• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஆலய அதிசயங்கள்.....[ tvk ]

Status
Not open for further replies.

kk4646

Active member
ஆலய அதிசயங்கள்.....[ tvk ]

1. திருவண்ணாமலை சுவாமி எப்போதுமே ராஜகோபுரம் வழியாக வராமல் பக்கத்து வாசல் வழியாகத்தான் வெளியே வருவார்.

2. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மொத்தம் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு அதிகமான கோபுரங்கள் இல்லை.


3. கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் தயாராகும் எந்த நைவேத்தியப் பண்டங்களுக்கும் உப்பு சேர்ப்பதில்லை.


4. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பெருமாள் கோவில்களில் கொடுப்பதுபோல் தீர்த்தம் கொடுக்கிறார்கள். வேறு எந்த சிவன் கோவிலிலும் இது போன்று தீர்த்தம் கொடுப்பது கிடையாது.


5. மூலவரே வீதிவலம் வருவது, சிதம்பரம் நடராஜர் மட்டுமே.


6. மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வளராது.


7. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகிலுள்ள கேரளபுரத்தில் சிவபெருமானுக்கு கோயில் உள்ளது. இங்கு அரச மரத்தடியில் நிறம் மாறும் அதிசய விநாயகர் இருக்கிறார். ஆவணி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் வெள்ளை நிறமாகவும், மாசி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் கறுப்பாகவும் மாறி விடுகிறார். சந்திர காந்தக் கல்லால் உருவாக்கப்பட்ட இந்தச் சிலைக்கு இப்படி ஒரு சக்தி இருக்கிறது.


8. சிதம்பரம் ஆலயத்தில் ஒரே இடத்தில் நின்றபடி, ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளையும், ஸ்ரீ நடராஜரையும் தரிசிக்கலாம்.


9. சைவர்களுக்குரிய திருவாதிரையும், வைணவர்களுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் ஒரே மாதத்தில் ஒரே திருக்கோயிலில் நடைபெறுவது சிதம்பரத்தில்.


10. எல்லாத் திருத்தலங்களிலும் பெருமாளின் இடது கையில் தான் சங்கு காணப்பெறும், திருக்கோவிலூரில் மட்டும் வலது கையில் சங்கு வைத்துள்ளார்.


11. இமயமலைச் சாரலில் இருக்கும் திருத்தலங்களில் ஒன்று பத்ரிநாத். மே மாதம் முதல் வாரம் நடைதிறப்பார்கள். நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மூடுவார்கள். நவம்பரில் கோயிலை மூடும் போது ஒரு தீபம் ஏற்றுவார்கள். அந்த தீபம் மீண்டும் கோயில் திறக்கப்படும்வரை அதாவது, ஆறுமாதம் எரிந்துகொண்டே இருக்கும்.


12. காசியில் பல்லிகள் இருந்தாலும் ஒலிப்பதில்லை.


13. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரை கருடன் பறப்பதில்லை.


14. குளித்தலை, மணப்பாறை வழியில் இருப்பது ஐவர் மலை என்ற ரத்தினகிரி மலை உள்ளது. இம்மலை மேல் காகங்கள் பறப்பதில்லை.


15. நவக்கிரகப் பிரதிஷ்டை கோவிலில் வடகிழக்குப் பகுதியில்தான் அமைய வேண்டும் என்று சிற்ப சாஸ்திரம் கூறுகிறது.


16. ஆழ்வார்குறிச்சியில் நடராஜர் சிலை ஒரே கல்லினால் ஆனது. தட்டினால் வெண்கல ஓசை வரும்.


17. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் உட்கார்ந்த கோலத்தில் மிகப் பெரிய திருமேனி. இவ்வளவு பெரிய ரூபமுள்ள அம்பிகை வேறு எந்த கர்பகிரகத்திலும் இல்லை. இத்திருமேனி சில மூலிகைகளால் ஆக்கப்பட்டது.


18. தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளிமலையில் குகையில் விபூதி அள்ள அள்ள வந்து கொண்டே இருக்கும். இந்தக் குகைக்குப் பெயர் திருநீர்குகை. திருநீறு தானாகவே விளையும் மற்ற திருத்தலங்கள், கதிர்காமம், மருதமலை, திருநீற்று மலை, கங்கை கரையில் உள்ள திருவருணை.


19. ரத்னகிரி மலையில் உள்ள முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பால் சிறிது நேரத்தில் தயிராக மாறும் அதிசயம் நடக்கிறது.


20. சென்னிமலை முருகனுக்கு அபிஷேகம் செய்யும் தயிர் புளிப்பதில்லை.


21.தேனி மாவட்டம் தெப்பம்பட்டியில் உள்ள வேலப்பர் கோவிலில் உள்ள மூலவர் சுயம்பு மூர்த்தி. இந்தக் கோவில் அருகில் உள்ள மாமரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் பொங்கி வந்து கொண்டேயிருக்கிறது.


22. அம்மன் சந்நிதி இல்லாத கோயில் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்.



