டாஸ்மாக் வாழ்க!?
குடிமகன்களை உற்சாகம் கொள்ள வைப்பவை,
குடித்து மகிழ வைக்கும் டாஸ்மாக் கடைகளே!
தெரு விளக்குகள் இரவில் எரியுமோ எரியாதோ,
தெருவில் டாஸ்மாக் கடைகள் ஜகஜ்ஜோதியே!
சிறுவர், முதியோர் என்ற வயது பேதமே இன்றி,
வருவர், குடித்து, களித்து, வாழ்வை அனுபவிக்க!
உடல் நொந்து நூலாகிப் பணமெல்லாம் பாழாகிக்
குடல் வெந்து போனாலும் அரசுக்கு ஏன் கவலை?
மாதம் ஒன்றுக்கு வருவாய் கோடிகளிலாம்! ஆம்!
மாதம் விற்பனை ஆயிரத்தி ஐநூறு கோடிகளாம்!
வந்த லாபம் ஐந்தில் ஒரு பங்கு என்றால் கூட, அது
வந்து கஜானாவில் விழுமே முந்நூறு கோடிகளாக!
மக்களைச் சீரழித்துக் கிடைக்கின்ற இப்பணத்திலே,
மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களைத் தீட்டுவாராம்!
தீமை பரவுகின்றதே என்று வருந்துவதா? அல்லது,
தீமையில் நன்மை என்று இதையே பாராட்டுவதா?
:noidea: