எண்ண அலைகள்....


புதிய தோற்றம்!

'கருப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு', என்று,
கருப்பு விசைப் பலகையைத் தேர்வு செய்து,

இரண்டு ஆண்டுகளாக ஓயாது தட்டி வந்திட,
மறைந்து போயின அதிலுள்ள எழுத்துக்கள்!

பழமொழி, 'எறும்பு ஊரக் கல் தேயும்' என்பதே;
புதுமொழி, 'விரல்கள் தட்ட எழுத்துத் தேயும்!'

தட்டெழுதும்போது, எழுத்துக்களைப் பாராது
தட்டெழுதுவோருக்குப் பரவாயில்லை; தாம்

தட்டெழுதும்போது, எழுத்துக்களைத் தேடியே
தட்டெழுதும் சிலர் வந்தால், கடினம் ஆகுமே!

இறகு வருடுவதுபோல, மென்மையாக உள்ள
எனது விசைப்பலகையை மாற்ற மனமில்லை!

செய்தித்தாளிலே, ஒரு வலி நிவாரணி பற்றிய
செய்தியுடன் வந்தது பெரிய விளம்பரம்! அதில்

ஆங்கில எழுத்துக்கள் Q, W, O, Z தவிர மற்றவை
பாங்காக அச்சில் இருந்ததைப் பார்த்ததும், ஒரு

அருமையான யோசனை உதிக்க, எழுத்துக்களை,
பொறுமையாகத் தனித் தனியே வெட்டி எடுத்து,

புதிய 'செலோடேப்' உதவியுடன் பொருத்திவிட,
புதிய தோற்றம் பெற்றுவிட்டது விசைப்பலகை!

அழியாத எழுத்துக்களின் மீதும் 'செலோடேப்'பை
அழகாக ஒட்டிவிட்டேன், அவை அழியாதிருக்க!

O வில் வால் இட Q ஆனது; Y எளிதில் K யானது;
M தலைகீழாக்கிட, W ஆனது; N திரும்பி Z ஆனது!

புதிதாக விசைப்பலகை இனி வாங்கி வந்தாலும்,
புதிய எழுத்துக்களைக் காத்திடும் 'செலோடேப்'!


icon3.png
. . . :cool:
 

வன்குணம் தந்த வெஞ்சிறை!


'அடியாத மாடு படியாது' என்பது போன்ற சில

அழியாத பழமொழிகளை வைத்துக்கொண்டு,

தவறு செய்யும் குழந்தைகளை அடித்து, சிலர்
தவறு இழைப்பது மிகச் சகஜம் நமது நாட்டில்!

மென்பொருள் பணிக்காக நார்வே நாடு சென்ற,
மென்பொருள் பொறியாளர், வன்மையாகத் தம்

பிள்ளையைத் தண்டித்துவிட, அதனால் பயந்த
பிள்ளை, தண்டனை பற்றி பள்ளியில் கூறிவிட,

வந்தது வினை பெற்றோருக்குச் சட்ட வடிவில்;
சொன்னது அவர்களுக்குச் சிறைவாசமே என்று!

வெறும் கடுஞ்சொற்கள் கூறியதாகப் ,பெற்றோர்
கூறும் சொற்களை நீதி மன்றம் ஏற்கவுமில்லை!

சிறுவனின் உடலிலே, வடுக்களும், காயங்களும்,
உறுதியாகத் தெரிவதாகத் தெரிவித்து, அதனால்

சிறைவாசம் தீர்ப்பாக வரும் என்றும் அறிவித்து,
சிறையில் அடைத்தது சிறுவனின் பெற்றோரை!

தந்தை பெற்றார் பதினெட்டு மாதம் தண்டனை;
தாயும் பெற்றாள் பதினைந்து மாதம் தண்டனை!

மென்பொருள் பணி செய்தால் மட்டும் போதாது!
மென்மையான குணமும் பெறுதலே நலமாகும்!


:angel: . . . :hug:
 

எங்கும் எப்போதுமா?


கலியுகத்தின் உபாதைகள் தீர்க்க மிகவும்

எளிமையான உபாயங்களை உரைத்தவர்,

பூரண ஆயுள் வாழ்ந்த, நடமாடிய தெய்வம்,
பூரண அருள் தந்த மஹா பெரியவர்தான்!