Source FaceBook :







 
Wonderful collection Sir. Thank you. I have heard Kanchi Mahaswami telling that in Kancheepuram, there is no Ambal sannadhi in all the Siva temples & the only Ambal sannadhi is at Sri Kamakshmi temple. I am not sure whether this is a correct statement. Persons conversant with Kancheepuram temples may enlighten please.
 
.... 3. கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் தயாராகும் எந்த நைவேத்தியப் பண்டங்களுக்கும் உப்பு சேர்ப்பதில்லை.
Some more info from Wiki:

1. திருவிண்ணகர் என்பது பழம்பெயர், திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் தன் ஒப்பார் இல்லப்பன்.

2. ஒப்பிலியப்பன் என்ற பெயர் பெருமாளுக்கு அமைந்தது. காலப்போக்கில் ஒப்பிலியப்பன் என்பது உப்பிலியப்பன்

என மருவிற்று. இதனால், உப்பிலியப்பன் கோயில் என்ற பெயரும் விண்ணகருக்கு அமைந்தது.

3. பூமாதேவியை
திருமால் திருமணம் செய்து கொண்டு உப்பில்லாமல் அவள் சமைத்த உணவை உண்டதால்

உப்பிலியப்பன் என்றாகி விட்டது என்றும் சொல்வதுண்டு. உப்பிலியப்பனுக்கு உப்பில்லாத நிவேதனமே உகந்தது

என்பதால் இன்றும் உப்பில்லாத திருவமுதை பெருமாளுக்கு நிவேதனம் செய்கின்றனர்.

ப்பிலியப்பனை உப்பிலியப்பன் என்று ஆக்கி, அதற்காக பூமாதேவி உப்பில்லாமல் சமைத்ததாகக் கதை ருவாக்கிவிட்டார்களோ?
 
Last edited:
Some more info from Wiki:

ப்பிலியப்பனை உப்பிலியப்பன் என்று ஆக்கி, அதற்காக பூமாதேவி உப்பில்லாமல் சமைத்ததாகக் கதை ருவாக்கிவிட்டார்களோ?
hi
சிலர் ' ஒப்பில்ல அப்பனை'' '' உப்பில்ல அப்பன் '' என்று ஆக்கி விட்டார்களோ.......
 
HE is Opppillatha Appan. Shri Sattanathan Bhattachariyar is my family friend and he is from Srivanjiam, my native village.
Whoever visits that temple, can approach him, he will help in performing the pujas, etc.

Balasubramanian Ambattur
 
During this month, in Siruvachur, particularly during tamil month Thai, on Fridays, Shri Mathurakaliamman's
Darisanam is very important. She is a very powerful Deity. She is Poorvashrama Kula Deivam of Kanchi Mahan.
She quenched the thirst of Aadhi Shankara and She was installed by Aadhi Shankara at Siruvachur. A very famous
temple situated near Perambalur. As regards my view about the temple, I just put it hereunder, as I have mentioned
to others and in magazines :
தெய்வம் பேசுமா? ஆம்! தெய்வம் பேசும்!. ஆம்! பேசியது ஆம்! தெய்வம் பேசிக்கொண்டிருக்கிறது – இன்னும் பலருக்கு சூக்ஷ்ம வடிவில். காஞ்சி ஸ்ரீ காமகோடி சந்திரசேகர சரஸ்வதி மஹாஸ்வாமிகள் குல தெய்வம். அம்பாளை நாம் பார்த்தது இல்லை அவள் ஒரு நடமாடும் தெய்வம்.அவள்து கருணையே தவிர நாம் செய்த புண்ணியம் அல்ல. உலகமெலாம் போற்றுகின்ற நடமாடும் தெய்வம். கை இரண்டும் கூப்பி என் கண்களையே மூடி மெய்யதனில் நிறுத்தி மெழுகாக உருகி செய்யும் செயல் யாவும் சிறப்புறவே அமைய துய்ய நின் பாதம் துடராய் நான் பற்ற தொட்டு துடரும் வினைகள் எனை விட்டு விலகி ஓடும் எட்டிப் பார்க்கும் துன்பம் பட்டு மறைந்து போகும் பற்றப் பற்ற என் நெஞ்சம் தூயதாக ஆகும் சுற்றம் சூழல் எல்லாம் மதித்து எனை இங்கு வாழ்த்தும் தூர நின்ற என் மேல் பாசம் மிகவும் வைத்து வாழ்வில் ஏறிப் போக பாதை அருமையாக அமைத்து நான் கோரிய வரம் அனைத்தும் குறைவின்றிக் கொடுத்து பாரியைப் போல் வள்ளலென விளங்குகிய என் தெய்வம் ஆதிசங்கரர் வாக்கில் அவதாரமான கடவுளாம் ஶ்ரீ மதுரகாளி ஜெய ஜெய ஶ்ரீமதுரகாளி. தினமும் பிரியமுடன் காத்திடும் தாயே.அணையா சோதியென தென்னவரும் போற்றுகின்ற தாயே தஞ்சம் என்றுனை நாடினேன் எந்தன் உள்ளத்தில் உந்தன் அன்பை நிதம் கண்டு மகிழ ஆசை அம்மா ரட்சிதருள்வாய் என்னை நீயே! உந்தன் அருளை அன்புடனே வாரி வழங்கும் அம்மா நின் வழிகாட்டுதலின் படியாக நான் வாழ நினது கருணகடாக்ஷம் வேண்டி போற்றி பணிந்திட அருள்வாய் பரமேஸ்வரியே உடலிலே நலமும் தருவாய் உன்னை நித்தம் காண உன் பிள்ளை

