கண்ணனின் கதை இது.

Status
Not open for further replies.
அர்த்3த4பீதகுச (47:2)

ஹே ஈசனே! தாங்கள் தாமரை மொட்டுப் போன்ற ஸ்தனங்களைப் பாதி குடித்துக் கொண்டு இருக்கும் போது,

அன்பார்ந்த மந்தஹாசத்தால் மிகவும் அழகான வதனாரவிந்தத்தோடு இருக்கும்போது,

நெருப்பில் பொங்கி வழிந்த பாலை எடுத்து வைப்பதற்காகத் தங்கள் தாய் உள்ளே விரைந்து சென்றாள்
 
ஸாமிபீதரஸ (47:3)

பால் குடிக்கும்போது பாதியில் ஏற்பட்ட தடையால் தங்களுகுக் கடும் கோபம் உண்டாயிற்று.

தன்னை மறந்து மத்தினால் அந்தத் தயிர்ப் பாத்திரத்தை உடைத்தீர்கள் அல்லவா?
 
உச்சலத்3த்4வனி (47:4)

அப்போது தங்கள் தாய் யசோதை மிக பலமான சப்தத்தைக் கேட்டு விரைவாக ஓடி வந்தாள்.

தங்கள் கீர்த்தி பரவுவதைப் போல நிலத்தில் பரவி இருக்கும் தயிரை மட்டும் கண்டாள்.
 
வேதமார்க்க (47:5)

மகா புண்ணியசாலியாகிய யசோதை, வேத மார்கங்களால் தேடப் படும் தங்களைக் காணாமல்

கோபத்துடன் தேடிக் கொண்டு வந்தாள். உரல் மேல் இருந்து கொண்டு பூனைக்கு வெண்ணை ஊட்டும்

தங்களைக் கண்டாள் அல்லவா?

 
த்வாம் ப்ரக்3ருஹ்ய (47:6)

2 inches shorter.webp

அந்த யசோதை பயத்தை அபிநயிக்கின்றதால் அதிக சோபை அடைந்த தாமரைபோன்ற திருமுகத்தை

உடைய தங்களை விரைவாகப் பிடித்தாள். கோபத்தில் சிவந்த முகத்துடன் தோழிகளின் முன்னிலையில்

தங்களைக் கட்டுவதற்காகக் கயிற்றை எடுத்தாள் அல்லவா? கஷ்டம்!

 
பந்து4மிச்ச2தி(47:7)

bandhanan.webp

பகவனே! எந்த சாதுக்கள் தங்களையே பந்துவாக விரும்பிகின்றார்களோ அந்தத் தங்களை பந்தப் படுத்த

விரும்பிய யசோதை அநேகம் கயிறுகளை ஒன்றாகக் கட்டியும் எப்போதுமே அவை இரண்டு அங்குலம்

குறைவாக இருக்கக் கண்டாள் அல்லவா?

 
விஸ்மிதோஸ்மித (47:8)

பக்தர்களுடைய துக்கத்தைப் போக்கடிக்கும் ஸ்ரீ ஹரியே! ஆச்சரியம் அடைந்து சிரிக்கின்ற தோழிகளின்

பார்வையால் யசோதை வியர்த்து சோர்வடைந்து விட்டாள். அதக் கண்டு மனம் இரங்கி என்றுமே விடுதலை

அடைந்துள்ள பரபிரம்மம் ஆகிய தாங்கள் தங்களை அவள் கட்ட அனுமதித்தீர்கள் அல்லவா?

 
ஸ்தீயதாம் (47:9)

ural.webp

"அடே துஷ்டப் பயலே! உரலில் கட்டுண்டு வெகு நேரம் இருக்கக் கடவது!" என்று சொல்லி அந்த யசோதை

எப்போது தன் வீட்டுக்குத் திரும்பி வந்தாளோ அப்போதே அதற்கு முன்பாகவே அந்த உரல் குழியில்

வைக்கப்பட்டு இருந்த நெய்யைத் தின்று கொண்டு இருந்தீர்கள் அல்லவா?

 
யத்3யபாச'ஸுக3மோ (47:10)

பிரபுவே! தாங்கள் ஒன்றிலும் பற்றில்லாதவர்களால் (கையில் கயிறு இல்லாதவர்களால்) எளிதாக அடைய

முடிந்தவர் ஆகில்; பற்றுதல் உள்ள (கையில் கயிறு உள்ள ) இந்த யசோதையால் ஏன் கட்டப்பட்டீர்கள்?

