இலக்கணமே போ! புதுக்கவிதையே வா!

Status
Not open for further replies.

அறிவொளி மீண்டும் பள்ளிச் சிறுவனாக ....
icon3.png



அறிவொளி - 100


உள்ளே போங்கள்!

---------------------

அறிவொளி, பள்ளிக்கு


மட்டம் போட்டுவிட்டு


மாலை வரை விளையாட,


திண்ணையில் அமர்ந்த


பாட்டி மிகவும் மகிழ,


அப்போது அவனுடைய


ஆசான் அவ்வழியே வர,


ஆசானைப் பார்க்க


ஆவலாயிருந்த பாட்டியை


விரட்டினான் அறிவொளி,


'
உள்ளே போங்கள்' என்று!


காரணம் இதுதான்:


அவன் விடுமுறை கேட்டதே


பாட்டி போய்விட்டாள் என்று!



:rip:


 
Thanks Rajiram, for bringing arivoli back to school life. "oruvar poruttu ellorukkum peiyyum mazhai".
 

அறிவொளி - 101


எப்படிக் கட்டுவாய்?

---------------------

படிக்காத தன்


ஏழைத் தந்தையை,


பால் வியாபாரியாக்க


விழைந்த அறிவொளி,


கடன் வாங்கும்


விவரமெல்லாம் அறிய,


வங்கியில் சென்று வினவ,


'மாடு வாங்கக்


கடன் கேட்கிறாயே!


அதை எப்படிக் கட்டுவாய்?'


என்று அதிகாரி கேட்க,


பதில் வந்தது,


'கயிறால்தான் ஐயா!'

:becky:

 

அறிவொளி - 102


யார் பேசுவது?
---------------------------


பரீட்சை எழுத விரும்பாத


அறிவொளி, அன்று காலை

ஆசானை அழகாகத்


தொலைபேசியில் அழைத்து,


'என் மகனுக்கு இன்று


உடல் நலமில்லை;


அதனால் அவன் பள்ளிக்கு


வரமாட்டான்', என்று சொல்ல,


'நீங்கள் யார் பேசுவது?'


என்று ஆசான் வினவ,


சிரித்தபடி உரைத்தான்,


'நான்தான் என் அப்பா!'


:blabla:
 

அறிவொளி - 103


கதையே இல்லையே!
-----------------------------------------

நூலகம் சென்ற அறிவொளி,


மிகப் பெரிய கதையைப்


படிக்கும் ஆவலில், ஒரு


மிகப் பெரிய புத்தகத்தை


மூன்று மணி நேரம்


புரட்
டிவிட்டு அலுத்தான்,

'இதில் வெறும் பெயரும்


எண்களுமே இருக்கின்றன!


கதையே இல்லையே!' என்று.


அவன் புரட்டியது ஒரு


தொலைபேசி அடைவு!



குறிப்பு:

அடைவு = Directory! :loco:


 

அறிவொளி - 104


நாங்கள் செல்வோம்!
----------------------------------------


அயல் நாட்டு மாணவர்கள்

இருவர்,
அறிவொளிக்கு

நண்பர்கள் ஆனார்கள்!


'நாங்கள்தானே முதலில்


விண்வெளிக்குச் சென்றோம்!'


என்றான் ரஷ்ய நண்பன்.


'நாங்கள்தானே முதலில்


நிலவுக்குச் சென்றோம்!'


என்றான் அமெரிக்க நண்பன்.


'நாங்கள் செல்வோம்


சூரியனுக்கு!' என்று


மார்தட்டினான் அறிவொளி.


'எப்படிப் போக முடியும்?


அது மிகவும் கொதிக்குமே!'


என்று நண்பர்கள் கேட்க,


கோபமாக பதில் உரைத்தான்,


'எங்களுக்குத் தெரியாதா?


நாங்கள் இரவில் செல்வோம்!'


:flame: . . . :decision: . . . :cool:

 

அறிவொளி - 105


என்னிடம் உள்ளதே!
----------------------

பள்ளி நண்பர்களுடன்


முதல் முறையாகச்


சுற்றுலா சென்றான்


அறிவொளி, ஆவலோடு!


பேருந்தை விட்டு


இறங்கியதும், திருடன்


அவன் பெட்டியைப்


பிடுங்கிக்கொண்டு ஓட,


அறிவொளி சிரிக்க,


காரணம் என்னவென


நண்பர்கள் வியந்து கேட்க,


பதில் வந்தது,


'பெட்டியைத் திருடி


என்ன பயன் அவனுக்கு?


