கண்ணனின் கதை இது.

Status
Not open for further replies.
கதா3பி கலு (4)

ஒருநாள் தாங்கள் பலராமனுடன் சேர்ந்து கொண்டு பெண்களுடன்

விளையாடிக் கொண்டிருந்தபோது குபேரனுடைய யக்ஷன்

சங்கசூடன் என்பவன் அந்த ஸ்திரீகளை அபஹரித்துச் சென்று

விட்டான் அல்லவா? அப்போது தாங்கள் விரைவாக அவனைப்

பின்தொடர்ந்து பெண்களை விடுவித்த அவனைக் கொன்றீர்கள்.

அவன் தலையில் இருந்த ரத்தினத்தை பலராமனுக்குக்

கொடுத்தீர்கள்.
 
தி3னேஷு ச (5)

பகல் நேரங்களில் சிநேகிதர்களுடன் வனங்களில் விளையாடுவதில்

ஈடுப்பட்டவரும்; மன்மதன் போல மனத்தைக் கவருபவரும்; வேணு

நாதமாகிய அமிர்தத்தை ஆஸ்வதிக்கின்றவரும், தேவ ஸ்திரீகளின்

கண்களுக்கு அமிர்த பக்ஷணத்தைக் கொடுக்கின்றவரும் ஆகிய தங்களை

நினைத்து விரகதாபம் கொண்ட கோபிகைகள் என்னென்ன சொல்லிக்

கொள்ளவில்லை?
 
அரிஷ்டாஸுரவத4ம்

போ4ஜராஜப்4ருத (6)

பிறகு கம்சனின் வேலைக்காரனும், கடுமையான துர்மார்கங்களில் தன்

திருஷ்டியைச் செலுத்தியவனும் ஆகிய அரிஷ்டன் என்பவன் பயங்கர

வடிவுடன், கடூரமான சப்தத்துடன் காளை வடிவுடன் தங்களுக்கு

எதிரில் வந்து நின்றான் அல்லவா?
 
சா'க்கரோத (7)

எருதின் வடிவம் எடுத்த அவன் உலகத்தினரின் தைரியத்தை

அபஹரிப்பவனாக பெரும் உருவம் எடுத்துக் கொண்டு பசுக் கூட்டத்தை

விரைவாக விரட்டிக் கொண்டு வேதங்களுக்கு இருப்பிடம் ஆன தங்களை

வந்து அடைந்தான் அல்லவா
?
 
துங்க3ஸ்ருங்க3 (8)

உயர்ந்த கொம்புகளின் நுனிகளை உடையவனாக, விரைவாக எதிர்த்து

வருகின்றவனும், பயமற்றவனும், பத்திரமான உருவமுடையவனும் ஆன

மிகவும் துஷ்டனான அவ்வசுரனை விரைவாகப் பிடித்துப் பிசைந்து கொன்று

தேவர்களை சந்தோஷப்படுத்தினீ ர்கள் அல்லவா?
 
சித்ரமத்3ய (9)

ஹே பகவானே! இந்த விருஷபாசுரனைக் (விருஷத்தைக்) கொன்றதால்,

பூமியில் தர்மத்தின் (விருஷத்தின்) நிலை மிகவும் நிலை பெற்றாதாக ஆனது.

இந்திரனின் (விருஷத்தின்) மனத்தில் அதிகமான சந்தோஷம் வளர்ந்
து!

இது ஆச்சரியம்!" என்று தாங்கள் தேவர்களால் துதிக்கப்பட்டீர்கள் அல்லவா?
 
ஔக்ஷகானி (10)

"காளைக் கூட்டங்களே! வெகுதூரம் ஓடுங்கள். காளையைக் கொன்றவனை

எல்லோரும் பார்க்கட்டும்!" என்று வேடிக்கையாகப் பரிஹசிக்கின்ற

கோபாலர்களுடன் வீட்டுக்குத் திரும்பிய ஹே குருவயூரப்பா! தாங்கள்

என்னைக் காப்பாற்ற வேண்டும்.
 
நாராயணீயம் தசகம் 71

கேசி வ்யோம வத4 வர்ணனம்

images


Image courtesy vaishanavsongs.com

யத்நேஷு ஸர்வேஷ்வபி (1)

எல்லா பிரயத்னங்களிலும் வீணாகாதவனும், கம்சனுக்கு நெருங்கிய உறவினனுமாகிய அந்தக் கேசி என்பவன் தாங்கள் சிந்துஜையால் (லக்ஷ்மியால் ) அடையப்படக் கூடியவர் என்று எண்ணி, சிந்துஜன் (சிந்து தேசத்தில் பிறந்த குதிரை ) வடிவம் எடுத்து வந்தான் அல்லவா?
 