குருவாயூரப்பா! தேவலோகவாசிகளால் இவ்விதமெல்லாம் துதிக்கப்பட்ட தங்கள் என்னை ரோகத்தில் இருந்து

காப்பாற்றவேண்டும்.

 
Last edited:
யமலார்ஜுன ப4ஞ்ஜன வர்ணனம்

முதா3 ஸுரௌகை4 (48:1)

அதிகமான சந்தோஷத்தை உடைய தேவ சமூகங்கள் தங்களை தாமோதரன் என்று துதித்தன.

கோமலமான உதரத்தை உடைய தாங்கள் உரலிலேயே சுகமாகக் கட்டுண்டு இருந்து கொண்டு அருகில் இருந்த

இரண்டு மரங்களைக் கண்டீர்கள் அல்லவா?
 
குபே4ரஸூனு நலகூபரபி4 த4: (48:2)

குபேரனின் புத்திரனும் நலகூபரன் என்ற பெயர் உடையவனும்; வேறு ஒருவன் மணிகிரீவன் என்று பிரசித்தி

பெற்றவனும்; ஸ்ரீ பரமேஸ்வரனை ஆராதித்து அடைந்த ஐஸ்வரியத்தால் மதம் மேலிட்டவர்களாகத் தங்களிடம்

பக்தி என்பதே இல்லாமல் வெகு காலம் விளையாடிக் கொண்டு இருந்தார்கள் அல்லவா?
 
ஸுராபகா3யாம் (48:3)


images


கங்கை நதியில் மதத்தால் மெய் மறந்தவர்களாக, கள் குடித்தவர்களாக, பாட்டுப் பாடுபவர்களாக,

அழகிய இளம் பெண்களால் சூழப்பட்டவர்களாக, இடுப்பில் வஸ்திரம் இல்லாமல் ஜலக்ரீடை செய்து

கொண்டு இருந்தவர்களைத் தங்கள் திருப்பதங்களிலே மனத்தைப் பதித்துவிட்ட நாரதமுனிவர் கண்டார்

அல்லவா?
 
பி4யா ப்ரியாலோகம் (48:4)

பெண்கள் சாபத்துக்கு அஞ்சி வஸ்திரங்களை எடுப்பதைக் கண்ட பிறகும் மதத்தால் மதி மயங்கி நிற்பவர்களைக்

கண்ட நாரதர் தங்களிடம் பக்தியும் மன சாந்தியும் கிடைப்பதற்காக அவர்களைச் சபித்தார். சித்த சுத்தி

இல்லாமல் சுகம் எவ்விதம் உண்டாகும்?
 
யுவாமவாப்தௌ (48:5)

"நீங்கள் இருவரும் வெகு காலம் மரமாக இருக்கும் தன்மையை அடைவீர்கள்!ஸ்ரீ ஹரியை தரிசனம் செய்து

அதன் பிறகு உங்கள் இடத்துக்குத் திரும்புவீர்கள்."

தங்களை தரிசிக்க ஆசை கொண்டவர்களாக கோகுலத்துக்குப் பக்கத்தில் இரண்டு மரங்களாகப் பிறந்தார்கள்.

 
அதந்த்3ரமிந்த்3ரத்3ருயுக3ம் (48:6)


images


சோம்பல் இல்லாமல் மெதுவாகச் சென்று அந்த இரண்டு மருத மரங்களை அடைந்தீர்கள். குறுக்காக உள்ள

உரல் மரங்களின் அடிபாகத்தைத் தகைத்ததால் வேரறுக்கப்பட்டன வெகு காலமாக நின்று இருந்ததால்

ஜீரணமடைந்த மரங்கள்.
 
அபாஜி சா'கி2 த்3விதீயம் (48:7)

எப்போது தங்களால் அந்த இரண்டு மரங்களும் முறிக்கப்பட்டனவோ அப்போதே அம்மரங்களின் நடுவில்

இருந்து வெளிக் கிளம்பினர் மிகவும் காந்தி உடைய இரண்டு யக்ஷர்கள். ஹே கோவிந்தா! அவர்களும்

தங்களைத் தோத்திரங்களைக் கொண்டு துதித்தனர் அல்லவா?
 

