கண்ணனின் கதை இது.

Status
Not open for further replies.
நாமகரண வர்ணனம்.

ஸ்நிஹ்யதி யஸ்தவ (44:7)

எவன் தங்கள் புத்திரனிடத்தில் அன்பு செலுத்துகின்றானோ அவன் அதற்கு மேல் மறுபடியும் அஞ்ஞானத்தால்

உண்டாகும் துக்கங்களால் மோஹம் அடைவதில்லை. எவன் துரோகத்தைச் செய்கின்றானோ அவன் நாசம்

அடைவான் என்று அந்த முனி ச்ரேஷ்டர் தங்கள் மகிமையைச் சொன்னார்
 
நாமகரண வர்ணனம்.

ஜேஷ்யதி ப3ஹுதர (44:8)

அனேக அசுரர்களை இந்தக் குழந்தை ஜெயிப்பான். தனது பந்து ஜனங்களை பரபிரம்ம ஸ்வரூபத்தை

அடைவிப்பான். இந்தக் குழந்தையின் மாசற்ற கீர்த்தியை ஜனங்கள் கேட்கப் போகின்றார்கள் என்றெல்லாம்

தங்கள் மகிமைகளைச் சொன்னார் அல்லவா ?
 
நாமகரண வர்ணனம்.

அமுனைவ ஸர்வது3ர்கம் (44:9)

அந்த முனிவர் தங்களைக் குறித்து இவன் மகாவிஷ்ணு தான் என்று வெளிப்படையாகச் சொல்லாமல் இந்தக்

குழந்தையைக் கொண்டே எல்லா ஆபத்துக்களையும் தாண்டுவீர்கள்.

இந்தக் குழந்தையை ஆதரவுடன் நம்பி இருங்கள் என்ற எல்லாம் வர்ணித்தார் அல்லவா?
 
நாமகரண வர்ணனம்.

க3ர்கோ3த நிர்க3தே (44:10)

குருவாயூரப்பா! அந்த கர்கமுனி சென்ற பிறகு நந்தன் முதலியவர்கள் சந்தோஷத்துடன் தங்களைச்

சீராட்டினார்கள். அப்படிப்பட்ட தாங்கள் கருணை உண்டானவராக என் வியாதிகளைப் போக்க வேண்டும்.
 
அயி ஸப3ல முராரே (45:1)

பலராமனோடு கூடிய முராரியே! நீங்கள் இருவரும் தவழ்ந்து செல்வதால் நந்த கோபனுடைய வீட்டின் எல்லா

இடங்களையும் இந்த விதம் என்று சொல்ல முடியாதவாறு அலங்கரித்தீர்கள் அல்லவா? சலிப்பிக்கபட்ட

பாதாரவிந்தங்களோடு, அழகிய சலங்கையின் இனிய ஓசையைக் கேட்க விரும்பி, இங்கும் அங்கும்

வேகமாகவும் சஞ்சரித்தீர்கள் அல்லவா?

 

Attachments

  • two brothers.webp
    two brothers.webp
    17.4 KB · Views: 70
  • krishna and balram.webp
    krishna and balram.webp
    14.2 KB · Views: 83
ம்ருது3 ம்ருது3 விஹஸந்தௌ (45:2)

மிகவும் மெதுவாக சிரிக்கும்போது வெளியில் தெரியும் அழகிய பற்கள். திருமுகத்தில் தொங்கும் அழகிய

மயிர்க் கற்றைகள் . வஜ்ரம், அங்குசம் இவற்றின் அடையாளங்கள் காணப்படும் அழகிய பாதங்கள்.

மேல்கைகளில் இருந்து நழுவி விழுந்து மணிக்கட்டுகளில் தங்கும் வளையல்கள் அங்கு ஏற்படுத்தும்

அடையாளங்கள். இந்த விதமாக தாங்கள் காண்போர் மனத்தைக் கவர்ந்தீர்கள் அல்லவா?
 

Attachments

  • butter thief.webp
    butter thief.webp
    12 KB · Views: 73
அனுஸரதிஜனௌகே4 (45 :3)

வசுதேவரின் புதல்வரே! கோகுலத்து ஜனங்கள் குதூகலத்தால் அசையும் கண்களுடன் உங்களைப் பின்

தொடர்ந்து வரும்போது, அவ்யக்த மதுரமாகச் சிரித்துக் கொண்டு ஓடுவீர்கள். தாமரை முகங்களைப் பின்புறம்

திருப்பிக் கொண்டு நீங்கள் பார்க்கும்போது அவர்கள் எந்த சந்தோஷத்தைத் தான் அடையவில்லை?
 
த்3ருத க3திஷு (45:4)

வேகமாக ஓடும் போது கீழே விழுவீர்கள். அதனால் மேனியில் சேற்றைப் பூசிக் கொள்வீர்கள். பிறகு எழுவீர்கள்.

