• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....

உருவக் கூடாத ஆடைகளையும்
உருவி, மானபங்கம் செய்து, (#2299)


ஆடையை உருவினால் மானபங்கம்!
ஆடையை ஒளித்தால் முக்தி பந்தம்?
 
பலர் அறியா விஷயம் ஒன்று உரைக்கிறேன்!

"கட்டிக் கொண்டு குளிக்கும் துணி" ஒன்று - அதைக்
கட்டிக்கொண்டு குளிப்பதுதான் நன்று!

ஒட்டுத் துணிகூட இல்லாமல் ஆற்றில் குளித்த
கெட்ட பழக்கம் ஒழியச் சிறுவனின் லீலை!
 
நார்மடிக் காலம் மலையேறி
நாட்கள் அல்ல; ஆண்டுகள் ஓடினவே!
 
பலர் அறியா விஷயம் ஒன்று உரைக்கிறேன்!

சிறுவனின் லீலை!(#2304)

மீசை முளைத்த சிறுவனின் ஆபாச லீலை !


பாலனல்லடி உன்மகன் - தாயே - (ய) சோதா!


Like
 
Last edited:
Naked Truth ! நிர்வாணம் is not Nirvana!

Nudity is a crime against Draupathi !

Is bliss to gopikas!

Is a tool to test the chastity of Anusuya for Gods!

Is a gym to strengthen the body of Duriyodhan for Gandhari
 
Dear JJ ji,

This thread is in literature forum and I want to post only my write-ups in Tamil, here.

If you need arguments, please start new threads in GD forum and enjoy!

Thank you! God bless!
 
ஆண்டாண்டு காலமாய் உள்ள வழக்கம்,
ஆணாதிக்கம் தந்தது என எக்காளமிட்டு,

தீட்டுக் காலத்திலும் சபரிமலை செல்லத்
திட்டமிட்ட பெண்களே! இன்று கண்டீரா,(#2294)

ஒட்டுத் துணிகூட இல்லாமல் ஆற்றில் குளித்த
கெட்ட பழக்கம் ஒழியச் சிறுவனின் லீலை!(#2304)


This thread is in literature forum and I want to post only my write-ups in Tamil, here.

Thank you! God bless!
[/QUOTE]

Dear Raji

சபரி மலைக்கு தீட்டு தடை!
எண்ண அலைக்குமா?

ஆடை ஒளிப்பது அப்பியாசம்?
ஆண்டவனுக்கே வெளிச்சம்!

எம் தொழில் கவிதை !
மாதர்தம்மை இழிவு செய்யும் மடமயை கொளுத்துவோம்(என்னுள் உறை பாரதி)

அலைக்கு எதிர் அலை உண்டு!
கடலலைக்கு கடலிலே
காற்றலைக்கு காற்றிலே!
எண்ண அலைக்கு?

I Fight misogyny where ever seen - your own den included!
 
Ok! Please go ahead with your views.

If possible, take a few females with periods to Sabarimala and fight against tradition.

Good luck!

Elders have taught me this:
மௌனம் கலக நாஸ்தி.
Take care and stay safe.
 
Fair enough ! I fight for women's right - I also uphold individual 's right . It is individual woman's right to choose to use their right given or to give it up!

I never suggest women in periods should go to Sabarimalai . But if their right is denied it is an assault on equality of women given by Constitution! It should be the choice individual woman. But the freedom can't be denied.

It looks the different interpretation of Bharathi's call is also true!

மாதர் தம்மை (தங்களை) இழிவு படுத்தும் மடமை instead of மாதர்தம்மை meaning மாதர்களை!

மாதரை மதி
மடமையை மிதி!

Keep safe தூரம் - to prevent Corona!
 
hi

keep ignore sometimes....silence is best policy.....it should not become a குழாயடி sandai....


குழாயடி sandai....

This expression is not gender neutral derogatory women specific This should be withdrawn - சிங்கப் பெண் fighting for gender equality will not hesitate to take you on - on your own coin - மௌனம் கலையட்டம் - நேர்பட பேசு !
 
க முதல் கௌ வரை ......

கடவுளை அனுதினம் துதிப்போம்!

காக்கைக்கு உணவு அளிப்போம்!

கிஞ்சித்தும் தீமைகள் செய்யோம்!

கீழோர் நட்பைத் துறப்போம்!

குற்றம் சுற்றத்தில் மறப்போம்!

கூட்டத்தில் தனித்து நிற்போம்!

கெட்ட நினைவுகள் கொள்ளோம்!

கேட்ட நற்சொற்கள் மறவோம்!

கைவண்ணம் காணின் மதிப்போம்!

கொடுத்த பரிசை நினையோம்!

கோபம் கொள்வது தவிர்ப்போம்!

கௌரவத்துடன் வாழ விழைவோம்!
 
ஏனிந்த மாற்றங்கள்?

