இலக்கணமே போ! புதுக்கவிதையே வா!

Status
Not open for further replies.
இதோ இன்னொரு கடிக்கவிதை: ’மண்டபத்தில் எழுதிக்கொடுத்ததுடன்’ இரண்டு வரிகள் சேர்த்துச் சொன்னது:

ஹலோ யார் பேசறது?
நான்தான் பேசறேன் நீங்க?
இங்கேயும் நான்தான் பேசறேன்.
படிப்பதற்கு உளறல்போல் இருந்தாலும்
அது அவர்கள் காதல் சங்கேதமொழி!
 

அறிவொளி - 81


ஜுரம் வந்தால்!
------------------


'ஜுரம் வந்தால்

பயப்படாத ஒரு


ஆங்கில எழுத்தைச்


சொல்லு' என்று


அறிவொளி தன்


நண்பனிடம் கேட்க,


அவன் தெரியாமல்


திருதிருவென விழிக்க,


சிரித்தபடிக் கூறினான்,


'F தான்! ஏனென்றால்


அதன்
அருகிலேயே

GH இருக்கிறதே!'


:sick: . . . :peace:

 
என் (கடிக்)கவிதைகளை எண்ணிடத் தொடங்கிவிட்டேன்!

03. கவிதையை/கழுதையைக் கட்டிப்போடு!
புதுக்கவிதை எழுத முனந்து
அது புதுக் கழுதையாகி
உதைத்துக்கொண்டு மனம்போல் திரிந்து,
என் மின்வலைக் காகிதங்களைக்
கபளீகரம் செய்வதுகண்டு
அதை அசைச் சீர்தளைகளால்
கட்டிப்போட்டேன்:
உதைத்தது கடித்துவிட்டாலோ
அல்லது ஓடிவிட்டாலோ
எனக்கல்லவோ அவதி!

இந்தக் கவிதையை இப்படிக் கட்டினேன்:
புதுக் கவிதை எழுத முனைந்தது
புதுக் கழுதை யாகி உதைவிட்டு
மனம் போலத் திரிந்து எனது
மின்வலைத் தாள்களை விழுங்குவது கண்டதை
அசைச்சீர் தளைகள் கொண்டு நன்கு
கட்டிப் போட்டு விட்டேன் இன்று.
உதைத்தது என்னைக் கடித்து விட்டாலோ
அல்லது கழுதை ஓடிவிட் டாலோ
அவதி யுறுவது அடியேன் அல்லவோ!
--நம்பினால் நம்புங்கள், இது ஆசிரியப்பா!

*****
 
Last edited:
நிலவும் சூரியனும் ஒரு
காலத்தில்
காதலித்ததிருக்கவேண்டும்..பின்
நிலவு ஏமாற்றியதால்
பிரிந்திருக்க வேண்டும்..
ஆதனால் தான்
சூரியனிடம் வெப்பமும்,
நிலவின்மேல்
கறையும் உள்ளதோ?
 
நிலவும் சூரியனும் ஒரு
காலத்தில்
காதலித்ததிருக்கவேண்டும்..பின்
நிலவு ஏமாற்றியதால்
பிரிந்திருக்க வேண்டும்..
ஆதனால் தான்
சூரியனிடம் வெப்பமும்,
நிலவின்மேல்
கறையும் உள்ளதோ?
மீண்டும் இருவரும்
இணைந்து எழுந்தாலும்,
வருவது என்னவோ
அமாவாசை இருளே!:pout:
 

அறிவொளி - 82


அன்றும் இன்றும் -
அவள்!
------------------------------------------------


அறிவொளி புலம்பினான்:

அவள் அழகு முகம்

அடிக்கடி சிவந்தது


மிகுந்த நாணத்தால்;


அன்று
அவள் என் காதலி!


அவள் அழகு முகம்


அடிக்கடி சிவக்கிறது


மிகுந்த கோபத்தால்;


இன்று
அவளே என் மனைவி!


:love: . . . :mad2:

 
Last edited:
அறிவொளி - 83

காலம் மாறிவிட்டதே!
--------------------------


காலம் மாறிவிட்டதே

என்று அடிக்கடி


சலித்துக் கொண்டான்


ம் அறிவொளி!