I have published an article about this temple in Tamil Hindu Magazine, Mangayar Malar, Bhakthi, etc. I have written Slokas about Ambal and Ashthoram, Gayathri Mantras, etc.
 
Last edited:
தவமாய் வந்தாய் தாயே
துணையாய் நின்றாய் நீயே
தாளினைப் பணிந்தோம் தாயே
தாங்கிட வேண்டும் நீயே

பூஜைகள் செய்தோம் தாயே
விக்னமும் வினையும் தீர்த்து
வெற்றிகள் தருவாய் நீயே
குங்குமம் மஞ்சளும் கொண்டு
பூஜைகள் செய்தோம் தாயே
பொங்கிடும் மங்கலம் தந்து
புவியில் உயர்த்துவாய் நீயே
சந்தனம் அதை அரைத்தெடுத்து
பூஜைகள் செய்தோம் தாயே
சந்தானம் சௌபாக்கியம் தந்து
சுபமெல்லாம் சேர்ப்பாய் நீயே
மாலைகள் கோர்த்து
பூஜைகள் செய்தோம் தாயே
தயவுடன் நீ அதை ஏற்று
துன்பங்கள் தீர்ப்பாய் தாயே
 
தவமாய் வந்தாய் தாயே
துணையாய் நின்றாய் நீயே
தாளினைப் பணிந்தோம் தாயே
தாங்கிட வேண்டும் நீயே

பூஜைகள் செய்தோம் தாயே
விக்னமும் வினையும் தீர்த்து
வெற்றிகள் தருவாய் நீயே
குங்குமம் மஞ்சளும் கொண்டு
பூஜைகள் செய்தோம் தாயே
பொங்கிடும் மங்கலம் தந்து
புவியில் உயர்த்துவாய் நீயே
சந்தனம் அதை அரைத்தெடுத்து
பூஜைகள் செய்தோம் தாயே
சந்தானம் சௌபாக்கியம் தந்து
சுபமெல்லாம் சேர்ப்பாய் நீயே
மாலைகள் கோர்த்து
பூஜைகள் செய்தோம் தாயே
தயவுடன் நீ அதை ஏற்று
துன்பங்கள் தீர்ப்பாய் தாயே


இரண்டு தினங்களுக்குமுன் உடல் அசக்தம். வயதான கோளாறு வலி தாங்க முடியாத அவஸ்தை. பார்க்க வந்த நபர் ஒருவர் அ வரின் அவஸ்தையைக் காணப் பொறுக்காமல் ஸ்வாமி ரூமு ல் இரு ந் து கையில் அம்பாளின் ப்ரஸாதம் எதையோ கொண்டு வந்து தடவினார். வேறு எதுவாக இருக்க முடியும்! அம்பாளின் விபூதி நம்பினால் நம்புங்கள்...எப்படி அவஸ்தையைத் தாங்க முடியாமல் துடித்தார் அது ஒரு நிமிஷத்தில் மறைந்தது. இது தான் ஶ்ரீ மதுரகாளி அம்பாளின் சக்தி 
 
Last edited:
In this temple at Srivanjiam, near Nannilam, Yama Dharmaraja temple is available. It is only
here one can Yama Dharmaraja. This temple is 1/16 higher than Kasi in Kshetra Mahimai and
who ever demises in this Sthalam, will not have Yama Durbayam or disturbances. Here there
is one tank, which is known is Guptha Gangai. If one is unable to go to Kasi for taking a
dip, one can have it here itself. Who ever does Tharpanam here, will have all relief from
Pithrus. There is a clipping about the temple here.

https://youtu.be/5QgOoL4K_O0?t=3

Balasubramanian NR Ambattur
 

என் வாழ்க்கையில் நான் பெற்ற மிகப் பெரிய பேறு ஒன்று உண்டென்றால், அது ஸ்ரீமதுரகாளியி ன் திருவருள்தான். என்னுடைய நண்பர் ஒருவரைச் சந்தித்தேன்அவர் தன் வாழ்க்கையில் ஏதோ ஒரு தேடல் இருந்தது. தேடிக் கொண்டிருக்கிற பொருள் ஏதோ ஒரு பெரிய பொருள் என்பது மட்டும் புரிந்தாலும், எதை அவர் தேடிக்கொண்டிருக்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை. அப்படிப்பட்ட கால கட்டத்தில் ஒருநாள் எதேச்சையாக கடைத் தெருவில்சந்தித்தேன். எனக்கு ஆச்சரியம்.