விண், மண், நீர், தீ, வளி என அனைத்தும்,
என் கட்டுப்பாடிலே என்கிற இறுமாப்பில்,

நிலமகளின் நல்வளங்களைச் சூறையாடி,
நிலம் முழுதும் வாகனங்களால் நிறைத்து,

ஆகாயப் பறவைகள் செய்து, அவற்றால்
ஆகாய வளி மண்டலத்தினைச் சிதைத்து,

மாசில்லா நீர் நிலைகளைக் கழிவுகளால்
மாசு படுத்தி விளையாடினாய் மனிதனே!

தன்னிகர் இல்லா இயற்கை அன்னையைத்
தன்னலம் கருதிச் சிதைத்து மகிழ்ந்ததால்,

வெகுண்ட அன்னை உன்னை ஒடுக்கிட, ஒரு
மிகுந்த பீதி தரும் அரக்கனைச் செய்தாளோ?

"நிலவில் அடி வைத்துவிட்டோம்; இனிமேல்
விரைவில் செவ்வாய் கிரகத்தில் வாழ்வோம்!",

என்று மார்தட்டி, அகந்தையும் கொண்டாய்!
என்ன நிலைமையில் இன்று உள்ளாய், பார்!

உலகம் பிறந்ததே எனக்காக என்று நினைத்து,
உலகின் வளங்களை அழிப்பதை நிறுத்திவிடு!

இயற்கை அன்னையைப் போற்றிடப் பழகிடு!
இயற்கை அன்னை காத்திடுவாள் அன்போடு!

வாழ்க வளமுடன்!
 
hi

hinduism and vedic culture based on nature.....everything gone with wind....whole universe created

by பஞ்சபூதங்கள் .....whole world will destroy by பஞ்சபூதங்கள் ....so we hindus worshipபஞ்சபூதங்கள் .
now turmeric and natural products are without side affects...
 
hi

keep ignore sometimes....silence is best policy.....it should not become a குழாயடி sandai....
குழாயடி sandai....

This expression is not gender neutral derogatory women specific This should be withdrawn - சிங்கப் பெண் fighting for gender equality will not hesitate to take you on - on your own coin - மௌனம் கலையட்டம் - நேர்பட பேசு !

பொம்ளிங்கோ சண்ட போட்டா கொழா அடி சண்ட!

பொம்பளைக்காக சண்ட போட்டா?

தலமயிரை இஸ்து சண்ட போட்டா கொழாஅடி சண்ட.

தலமயிரை இஸ்ததால சண்ட போட்டா?

கொழ அடலே silentஆ நழுவனும் !

மத்த சண்டல Pin drop silenceல இருக்கணும்! தர்ம யுத்தம்!
 
அப்படியா?

சூப்பு வைத்ததால், ஆப்பு வந்ததா?

ஆப்பு வந்ததால், லாக் டௌன் வந்ததா?
லாக் டௌன் வந்ததால், நாக் அவுட் ஆனதா?
நாக் அவுட் ஆனதால், நாளும் நீண்டதா?

அதிக வேலையால், அசதியானதா?
அசதியானதால், தூக்கம் கெட்டதா?
தூக்கம் கெட்டதால், ஏக்கம் வந்ததா?
ஏக்கம் வந்ததால், எடை குறைந்ததா?

விருந்து அளிக்கவும், மறந்து போனதா?
மறந்து போனதால், நொறுக்கு குறைந்ததா?
நொறுக்கு குறைந்ததால், வெறுப்பு வந்ததா?
வெறுப்பு வந்ததால், வேலை குறைந்ததா?

வாழ்க நலமுடன்!
 

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

விகாரி வருடத்தில் மனிதர் சிலர் கொண்ட
விகாரங்கள் எல்லாம் மறைந்து விலகட்டும்!

சார்வரி வருடத்தில் மனித குலத்திற்கு
சர்வ மங்களமும் இறைவன் அருளட்டும்!

🙏 🙏 🙏
 
இதோ, ஒரு எழுச்சிப் பாடல்!

புதிய வானம் . . . புதிய பூமி . . .

புதிய வானம் புதிய பூமி எங்கும்
தூய்மை தெரிகிறது - வைரஸ்
போகையிலே அதை வழி அனுப்ப இந்த
உலகே விழைகிறது
ஒஹோ ஹோஹோ ஹோ

உதய சூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே
அழகிய இமயம் நூறு கல் தொலைவில்
அழகாய்த் தெரிகிறது - அன்று
அன்னை பாரதம் தூய்மையாய்த் திகழ்ந்த
காலம் தெரிகிறது அந்தக்
காலம் தெரிகிறது
ஓ . . . . ஓ லால்ல லா. லா . லா

பிள்ளைக் கூட்டங்களை வீட்டினிலே
அள்ளி அடைக்கும் இந்த நாளினிலே
பிள்ளைகள் எல்லாம் நலம் பெறுவார்
என்ற நம்பிக்கை பிறக்கின்றது - இவர்
வரவேண்டும் புகழ் பெறவேண்டும் என்று
ஆசை துளிர்க்கிறது என்று
ஆசை துளிர்க்கிறது
ஓ . . . . ஓ லால்ல லா. லா . லா

எந்த நாடு என்ற கேள்வியில்லை
எந்த ஜாதி என்ற பேதமில்லை
மனிதர்கள் அன்பின் வழி தேடி
இனி இயற்கையை வணங்கிடுவார் - மலை
உயர்ந்தது போல் தம் மனம் உயர்ந்து இவர்
வாழ்வில் சிறந்திடுவார் இவர்

வாழ்வில் சிறந்திடுவார்
ஓ . . . .ஓ லால்ல லா. லா . லா
ஓ . . . .ஓ லால்ல லா. லா. லா
 
............. ந முதல் நோ வரை .............