காரணங்களில் ஒன்று:


முன்பு மாவு ஆட்டினால்,


குழவி சுற்றுமாம்;


இப்போது மெஷினில்,


குழவி சுற்றாமல்


ஆட்டுக்கல் சுற்றுகிறதாம்!


:decision:

 
அறிவொளி - 84

தப்பாகப் போனது!
--------------------


வக்கீல் பெண்ணை

மணந்த அறிவொளி,


புலம்பலானான்,


தான் செய்தது மிகத்


தப்பாகப் போனது என!


எதைச் சொன்னாலும்,


கீதை மீது கை வைத்து


சத்தியம் கேட்பாளாம்!


எந்த உணவு கேட்டாலும்,


அந்த உணவைச் சமைக்க


வாய்தா கேட்பாளாம்!


எதை வாங்கினாலும்,


அதை 'அப்ஜஷன் அன்பரே!'


என்று கூறி மறுப்பாளாம்!

:pout:
 

அறிவொளி - 85


ஏன் இப்படி?
------------------------


கண்ணிய உடையில்


ஆண்கள்
எல்லோரும்

ஒலிம்பிக் விளையாட்டு


எளிதாய் விளையாட,


பெண்களுக்கு மட்டும்


ஏன் இப்படி வினோத


ஆடைக் குறைப்பு


என வியந்த அறிவொளி,


எண்ணினான் இப்படி:


ஒருவேளை அவர்கள்


வஞ்சியர் என்பதால்


வஞ்சனையோ ஆடைக்கு!!

:decision:

 
இந்த வகைக் 'கவிதை(?)களுக்கு'
தந்து விட்டார் திரு 'சோ' ராமசாமி
எந்தக் காலத்திலேயோ ஒரு
சுந்தரமான நல்ல பெயர்.

'கம்பாசி
ட்டர் கவிதைகள்.' :clap2:

வாக்கியத்தை மடித்தோ,
வளைத்தோ உடைத்தோ,
கிண்டிக் கிளறி எதையோ
கொண்டு வந்து தருவது!

பாவம்! சோ. இந்தப்புதுக்கவிஞர்களைக்கண்டு பயந்து போய் சுருக்கமாகச்சொல்லி போய்விட்டார். இவை கம்பாசிடர் கவிதைகளல்ல. கசாப்பு கவிதைகள். மொத்தமாக ஒன்றை எடுத்துக்கொண்டு அதைத்துண்டு துண்டாக வெட்டிப்போட்டு கவிதை என்ற பெயரிட்டு விற்கிறார்கள்.
 
கவிதை வடிவத்தில் சந்தம் தான் உயிரானது. சந்தம் இனிதாக அமையவேண்டுமானால் அசைகளும் சீர்களும் சரியாக இலக்கணவரம்புக்கு உட்பட்டு அமையவேண்டும். பாடப்படும் பொருளுக்குத்தக்கவாறு வல்லியல், மெல்லியல் எழுத்துக்கள் அமைந்திருக்கவேண்டும். நல்ல ஒரு கவிஞனுக்கு இவையெல்லாம் பெருமுயற்சி ஏதும் இன்றி இயற்கையாகவே எழுதும் கவிதைகளில் அமைந்து விடுகின்றன. இது கைவராதவர்கள் எழுதுவதெல்லாமே புதுக்கவிதை தான்.

ஊருக்கு வந்தேன் உன்னைக்கண்டேன், பெயரைக்கேட்டேன் என்னை இழந்தேன் என்ற இதை இரண்டாக வெட்டிப்போட்டு புதுக்கவிதை என்று பெயர் சூட்டி கவியரங்கத்தில் வாசிக்கலாம். அது உரைநடையில்லை என்று
சத்தியம் கூடச்செய்யலாம். தமிழறிந்தவர்களிடம் இது எடு படாது. "தானைத்தலைவரே! தகுதி சிறிதும் இல்லாத்தருக்கர் கூட்டத்தை இடுப்பொடித்துப்போட படைகளைக் கூட்டுங்கள்" என்று அடுக்குமொழியில் நீட்டி முழக்குவது போல எழுதுவதெல்லாம் கவிதையாகி விடாது. உரைநடையையே நயம்பட எழுதினால் அது தானே சந்தத்துடன் கூடிய ஒரு நல்ல கவிதையாகிவிடும்.

