This has reference to the post #360 above:
அறிவுக்கொழுந்து பாவம். நிறையவே கட்டுரைகள் எழுதி விட்டான். எல்லாம் அரசியல், கலாச்சாரம், கல்வி, பொருளாதாரம் என்று பல விஷயங்கள் பற்றியவை. அவனுடைய நண்பன் ஒரு அரசியல் பிரச்சினை பற்றி எழுதப்போக அது முதல் முயற்சி என்ற போதும் எல்லாரும் அவனை மிகவும் பாராட்டிவிட்டனர். அறிவுக்கொழுந்து அப்படி என்னதான் அவன் எழுதிவிட்டான் என்று கேட்க நண்பன் சொன்னான் நான் எழுதியது கவிதை. கட்டுரை அல்ல. கவிதை எழுதினால் உடனே உன்னைக்கவனிப்பார்கள். பெரிய கவிஞனாகிவிடலாம் என்று கூறினான். அறிவுக்கொழுந்துக்கு உரைநடை தான் எழுதவரும். கவிதை அவனுக்கு வேப்பங்காய். பள்ளியில் படிக்கும்போது ஆசிரியர் விளக்கிய நன்னூல் சூத்திரங்களெல்லாம் மனப்பாடம் செய்து தேர்வில் எழுதியதோடு சரி. முற்றிலும் மறந்து விட்டான். ஆனாலும் கவிதை எழுதும் ஆசை அவனை விடவில்லை. அவன் நன்கு யோசித்து பலரையும் கலந்தாலோசித்து ஒரு நாள் ஒரு கவிதை எழுதினான். “கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானுமதுவாகப்பாவித்து தானும் தன் பொல்லாச்சிறகை விரித்தாடினாற்போல” எழுதப்பட்ட அந்தக்கவிதை சுவற்றிலடித்த பந்தாகத்திரும்பி வந்தது. அப்போது தான் அவனுக்கு அரசியலில் ஒரு பிரபலத்தின் நட்புக்கிடைத்தது.. ஆட்டை மாடாக்கவும் ஆனையைப் பூனையாக்கவும் தெரிந்த கைதேர்ந்த அரசியல் வாதி அவர். அவர் அறிவுக்கொழுந்தின் எழுதும் “திறமை” கண்டு அவனிடம் தன் “அண்ணனை”ப்பற்றி ஒரு கவிதை எழுதித்தரச்சொன்னார். நம்முடைய கொழுந்தோ கட்டுரை நன்றாக எழுதித்தருகிறேன் என்று கூறி எழுதிக்கொடுக்க அதை அந்த தலைவர் புதுக்கவிதையாக்கி தானே எழுதியதாக கவியரங்கத்தில் வாசித்துவிட்டார்.. அன்று தான் நம் கொழுந்து ஒரு கவிஞனானான். அவனுக்கு முதலில் உரைநடையாக விஷயத்தை எழுதிவிட்டு அதை பிய்த்து பிய்த்துப்போட்டு புதுக்கவிதைகள் எழுதும் சூரத்தனம் கைவந்து அவன் நிறைய புதுக்கவிதைகளாக எழுதித்தள்ளினான். அப்படி அவனது தொழிற்சாலையில் உருவான புதுக்கவிதைகள் பல அவனுக்கு புதுக்கவிதைச்சக்கரவர்த்தி என்ற பட்டத்தை வாங்கிக்கொடுத்துவிட்டன. இணையதளங்களில் கூட ஆயிரக்கணக்கானோர் அவற்றைப்படிப்பதாக புள்ளி விவரங்கள் வெளியாயின. நீங்களும் அந்த வித்தையைக் கற்றுக்கொள்ள வேண்டாமா?இனி நாம் அவன் உரை நடையில் எழுதிஎடுக்கும் விஷயங்களை மட்டும் இங்கு பார்ப்போம். அவற்றைப்புதுக்கவிதையாகக் காணவேண்டுமானால் நீங்கள் அதிகம் தேடவேண்டாம். கொஞ்சம் முயன்றால் போதும். முயன்றுதான் பாருங்களேன்.
எப்போதெல்லாம் அவனுடைய “புதுக்கவிதை” வெளிவருகிறதோ அப்போதெல்லாம் நீங்கள் அதன் மூலத்தை இங்கே படிக்கலாம். இப்போது படியுங்கள் முதல் கவிதையின் மூலத்தை.
குடும்ப வக்கீலிடம்சென்ற அறிவொளி, தன் நண்பன் மீது கேஸ் போடவேண்டும் என்றான், கோபமாக! காரணம் கேட்டதும், அ வன் தன்னை
நீர்யானை என்று பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒருநாள் திட்டியதாகச் சொன்னான்! ஏன் இத்தனை தாமதமாகக் கேஸ்? எனக் கேட்க
பதில் வந்தது, நேற்றுத்தான் நான் மிருகக்காட்சிசாலைக்குச் சென்று, நீர்யானை எப்படி இருக்குமென்று அறிந்துகொண்டேன்!