மிகுந்த ஆன்மிக நாட்டம் கொண்டவரான அவர் நான் சற்றும் எதிர்பாராதவகையில், சிறுவாச்சுர் போய் அம்பாளை தரிசனம் பண்ணிட்டு வரலாம்னு இருக்கேன். நீங்களும் வரீங்களா?" என்று கேட்டார். நானும் உடனே ஓ! வரேனே!" என்று சொன்னேன்.

வீட்டுக்குப் போய் விஷயத்தைச் சோன்னபோது, என் மனைவிக்கு ஆச்சரியம். என்ன திடீர்னு என்று கேட்டாள். நண்பர் கூப்பிட்டார். எனக்கும் போகணும்னு தோணிச்சு!" என்று பதில் சொல்லிவிட்டு நண்பரோடு அம்பா ளை தரிசிக்க சிறுவாச்சுர் பஸ் பிடித்தேன்.

அப்போது செல்லும் வழியில் என்னைப் போலவே ஏராளமான பக்தர்கள் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். சிலர் உரக்க.ஜெய ஜெய ஸ்ரீமதுரகாளி என்று முழங்கிக் கொண்டிருந்தார்கள். சிலர் மனத்துக்குள்ளேயே ஜபித்துக் கொண்டிருந்தார்கள். இதெல்லாம் எனக்குப் புதுசு இல்லை வியப்புடன் சென்று கொண்டிருந்தேன். இடத்தை நெருங்கிய போது பக்தர்களின் கோஷம் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. நான் மெய்மறந்து அந்த வரிசையில் கரைந்தேன்.அம்பாளை தரிசிக்கும்போது ‘பேசலாமா? கூடாதா? பேசலாமென்றால் என்ன பேசுவது? ஏதாவது கேள்விகள் கேட்லாமா?’ எனக்குள்ளே விடை தெரியாத பல கேள்விகள்.

கியூ என்னை முன்னே அழைத்துக்கொண்டு போனது. சுமார் எட்டு மணிக்கு கியூவில் சேர்ந்த நான் அம்பா ளைஅருகில் கண்டபோது மணி பதினொன்று அம்பா ளை நமஸ்கரித்து என் அறியாமையையும் வெளிப்படுத்தினேன். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால்அண்மையில் தரிசித்ததால்எனக்கு மெய்சிலிர்த்தது. பித்துப் பிடித்த நிலையில் நான் இருந்தேன். என்னையும் அறியாமல் என் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அந்த அழுகை கூட ஒரு வகை தொழுகைதானே. முந்தைய பிறவியில் இழந்த ஒரு பொருளை நான் இப்போது கண்டெடுத்தேனோ என்று நினைக்கத் தோன்றியது. தேடிக் கொண்டிருந்த பொருள், என் மடியில் வந்து விழுந்தது போன்ற மகிழ்ச்சி. ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் அருகில் தரிசித்த கணத்தில் எனக்கு மெய்சிலிர்த்தது. என்னை பூசாரிகள் ஆசீர்வதித்தார்கள். தொடர்ந்து பக்தர்களுக்குப் பிரசாதம் கொடுக்கத் தொடங்கினார். சற்றே தள்ளி நின்று கொண்டிருந்தேன். நம்மை அவர் கவனிக்கவில்லையே என மனத்துக்குள்ளே ஏக்கம். அதே நேரம், தரிசனத்துக்கு வருகிற பக்தர்கள் எல்லோரும் பழம், பூ, என்று வாங்கிக் கொண்டு வந்ததை அவர் முன் சமர்ப்பிக்கிறார்கள்.

மௌனமாக மீண்டும் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கத் தொடங்கினார். மீண்டும் என்னை நோக்கி சாமி வரணும். எதிர்பார்த்துக்
கா த்திருந்தேன். லேசாகச் சிரித்துவிட்டு . சில நிமிடங்களுக்குப் பிறகு, மீண்டும் என்னை நோக்கி பார்த்து, அம்பாளின் உத்தரவு வந்தது, பிரசாதம் வழங்கத் தொடங்கினார் ஒரு கணமும் தாமதிக்காமல் கும்பிட்டு வணங்கி விட்டு அவரிடமிருந்து பிரசாதம் பெரும் போது புதையல் கிடைத்த சந்தோஷம் எனக்கு.

வீட்டுக்கு வந்ததும் வந்தபோது என் சந்தோஷம் இரட்டிப்பானது. குளித்துத் தயாராகி, பூஜை அறையில் அமர்ந்து அம்பாளை தியானித்தேன். அம்மனை மனத்திலே இருத்திக்கொண்டு அம்பாளை வணங்கி விட்டு, நுழைவாயிலையே பார்த்தபடி உட்கார்ந்துகொண்டிருந்தேன். இப்படி ஒரு அரிய வாய்ப்பினை அருளி இருக்கிறாளே என்ற மகிழ்ச்சி; அடுத்த சில நிமிடங்களில் என்னுடைய நண்பர் அந்த இடத்தில் பிரவேசித்தார். பல ரசிக்கத்தக்க விஷயங்கள் இடம்பெற்றன. அந்தக் கணத்தில் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. ஜெய ஜெய ஸ்ரீமதுரகாளி கோஷம் முழங்கியது

அங்கே திரண்டிருந்த ஆன்மிக அன்பர்கள் மத்தியில் ஒரு பரபரப்புத் தொற்றிக் கொண்டது.அடுத்த சில நிமிடங்களில் எனக்குள்ளே ஒரு இனம் புரியாத உணர்வு. ஆனந்தத்தில் என் கண்கள் நீர் பெருக்கிட்டன.
 