Last edited:
2. க3ந்த3ர்வதாமேஷ (2)

இந்தப் பாவி கந்தர்வனாக (குதிரையாக) இருக்கும் தன்மையை அடைந்தும்

கூட, கர்ண கடோரச் சத்தங்களால் எல்லா ஜனங்களையும் துன்புறுத்திக்

கொண்டும், கோகுலத்தை அழித்துவிட்டும், தங்களை எதிர்த்தான்

அல்லவா?
 
தார்க்ஷ்யார்பித (3)
இந்த தார்க்ஷியன் (குதிரை) பிருகு மகரிஷி தங்களைக் காலால் மிதித்து கேட்டு, அதைத் தன்னாலும் செய்ய முடியும் என்று மதியீனத்தால், கருடன் மேல் வைக்கப்பட்ட திருவடிகளை உடைய தங்கள் மார்பில் காலால் உதைத்தான் அல்லவா?
 
images

image courtesy sda-archives.com

ப்ரவஞ்சயன்னஸ்ய (4)

அவனுடைய கால் உதையிலிருந்து தப்பித்துக் கொண்டு, விரைவாக அவனையும் வெகு தூரத்தில் தூக்கி எறிந்தீர்கள். அதனால் அவன் மயக்கம் அடைந்தும் கூட மேலும் அதிகரிக்கும் கோபக் கனலுடன் தங்களைத் தின்பதற்கு விரைந்து வந்தான் அல்லவா?
 
images


Image courtesy indianmythologytales. blogspot

த்வம் பா3ஹத3ண்டே3 (5)

தாங்கள் வாஹத்தை (குதிரையை) தண்டிப்பதில் மன உறுதி கொண்டு இருந்ததால், அவன் வாயில் தண்டம் போன்ற தங்கள் கரத்தைச் செலுத்தினீர்கள் அல்லவா?
அப்போ
து அந்தக் கைப் பெருகி வளர்ந்ததால் மூச்சுத் திணறி அவன் குதிரையாக இருந்தும் கைவல்யத்தை (ஒன்றாகும் தன்மையை) அடைந்தான் அல்லவா?
 
ஆலம்ப மாத்ரேண (6)
யாகப் பசுவைக் கொன்று தேவர்களுக்குத் திருப்தி செய்கின்ற இந்தப் புதிய அஸ்வமேத யாகத்தைத் தாங்கள் செய்யும்போது தேவர்கள் மகிழ்ந்து தங்களுக்கு கேசவன் என்ற பெயர் சூட்டித் துதித்தார்கள் அல்லவா?
 
கம்ஸாயாதே (7)

கம்சனுக்குத் தாங்கள் வசுதேவரின் குமாரன் என்பதை எடுத்து உரைத்து, அந்த வசுதேவரைக் கொல்ல விரும்பிய கம்சனை நல்ல வார்த்தைகளால் தடுத்து, கேசி வதத்தின் முடிவில் வந்து சேர்ந்த நாரதர் தங்களைத் துதித்தார்கள் அல்லவா?
 
கதா3பிகோ3பை: (8)

ஒருநாள் தேவர்களைத் துன்புறுத்துகின்றவனும், அளவில்லாத மாயைகளில் வல்லவனும், மயாசுரன் பிள்ளையுமான வ்யோமன் என்னும் அசுரன், காட்டில் கோபர்களுடன் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்த தங்களிடம் வந்தான் அல்லவா?
 
ஸ சோரபாலயித (9)

அவன் திருடர்கள் ஆகவும், காப்பாற்றுபவர்கள் ஆகவும் விளையாடுகின்ற கோபர்கள் இடையில் திருடனாக விளையாடி, கோபர்களையும் பசுக்களையும் குஹைகளில் கொண்டு விட்டுக் கல்லால் மூடிவிட்டான். அதை அறிந்த தாங்கள் அவனைக் கொன்றீர்கள் அல்லவா?
 
ஏவம் விதை4ச்'சாத்3பு4த (10)

பரமாத்மா ஸ்வரூபியான குருவாயூரப்பா! இப்படிப் பட்ட பல ஆச்சரியமான விளையாட்டுக்களால் ஒப்பற்ற ஆனந்தத்தை கோகுலத்தில் புதிது புதிதாகச் செய்து கொண்டிருக்கும் தாங்கள் என்னைக் காப்பாற்ற வேண்டும்.