தினமும் சர்வ வியாபியான இறைவனுக்கு,
தினப்படி வேலைகள் செய்யும் பொழுதிலே,

தவறாது சுலோகங்கள் சொல்லியும், நல்ல
அயாராத பக்தி காட்டியும், தனது குறைகள்

தீராது வாட்டுவதாக ஒரு பெண்மணி கூற,
தீர்க்கதரிசி காஞ்சி மா முனிவர் கேட்டார்,

'பூஜை அறையில் சென்று பூஜிக்கிறாயா?'
'பூமி முழுதும் இருக்கின்ற இறைவனை ஏன்

எங்கும் எப்போதும் துதிக்கக் கூடாது?' என்று
மங்காத பக்தி கொண்ட பெண்மணி வினவ,

'கறிகாய் நறுக்க அரிவாள்மணை, கத்தி என
சிறு உபகரணங்கள் அருகில் வைக்கிறோம்.

உணவு தயாரிக்க அடுப்பின் அருகிலும், நாம்
துணி துவைக்க, குளிக்க, தண்ணீர் அருகிலும்

செல்கிறோம்; வாகனங்கள் ஓட்ட, அவற்றில்
சென்று ஏறி ஓட்டினாலே ஓடும்; அதேபோல்,

நம் துன்பங்கள் விலகிட, சுவாமி அறைக்குள்
நாம் போய், சுலோகங்கள் சொல்ல வேண்டும்!

பூவைக் கண்டால் சுவாமிக்கே அணிவிக்கவும்,
பூசும் சந்தனம் கண்டால், அவருக்கே பூசவும்,

நல்ல புடவை கண்டால் அதை அம்பாளுக்கே
நன்கு உடுத்தினால் எப்படி இருக்கும் என்றும்

மனதில் நினைக்கும் பழக்கம் வேண்டும்! நாம்
மனதில் நினைத்தாலே திருவருள் வந்திடும்!

கல்லைப் போன்றதே துன்பம்; பெரிய சம்சாரக்

கடலில் நம்மை மூழ்கச் செய்யும்! இறைவனே

தெப்பம் போன்றவன்! அந்தக் கல்லைச் சுமக்க,
தெப்பம் போல உதவி, சம்சாரக் கடல் கடக்கத்

துணை இருப்பான்!' என்று திருவாய் மலர்ந்து,
இணை இல்லா அருளுரை தந்தார் மாமுனிவர்!


:hail: . . . :pray:
 
தந்தை பெற்றார் பதினெட்டு மாதம் தண்டனை;
தாயும் பெற்றாள் பதினைந்து மாதம் தண்டனை!
dear RR maam,பெற்ற தாய்க்கு ப்தினைந்து மாதம்-இது ரொம்பவும் அதிகம்!! எற்கனவே அவர் ஒன்பது மாதங்கள் குழந்தையை சுமந்து இருந்ததால் அதை குறைத்து ஆறு மாதம் என்று கொடுத்து இருக்கலாமோ? தங்களின் எண்ண அலைகள் எபொழுதும் போல் நன்றாக இருந்தது.
 

மனோஹர் சார்!


தங்கள் திருமதிக்கு, வெகுமதி (முழங்கால் உறை) வாங்கிவிட்டீர்களா?
 
உங்களுக்கு நன்றி!! வேலை பளுவில் இதை மறந்துவிட்டேன். இன்று மாலை நிச்சயம் வாங்கிச்செல்வேன்.Thanks for the reminder RR maam. So nice of you!! Cheers.
 

மூன்று முறை!


வயதாக வயதாக, நம் ஐம்புலங்களும் கொஞ்சம்
பழுதாகப் போவது மறுக்க முடியாது உண்மையே!

பழுத்த வயதில் ஒரு முதியவர் கண்டுகொண்டார்
பழுது அடைந்தது தன் செவிப் புலங்கள் என்பதை!

நல்ல மருத்துவரைத் தேடி, அவரை நாடி, தனக்கு
நல்ல ஓர் உபகரணம் தருமாறு வேண்டிக்கொள்ள,

வெளியில் பார்க்க முடியாத சிறு வடிவில் தந்தார்,
எளிதாகக் கேட்க உதவும் அழகிய உபகரணத்தை!