என் வாழ்க்கையில் நான் பெற்ற மிகப் பெரிய பேறு ஒன்று உண்டென்றால், அது ஸ்ரீமதுரகாளியி ன் திருவருள்தான். என்னுடைய நண்பர் ஒருவரைச் சந்தித்தேன்அவர் தன் வாழ்க்கையில் ஏதோ ஒரு தேடல் இருந்தது. தேடிக் கொண்டிருக்கிற பொருள் ஏதோ ஒரு பெரிய பொருள் என்பது மட்டும் புரிந்தாலும், எதை அவர் தேடிக்கொண்டிருக்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை. அப்படிப்பட்ட கால கட்டத்தில் ஒருநாள் எதேச்சையாக கடைத் தெருவில்சந்தித்தேன். எனக்கு ஆச்சரியம்.

மிகுந்த ஆன்மிக நாட்டம் கொண்டவரான அவர் நான் சற்றும் எதிர்பாராதவகையில், சிறுவாச்சுர் போய் அம்பாளை தரிசனம் பண்ணிட்டு வரலாம்னு இருக்கேன். நீங்களும் வரீங்களா?" என்று கேட்டார். நானும் உடனே ஓ! வரேனே!" என்று சொன்னேன்.

வீட்டுக்குப் போய் விஷயத்தைச் சோன்னபோது, என் மனைவிக்கு ஆச்சரியம். என்ன திடீர்னு என்று கேட்டாள். நண்பர் கூப்பிட்டார். எனக்கும் போகணும்னு தோணிச்சு!" என்று பதில் சொல்லிவிட்டு நண்பரோடு அம்பா ளை தரிசிக்க சிறுவாச்சுர் பஸ் பிடித்தேன்.

அப்போது செல்லும் வழியில் என்னைப் போலவே ஏராளமான பக்தர்கள் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். சிலர் உரக்க.ஜெய ஜெய ஸ்ரீமதுரகாளி என்று முழங்கிக் கொண்டிருந்தார்கள். சிலர் மனத்துக்குள்ளேயே ஜபித்துக் கொண்டிருந்தார்கள். இதெல்லாம் எனக்குப் புதுசு இல்லை வியப்புடன் சென்று கொண்டிருந்தேன். இடத்தை நெருங்கிய போது பக்தர்களின் கோஷம் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. நான் மெய்மறந்து அந்த வரிசையில் கரைந்தேன்.அம்பாளை தரிசிக்கும்போது ‘பேசலாமா? கூடாதா? பேசலாமென்றால் என்ன பேசுவது? ஏதாவது கேள்விகள் கேட்லாமா?’ எனக்குள்ளே விடை தெரியாத பல கேள்விகள்.

கியூ என்னை முன்னே அழைத்துக்கொண்டு போனது. சுமார் எட்டு மணிக்கு கியூவில் சேர்ந்த நான் அம்பா ளைஅருகில் கண்டபோது மணி பதினொன்று அம்பா ளை நமஸ்கரித்து என் அறியாமையையும் வெளிப்படுத்தினேன். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால்அண்மையில் தரிசித்ததால்எனக்கு மெய்சிலிர்த்தது. பித்துப் பிடித்த நிலையில் நான் இருந்தேன். என்னையும் அறியாமல் என் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அந்த அழுகை கூட ஒரு வகை தொழுகைதானே. முந்தைய பிறவியில் இழந்த ஒரு பொருளை நான் இப்போது கண்டெடுத்தேனோ என்று நினைக்கத் தோன்றியது. தேடிக் கொண்டிருந்த பொருள், என் மடியில் வந்து விழுந்தது போன்ற மகிழ்ச்சி. ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் அருகில் தரிசித்த கணத்தில் எனக்கு மெய்சிலிர்த்தது. என்னை பூசாரிகள் ஆசீர்வதித்தார்கள். தொடர்ந்து பக்தர்களுக்குப் பிரசாதம் கொடுக்கத் தொடங்கினார். சற்றே தள்ளி நின்று கொண்டிருந்தேன். நம்மை அவர் கவனிக்கவில்லையே என மனத்துக்குள்ளே ஏக்கம். அதே நேரம், தரிசனத்துக்கு வருகிற பக்தர்கள் எல்லோரும் பழம், பூ, என்று வாங்கிக் கொண்டு வந்ததை அவர் முன் சமர்ப்பிக்கிறார்கள்.

