’இது எப்படி இருக்கு?’ என்று கேட்டதால் சொல்கிறேன்: அறிவொளியே தேவலாம்!? (விளையாட்டாகச் சொல்கிறேன், கோபித்துக்கொள்ள வேண்டாம்.)
அதுசரி, அறிவொளி சொல்லளவில் அசடாக இருப்பதுபோல் செயலளவிலும் இருக்கவேண்டாமோ? தீபாவளிநாள் அன்று அவன் கம்பி மத்தாப்பில் மருந்துப் பகுதியைப் பிடித்துக்கொண்டு கம்பியைக் கொளுத்தியும், பூச்சட்டியைத் தலைகீழாக வைத்துக் கொளுத்த முயன்றும், கேப்வெடிகளுக்கு ஊதுவத்தி காட்டி வெடிக்கச் செய்தும், பாம்பு மாத்திரைகளை ஒரு ஸ்நேக் பார்க் போல் அமைத்துக் கொளுத்தியும், சாட்டையைக் கொளுத்திச் சுழற்றிச் சட்டைச் சுட்டுக்கொண்டும், விஷ்ணு சக்கரத்தைத் தரையிலும் தரைச் சக்கரத்தைக் கம்பி நுழைத்துக் கொளுத்த முயன்றும், லக்ஷ்மி வெடியை நிற்கவைத்து ஒரு கம்பிமத்தாப்பை ஏற்றி ஆரத்தி காட்ட அதன் பொறியில் லக்ஷ்மி அருகிலேயே வெடித்துக் காதைச் செவிடாக்கிக் கொண்டும்--இதுபோலப் பற்பல வேடிக்கைகள் காட்டுவான் என்று எதிர்பார்த்தேன்.