 
நாராயணீயம் தசகம் 72

அக்ரூரஸ்ய கோகுல யாத்ரா வர்ணனம்

கம்ஸோத்த நாரத3 கி3ரா (1)

பாம்பணையின் மேல் துயிலும் ஈசா! நாரதரின் வாக்கினால் தங்கள் கோகுலத்தில் வசிப்பதை அறிந்து மனம் உடைந்த கம்சன், வில் யாகம் என்ற காரணத்தைக் காட்டித் தங்களை மதுரைக்கு அழைத்துவர காந்தினியின் பிள்ளையாகிய அக்ரூரனனை அனுப்பினான் அல்லவா?
 
அக்ரூர ஏஷ ப4வத3ங்க்ரி(2)

வெகு காலமாகவே தங்கள் திருவடிகளை மனதில் துதிக்கின்றவரும், கம்சனிடம் இருந்த பயத்தால் தங்களை தரிசிக்கும் சக்தியற்றவரும் ஆன அக்ரூரர், இப்போது அதே கம்சனின் கட்டளையால் தங்களை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது என மிக அதிகமான ஆனந்தத்தை அடைந்தார் அல்லவா?
 
ஸோயம் ரதேன (3)

தங்கள் இருப்பிடத்துக்கு தேரில் ஏறிச் செல்கின்ற புண்ணியவான் ஆகிய அக்ரூரன், தங்கள் மேல் வைத்திருந்த மனோரதக் கூட்டங்களை ஆலோசித்துக் கொண்டும், அவற்றை அனுபவித்துக் கொண்டும், அவைகளுக்கு இடையூறு வந்து விடுமோ என்று அஞ்சி இஷ்ட தெய்வத்தைப் பிரார்த்தித்தும் வந்ததால் வழியில் ஒன்றுமே அறியவில்லை.
 
த்3ரக்ஷ்யாமி (4)

"அனேக உபநிஷத்துக்களால் உபதேசம் செய்யப்பட ஸ்வரூபம் உடைய பரம புருஷனைக் காண்பேனோ? அவரை நான் தொடுவேனோ? அவற்றின் ஆலிங்கனம் செய்து கொள்வேனோ? அவர் என்னிடத்தில் பேசுவாரா? என்னை அவர் எப்படிப் பார்ப்பார்?" என்ற பலவித ஆலோசனைகளால் வழி நீளத் தங்களையே எண்ணிக் கொண்டு சென்றார் அல்லவா?
 
பூ4ய: க்ரமாத3பி4விச'ன் (5)

செந்தாமரைக் கண்ணனே! கிரமாகத் தங்கள் திருவடிகள் பட்டதால் மிகவும் சுத்தம் அடைந்ததும், பரமசிவன், பிரம்மதேவன் முதலியவர்களால் வணங்கத் தகுந்ததும், ஆன பிருந்தா வனத்தில் செல்லுகின்ற அவர் ஆனந்தத்தில் மூழ்கியவர் போலும், மதி மயக்கத்தை அடைந்தவர் போலும், என்ன என்ன அவஸ்தைகளைத தான் அனுபவிக்க வில்லை?
 
பச்'யன்னவந்த்த3த (6)

தாங்கள் விளையாடிய இடங்களைக் கண்டு வணங்கினார்! தங்கள் திருவடிகளின் அடையாளம் பட்ட புழுதியில் புரண்டார்! நான் வேறு என்ன சொல்லுவேன்? பரமாத்மா ஸ்வரூபியே! அந்தக் காலத்திலும் அநேகர் பிறந்திருந்தார்கள். ஆனால் இது போல பக்தி பரவசம் அடைந்தவர்கள் மிகக் குறைவே!
 
ஸாயம் ச கோ3ப ப4வனானி (7)

அக்ரூரர் அந்த சாயங்கால வேளையில், தங்கள் சரிதங்களைக் கானம் பண்ணும், காதுகளுக்கு அமிர்தப் பிரவாகம் ஆகின்ற ரசாயனங்களை உடைய, இடையர்களின் வீடுகளைப் பார்த்துக் கொண்டே, ஆனந்தப் பெருக்கால் இழுத்துச் செல்லப்பட்டுத் தங்கள் வீட்டின் அருகே வந்து சேர்ந்தார் அல்லவா?
 
Status
Not open for further replies.
Back
Top