கண்ணனின் கதை இது.

Status
Not open for further replies.
images



தாவத்த3த3ர்ச' (8)

எங்கும் நிறைந்து இருக்கும் ஈசனே! அதற்குள் மாடு பால் கறப்பதைப் பார்க்க ஆசை கொண்டவரும், சிறந்த பக்தனுடைய வரவை எதிர்பார்க்கின்றவரும், அண்ணனுடன் கூடியவரும், சித்த விருத்தியில் பிரம்ம ஞானத்தால் உண்டாகும் ஆனந்தக் கடலைப் பெருக விடுகிறவர் போலும் இருந்த தங்களை, அந்த அக்ரூரர் கண்டார் அல்லவா?
 
images


Image courtesy: artoflegendindia.com

ஸாயந்தனாப்லவ (9)

அந்த அக்ரூரர், சாயங்காலம் குளித்ததால் விசேஷமான தூய்மை பெற்ற திருமேனியை உடையவர்களும்; மநோஹரமான மஞ்சள், நீல நிறப் பட்டாடைகள் அணிந்து அழகானவர்களும்; அதிகம் இல்லாமல் சில ஆபரணங்களையே அணிந்து அழகு பெற்றவர்களும்; மந்த ஹாசத்தால் கனிந்த முகம் உடையவர்களும் ஆகிய உங்கள் இருவரையும் கண்டார் அல்லவா?
 
தூ3ராத்1 ரதா2த் ஸமவருஹ்ய (10)

உடனே வெகு தூரத்தில் இருந்து வந்து தேரில் இருந்து இறங்குகின்றவரும்; பக்தர்களில் சிறந்தவரும்; ஆன அந்த அக்ரூரரை எழுப்பிப் பிறகு கட்டித் தழுவிக் கொண்டு; சந்தோஷத்தால் சில வார்த்தைகள் கூறி க்ஷேமம் விசாரித்துக் கையைப் பிடித்துக் கொண்டு; பலராமனுடன் வீட்டுக்கு அழைத்துச் சென்றீர்கள் அல்லவா?
 
நந்தே3ன ஸாகம் (11)

நந்தகோபருடன் யதுவம்சத்தில் பிறந்த அந்த அக்ரூரரை மிகவும் கௌரவத்துடன் வெகுமானித்து; அவர் சொன்ன விருத்தாந்தங்களையும்கேட்டு; அரசனின் கட்டளையையும் கோபர்களிடம் தெரிவித்து; அன்று அக்ரூரருடன் நந்தகோபர் வீட்டில் பல விஷயங்களைப் பேசிய வண்ணம் இரவைக் கழித்தீர்கள் அல்லவா?
 
கருணாநிதி4ரேஷ (2)

"கருணாநிதியான இந்தக் கிருஷ்ணன் வேறு நாதன் இல்லாத நம்மை எப்படிக் கைவிடுவான்? கஷ்டமே! நம்முடைய தலைவிதி இப்படி ஆயிற்றே!" என்று தங்களிடம் செலுத்திய மனத்துடன் பெண்கள் பலவாறு வருந்தினார்கள் அல்லவா
 
சரமப்ரஹரே (3)

இரவின் கடைசி யாமத்தில் தந்தையுடனும், தோழர்களுடனும் புறப்படுகின்ற நீங்கள்; கோபிகைகளின் வருத்தத்தைத் தணிக்க, ஒரு தோழனைத் தூது அனுப்பினீர்கள் அல்லவா?
 
அசிராது3பயாமி (4)

"தாமதிக்காமல் உங்கள் பக்கம் வருவேன். விரும்பிய வண்ணம் என்னுடன் சம்போக சுகம் உங்களுக்குக் கிடைக்கும்! ஆனந்தக் கடலில் தாமதியாமல் உங்களை மூழ்கச் செய்கின்றேன்!" என்று சொல்லி கோபிகைகளை சமாதானம் செய்தீர்கள் அல்லவா?
 
ஸவிஷாத3ப4ரம் (5)

மிக வருத்ததுடனும், "தாங்கள் திரும்பி வரவேண்டும்!" என்ற பிரார்த்தனையுடனும், தலையை உயர்த்தி வெகு தூரம் வரைத் தங்களைக் கண்டனர் கோபிகைகள். தாங்கள் மெதுவாக அவர்கள் திக்கில் கடைக் கண்களைச் செலுத்தி, பலராமனுடன் கூட அக்ரூரரின் தேரில் ஏறிச் சென்றீர்கள் அல்லவா?
 
