையையும் சந்தோஷப்படுத்தினார். விடியற்காலையில் ரத்தினமயமான தேரைக் கண்ட கோபிகைகள் தங்களின் தூதன் ஒருவன் வந்திருப்பதை அறிந்து, வீட்டு வேலைகளைப் போட்டது போட்டபடி விட்டு விட்டு உத்தவரிடம் வந்தார்கள்.
 
த்3ருஷ்ட்வா சைனம் (4)

தங்களுடையது போன்று விளங்கும் ஆடை ஆபரணங்களால் அழகாக விளங்கிய அந்த உத்தவரைக் கண்டு தங்களுடைய சிருங்கார சேஷ்டைகளை நினைத்து நினைத்துப் பேச்சு தடைபட்டவர்கள் ஆகிப் பிறகு அன்னியன் என்ற வேற்றுமையை மறந்து தழ தழக்கும் குரலில் கூறினார்கள்.

 

ஸ்ரீமன் கிம் தவம் (5)
லக்ஷ்மி கடாக்ஷம் பொருந்திய உத்தவரே! கருணை அற்ற அந்தக் கிருஷ்ணன் தன் தாய் தந்தையர்களுக்காக உங்களை இங்கு அனுப்பினானோ? பட்டணத்துப் பெண்களின் கணவன் ஆகிய அந்தக் கிருஷ்ணன் எங்கே இருக்கின்றான்? துயரங்களைப் போக்கடிக்கும் ஹே நாதனே! எங்களைக் காப்பாற்றவேண்டும். ஹே காந்த! மிகவும் கஷ்டம்! அமிருதமயமான தங்கள் சரீரத்தையும், தங்கள் ஆலிங்கனங்கலளையும், சுன்பனங்களையும், மனதை மயக்கும் கபடவசனங்களையும் எந்தப் பெண் தான் மறப்பாள் !
 
ராஸக்ரீடா3 லுலித லலிதம் (6)

கருணைக் கடலே! ராசக்ரீடையில் கசக்கப் பட்டதும், மிருதுவானதும், கட்டவிழ்ந்த சிறந்த கேசங்களை உடையதும், கொஞ்சம் வியர்வைத் துளிகளை உடையதும் விரும்பத் தக்கதும் ஆன தங்கள் திருமேனியை ஒரு தடவை தழுவிக் கொள்ள வேண்டும் என்று உலகத்தையே மயக்கும் கிருஷ்ணா! தங்கள் பிரேமைக்கு உரியவர்கள் ஆகிய கோபிகள் தங்கள் பிரேமையால் உண்டான மனக் கலக்கத்தால் தங்களைப் பற்றி விலபித்தனர்.
 
ஏவம் ப்ராயை விவச (7)

அதன் பிறகு உத்தவர் பரவச வசனங்களுடன் முற்றிலுமாக வருத்தம் அடைந்த கோபியர்களை தத்துவ ஞானம் செறிந்த தங்கள் வசனங்களால் சமாதானப்படுத்தி
இயல்பு நிலையை அடைவித்தார். மனச் சாந்தி அடைந்த அந்த கோபிகைகளுடன் சில நாட்களை அந்தந்த விருதாந்தங்களைக் கேட்டவண்ணம் ஆனந்தத்துடன் கழித்தார் அல்லவா?

 
தவத் ப்ரோத்3கா3னை: (8)

இரவும், பகலும், எல்லாவிடத்திலும், வீட்டுவேலைகளிலும் தங்கள் சரிதத்தின் கானங்களுடன் கூடிய பேச்சாகவே இருந்தது. தங்கள் பேச்சு எதிலும் பரவியது. தூங்கும் போது வந்த கனவுகளின் பேச்சுக் கூடத் தங்களைப் பற்றியதே. பிரவ்ருத்திகள் எல்லாமே தங்களை அனுகரணம் செயப்பட்டவை தாம்.. இவ்விதமாக அங்கே எல்லாம் தங்கள் மயமாகவே இருப்பதைக் கண்டு அந்த உத்தவர் ஆச்சரியத்தால் மிகவும் மோஹம் அடைந்தார்.
 
ராதாயா மே ப்ரியதமமிதம் (9)

"நண்பா! என் ராதைக்கு இது பிரியமானது. என் பிரியை ராதை உன்னைப் போலவே சொல்லுவாள். நீயும் அபிமானமுடைய என் பிரியை ராதையைப் போலவே என் மௌனமாக இருக்கின்றாயே! ஹே ராதே! உன் பிரியனான கிருஷ்ணன் ஏகாந்தத்தில் இது போன்ற விஷயங்களை எல்லாம் என்னிடம் சொல்லுவான் " போன்ற வசனங்களால் அந்த உத்தவர் தங்கள் ப்ரீதிக்கு உரியவளாகிய தாமரைக் கண்ணி ராதையை சந்தோஷப்படுத்தினார்.
 