மூன்று மாதங்கள் கழித்து, பெரியவர் மருத்துவரை
மீண்டும் சந்திக்கச் சென்ற போது சோகமாயிருக்க,

உபகரணம் சரியில்லையோ என சந்தேகித்து, தன்
உதவி மீண்டும் தேவையா என வினவ, முதியவர்,

'நான் செய்துகொண்ட சிகிச்சை பற்றி, என் வீட்டில்
நான் யாரிடமும் சொல்லவேயில்லை; அவர்களும்

என்னைப் பற்றிப் பேசுவது எல்லாமே கேட்பதால்,
என் உயிலையே மாற்றிவிட்டேன், மூன்று முறை!


:ear: . . . :pout:
 

பேச விழைந்தால் பேசலாம்!


எளிதாக என்னிடம் உரையாட,
எளிதான ஒரு விடுகதை இதோ!

மூவெட்டில் ஒன்றைக் கழித்து,
எட்டெட்டைப் பின்னே சேர்த்து,

நாலெட்டில் ஒன்றைக் கூட்டி,
எட்டெட்டில் ஒன்றைக் கழிக்க,

கிட்டும் நான்கு இலக்கங்களில்
கிட்டும் என் தொலைபேசி எண்!

:phone: . . . :)

 

என்றும் துணை!


ரயில் பெட்டியில் கிடந்த ஒரு பர்ஸை

ரயில் டிக்கட் பரிசோதகர் கண்டவுடன்,

'இது யாருடையது?' என்று கேட்டதும்,
'அது என்னுடையது!' என்று முதியவர்

ஒருவர் முன் வந்து சொல்ல, அதிகாரி
ஓர் அடையாளம் கூறும்படிக் கேட்டிட,

'அதில் கண்ணன் படம் உள்ளது' என்று
பதில் கூறிட, 'யார் வேண்டுமானாலும்

கண்ணன் படம் வைக்கலாமே?' என்றிட,
கண்ணன் படக் கதையைச் சொன்னார்!

சின்ன வயதில் அவரின் தாத்தா தந்த
வண்ணப் பர்ஸிலே, தான் மதித்த தன்

பெற்றோரின் படம் வைத்தார்; பின்னர்,
உற்ற பருவத்தில் நண்பர்கள் கிடைக்க,

தன் Group படம் வைத்தார்; அதன் பின்பு,
தன் மனைவி அழகியாய் அமைந்துவிட,

அவள் படத்தையே வைத்து மகிழ்ந்தார்;
அவள் மகனைப் பெற்றுத் தந்தவுடனே

அவள் படத்தை எடுத்துவிட்டு, செல்ல
மகன் படத்தை வைத்துக் கொஞ்சினார்!

தான் முதுமை எய்தியவுடன், இதுவரை
தான் வைத்த படங்களில் இருந்தவர்கள்

எவரும் துணையாக வரவில்லை; இனி
என்றும் துணை கண்ணனே என்றறிந்து,

வண்ணம் போய்ப் பழமையான பர்ஸில்
கண்ணன் படத்தை வைத்ததாகக் கூற,

புன்சிரிப்புடன் பர்ஸைத் தந்த அதிகாரி,
தானும் தேடினார் ஒரு கண்ணன் படம்!


:pray: . . . :hug:
 

இளவட்டம்!


நல்ல அஜானுபாகுவாக உடல்வாகு!
நல்ல மிலிடரி ஆபீசர் நடை! உடலை

மறைத்தது சாயம் வெளுத்த ஜீன்ஸ்,
நிறம் மங்கிய டீ ஷர்ட்! ஒட்டக் கிராப்!

ஏதோ ஒரு அதிகாரி மஃடி உடையை
ஏனோ தானோ என்று போட்டாரோ?

ஒல்லி உருவம்; நீண்ட தலை முடியை
அள்ளித் தாங்கியது ஒரு ரப்பர் பாண்ட்!

நிறம் மங்கிய அறுதப் பழைய ஜீன்ஸ்;
நிறம் மிளிரும் அழகிய குர்தா ஒன்று!