அனஸா ப3ஹுலேன (6)

பிறகு கோபர்களுடைய அனேக வண்டிகளும், கோபிகைகளுடைய மனங்களும் தங்களைப்பின் தொடர; வருந்திய மிருகங்களும் வாடிய மரங்களும் நிறைந்த காட்டைக் கடந்து யமுனைக் கரையை அடைந்தீர்கள் அல்லவா?
 
நியமாய நிமஜ்ஜ்ய (7)

அக்ரூரர் சந்தியாவந்தனம் செய்வதற்கு யமுனா ஜலத்தில் மூழ்கியபோது, அந்த ஜலத்திலும் பிறகு அந்தத் தேரிலும் தங்களைக் கண்டு ஆச்சரியமடைந்தார் அல்லவா? எங்கும் நிறைந்து இருக்கும் உங்களின் இந்த தரிசனம் அத்தனை ஆச்சரியமானதா என்ன?
 

புனரேவ நிமஜ்ஜ்ய (8)

புண்ணியசாலியான அந்த அக்ரூரர் மீண்டும் ஜலத்தில் மூழ்கியபோது தங்களை ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டவராகவும்; சங்கு, சக்கரம், கதை, தாமரை இவற்றுடன் பிரகாசிப்பவராகவும்; தேவர்களும்
, சித்தர்களும் சூழ்ந்துகொண்டு துதிப்பவராகவும் கண்டார் அல்லவா?
 
ஸததா பரமாத்மா (9)

அப்போது அவர் பிரம்மானந்த சாகரத்தில் மூழ்கியவராகத் தங்களைத் துதித்துக் கொண்டு , மறுபடியும் தங்களைக் காணாமலும், கண்டும், ஆனந்தப் பெருக்கின் தொடர்ச்சியாகப் புளகம் அடைந்தவராகத் தங்களிடம் வந்தார் அல்லவா?
 
கிமுசீ 'தலிமா (10)

"ஜலம் மிகவும் குளிர்ந்து இருந்ததா? மயிர் கூச்சம் காணப் படுகிறதே!" என்று கிருஷ்ணன் கேட்டபோது சந்தோஷ மிகுதியால் பதில் ஏதும் கூறாமல் இருந்த அந்த அக்ரூரருடன் தாங்கள் தேரில் வீற்று இருந்தீர்கள் அல்லவா? குருவயூரப்பா! என்னைக் காப்பாற்று!
 
ஸ்ரீமன் நாராயணீயம் தசகம் 74.

மதுராபுரி பிரவேச வர்ணனம்

ஸம்ப்ராப்தோ மதுராம் (1)

மத்தியான வேளையில் மதுரையை அடைந்து, அங்கே ஒரு பூந்தோட்டத்தில்
தாமதித்து, ஆகாரம் உண்டு விட்டுப் பட்டினத்தைச் சுற்றிப் பார்க்கத்
தோழர்களுடன் புறப்பட்டுச் சென்றீர்கள்.

கேள்விப் பட்டதிலிருந்து தங்களை தரிசிக்க வேண்டும் என்ற நெடுநாள் ஆசையை உடைய, ஸ்திரீ புருஷர்களின் விருப்பத்தை நிறைவேற்றும், அளவற்ற புண்ணியங்கள் ஆகிற, சங்கலிகளால் இழுக்கப்பட்டவர் போல, ராஜ வீதியைச சென்று அடைந்தீர்கள் அல்லவா?
 
தவத் பாத3 த்3யுதிவத் (2)

ஹே கிருஷ்ணா! சிவந்து அழகான தங்கள் திருவடிகள் போல நிறமுடையவர்களும்,

அழகானவர்களும், நீருண்ட மேகம் போன்ற தங்கள் திருமேனியை நிகர்த்த அசைகின்ற

ஸ்தனங்களால் சோபை அடைந்தவகளும், சலிக்கின்ற தங்கள் கண்கள் போன்ற மிக

லோலைகளும், முத்துமாலை அணிந்த தங்களைப் போன்று முத்துமாலைகள் அணிந்து

அழகுற்றவர்களும், மாசற்றுப் பிரகாசிக்கின்ற தங்கள் மந்த ஹாசதின் மேன்மை

போல நைர்மால்யதில் விளங்குகின்றவர்களும், மயில் பீலி அணிந்த தங்கள்

திருமுடியின் அழகு போல விளங்கும் தலை நகை அணிந்தவர்களும் ஆன பெண்கள்

வந்தனர் அல்லவா?
 
