கண்ணனின் கதை இது.

Status
Not open for further replies.
அலமலமதிபீத்ய (5)

"போதும்! போதும்! அதிகம் பயந்தது போதும். நீங்கள் எப்போரும் இப்போது கண்களை மூடிக் கொள்ளுங்கள் " என்ற தங்கள் திருவாக்கின்படி அவர்கள் கண்களை மூடிக் கொண்டபோது அந்தக் காட்டுத்தீ எங்கே?அந்த முஞ்சிக் காடு எங்கே? அவர்கள் இருந்தது பாண்டீர மரத்தின் அடியில்! என்ன ஆச்சரியம்!
 
Last edited:
ஜெய ஜெய தவ மாயா (6)

"ஹே ஈசா! தங்கள் மேன்மை பெற்று விளங்க வேண்டும்! தங்களுடைய மாயை எப்படிப் பட்டது!" என்று பலவாறான புகழ் உரைகளைக் கேட்டு மந்தஹாசத்துடன், பல லீலைகள் புரிந்து கொண்டு, வேனல் நிலவும் வன மத்தியில் மீண்டும் சஞ்சரித்தீர்கள் அல்லவா?
 
images

Image courtesy omshivam.wordpress.com

த்வயி விமுக2மிவோச்சை (7)

தங்களிடத்தில் பக்தி இல்லாததைப் போல அதிகமான ஆத்யாத்மகம் முதலிய தாபத்தை (உஷ்ணத்தை) வஹிக்கின்றதும், தங்கள் சேவையைப் போல உள்ளத்தில் இருக்கும் பாபச் சேற்றை போக்கடிப்பதும் (உலர்த்துவதும்), தங்கள் கைகளைப் போல உயரக் கிளம்புகின்ற அதிகமான பராக்கிரமத்தின் பெருக்கை (வெய்யிலின் பெருக்கை) உடையதும் ஆகிய வேனற் காலத்தை யமுனா தீரத்தில் உள்ள பிரதேசங்களில் கழித்தீர்கள் அல்லவா?
 
தத3னு ஜலத3 ஜாலை (8)

அதன் பிறகு, தங்கள் திரு மேனியை ஒத்த நிறமுடையவைகளும், மஞ்சள் பட்டாடை போல பிரகாசிக்கும் மின்னற் கொடிகளை உடையவைகளும், ஆகிய மேகக் கூட்டங்கள், உலகத்தில் உள்ள எல்லோருக்கும் ஆனந்தம் அளிக்கும் மழைக் காலத்தில் மலைக் குகைகளில் தங்கள் இஷ்டம் போல வசித்தீர்கள் அல்லவா?
 
images

Image courtesy vickydhanwani.wix.com

குஹரதல நிவிஷ்டம் (9)

ஹே தேவா! மலை அரசனான கோவர்த்தனன் தன் குகைகளில் வசிக்கும் தங்களை மயில்களின் கோகா சப்தங்களால் மகிழ்வித்துக் கொண்டும், தங்களைப் புகழ்ந்து கொண்டும், மலர்ந்த புஷ்பங்களால் புஷ்பாஞ்சலி செய்து சேவித்துக் கொண்டும் இருந்தான் அல்லவா?
 
images

image courtesy everything-krishna.com

அத2 ச'ரத3முபேதாம் (10)

அதன் பிறகு தாங்கள், தங்கள் பக்தர்கள் உள்ளம் போல நிர்மலமான ஜலப் பிரவாகத்தை உடைய அந்த சரத் காலத்தை காடுகளில் அனுபவித்துக் கொண்டும், நிர்மலமான் காடுகளில் பசுக்களை நன்கு மேய்த்துக் கொண்டும் இருந்த குருவாயூரப்பா! எனக்கு தேக சுகத்தைத் தந்தருளும்!
 
நாராயணீயம் தசகம் 59.

வேணுகான வர்ணனம்


images

Image courtesy aura-healingbyphone.com

த்வத்3 வபு: நவகலாய (1)

புதுக் காசாம்பூ போலக் கோமளமானதும்; பிரேமையைப் பெருக்குகின்றதும்; எல்லோரையும் முற்றிலும் மயக்குவதும்; சச்சிதானந்த ரூபம் ஆனதும்; பர பிரம்மமும் ஆகிய தங்கள் திருமேனியைக் கண்டு கோபிகைகள் ஒவ்வொரு நாளும் மயக்கம் அடைந்தனர்.
 
images


Image courtesy vaishnavsongs.com

மன்மதோ2ன் மதி2த மானஸா: (2)
ஹே கிருஷ்ணா! கோபிகைகள் மன்மதனால் கலக்கப்பட்ட மனதை உடையவர்களாகி, எல்லா இடத்திலும் எப்போதும் தங்களையே காண விரும்பினர். காலையில் தாங்கள் காட்டுக்குச் செல்வதைக் கூட அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
 
images

image courtesy iskcondesiretree.net

நிர்க3தே ப4வதி (3)