இந்த இரு வர்ணனைகளும், பேருந்தில்
வந்தபோது பின்னாலிருந்து பார்த்தது!

இருவரும் பேருந்தை விட்டு என்னுடன்
இறங்கினர் கடைசி நிறுத்தத்தி
லேதான்!

முகத்தைக் கண்டால், முதலாவது பெண்!
முகத்தில் தாடியுடன் இரண்டாவது ஆண்!!

:faint:

 

இன்றைய விசேஷம்!


மாதங்கள் பன்னிரண்டு ஓர் ஆண்டில்;

மாதம், நாள், வருடம் என்ற வடிவில்

எழுதுவதும், நாள், மாதம், ஆண்டு என
எழுதுவதும் உலகிலே வழக்கமாகும்!

எந்த முறையில் எழுதினாலும், அதில்
எந்த மாற்றமும் வராதிருப்பது, நாளும்

மாதமும் ஒரே எண்ணாக இருந்தாலே!
மாதம், நாளுடன், வருடமும் ஒரே எண்;

அதுதான் இன்றைய விசேஷ நாளாகும்!
இதுபோல் எழுத இனி ஆயிரமாண்டுகள்

ஆகும் என்று நினைத்தால் ஆச்சரியமே!
அதில் இன்று மதியம் பன்னிரண்டு மணி,

பன்னிரண்டு நிமிடம், மேலும் நொடிகள்
பன்னிரண்டு என்பது மிக மிக விசேஷம்!

இந்த விசேஷ நேரத்தினை நாம் தாண்டிய
அந்த மகிழ்வை நினைவில் கொள்வோம்!

:clock: . . . :dance:
 

சற்றேனும் சிந்திப்பார்களா?

தமிழகமே இருள் சூழ்ந்து தவிக்கும்போது,
தமிழகத்தின் தலை நகரில் வெள்ள ஒளி!

மின் பற்றாக்குறை என்று நம்ப முடியாது!
தன் இனிய தலைவர்களின், நடிகர்களின்

பிறந்த நாள் கொண்டாட்டங்களில், வரும்
சிறந்த வண்ண வண்ண ஒளி ஜாலங்கள்!

தொழிற்சாலைகள் மின்சாரம் பற்றாததால்
தொழில் செய்ய முடியாமல் தவித்திருக்க,

இந்த ஆர்ப்பாட்டங்களைக் கண்டு மனதில்
வந்து அப்புகின்றது துன்ப அலைகள்தான்!

இரண்டு மணி நேர மின்வெட்டை இன்னும்
இரண்டு மணி நேரம் அதிகரித்து, அதனை

மற்ற மாவட்டங்களுக்கு வழங்க, மனதில்
சற்றேனும் சிந்திப்பார்களா தலைவர்கள்?

:decision: . . .
icon3.png
 

ஏன் இந்த வக்ர புத்தி?

ஒன்றும் அறியாச் சின்னக் குழந்தைகளைக்
கொன்று குவித்திட எப்படி எண்ணம் வந்தது?

ஆண்டவனுக்கு இணையான தன் தாயையே
மாண்டு போகச் சுட்டுவிட்டு, ஓர் இளைஞன்

தன் சிறு வயதில் படித்த பள்ளிக்குள் போய்
தன் ஆத்திரம் தீரச் சுட்டுத் தள்ளியதில், தம்

முதல் வகுப்புப் படிக்கும் இருபது சிறுவர்கள்

உடலில் குண்டுகள் பாய, மாண்டு போயினர்!

ஆறு ஆசிரியைகள் தம் இன்னுயிர் நீத்தனர்!
தாறுமாறாகச் சுட்டுத் தள்ளிய பின், அவனே

தன்னையும் பலியாக்கிக் கொண்டான்! இது
என்ன சாதனை என அவன் நினைத்தானோ?

வன்முறை மிக்க திரைப்படங்கள் வருவதால்
வன்முறை மிதமிஞ்சிப் போகின்றதோ? இனி

இந்த நிலை கண்டு, பெற்றோர் குழந்தைகளை,
எந்த தைரியத்தில் பள்ளிக்கு அனுப்புவாரோ?


:scared:
 
Hope this will be an eye opener for FEW ...who thinks high of that country...
நண்பரே!