மௌனமாக மீண்டும் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கத் தொடங்கினார். மீண்டும் என்னை நோக்கி சாமி வரணும். எதிர்பார்த்துக்
கா த்திருந்தேன். லேசாகச் சிரித்துவிட்டு . சில நிமிடங்களுக்குப் பிறகு, மீண்டும் என்னை நோக்கி பார்த்து, அம்பாளின் உத்தரவு வந்தது, பிரசாதம் வழங்கத் தொடங்கினார் ஒரு கணமும் தாமதிக்காமல் கும்பிட்டு வணங்கி விட்டு அவரிடமிருந்து பிரசாதம் பெரும் போது புதையல் கிடைத்த சந்தோஷம் எனக்கு.

வீட்டுக்கு வந்ததும் வந்தபோது என் சந்தோஷம் இரட்டிப்பானது. குளித்துத் தயாராகி, பூஜை அறையில் அமர்ந்து அம்பாளை தியானித்தேன். அம்மனை மனத்திலே இருத்திக்கொண்டு அம்பாளை வணங்கி விட்டு, நுழைவாயிலையே பார்த்தபடி உட்கார்ந்துகொண்டிருந்தேன். இப்படி ஒரு அரிய வாய்ப்பினை அருளி இருக்கிறாளே என்ற மகிழ்ச்சி; அடுத்த சில நிமிடங்களில் என்னுடைய நண்பர் அந்த இடத்தில் பிரவேசித்தார். பல ரசிக்கத்தக்க விஷயங்கள் இடம்பெற்றன. அந்தக் கணத்தில் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. ஜெய ஜெய ஸ்ரீமதுரகாளி கோஷம் முழங்கியது

அங்கே திரண்டிருந்த ஆன்மிக அன்பர்கள் மத்தியில் ஒரு பரபரப்புத் தொற்றிக் கொண்டது.அடுத்த சில நிமிடங்களில் எனக்குள்ளே ஒரு இனம் புரியாத உணர்வு. ஆனந்தத்தில் என் கண்கள் நீர் பெருக்கிட்டன.
 



அம்பாள் மஞ்சள் மணக்கிறது தூபம் தீபமொளிர்கிறது தீபத்தினை பசு நெய்விட்டு ஜொலித்திருக்கும் (உன்) தரிசனம் இனிக்கிறது காலையும் மாலையும் திங்கள் வெள்ளி தினம் தரிசிக்கலாம் அற்புத அலங்காரம்
காணக் கிடைக்காத தாய் உந்தன் திருக்கோலம் அம்பாள் சந்நிதி வந்ததுமே சங்கடம் விலகுகிறது
அஞ்சேல் என்றே அபயக்கரம் தோன்றி அருள்கிறது தியானித்து ஒரு முறை சுற்றி வர நிம்மதி பிறக்கிறது மறு முறை சுற்றி வர மாற்றங்கள் தெரிகிறது தரிசனம் முடிந்ததுமே கரிசனமாய் உந்தன்
இருவிழி அள்ளித் தரும் அருளும் இங்கே தெரிகிறது ஏற்றங்கள் வருகிறது ஏழ்மையும் விலகுகிறது
வெற்றிகள் குமிந்து உடன் விதியும் மாறுகிறது மற்றொன்றும் வேண்டாமல் பதமலர் தர வேண்டி
சட்டென்று மனதினிலே நல்லெண்ணம் பிறக்கிறது அன்னை நாமம் அது மட்டும் உள்மனதில்
சஞ்சாரமிட்டு இங்கே உயர்வாய் ஒலிக்கிறது-இதுக்கெல்லாம் நல்ல கொடுப்பினை வேண்டும்
வினைகளைக் களைவாய் போற்றி குணமுடன் வாழ அருள்வாய் போற்றி. திங்கள் வெள்ளி -கிழமை அமாவாசை பெளர்ணமி சிறப்பு மிக்க நாள் ஏனைய நாட்களில் மூடப்படுவது வழக் கம் நமது குல தெய்வ வழிபாட்டில் குல தெய்வத்துக்கான வழிபாடு அற்புதமானது அம்பாள் அருளைப் பெறுவோம் ஓம் சக்தி