தாஸாம் ஆகலயன் (3)

அந்தப் பெண்களுக்குக் கடைக் கண்பார்வையால் சந்தோஷத்தை உண்டு பண்ணிக் கொண்டு, தங்களால் பட்டணத்து ஜனங்கள் சந்தோஷத்தாலும் ஆச்சரியத்தாலும் பரவசர்களாக இருக்கும்போது, அவ்விடத்தில் வண்ணன் ஒருவனிடன் வஸ்திரத்தை யாசிக்க, "அரசனுடைய வஸ்திரத்தை உனக்கு யார் தருவார்கள்? ஓடி விடு!" என்று அவன் கூறவும் அப்போதே அவனுடைய தலையை கையால் வேறுபடுத்தினீ ர்கள். அவன் உடனே மோக்ஷத்தை யடைந்தான் அல்லவா?
 
பூ4யோ வாயகமேகம் (4)

லக்ஷ்மிபதே! பிறகு தாங்கள் அணிவதற்குத் தகு ந்த வஸ்திரத்தை மிக
சந்தோஷத்துடன் தரும், விசால புத்தியுடைய ஒரு தையல்காரனைத் தங்கள்
ஸ்தானத்தை அடைவித்தீர்கள். ஜீவாத்மாக்களின் புண்ணியத்தை யாரால்
அறியமுடியும்? அதன் பிறகு மாலைக்காரன் ஒருவன் மாலைகளைக் கொண்டும் பூச்
செண்டுகளைக் கொண்டும், ஸ்தோத்திரங்களைக் கொண்டும் வெகுமானிக்க, அவனுக்கு
அவன் விரும்பிய உயர்ந்த பக்தியையும், ஐஸ்வரியத்தையும் அளித்தீர்கள் அல்லவா?
 
குப்ஜாமப்ஜவிலோசனாம் (5)

மறுபடி ராஜவீதியில், தாமரைக் கண்ணியாள் ஆன ஒரு கூனியைக் கண்டு, அவள்
தந்த சந்தனப் பூச்சால் மகிழ்ந்து, அவள் கொண்ட ஆசையை உசிதமாக திருப்பித்
தந்தீர்கள் அல்லவா?

அவள் மனத்தில் உள்ள நேர்மையை உடலிலும் கொண்டுவர எண்ணி அவளைக் கையால் மெதுவாகப் பிடித்துக் கொண்டு அவளைத் திரிலோக சுந்தரியாக
உயர்த்தினீர்கள் அல்லவா?
 
ஸ்ரீமன் நாராயணீயம்
தசகம் 74

தாவன் நிச்'சித வைப4வாத் (6)
ஹே பிரபு அப்போது மிகவும் பாவிகள் அல்லாத ஜனங்கள் தங்கள் மகிமையை
உணர்ந்து கொண்டு, தங்களுடைய சக்திக்கு ஏற்றவாறு தாம்பூலம் அல்லது மாலை
என்று ஏதேனும் சிலவற்றைத் தங்களுக்குக் காணிக்கையாக அளித்தார்கள் அல்லவா?
அப்போது புஷ்பம் அல்லது வேறு எதோ ஒரு பொருளை எடுத்துக் கொண்டு அஞ்சலி
செய்து நான் வழியில் நிற்கவில்லை அல்லவா?அதனால் தான் இன்று இந்தக்
கஷ்டத்தை அனுபவிகின்றேன். ஐயோ கஷ்டம்!
 
எஷ்யாமீதி விமுக்த (7)
"பிறகு வருகிறேன்" என்று நீங்கள் சொல்லி அனுப்பி இருந்தும், தங்களை விட்டுப் பிரிய மனம் இல்லாத அந்த சந்தனப் பூச்சுக்காரி வெகு தூரத்திலிருந்து தங்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது நீங்கள் கோபுரத்துக்குள் சென்றீர்கள் அல்லவா? ஆரவாரத்தால் அனுமானம் செய்யப்பட்ட தங்கள் வரவால் உண்டான பெரும் ஆனந்தத்தால் குலுங்கிய தேவகியின் ஸ்தனங்களில் இருந்து பெருகிய பாலைப் போலத் தங்கள் கீர்த்தி நகரத்துக்குள்
சென்றது.
 
ஆவிஷ்டோ நக3ரீம் (8)
பெரும் உத்சவங்களுடன் கூடிய பட்டணத்திற்குள் சென்று, "கூடாது! கூடாது!"
என்று காவல்காரர்களால் தடுக்கபட்டீர்கள். தங்களுடைய ரூப சௌந்தரியத்தாலோ,
தேஜஸ் மிகுந்ததனாலோ மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட வில்லை
யாகசாலையிலிருந்து எடுத்தீர்கள். நாண் ஏற்றினீர்கள். பாணத்தை வைத்து
பலமாக இழுத்து வில்லையே முறித்து விட்டீர்கள் அல்லவா?
 