சாவி என்னிடம் உள்ளதே!'


:becky: . . . :thumb:
 

அறிவொளி - 106


குறுக்கே போனால்...
--------------------------------------


நல்ல சகுனம் பார்த்து

வெளியே செல்லும்


அறிவொளியின் நண்பன்,


'நான் புறப்படும் போது


என் எதிரிலே


ஒரு பூனை குறுக்கே


கடந்து சென்றால்


என்ன அர்த்தம்?'


என்று கேட்க,


மந்தஹாசப் புன்னகை


சிந்திட உரைத்தான்


அறிவொளி,


'அந்தப் பூனையும்


எந்த வேலைக்காகவோ


வெளியே போகிறது


என்றுதான் அர்த்தம்!'


:bump2:
 

அறிவொளி - 107


அவனுடையது!
-----------------


அறிவொளி ஒரு முறை

அறியாமல்
விழுங்கிவிட்டான்

ஒரு கோலியை!

மருத்துவரிடம் சென்று


சிகிச்சை பெறும்போது,


அறிவொளியின்


அருமை நண்பனும்


உடனிரு
க்க,

உடனே
மருத்துவர்,

'உனக்குத்தானே சிகிச்சை?


அவன் ஏன் இருக்கிறான்?'


என்று வினவ,


பளிச்சென்று
உடனே

பதில் வந்தது,


'கோலி அவனுடையது!'



:juggle:
 
அறிவொளியும் டிங்கில் பத்திரிக்கையிலும்
வரும் சுப்பாண்டியும் அண்ணண் தம்பியோ?

இருவரும் செய்யும் காரியங்கள் அசட்டுத்தனமாகவும்
அதே சமயம் சிரிப்பையும் வரவழைக்கின்றது ராஜி அவர்களே!!
மிகவும் நன்று.
 
அறிவொளியும் டிங்கில் பத்திரிக்கையில்
வரும் சுப்பாண்டியும் அண்ணண் தம்பியோ? ......... .
உலகின் எல்லா அசட்டுத்தனங்களின் உருவகம்தான் என் செல்ல அறிவொளி!

நிஜமாக அப்படி ஒருவன் உலகில் இருக்க முடியாது! ஆனாலும், நான் காணும் எந்த

அசட்டுத்தனமானாலும், அவன் செய்வதாக மாற்றிவிடுவேன்! அப்படியொரு ஆசை!
:lol:
 

அறிவொளி - 108

தூரத்து உறவினன்!
--------------------

தன் பக்கத்து வீட்டுப் பையன்

தன் தூரத்து உறவினன்


என்று சொன்னான்


மகிழ்வுடன் அறிவொளி!


'வேறு மதத்தினன்


மாறுவானோ உறவாக?',


என்று கேட்ட நண்பனிடம்


கூறினான் காரணத்தை!


அவன் வாங்கிய நாயும்,


இவன் வாங்கிய நாயும்


சகோதரர்களாம்!


:hug: . . . :)
 
உலகின் எல்லா அசட்டுத்தனங்களின் உருவகம்தான் என் செல்ல அறிவொளி!

நிஜமாக அப்படி ஒருவன் உலகில் இருக்க முடியாது! ஆனாலும், நான் காணும் எந்த

அசட்டுத்தனமானாலும், அவன் செய்வதாக மாற்றிவிடுவேன்! அப்படியொரு ஆசை!
:lol:


ஆஹா...நல்ல வேளை.....நான் 'செய்யும்' என்றில்லாமல்...


நான் 'காணும்' என்று எழுதினீற்கள்......!!


வாழ்க வளமுடன்...!!

Tvk



 
ஆஹா...நல்ல வேளை.....நான் 'செய்யும்' என்றில்லாமல்...

நான் 'காணும்' என்று எழுதினீற்கள்......!! வாழ்க வளமுடன்...!!
நல்ல நண்பராக இருந்துகொண்டு இப்படியா கலாய்ப்பது??
எனினும் நல்வாழ்த்துக்கு நன்றி! :yo:
 
வணக்கம்.
அறிவொளி தீபாவளி கொண்டாடியதை எழுதலாமே!?


உலகின் எல்லா அசட்டுத்தனங்களின் உருவகம்தான் என் செல்ல அறிவொளி!