ஆகாயத்தில் களங்கமற்ற முனிவர்களால் வணங்கப்படும் நீங்கள் இருவரும் வேகமாக வரும்போது,

தாய்மார்கள் உங்களைக் கருணையுடன் எடுத்து, அணைத்து, முத்தம் இடுவார்கள் அல்லவா?
 
ஸ்நுதகுசப4ரமங்கே3 (45:5)

சஞ்சலமான மனத்துடன், பால் பெருகும் குச பாரத்துடனும், தங்களை மடியில் எடுத்து வைத்துக் கொண்டு பால்

தருகின்ற யசோதை மிகவும் பாக்கியசாலி. கபடமாக இடையார் வேடம் பூண்ட கண்ணா! பால் குடிக்கும்போது

பூ அரும்பு போன்ற பற்கள் தெரியத் தங்கள் புன்முறுவல் செய்யும் போது, தங்கள் திருமுகத்தைப் பார்த்து

யசோதை சந்தோஷம் அடைந்தாள் அல்லவா?
 
தத3னுசரணசாரி (45:6)

அதன் பின்னர் தாங்கள் நன்கு நடக்கத் தொடங்கினீர்கள். இடைப் பையன்களோடு பக்கத்தில் இருக்கும்

வீடுகளில் பாலலீலைகள் செய்துகொண்டும், விளையாடிக் கொண்டும்; வீடுகளில் வளர்க்கப்படும்

கிளிகளையும், பூனைகளையும், கன்றுகளையும் பின்தொடர்ந்து செல்லும்போது; சிரித்துக் கொண்டே அவர்கள்

சிரமப்பட்டுத் தங்களைத் தடுத்தார்கள் அல்லவா?

 

Attachments

  • calf and krishna.webp
    calf and krishna.webp
    8 KB · Views: 77
ஹலத4ரஸஹித (45:7)
navaneetachor.webp
முரனைக் கொன்றவரே! பலராமனுடன் கூடித் தாங்கள் எங்கெங்கு சென்றீர்களோ, அங்கெல்லாம் கோப

ஸ்திரீகள் சுவாதீனம் அற்றுப் பதிந்த கண்களை உடையவர்களாக; வீட்டு வேலைகளை உதாசீனம்

செய்தவர்களாக; குழந்தைகளையும், வேலையாட்களையும் மறந்தவர்களாக; ஒவ்வொரு நாளும்

வியாகூலம் அடைந்தார்கள் அல்லவா?
 
ப்ரதி நவநவநீதம் (45:8)

அவ்யக்த மதுரமான சப்தங்களுடன் தாங்கள் பாடிக்கொண்டும், சில சமயங்களில் ஆடிக் கொண்டும்,

கோபிகைகள் கொடுத்த புதுவெண்ணையை விரும்பி உண்டும்; கருணையுடன் கொடுத்த நெய்யைக் குடித்தும்,

புதிதாகக் காய்ச்சப் பட்ட பாலைக் குடித்தும் வந்தீர்கள் அல்லவா?
 
மமகலுப3லி கே3ஹே (45:9)

"நான் மஹாபலியினுடைய (பலவானுடைய) க்ருஹத்தில் முன்பு பிச்சை எடுக்க நேர்ந்தது அல்லவா?

அதனால் இப்பொது இந்த இடத்தில் மறுபடியும் இந்தப் பெண்களிடம் (பலமில்லாதவர்களிடம்) அதைச் செய்ய

மாட்டேன் என்று தீர்மானம் செய்து கொண்டீர்களா? அதனால் தாங்கள் யசிப்பதை விட்டு விட்டு விசித்திரமாகத்

தயிரையும், நெய்யையும் திருடினீர்களா?
 
தவத3தி4 க்4ருத மோஷே (45:10)

தாங்கள் செய்த தயிர் வெண்ணைத் திருட்டினால் கோபிகைகளின் மனங்களில் கோபம் இடம் பெறவில்லை.

வருத்தமும் இடம் பெறவில்லை. தாங்கள் அவர்களுடைய மனங்களையும் களவாடி ஆனந்தக் கடலில்

மூழ்கடித்தீர்கள் அல்லவா? அப்படிப் பட்ட குருவாயூர் அப்பனே! எனதுரோகங்களைத் தணித்து அருள

வேண்டும்.

 
விச்'வரூப த4ர்ச'ன வர்ணனம்

mannai undathu.webp

அயி தே3வ புரா கில
(46:1)

பால லீலைகள் செய்த தேவா! முன்பு சர்வேஸ்வரனாகிய தாங்கள் மல்லக்கப் படுத்துக் கொண்டு முலைப்

பால் குடித்துக் கொட்டாவி விடும்போது; திறக்கப்பட்ட தங்கள் திருவாயில் யசோதை இந்த பிரபஞ்சத்தையே

கண்டாள் அல்லவா?

 
புனரப்யத2 (46:2)

ஜகதீசனே! அதன் பிறகு மறுபடியும் தாங்கள் குழந்தைகளுடன் விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் போது;

பழங்களை மாற்றியதால் கோபித்துக் கொண்டு; குழந்தைகள் தாங்கள் மண் தின்றதைப் பற்றி யசோதையிடம்

சொன்னார்கள் அல்லவா?

 
அயிதே ப்ரலயாவதௌ4 (46:3)

சர்வ வல்லமை படைத்த ஈசனே! பிரளய காலத்தில் பிருத்வி, ஜலம் போன்ற பஞ்ச பூதங்களையும் உண்ணும்

தங்களுக்கு; மண்ணைத் தின்றதால் வியாதிகள் உண்டாகிவிடும் என்று பயந்த அந்த
த் தாய் தங்களிடம்

கோபித்துக் கொண்டாள் அல்லவா?

 
அயி து3ர்வினயாத்மக (46:4)

"துர்விநயம் கொண்ட குழந்தையே ! நீ மண்ணை உண்டாயா என்ன?" என்று அவள் கேட்டபோது தாங்கள் வெகு

நேரம் சிரித்துக் கொண்டே இருந்து,"அது பொய்!" என்று ஆணை இட்டுச் சொன்னீர்கள் அல்லவா?
 
அயி தே ஸகலை (46:5)

"அடேய் எல்லோரும் நிச்சயமாகக் கூறினார்களே! உனக்கு வித்தியாசம் தோன்றுமே ஆனால் வாயைத் திற!"

என்று தாய் அதட்டியதும் தாங்கள் மலர்ந்த தாமரைக் கொப்பான திருவாயைத் திறந்தீர்கள் அல்லவா?

 
அபி ம்ருல்லவத3ர்ஷன (46:6)

சிறிதளவேனும் மண்ணைக் காண விரும்பிய அந்தத் தாயைத்
திருப்தி செய்யும் பொருட்டு, தாங்கள் இந்த பூமி

மட்டும் அல்லாது எல்லா உலகங்களையும் தங்கள் சிறு வாயில் காண்பித்தீர்கள் அல்லவா?

 
குஹசித்3 வனம் (46:7)

அப்போது தங்கள் திருவாயில் ஓரிடத்தில் காடும், வேறு ஓரிடத்தில் சமுத்திரமும், மற்றும் ஓரிடத்தில்

மேகங்கள் உள்ள ஆகாயமும், வேறு ஓரிடத்தில் பாதாளமும், ஓரிடத்தில் மனிதர்கள், தேவர்கள் அசுரர்கள்

என்று என்னதான் காணப் படவில்லை?

 
கலசா'ம்பு3தி4 (46:8)

அந்த யசோதை தங்கள் திருவாயில் தங்களைப் பாற்கடலில் பள்ளி கொண்டவராகவும்; மறுபடியும் மிகவும்

மேன்மை உடைய வைகுந்தத்தில் வீற்றிருப்பவரகவும், தன் கண்ணெதிரில் உள்ள தன் பிள்ளையாகவும் இப்படி

எத்தனை விதமாகத் தான் பார்க்கவில்லை?
 
விகஸத்3 பு4வனே (46:9)

பிரகாசிக்கும் சகல லோகங்களையும் உடைய தங்கள் திரு முகத்தில் மீண்டும் முன் கூறிய முகத்தை

உடையவனாகவே காட்டி, உலகங்களின் முடிவு இல்லதிருக்கும் தன்மையையும் யசோதைக்கு

உணர்த்தினீர்கள் அல்லவா? என்ன ஆச்சரியம்!
 
த்4ருத தத்வ தி4யம் (46:10)
ulugale bandanam.webp
அதிசயக் குழந்தையே! பகவானே! அப்போது சிறிது நேரம் உண்மையை அறிந்த அந்தத் தாயை புத்திர

வாஞ்சையால் மீண்டும் மோஹம் அடையச் செய்தாய். " அம்மா ! பால் கொடு!" என்று அவள் மடியில் ஏறி

இருந்த தாங்கள் என்னைக் காப்பாற்ற வேண்டும்.
 
உலூகலே ப3ந்த3 வர்ணனம்

ஏகதா3 த3தி3விமாத2 காரிணீம்(47:1)


$(KGrHqZ,!gwE63O0iJ)cBPBGs8RWEg~~60_35.webp

ஒரு நாள் தாங்கள் தயிர் கடைந்து கொண்டிருக்கும் தாயிடம் சென்று பால் குடிக்க விரும்பியதால் தயிர்

கடைவதை நிறுத்தி மடிமேல் ஏறி அமர்ந்து முலை குடித்தீர்கள் அல்லவா?
 
Status
Not open for further replies.
Back
Top