ச்' வ: கம்ஸக்ஷபணோத்சவஸ்ய (9)

ஹே பிரபுவே! மறுநாள் நடக்கப்போகின்ற கம்ச வதமாகிய உத்சவத்துக்கு முன்பே
ஆரம்ப பேரிகைக்கு ஒப்பான அந்த வில் முறிந்த பேரொலி தேவர்களையும் மயிர்
சிலிர்க்க வைத்தது. அது மட்டுமல்ல அதிலிருந்து உண்டான் கம்சனின்
நடுக்கம் வில்லின் இரண்டு துண்டுகளால் அடிக்கப்பட்ட காவல்காரர்களின்
கூக்குரலால் அதிகரித்தது அல்லவா?
 
சி'ஷ்டைர் து3ஷ்ட ஜனைச்'ய (10)

ஹே குருவாயூரப்பா! சாது ஜனங்களால் பிரியத்துடனும், துஷ்டர்களால்
பயத்துடனும் பார்க்கப்பட்ட மகிமை உடையவராக, பட்டணத்து அழகை பார்த்துக்
கொண்டும் , சுற்றிக்கொண்டும் , மாலைப் பொழுதில் பூந்தோட்டத்துக்குச்
சென்று ஸ்ரீ தாமாவுடன் ராதையின் பிரிவினால் உ ண்டான வருத்தத்தைச்
சொல்லிக் கொண்டும், தூங்கிக் கொண்டும், அவதார காரணம் நெருங்குவதால்
ஆனந்தம் அடைந்தவரும் ஆகிய தாங்கள் என்னைக் காக்க வேண்டும்.
 
தச அவதாரம்.





மனிதர்களும் எடுக்கின்றார்கள்,
மண்ணுலகில் தச அவதாரங்கள்!

தந்தைக்கு நல்ல ஒரு மகனாகவும்,
மகனுக்குத் நல்ல தந்தையாகவும்;

தாத்தாவுக்குச் செல்லப் பேரனாகவும்,
பேரனுக்குப் பிடித்த தாத்தாவாகவும்;

அண்ணனுக்குத் தக்க தம்பியாகவும்,
தம்பிக்கு ஏற்ற அண்ணனாகவும்;

ஆசிரியருக்குச் சிறந்த மாணவனாகவும்,
மாணவனுக்கு உகந்த ஆசிரியராகவும்;

மாமனாருக்குப் பிரிய மருமகனாகவும்,
மருமகனுக்கு, உயர்ந்த மாமனாராகவும்!

கண்ணன் எடுத்த அவதாரங்களைக்
கண்கள் குளிரக் காண்போமா, நாம்?

மனிதர்களுக்கு அவன் ஒரு மாணிக்கம்;
மனம் கவர்ந்த மன்மதன், மாதர்களுக்கு!

கோபர்களுக்கு, நெருங்கிய நண்பன் அவன்;
கோபியருக்கோ, உள்ளம் கவர்ந்த காதலன்.

தேவகி வசுதேவருக்கு, நோற்றுப் பெற்ற புதல்வன்;
பாவிகளுக்குத் தண்டனை அளிக்கும் தர்மதேவன்.

பொல்லாத கம்சனுக்கு, அச்சம் தரும் காலதேவன்;
பொது ஜனங்களுக்கு, அவன் ஒரு சிறு குழந்தை.

யோகியருக்கு, எல்லாம் வல்ல பரமாத்மா;
ஞானியருக்கு, அவன் ஞானம் தந்த பரமன்.

கண்டவர் மனங்களில், கம்சன் அரண்மனையில்,
கண்ணன் நிலை பெற்று விளங்கியது, இவ்வண்ணமே!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
ஸ்ரீமன் நாராயணீயம் தசகம் 75

கம்ச வத வர்ணனம்

ப்ராத: ஸந்த்ரஸ்த (1)

மறு நாட்காலையில் அதிகம் பயந்துவிட்ட கம்சனுடைய கட்டளையால் மல்யுத்தத்தை தெரியப்படுத்தும் பேரிகை முழக்கப்பட்டது. அரசர்கள் கூட்டம் அவரவர் ஆசனங்களில் சென்று அமர்ந்தது. நந்தகோபர் மாடிக்கும், கம்சன் அரண்மனை மாளிகைக்கும் சென்றபோது, பலராமனுடன், தாங்களும், தங்கள் பரிவாரங்களும் அழகாக அலங்கரித்துக் கொண்டு, கோபம் கொண்ட குவலயாபீடம் என்ற யானையால் தகையப்பட்ட ம
ல்லர்கள் போர்புரியும் போர்க்கள வாயிலை அடைந்தீர்கள் அல்லவா?
 
Status
Not open for further replies.
Back
Top