 
Om Shiruvakshyai Namaha. Om Bhavanyai Namaha. Shri Mathurakali is considered an incarnation of Lord Shiva's wife Parvat in order to defeat the demon who was torturing the local people dominating on the Chelliamman, who was the Goddess Village. Based on the appeals and requests from the local people and villagers, Lord Shiva deputed Goddess Parvathi to Siruvachur to take the swaroopam of Shri Mathurakali and destroy the Asuran. The Asuran, at his last breath requested the Goddess to bury his body in front of the Sannathi of Ambal and one can find a pit, for which food is offered at the time of Maha Deepa Aaradhanai. Goddess Kali is to be a manifestation of the same Adi Parashakti of which Shiva's wives Shakti and Parvati were both incarnations. Shiva's wife Parvati came by, and out of her body came a form of Durga known as Ambika. Ambika created Kali out of her forehead, as described in the chapter of Devi Mahatmya of the Markandeya Purana: Shri Mathurakali is not with a gaping mouth, fearful with her tongue lolling out, having deep-sunk reddish eyes, or exhibiting a terrifying expression with a lolling tongue which drips blood. etc. She is a Shanta Swaroopi. The Divine Mother Shri Mathura Kali is worshiped by many as the embodiment of Shakthi, the Divine Power. We call It Kali or Sakti,. the reality is one and the same; the difference is only in name and form of the Goddess. There are several legends of how Shri Mathura Kali came into existence, but fact is what is given above. In Siruvachur, the mighty Shiva stopped Shri Mathura Kali’s destructive rampage of the Asura and when the goddess realised just who she was standing on, she finally calmed down. She is also considered a strong mother-figure and a symbolic of motherly-love. HER number of arms being four, holds an object including a trident, Akshaya Pathra cup, drum, etc. She is seated with left leg crossed over the right leg similar to Kalikambal at Chennai over the lion having only two feet. Contd..
 
Shri Mathura Kali is misunderstood by some as Ugraha Swaroopini. Lord Shiva and Kali grant liberation by removing the illusion of ego, if any. A mature soul who engages in spiritual practice to remove the illusion of ego and believes HER having realised HER Divine Power she will appear in an affectionate form without fail. Shri Mathura kali does not wear any garland of skulls or skirt of dismembered arms with Demon Mahishasuran on her feet. She is most compassionate because She provides Moksha or Liberation to Her worshipers and children who pray HER as their Kula Deivam. She is very sweet, affectionate, and overflowing with incomprehensible love for Her children. She never appears in a fearsome form. Of all the forms of Kali stature. She is one of the few Goddesses who can be confidently relied upon to dissolve their problems, whatever may be. She reminds her worshipers that good really can come of bad situations, if the worshiper find hopes in HER and their dreams have been fulfilled. A Trident can be kept at home along with HER image picture and one can do puja chanting sacred mantras having infused with Divine Shakti, She stands peaceful and content and protects the family members with the fragrances of jasmine.
 
கண்களில் அருளே
தாங்கிய உருவே
கைகளில் ஆசிகள்
தேக்கிய இறையே
தோற்றத்தில் எளிமை
பார்வையில் அருமை
மனமெங்கும் நிறைவே
தந்திடும் அருளே
தாயினும் தயவே
தவத்தின் முடிவே
தூய்மைப் பாதம்
துதித்திட தாங்கும்
வாய்மை வழியில்
நடந்தால் உயர்த்தும்
தரணியில் தோன்றி
வரமருள் தெய்வம்
சிறுவாச்சுர் ல் உரை
ஸ்ரீ காமகோடி சந்திரசேகர சரஸ்வதி மஹாஸ்வாமிகள் குல தெய்வம்
 
அன்னையின் வடிவம் ஸ்ரீமதுரகாளி
உலகத்து நாயகியான பராசக்தி அவள். தன்னை நாடி வருவபவர்களுக்கெல்லாம் வேண்டுவார் வேண்டுவன எல்லாம் தருகிறாள். கேட்டவற்றையெல்லாம் தரும் கற்பகமாக அவள் விளங்குகிறாள். தன் மெய்யடியார் துயர்தீர்க்க, தன் குழந்தைகள் நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எழுந்தருளி அமர்ந்த திருக்கோலமாக அருள் செய்கிறாள்
ஸ்ரீ மஹாலக்ஷ்மியை எல்லா ஆலயங்களிலும் அமர்ந்த திருக்கோலத்திலேதான் காண்கிறோம்.
தன் அடியார் அழைக்குமுன்னே ஓடிவந்து அருள் செய்தற்காகவே விழிப்புடன் இருக்கிறாளாம்!
அன்னையின் அருள் பெருக்கு எத்தகையது என்பதற்கு எத்தனை எத்தனையோ சான்றுகள் கூறலாம். அற்புதமான மலர்களாக மலர்ந்து, நம்மை வசீகரிக்கும் தன்மை பெற்றவள். சோழமண்டலத்தில் இவருடைய பெயர் நிலைத்து நின்று விட்டது அமாவாஸ்யை, பூர்ணிமையின் பொலிவிலே தாயின் அற்புத வடிவம் தற்பொழுது பளிச்சென்று பொன்னிறமாக ஒளி வீசுகின்றா ள். தஞ்சையை ஆண்டுவந்த அரசர் சரபோஜி மன்னர் கூட கண்டதென்ன? மகாதேஜஸ்வியாக ஒளி வீசுகின்றாள். உலக சிந்தையே சிறிதுமில்லாத மெய்ஞ்ஞானிபோல் மானஸிக பூஜை செய்து கொண்டிருந்தவர்களுக்கு தாயின் காட்சிதருகிறாள் திருவருள்.தெரிகிறது.இவரைப் பற்றிய கதைகள் பல உண்டு. அவளது எல்லையற்ற பேரெழில், பேரன்பு, தாயின் திருவருள்.அவர்களுக்கு கண்ணுக்குப் புலனாகிறது. தாயின் அற்புதாமன ரூபஸெளந்தர்யம் எப்படித் தெரிகிறது என்பதை அருகில் சென்று காண வேண்டும். வீற்றிருக்கும். அன்னையின் திருவுருவுக்கு மலர்களைத் திருவடிகளிலே தூவி
தாயின் அற்புத வடிவை காண வேண்டும். இறைவியின் முன்னே கண்ணீர் மல்க நின்ற, கூடியிருந்த மக்கள், கண்களை மலரவிழித்து ஒரு முறை பார்த்தால் மறு முறை பார்க்க தோன்றும். நெற்றித் திலகம் பளிச்சென்று தெரிகிறது அறிந்தோ அறியாமலோ செய்யும் பிழையையும் பொறுத்து மூடி மறைத்துக் காக்கும் பேரன்புதான் தாயின் திருவருள். உன் பெருமைகளை துதிப்பவர்களுக்கு எதுதான் கிட்டாது தாயே. அவ ளை மதிக்கின்றவர்களுக்கு நம்மை வசீகரிக்கும் முறை கூடதெரியாதா! அமுதவெள்ளமாக வெளிவந்தது அன்னையின் கருணை. அன்னையைத் தொழுபவர்களுக்கு என்னவெல்லாம் கிடைக்கும் தெரியுமா ஒருமுறைசென்று பாருங்கள். இதன்பின் அற்புதமான காட்சி கண்முன்னே விரிகிறது. அம்மா இதோ தெரிகிறாள். மேலும் மேலும் கேள்விகளும் விடைகளும் எதற்கு? இன்பம் காண்பவள் தாய். ஒரு முறை ஸ்ரீமதுரகாளி என்று அழைத்தால் போதும்; ஓடிவந்து வாரி எடுத்து அணைத்து வேண்டுவதை எல்லாம் தருகிறாளாம். எனக்குத் தெரிந்த சிலவற்றைச் சொன்னேன். இது மட்டுமல்ல, இன்னும் என்ன என்ன நல்லன உண்டோ அவை எல்லாவற்றையும் ஒருங்கே தரவல்லது இவளது பேரருள்.

