இலக்கணமே போ! புதுக்கவிதையே வா!

Status
Not open for further replies.
அறிவொளி - 138

அறிமுகம்!
-------------------

பொது இடத்தில் இருவர்

புதுச் சொற்கள் தேடித் தேடி

வைது கொண்டனர்,


இடைவிடாமல்!


இதை ரசித்த அறிவொளி


இதைச் சொன்னான்,


'இருவருக்கும் மிக்க நன்றி,


ஒருவரை ஒருவர்


அறிமுகம் செய்துகொண்டதற்கு!'

:yo:
 
அறிவொளி - 139

முன் ஜாக்கிரதை!
------------------------------


தான் சேர்ந்த கட்சியின்

தானைத் தலைவரைத்


தந்தையாய் எண்ணும்


அறிவொளி,


தன் திருமணத்திற்குத்


தாலி தேவையில்லை


எனச் சொல்ல,


நண்பர்கள் ஏனென வினவ,


'தலைவர் வருவாரே


என்ற பயம்தான்!' என்றான்!

:fear:
 
அறிவொளி - 140

எப்போது?

வந்த சந்தேகத்தைத்

தந்தையிடமே

வந்து கேட்டான்

அறிவொளி.


'காக்கை கரைந்தால்


வருவாரோ விருந்தினர்?'


ஆமெனத் தந்தை கூற,


'
'எனில் அவர்கள்


எப்போது போவார்கள்?'


என வினவ,

வந்தது பதில்,


'உன் அம்மா கத்தும்போது!'

:rant: ===> :bolt:
 
அறிவொளி - 141

கணிதப் பாடம் என்றும்


கடினம் அறிவொளிக்கு!


ஒரு நாள் ஆசான்,


'ஒரு அறை

நாற்பது அடி நீளம்;

இருபது அடி அகலம்.


பெருக்கினால்


என்ன கிடைக்கும்?'


என அவனை வினவ,


பதில் வந்தது,


'வேறு என்ன சார்!


குப்பைதான்'!

:cool:
 
அறிவொளி - 142

சந்தேகம்!
------------------

டாக்டரிடம் சந்தேகம்


கேட்கும் நிகழ்ச்சி.


தீராத வயிற்று வலிக்குத்


தீர்வு காண விழைந்த


அறிவொளி,

டாக்டரிடம்
கேட்க,

சரியாகக் கேட்க முடியாத


டாக்டர் அவனிடம்,


டி வி வால்யூமைக்


குறைக்கச் சொல்ல,


அப்பாவியாக வினவினான்,


'வால்யூமைக் குறைத்தால்


வலி போயிடுமா,
டாக்டர் ?'


:becky:
 
அறிவொளி - 143

வெள்ளத்தில் ஊரே முழுகிக் கிடக்க,

உள்ளம் மகிழ்ந்தான் அறிவொளி!

வெனிஸ் நகரம் போல நாமும்


செல்லலாமே படகில் என்று!


அந்த அறிவுக் கொழுந்து


அறியவில்லை


வியாதிகளைப் பரப்பும்


அழுக்கு நீர் இது என்பதை!

sick.gif
 
அறிவொளி - 144

தெருவில் நீர் வடிய,

செருப்பே அணியாமல்

அழுக்கில் நடந்தான்


அறிவொளி!


சொன்ன காரணம்


செருப்பைக் கழுவுவதைவிட


அழுக்குக் காலைக்


கழுவது எளிது!
:peep:
 
இனி பிறக்க வேண்டும்!
---------------------------------------------

அரசவையில் அரசன்

அலட்டிக்கொண்டான்,

'என்னை வெல்ல ஒருவன்


இனி பிறக்க வேண்டும்!'


மதி மந்திரி உரைத்தான்,


'உண்மை, அரசே!


உம்மை உயிருடன் உள்ள


எல்லா அரசர்களும்


வென்றுவிட்டார்களே!'

:becky:
 
Status
Not open for further replies.
Back
Top