நல்லவை நெஞ்சில் நினைப்போம்!

நாட்டு நலனை மதிப்போம்!

நித்தம் இறையைத் துதிப்போம்!

நீங்கா பக்தி கொள்வோம்!

நுண்ணுயிர் பற்றி அறிவோம்!

நூதன வழிகள் காண்போம்!

நெற்றியில் சின்னம் இடுவோம்!

நேர்மை வழியில் நடப்போம்!

நைய மென்று உண்போம்!

நொறுக்குத் தீனி தவிர்ப்போம்!

நோன்புகள் சிற்சில நோற்போம்!

வாழ்க நலமுடன்!
 
புதிய மாற்றங்கள்!

செலவுக் கணக்கு:

விடியற்காலை பால் பாக்கெட் சோப்பு போட்டுக் குளிக்கும்.
(சோப்)

காய், கனி வகைகள் பக்கெட் நீரில் நீந்தி, உப்பு - மஞ்சள் நீரில்
மூழ்கிய பின், உலர்ந்து, குளிர் சாதனப் பெட்டியை அடையும்.
(உப்பு, மஞ்சள் தூள்)

''இம்யூனிடி பூஸ்டர்'' என்று சில, பல பொடிகள் விற்பனையாகும்!
(கஷாயம் செய்ய காஸ்)

ஸரஸ்வதி தேவி ஆகிய பேப்பர்களும், லக்ஷ்மி தேவி ஆகிய
ரூபாய்த் தாள்களும் இஸ்திரிப் பெட்டியின் அடியில் சூடாகும்.
(மின்சாரம்)

கணினி, கைப்பேசி அழைப்புகளிலே சந்திப்புகள் நிகழும்
(இண்டர்நெட்)

பேசுக் காற்றை அவரவர் மூக்கில் முகக் கவசம் திருப்புவதால்,
எல்லோரும் நன்கு பல் துலக்க வேண்டும்!
(மவுத் வாஷ்?)

மேட்சிங் முகக் கவசங்கள் நாடப்படும்.

செலவு இல்லாக் கணக்கு:

யாருக்கும் வீட்டினுள் அனுமதி இல்லை - வேலையாட்கள் தவிர!
(டீ, காபி, நெறுக்குத் தீனி குறைவு)

விருந்துக்கு யாரும் அழைப்பதில்லை; நாமும் அழைப்பதில்லை!
(மளிகை சாமான்கள்)

பகட்டான உடைகள் அலமாரியுள் முடங்கிக் கிடக்கும்.
பள்ளி, அலுவலக உடைகளை இஸ்திரி செய்ய வேண்டாம்.
(இஸ்திரிக்காரன் செலவு)

பெண்களின் அழகு சாதனங்களுக்கு வேலை குறையும்.

கல்யாணங்கள் வலைத்தள ஒளிபரப்பாவது பெருகும்.
(பெட்ரோல்/ டாக்ஸி)

சமூக இடைவெளி:

ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் தீட்டாகி, எட்டி நிற்பார்கள்!

கண்களையும் உருவத்தையும் வைத்து யாரென அறியணும்!
 

சிக்கனக் கல்யாணம்!

ஊரடங்குக் காலத்திலே சுப முகூர்த்த நாளினிலே,
ஊர் மெச்ச நடந்திடுமே சிக்கனக் கல்யாணம்.

விருந்துக்கு ஐம்பது பேர் மட்டுமே இருப்பதால்,
விருந்தோம்பல் செய்வதிலே வில்லங்கம் இல்லை.

வலைத்தளத்தில் ஒளி பரப்பைக் காணும் சுற்றம்,
இலை வழியச் சாப்பாட்டைக் கேட்காது அன்று!

ஆசிகள் அலைபேசி வழியாக வந்து நிறையும்;
ஓசியில் சாப்பிட வரும் கூட்டமும் குறையும்.

பொய்யான சிரிப்புடனே மேடையிலே நின்று,
மொய்ப் பணத்தை வாங்கி வைக்கும் வேலையில்லை இன்று!

வீணான ஆடம்பரச் செலவுகளும் குறையும்;
வீணாகக் கடன் வாங்கிப் படும் தொல்லை குறையும்.

சேமித்த செல்வத்தை மணமக்கள் பெற்றால்,
சேர்ந்து வாழும் இல்வாழ்வு சிறந்திடுமே அன்றோ?

பீதியைக் கிளப்பிடும் இச் சிறு கிருமி கூட,
போதித்ததோ நமக்குச் சில நல்வழிகளைக் கூட?

வாழ்க நலமுடன்!
 

Latest ads

Back
Top