கவிஞன் தனிக்குறில், தனிக்குறில்+ஒற்று, தனி நெடில், தனி நெடில்+ஒற்று,காய்ச்சீர்,கனிச்சீர் என்று பிரித்துப்பார்த்து கவிதை எழுதுவதில்லை. அவன் சந்தத்தைமட்டும் மனதில் கொண்டு கருத்தைச் சொற்களாக்கும் போது அவை தானாகவே இலக்கணவரம்பு மீராத அழகிய கவிதையாக வடிவெடுத்து விடுகின்றன.

ஒருகைதேர்ந்த சைத்திரிகன் வரையும் கோடுகள் அளவுகோல்கொண்டு அளந்து வரையப்படுவதல்ல. ஆனால் அவை அளவாகவும் அழகாகவும் இயற்கையாகவே அமைந்து விடுகின்றன. இனிய சந்தத்துடன் ஆழமான கருத்தும் சேர்ந்திடும் போது கவிதை அழகாக அமைந்துவிடுகிறது. உரைநடை உரைநடையாகவே இருந்துவிட்டுப்போகலாம். அதைப்புதுக்கவிதை என்றபெயரில் வெளியிடும்போது அந்தக் "கவிஞன்" நான் ஒரு கவிஞன் என்று கூறிக்கொள்கிறானே தவிர இதோ என் கவிதை என்று கூறிக்கொள்வதாகத்தெறியவில்லை.

இது புதுக்கவிதைகள் பற்றிய என் கருத்து. இந்தத்தளத்தில் பதிவாகும் பல புதுக்கவிதைகளையும் பாரா பாராவாக என்னால் அப்படியே உரைநடையாக ச்சேர்த்து எழுத முடியும். அவற்றில் கவிதையைத் தேடத்தான் வேண்டும். ஒரு சீத்தலைச்சாத்தன் இல்லாமல் போனது நமது துரதிர்ஷ்ட்டம் தான்.
 
......... ஒரு சீத்தலைச்சாத்தன் இல்லாமல் போனது நமது துரதிர்ஷ்ட்டம் தான்.
என் உடன்பிறப்புடன் கூட்டுச் சேர்ந்து சாடியதற்கு மிக்க நன்றி!

விலக விரும்பும் எனக்கு இன்னொரு தூண்டுகோல், உங்கள் பின்னூட்டம்!

சீத்தலைச் சாத்தனார் இக்கவிதைகளால் புண்படுவதைவிட,

எழுத்துப் பிழையுடன் எழுதும் தமிழாலேயே செத்துவிடுவார்! :rip:



குறிப்பு: என் கவிதைகள் விற்பனைக்கு அல்ல!

இந்த 'நூலை' எல்லோரும் படிக்கவேண்டிய அவசியமும் இல்லை!! :nono:
 
......
சீத்தலைச் சாத்தனார் இக்கவிதைகளால் புண்படுவதைவிட,

எழுத்துப் பிழையுடன் எழுதும் தமிழாலேயே செத்துவிடுவார்! :rip:
....
உதாரணங்கள்:

..... இலக்கணவரம்பு மீராத அழகிய கவிதையாக .......

..... இதோ என் கவிதை என்று கூறிக்கொள்வதாகத்தெறியவில்லை.

..... உரைநடையாக ச்சேர்த்து எழுத முடியும்.


 
உதாரணங்கள்:

..... இலக்கணவரம்பு மீராத அழகிய கவிதையாக .......

..... இதோ என் கவிதை என்று கூறிக்கொள்வதாகத்தெறியவில்லை.

..... உரைநடையாக ச்சேர்த்து எழுத முடியும்.




ஆஹா....!! நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே.....!!