காட்டுக்குப் புறப்பட்ட தங்கள் இடத்திலேயே கண்களைச் செலுத்திய மான் கண்ணியர், உங்களுடனேயே அவர்களும் மனம் சென்றுவிட, வெகு தூரத்தில் இருந்தே வேணு கானத்தைக் கேட்டுக் கொண்டும், தங்கள் லீலைகளைப் பற்றிப் பேசிக்கொண்டும் களித்தனர் அல்லவா?
 
images


Image courtesy hariharji.blogspot.com

கானனாந்த மிதவான் (4)

காட்டுக்குச் சென்ற தாங்களும் மநோஹரமான நல்ல நிழல் உள்ள ஒரு மரத்தினடியில் கால்களை மாற்றி வைத்து நின்று புல்லாங்குழல் ஊதினீ ர்கள் அல்லவா?
 
images

Image courtesy krishnasmercy.org

மாரபா4ண து4த கேசரீகுலம் (5)

ஹே கிருஷ்ணா! தங்களுடைய வேணு நாதம் அப்சர ஸ்திரீக்களைக் கூடக் காமவிகாரத்தால் சலிக்கச் செய்தது. பசு, பக்ஷிக் கூட்டங்களை அசைவற்றதாகச் செய்தது. கல்லையும் கரையச் செய்தது.
 
images


Image courtesy santhunice.blogspot.com

வேணுரந்த்ர தரலாங்கு3லீத3ளம் (6)

வேணுவின் துவாரங்களில் சலிக்கின்ற விரல் நுனிகளையும், தாளத்தை அனுசரித்து அசைகின்ற துளிர் போன்ற கால்களையும் உடைய தங்களின் அந்த நிலையை நேரில் காணாது இருந்த போதிலும், கற்பனை செய்த காட்சியிலேயே மோஹம் கொண்டனர் கோப ஸ்திரீக்கள். என்ன ஓர் ஆச்சரியம்!
 
images


Image courtesy girirajswami.com
நிர்விஷங்க ப4வத3ங்க (7)

தங்கு தடையின்றித் தங்கள் திருமேனியைத் தரிசிக்கின்ற தேவ ஸ்த்ரீக்களையும், பறவைகளையும், பசுக்களையும் அந்த பிருந்தாவனத்தையும் மிகவும் பாக்கியசாலிகள் என்று
அந்த கோபிகைகள் கருதினார்கள் அல்லவா?
 
images

Image courtesy glimpseofkrishna.com

ஆபிபே3ய மத4ராருதம் (8)

"வேணுவினால் அனுபவிக்கப்பட்டு மீதியான ரசத்தை உடைய அந்த அதராம்ருதத்தை என்றாவது ஒரு தடவையாவது நான் பானம் செய்வேனா? ஆ கஷ்டம்! வெகு தூரத்தில் இருக்கும் பேராசையால் என்ன பிரயோஜனம்?" என்று மனம் கலங்கி மயங்கினார்கள் கோபஸ்த்ரீக்கள்.
 
images

Image courtesy krsna-art.com

ப்ரத்யஹம் ச (9)

ஹே பிரபுவே! ஒவ்வொரு நாளும் கோபிகைகள் மறுபடியும் இவ்விதம் மன்மதனால் உண்டு பண்ணப் பட்ட அனுக்ரஹத்தால் தங்களிடத்தில் ஆசை வைத்து அதனால் பரவசர்கள் ஆகி வீடுகளில் செய்ய வேண்டியதை மறந்து அறியாமையை அடைந்தனர்.
 
images


image courtesy artoflegendindia.com

ராக3ஸ்தாவஜ்ஜாயதே (10)

அனுராகம் என்னும் ஆசை சுபாவத்திலேயே உண்டாகிறது அல்லவா? மோக்ஷதிற்கு உபாயம் நம் முயற்சியால் உண்டாகலாம். அல்லது உண்டாகாமல் போகலாம். கோபிகளுக்கு அவர்களின் அனுராகமே மோக்ஷத்திற்கு உபாயமாகி விட்டது அல்லவா! அவை இரண்டும் ஒன்றாகக் கிடைத்த அவர்களின் பாக்கியமே பாக்கியம்.
குருவாயூரப்பா! என்னைக் காப்பாற்ற வேண்டும்.
 
நாராயணீயம் தசகம் 60

கோபி வஸ்த்ராபஹார வர்ணனம்

மத3னாதுரசேதஸோன்வஹம் (1)

ஒவ்வொரு நாளும், காமத்தால் பரவசம் அடைந்த மனத்தையுடைய சஞ்சலாக்ஷிகள் ஆகிய கோபிகைகள், தங்கள் திருவடிகளை சேவிக்கும் விருப்பத்தினா,ல் யமுனா நதிக் கரையில், மண்ணால் உண்டாக்கப்பட்ட மலைமகள் பார்வதி தேவியை பூஜை செய்தனர்.
 