நிஜமாக அப்படி ஒருவன் உலகில் இருக்க முடியாது! ஆனாலும், நான் காணும் எந்த

அசட்டுத்தனமானாலும், அவன் செய்வதாக மாற்றிவிடுவேன்! அப்படியொரு ஆசை!
:lol:
 

அறிவொளி - 109


விடாமுயற்சி!
-----------------

பத்திலிருந்து ஒன்று வரை

சத்தமாக எண்ணியபடி


நின்ற அறிவொளியின்


விடாமுயற்சி கண்டு


அதிசயித்த நண்பன்


காரணம் கேட்க,


சிரித்தபடி உரைத்தான்


நம் அறிவொளி,


'ராக்கெட் வாணம்


வைக்கும் பொழுது,


எனக்
குச் சரியாக

எண்ணத் தெரிய


வேண்டாமோ?'


:decision:

 

அறிவொளி - 110


தொலைபேசி எண்!
---------------------

ஒரு பாடகியின்

தொலைபேசி எண்ணைத்


தேடிக்கொண்டிருந்தான்


அறிவொளி.


காரணம் என்னவெனில்,


'நான் சிரித்தால்


தீபாவளி' என்று


அவள் பாடியதால்,


அவள் எப்போது


சிரிக்கிறாள் என்று


கேட்க வேண்டுமாம்!

:phone:
 

அறிவொளி - 111

ஒற்றை வெடிகள்!
----------------------------------

பட்டாசுக் கடைக்குச்

சென்ற அறிவோளி


ஒற்றை வெடிகள்


வேண்டுமெனக்


கேட்டு வாங்கினான்!


காரணம்,


நூறு, ஆயிரம் என்றால்,


சரியாக வெடித்தா என


சரி பார்க்க முடியாதாம்!

:bump2:
 

அறிவொளி - 112


குருவி வெடி!

---------------

'குருவி வெடி' விற்ற

பட்டாசுக் கடைக்குச்


சென்றான் அறிவொளி,


சண்டை போட!


ஏனெனில், அது


குருவிக் குரலில்


வெடிக்காமல்


'டமால்' என்று


வெடித்ததாம்!
:boom:
 

அறிவொளி - 113


பூச்சட்டி!

----------

Flower Pot என்றால்

பூச்சட்டி என்று


அறிந்த அறிவொளி,


அதை வாங்கிய பின்,


'பெயரே தவறு!


ஏனெனில் இதில்


பூவும் இல்லை;


சட்டியும் இல்லை!'


என்றானாம்!


:pout:
 

அறிவொளி - 114


பின்னே உள்ளதே!
--------------------

ராக்கெட் வாணத்தைக்

கண்கள் கண்ட பின்பு


காதில் விழுந்தது


வெடிச் சத்தம்!


உடனே காரணம்


கண்டான் அறிவொளி!


நம் முகத்தில்


காதுகள் இரண்டும்


கண்களுக்குப்


பின்னே உள்ளதே!


:ear: . . . :decision:
 

அறிவொளி - 115


ஏன் சென்னை?
----------------


இனிப்பக
த்திற்குச் சென்ற

அறிவொளிக்குக்


கோபம் வந்துவிட்டது!


பின் என்னவாம்?


'மைசூர்'பா பாக்கெட்டிலும்,


பால்'கோவா' பாக்கெட்டிலும்,


தயாரித்த இடம்


சென்னை என்று
உள்ளதே!



 

அறிவொளி - 116


என்ன காரணம்?

_____________

தன் உடையை

வேகமாகச் சரி செய்ய


பழகிக்கொண்டிருந்தான்


அறிவொளி!


காரணம் என்னவெனில்,


பாம்புப் பட்டாசு


வைத்ததும்,


பாம்பு வெளி வந்து


படம் எடுக்குமாம்!



:photo:
 

அறிவொளி - 117


ஜாக்கிரதை!
--------------

தன் நண்பனிடம்

ஒரு
பட்டாசுப்

பாக்கெட்டைத் தந்த


அறிவொளி சொன்னான்,


'ஜாக்கிரதை நண்பா!


ஒவ்வொன்றாக


மிக மெதுவாக எடு!'


காரணம்: பாக்கெட்டில்


உள்ள 'ஊசிப் பட்டாசு'


குத்திவிடுமாம்!


:spy:


 
Status
Not open for further replies.
Back
Top