Tvk
 
சீத்தலைச் சாத்தனார் இக்கவிதைகளால் புண்படுவதைவிட,
எழுத்துப் பிழையுடன் எழுதும் தமிழாலேயே செத்துவிடுவார்!
இலக்கணவரம்பு மீராத அழகிய கவிதையாக .......
..... இதோ என் கவிதை என்று கூறிக்கொள்வதாகத்தெறியவில்லை.
..... உரைநடையாக ச்சேர்த்து எழுத முடியும்.

ஒரு ச் முன்பின்னாகப்போய் ஒட்டிக்கொண்டதற்கும், ர கரம் ற கரமாகப்போனதுக்கும் சீத்தலைசாத்தன் கணினியைப்பற்றி அறிந்திருந்தால் மன்னித்து விடுவான். ஆனால் இல்லாத கவிதையை இருப்பதாகக்கூறுவதை மன்னிக்கவே மாட்டான். அதுவும் சங்கப்பலகையில் வைத்துக்கவிதையின் தகுதியை நிர்ணயித்த தமிழ்க்கவிஞன் அவன். அது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்தக்கூத்தை என்னென்று சொல்வது:

..இதே இழையில் பதிவு எண் 153:

கோவிலுக்கு மழலையை

அழைத்துச் சென்றுபோது

அபிஷேகம் நடக்க,

அப்பா விளையாட்டாகப

(சென்ற போது "சென்று" போதாகிப்போனது கணினி செய்த களியாட்டமன்றி வேறென்ன?)

பதிவு எண் 293:

நம் தேசீயக் கொடி

தன் சீருந்தில்


வைக்க விரும்பிய


அறிவொளிக்குக்


கடைக்காரர்

(ஒரு ஐ விட்டுப்போனதால் தேசீயக்கொடி உயர்திணையாகவும் அறிவொளி, பாவம், அஃறிணையாகவும் மாறி எழுவாயும் செயப்படுபொருளும் குழம்பித்தெளியாமல் நிற்கின்ற அதிசயம் இது. எழுவாய், பயனிலை என்று நான் கூறமாட்டேன்)

தேடினால் இன்னும் எத்தனையோ. நேரமுமில்லை. நோக்கமுமில்லை.

நான் எனது பதிவில் கூறியது பொதுவாக கவிதைகள் பற்றியது. அது புதுக்கவிதைகள் பற்றிய எனது நிலைப்பாடு. நீங்கள் இங்கிருப்பதும் விட்டுச்செல்வதும் உங்கள் விருப்பம். நானோ எனது பதிவுகளோ அதற்கு காரணமாக முடியாது. அறிவொளி இன்னும் வளரவேண்டும் என்பதே என் விருப்பம். ஆங்கிலத்தில் நாள் முழுதும் சிந்தித்தும் பேசியும் வாழ்வதால் நான் எழுதும் தமிழில் இலக்கணப்பிழைகள் கூட இருக்கின்றன என நான் அறிவேன். நேரமிலாமை ஒரு பெரிய பிரச்சினை தான். தவிர்க்க முயல்வேன்.

நான் எனது கணினியிடம் இப்போது இருப்பதை விட இன்னும் பொறுமை காட்டவேண்டும் என்று படித்தேன். நன்றி.
 
Last edited:
குறிப்பு: என் கவிதைகள் விற்பனைக்கு அல்ல!

இந்த 'நூலை' எல்லோரும் படிக்கவேண்டிய அவசியமும் இல்லை!!

எழுதப்பட்ட ஒரு கருத்து ஊடகம் மூலம் ஒருவரைச் சென்றடைந்துவிட்டாலே அது விற்பனை என்று கருதப்படும் காலம் இது. அனுப்பியவர் படித்தவர் இருவருக்கும் கிடைக்கும் மகிழ்ச்சி தான் விலை.

படிப்பதும் படிக்காமலிருப்பதும் படிப்பவர் அல்லது படிக்காமலிருப்பவரின் உரிமை.
 