ஏஷ்யாமி த்3ராக் (10)

"தாமதியாமல் அங்கு வருவேன். இப்போது அங்கு வராமல் இருப்பது அதிக வேலை இருப்பதால் தான். என்னை விட்ட போதும் திடமான நினைவு உண்டாவதால் வருந்த வேண்டாம். சீக்கிரமாகவே பிரமானந்தம் கைக் கூடும். அப்போது கூடி இருப்பதும், பிரிவும் உங்களுக்கு சமமாகவே இருக்கும் !" என்ற தங்கள் மொழிகளாலேயே அந்தப் பெண்களை வருத்தம் அற்றவர்களாகச் செய்தார் அல்லவா?
 
ஏவம் ப4க்தி: ஸகல பு4வனே (11)

இப்படிப்பட்ட சிறந்த பக்தியை உலகில் வேறு எங்குமே கண்டதில்லை. கேட்டதும் இல்லவேயில்லை. இந்த விஷயங்களில் சாஸ்திரங்களால் என்ன பயன்? தவத்தால் என்ன பயன்? கோபிகைகளுக்கு நமஸ்காரம்!" என்று ஆலோசித்து ஆனந்தத்தால் பரவசம் அடைந்து கோகுலத்தில் இருந்து திரும்பி வந்தார் உத்தவர். அவரைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த குருவாயூரப்பா. என்னை வியாதிக்கூட்டத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும்.
 
நாராயணீயம் தசகம் 77
உபச்'லோகோத்பத்தி வர்ணனம்
சைரந்த4ர்யா (1)

அதன் பிறகு வெகு நாட்களாகக் காமத்தில் வருந்தினவளும், தங்கள் சேர்க்கையால் உண்டாகும் ஆனந்ததையே எப்போதும் தியானித்துக் கொண்டு இருப்பவளும், ஒவ்வொரு நாளும் தன்னையும் தன் வீட்டையும் அலங்கரித்துக் கொண்டு நாயகன் வரவை எதிர்பார்த்து இருக்கும் வாஸசஜ்ஜிகை என்ற நாயகியாக பாவித்தவளும் ஆகிய சைரந்திரியின் வீட்டுக்கு, உத்தவருடன் மிக அழகாக அலங்கரிதுக்கொண்டு சென்றீர்கள் அல்லவா?
 
உபக3தேத்வயி பூர்ண மனோரத2ம் (2)
தாங்கள் பக்கத்தில் வந்தபோது தன் மனோரதம் நிறைவேறியவளும், சந்தோஷம் அதிகரித்தால் சலிக்கின்ற ஸ்தனங்களை உடையவளும், பற்பல மரியாதைகள் செய்பவளும், ஆகிய அந்த சைரந்திரியை ஏகாந்தத்தில் மிகவும் சந்தோஷமாக ரமிக்கச் செய்தீர்கள் அல்லவா?
 
ப்ருஷ்டா வரம் (3)

மறுநாட்காலையில் தாங்கள் புறப்படும்போது "என்ன வரம் வேண்டும்?" என்று தாங்கள் கேட்டபோது, அந்தப் பேதைப் பெண் அது போன்றே மற்ற இரவுகளிலும் சுரதத்தையே வரமாகக் கேட்டாள். தங்களுடைய சாயுஜ்ய முக்தி வேண்டும் என்று ஒரு ஞானியால் தான் கேட்க முடியும். எப்போதும் தாங்கள் அருகிலேயே இருக்க வேண்டும் என்று கூட அவள் கேட்க வில்லையே!

 
ததோ ப4வான் தே3வ (4)

பிரகாசரூபியே!
தாங்கள் சில ராத்திரிகள் மான்கண்ணியாகிய அந்தப் பெண்ணை ஏகாந்தத்தில் ரமிக்கச் செய்து கொண்டு உபச்லோகன் என்னும் பிரசித்தி பெற்ற புதல்வனைக் கொடுத்தீர்கள். அவன் நாரதரிடமிருந்து வைஷ்ணவ சாஸ்திரத்தை அறிந்து கொண்டு
சிறந்து விளங்கினான்.
 
அக்ரூர மந்தி3ர (5)

பிறகு பாலராமனுடனும், உத்தவனுடனும், அக்ரூரன் வீட்டுக்குச் சென்று , அவனால் பூஜிக்கப்பட்டு துதிக்கப் பட்டீர்கள் அல்லவா?
அந்த அக்ரூரனனை அனுப்பிக் காட்டில் இருந்து திரும்பிவந்த பாண்டவர்களின் விருத்தாந்ததையும் மேலும் திருதிராஷ்டிரன் செய்கைகளையும் அறிந்து கொண்டீர்கள் அல்லவா?
 
Status
Not open for further replies.
Back
Top