Attachments

  • yaksha sapavimochanam.webp
    yaksha sapavimochanam.webp
    16.3 KB · Views: 66
இஹான்யப4க்தோபி (48 : 8)

இவ்வுலகில் மற்ற தேவர்களுடைய பக்தன் கூட கிராமமாக வந்து தங்களை அடைவான். ருத்திரனையே

சேவித்து வந்த இவர்களும், நாரதர் மகிமையால் தங்கள் திருவடிகளைச் சரணடைந்து சிறந்த பக்தியை

வரமாகப் பெற்றுச் சென்றனர் அல்லவா?
 
ததஸ் தரூத்3தா3ரண (48:9)

அதன் பிறகு இடையர் கூட்டம், மரங்கள் முறிந்து விழுந்த போது உண்டான பயங்கர சப்தம் கேட்டு நடு நடுங்கிக்

கொண்டு வந்தபோது, வெட்கி நின்றிருந்த யசோதையைப் பார்த்துவிட்டு நந்தகோபன் ஜீவன்களுக்கு விடுதலை

அளிக்கும் தங்களுக்கே உரலில் இருந்து விடுதலை அளித்தான் அல்லவா?
 
மஹீருஹோர் மத்4யக3தோ (48:10)

"இரண்டு மரங்களுக்கு நடுவில் சென்ற குழந்தை இப்போது ஸ்ரீ ஹரியின் அனுக்ரஹத்தால் சிதைக்கப்படாமல்

இருந்தான்! ஆச்சரியம் தான்!" என்று வியந்துகொண்டே நந்தன் முதலியவர்கள் தங்களை வீட்டுக்கு அழைத்துச்

சென்றார்கள் அல்லவா?
 
ப்3ருந்தா3வன க3மன வர்ணனம்

ப4வத் ப்ரபா4வாத்3 (49:1)

இடையர்கள் தங்கள் மகிமையை அறியவில்லை. காரணம் இல்லாமல் மரங்கள் விழுவது போன்ற

துர்நிமித்தங்களைக் கண்டு சந்தேகம் அடைந்து வேறு ஒரு நல்ல இடத்துக்குச் செல்லத் தீர்மானித்தார்கள்.

 
தத்ரோபனந்த3 (49:2)

அந்த இடையர்களில் ஒரு சிறந்தவன் உபனந்தன் என்னும் பெயர் உடையவன்.

"இங்கிருந்து மேற்கு திசையில் பிருந்தாவனம் என்னும் அழகிய காடு ஒன்று உள்ளது!"

என்று நிச்சயமாகத் தங்கள் பிரேரணையால் தான் அங்கு தெரிவித்தான் அல்லவா?
 
ப்3ருஹத்3வனம் (49:3)

உடனே நந்தன் முதலியவர்கள் பிருஹத்வனம் என்னும் அந்த இடத்தை ஒரே நொடியில் பழைய பசுக்

கொட்டிலாகச் செய்துவிட்டு; தங்களும், தாங்கள் தாயார் யசோதையும் ஏறிக் கொண்ட வண்டியைப்

பின்தொடர்ந்து செல்ல ஆரம்பித்தார்கள் அல்லவா?
 
அநோமநோக்ஞ த்4வனி(49:4)

வண்டிகளின் இன்பமான த்வனிகளாலும், பசுக் கூட்டங்களின் குளம்பு சப்தங்களாலும், தங்களுடைய அவ்யக்த

மதுரமான மழலைகளாலும் வசீகரிக்கப்பட்டதால், நீண்ட பயணத்தின் களைப்பை அந்த கோபிகைகள்

உணரவில்லை அல்லவா?
 
நிரீக்ஷ்ய ப்3ருந்தா3வனம் (49:5)

அடர்ந்த புஷ்பங்களை உடைய குந்தமரம் முதலிய மரக் கூட்டங்களை உடையதும்; அடர்ந்த பச்சைப்

புற்றரைகளால் பச்சைக் கல் பதித்த இடம் போல் சோபை உடையதும் ஆகிய பிருந்தா வனத்தைக் கண்டு

ஆனந்தம் அடைந்தீர்கள் அல்லவா?

 
நாவாக நிர்வ்யூட4 (49:6)

exploring brindavan.webp

அர்த்த சந்திரன் போலப் புதிதாகக் கட்டப்பட்ட தனித் தனி வீடுகளில் எல்லா கோபர்களும் சுகமாக வசிக்கத்

தொடங்கினார்கள். தாங்கள் பால கோபர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு பிருந்தாவனந்தின் சோபையை

நான்கு புறங்களிலும் சென்று கண்டீர்கள் அல்லவா?

 

Attachments

  • brindavan.webp
    brindavan.webp
    23.2 KB · Views: 66
Status
Not open for further replies.
Back
Top