........ தேடினால் இன்னும் எத்தனையோ. நேரமுமில்லை. நோக்கமுமில்லை. ......... .
எழுத்துப் பிழைகள் வருவது கணினியின் குற்றம் அல்ல! தட்டெழுதுபவரின் கோளாறு! 'நான் தட்டெழுதுவதில்

பிழைகளே கிடையாது', என்று நான் என்றுமே உரைத்தது இல்லை. ஒரு முறை 'செல்லாக் காசு' 'செல்லக் காசு'

என மாறிய அனுபவமும் எனக்கு உண்டு!
சிறு சிறு குறும்புக் கவிதைகளை இத்தனை நாள் விட்டு விட்டு, இப்போது

சாடுவதால் சுட்டிக் காட்டினேன்.

தங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி! :)
 
எழுதப்பட்ட ஒரு கருத்து ஊடகம் மூலம் ஒருவரைச் சென்றடைந்துவிட்டாலே அது விற்பனை என்று கருதப்படும் காலம் இது. அனுப்பியவர் படித்தவர் இருவருக்கும் கிடைக்கும் மகிழ்ச்சி தான் விலை.........
காசுக்கு விற்றால்தான் விற்பனை என எண்ணியிருந்தேன்! இக்காலத்தில், அனுப்பியவர், படித்தவர் இருவருக்கும் வரும்

'மகிழ்ச்சி'தான் விலை என்றால், இருவருக்குமே 'மன வருத்தம்'
வந்தால்
அது என்ன? விற்பனையில் நஷ்டமோ? :decision:
 
........ அறிவொளி இன்னும் வளரவேண்டும் என்பதே என் விருப்பம். ........
இதோ வருகிறான் அறிவொளி, அடுத்த பதிவில்! :thumb:
 

அறிவொளி - 86


என்னால் முடியாதே!
----------------------------------------


அழகிய பெண், பல நாள்

பழகிய பின்பு கேட்டாள்


அறிவொளியை,


தன்னை மணந்து


மனைவியாக ஏற்க!


சோகமாய் மாறிய


அவன் உரைத்தான்


அவனால் முடியாதென!


காரணம் இதுதான்:


அவர்கள் குடும்பத்தில்


உறவினர்கள் மட்டுமே


மணந்துகொள்வார்களாம்!


அப்பா அம்மாவை;


மாமா மாமியை;


சித்தப்பா சித்தியை;


அண்ணா அண்ணியை!

:grouphug:
 
இருவருக்குமே 'மன வருத்தம்' வந்தால் அது என்ன? விற்பனையில் நஷ்டமோ?
:decision:
லாபம் நஷ்ட்டம் என்ற இரட்டைகளிலிருந்து, விடுபட்ட 0 லாப நிலை. இதில் வருத்தமில்லை,மகிழ்ச்சியுமில்லை. நேரத்தை விரயமாக்கியதால் சோர்வின் வெளிப்பாடாக பெருமூச்சு மட்டும் இருக்கக்கூடும்.
 
Last edited:
எழுத்துப் பிழைகள் வருவது கணினியின் குற்றம் அல்ல! தட்டெழுதுபவரின் கோளாறு

இது உங்கள் கருத்து. அவ்வளவே.
 
சிறு சிறு குறும்புக் கவிதைகளை இத்தனை நாள் விட்டு விட்டு, இப்போது

சாடுவதால் சுட்டிக் காட்டினேன்.


உங்களுடைய சிறு சிறு குறும்புக்குறிப்புக்களை (கவிதைகள் அல்ல) இப்போதுதான் படித்தேன் என்பதால் இப்போதுதான் எழுத முடிந்தது. அவற்றில் கவிதை இல்லாவிட்டாலும் குறும்பு இருக்கிறது. அந்தக்குறும்பு எனக்குப்பிடித்திருக்கிறது.
 
’திருவிளையாடல்’ சினிமா வசனம் நினவுக்கு வருகிறது:
"சண்டையும் சச்சரவும் புலவர்களின் பரம்பரைச் சொத்து, அதை மாற்ற யாராலும் முடியாது."
இது சிவன் சொன்னது, இதில் அர்த்தம் உள்ளது!
 
Status
Not open for further replies.
Back
Top