தவ நாமகதா2ரதா: (2)

அழகான கண்களை உடைய அவர்கள் தங்கள் திருநாமத்தை உச்சரிப்பதில் விருப்பம் உடையவர்களாய் விடியற்காலையில் ஒன்று சேர்ந்து யமுனா நதிக்குச் சென்று '"நந்த குமாரன் எனக்குக் கணவனாக வேண்டும்" என்று பிரார்த்தித்து அநேகம் காணிக்கைகளுடன் தேவியைப் பூஜை செய்தார்கள் அல்லவா?
 
images


Image courtesy forum.spiritualindia.org

இதி மாஸமுபாஹித (3)

இவ்வாறு ஒரு மாதம் மழுவதும் விரதம் அனுஷ்டித்தவர்களும், சஞ்சலிக்கும் கண்களை உடையவர்களும் ஆகிய அந்த கோபிகைகளைக் கண்டு தாங்கள் கருணையால் மனம் கனிந்தீர்கள். அவர்களை அனுக்ரஹிக்க விரும்பி யமுனை நதிக் கரைக்குச் சென்றீர்கள்.
 
TA-044_600-120x130.jpg

Image courtesy krishnastore.com

நியமாவஸிதௌ (4)
விரதம் முடிந்த பிறகு அவரவர் வஸ்திரத்தைக் கரையில் அவிழ்த்து வைத்துவிட்டு அவர்கள் யமுனா ஜலத்தில் விளையாடும்போது தங்களை எதிரில் கண்டு மிகுந்த வெட்கம் அடைந்தனர்.
 
images

Image courtesy harekrsna.de

த்ரபயா நமிதானனாஸு (5)

அப்போது அந்தப் பெண்கள் வெட்கத்தால் தலை குனிந்து நிற்கும்போது கரையில் வைக்கப்பட்டிருந்த அவர்களின் வஸ்திரங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு விரைந்து மரக்கொம்பில் ஏறிக் கொண்டீர்கள் அல்லவா?
 
images

Image courtesy artoflegendindia.com

இஹ தாவது3பேத்ய (6)

"கட்டழகிகளே! இங்கே வந்து அவரவர் ஆடைகளை மாறாமல் எடுத்துக் கொண்டு போகலாம் !" என்று தாங்கள் பரிகாசமாகச் சிரித்துக் கொண்டு சொல்லும்போது என்ன செய்வது என்று அறியாத அந்த கோபிகைகள் மோஹம் அடைந்தார்கள் அல்லவா?
 
images

Image courtesy popscreen.com

ஆயி ஜீவ சிரம் கிஷோர (7)

"ஹே கிஷோர! நீ நீண்ட நாள் வாழவேண்டும்!
உன் பணிப் பெண்களாகிய ( பிரேமைக்கு உரியவர்களாகிய)
எங்களை ஏன் இப்படிப் பரவசப்படு
த்துகின்றாய்?
(உன் வசப்படுத்திக் கொள்ளவில்லை?)
ஹே தாமரைக் கண்ணா! (கணவன் கொடுக்க வேண்டிய) வஸ்த்திரத்தைக் கொடு! " என்ற கூறத் தங்கள் வஸ்திரத்தைக் கொடுக்காமல் மந்தஹாசத்தை மட்டும் கொடுத்தீர்கள் அல்லவா?
 
images

Image courtesy exoticindiaart.com

அதி4ருஹ்ய தடம் க்ருதாஞ்ஜலி: (8)

கரையில் ஏறிக் கும்பிட்டு வணங்கியவர்களும், அதனால் பரிசுத்தம் அடைந்தவர்களும், தன்னையே சரணம் அடைந்தவர்களும் ஆகிய அந்தப் பெண்களைக் கண்டு மிகவும் சந்தோஷம் அடைந்து எல்லா வஸ்திரங்களையும் அளித்துப் பிறகு அனுகிரஹம் செய்யும் ஒரு வசனத்தையும் தந்தருளினீர்கள் அல்லவா?
 
images

Image courtesy dharmakshetrasblog.blogspot.com

விதி3தம் நனுவோமநீஷிதம் (9)

"ஓ பெண்களே! உங்கள் விருப்பம் என்னால் அறியபட்டது. ஆனால் இதற்குத் தகுந்த பதிலை யமுனை நதியின் மணல் திட்டில் நிலவுடன் கூடிய இரவுகள் சொல்லும்!" என்று தாங்கள் அந்தப்பெண்களிடம் சொன்னீர்கள் அல்லவா?
 
Status
Not open for further replies.
Back
Top