வன்முறைக் காட்சிகளை எல்லோரும் விரும்பி,

பொன் விழா வாரம் வரையில் திரைப்படங்களை

ஓட வைப்பதால், சிங்காரச் சென்னையிலும் கூட
ஓட ஓட விரட்டி, கூர் அறிவாளால் வெட்டுவதும்,

வீட்டுள் புகுந்து, வயது முதிர்ந்தவரை வதைத்து,
வீட்டில் இருப்பவைகளைக் கொள்ளை அடிப்பதும்,

தினப்படிக் கேட்கும் செய்தியாகிவிட்டதே! மனித
இனம் இனிது வாழும் வழிகள் இனி குறையுமோ?


:noidea:
 
Stealing of a mustard is also a theft, similar to the theft of camphor in a temple.
While Camphor is mainly used for worship irrespective of the Gods, sin is a sin
whether it is big or small. This has become the order of the day.

Balasubramanian
 

விபத்தா? விபரீதமா?

'ஆண்களுக்கு மட்டுமா 'FUN'? எங்களுக்கும்தான்!'
பெண்களுக்கு இந்த எண்ணம் தருவது விபரீதம்!

ஒவ்வொரு வார சனிக்கிழமையன்றும், நண்பிகள்
ஒவ்வொருவர் வீட்டில் கூடிக் களிப்பதே வழக்கம்!

எழுவரும் FUN வேண்டி, கடற்கரைச் சாலையிலே
பொழுது புலரும் வேளையில், நேற்றைய தினம்,

அதி வேகத்தில் காரை ஓட்ட, வளைவு ஒன்றிலே
எதிர்பாராத விதமாய் வண்டி கட்டவிழ்ந்து போக,

குட்டிக் கரணங்களை இட்ட வண்டி நொறுங்கிவிட,
எட்டியது ஒரு பெண்ணின் உயிரும் வானுலகினை!

படிக்கும் பருவத்தில் இரவுகளில் ஏன் களியாட்டம்?
துடிக்கும் வேகத்தில் வீதிகளில் ஏன் இந்த ஓட்டம்?

எத்தனை நம்பிக்கையுடன் பெற்றோர் இருக்கிறார்!
அத்தனையும் வீணாவது இவர்கள் என்று அறிவார்?

தெரியாமல் நடந்தால்தான் அது விபத்து என ஆகும்;
தெரிந்தே தவறு செய்தால் அது விபரீதம் ஆகிவிடும்!

:pout:

Ref:
Chennai College girl dies as speeding car goes off road
 

இனிமையா? கொடுமையா?

நம் கர்னாடக இசையின் மேன்மையே, அது
நாம் இறைவனை அடையும் வழி என்பதே!

பக்தி ரசம் ததும்பும் பாடல்களைப் பாடுவது
முக்தி பெறும் எளிய மார்க்கம் என்றிடுவார்!

மேன்மையான இந்த வடிவ இசையைத் தர
மென்மையான ஒலிபெருக்கிகள் போதுமே!

செவிப்பறைகள் கிழியும் அளவு அதிகமான
ஒலிபரப்பை ஏன் பலரும் விரும்புகின்றார்?

சில சமயம் எனக்கு ஒரு ஐயம் எழும்! மிகச்
சிலர் மட்டுமே என்னைப்போல் இருப்பரோ?

காது கிழியும் ஓசையே பொறுக்காமல், என்
காதுகளில் பஞ்சு வைப்பதே என் வழக்கம்!

மிகவும் உயர்வான நிகழ்ச்சியென்று நேற்று
மிகவும் எதிர்பார்ப்புடன் நான் போனபோது,

பஞ்சை மறந்து சென்று, வருந்தி, அதன் பின்
கொஞ்சம் காதுகளை மூடிச் சமாளித்தேன்!

என்னை விநோதமாகப் பார்த்தவர் அறியார்
என்னைப் பீடிக்கும் அந்த 'மைக்ரேன்' பற்றி!

ஒன்று அறிந்தேன் நான்! எந்த நிகழ்ச்சிக்கும்,
பஞ்சு உருண்டை
சகிதமே செல்லவேண்டும்!


:drum:
 
Back
Top