 
"ஒரு முறை ஸ்ரீமதுரகாளி என்று அழைத்தால் போதும்; ஓடிவந்து வாரி எடுத்து அணைத்து வேண்டுவதை எல்லாம் தருகிறாளாம். எனக்குத் தெரிந்த சிலவற்றைச் சொன்னேன். இது மட்டுமல்ல, இன்னும் என்ன என்ன நல்லன உண்டோ அவை எல்லாவற்றையும் ஒருங்கே தரவல்லது இவளது பேரருள்."

Sir,

Thanks for the great write-ups on Mathura Kali amman. I'm really thrilled to read your posts as incidentally I am also an ardent devotee of the Divine Mother Mathrua Kali Amman! I am sure your devotion to the great Divine Mother will stir the hearts of several others to seek Her guidance and benevolence! Please do continue to share with us your experiences.
Thank you, Sir, once again.
Lalitha
 
Last edited:
Shri Mathura Kali, the goddess of power and strength, is perhaps the most important Goddess of the Hindus. She is the destroyer of evil with her four mighty arms. As Parvati, she is serene, the pretty consort of Lord Shiva by his side in the snowy peaks of the Kailash mountain, while Shri Mathurakali is on the foothills of Mathiramalai or known as Periyaswamy Malai. Goddess Shri Mathura Kali has the inherent dynamic energy through which she protects HER devotees. She represents the power of the Supreme Being that preserves moral order and righteousness. Shri Mathura Kali is also called as Divine Mother, protects mankind from evil and misery by destroying evil forces such as selfishness, jealousy, prejudice, hatred, anger, and ego. She remains as Shakti - the divine power to her beloved deovtees. Lord Shiva gave her a trident while Annapoorani gave her an Akshaya Patra and the god of mountains, Himavat gifted her with a lion to ride on. Charugan, the Asura capturing the power of the local village Deity Shri Chelliamman by tantric acts was making the life of the villagers at Siruvachur enraged by the disastrous events. The demon was trying to escape and it is only at the instance of Lord Shiva based on the villagers prayers, the tale of woe, deputed Goddess Parvathi who assumed the form of Shri Mathura Kali with her sword Shri Mathurakali hacked the demon into pieces. He was then buried as per his wishes in front of the Sannathi. At that moment, Goddess Parvati - wife of Lord Shiva - was going to get back to her place, having heard their tale of woe, particularly from Chelliamman, local Village Deity, she agreed to stay back at Siruvachur and was known as Shri Mathura Kali. In fact, widespread worship of goddess Durga, a form of Goddess Parvathi, is found in texts of the 4th and 7th centuries A.D., with the resurgence of goddess worship during those times itself.

P.S. I have written a few slokas and Gayathri Mantras about the Ambal. The same was published as a booklet (covering a few) with the help of Tanjore Jewellery (whose Deity is also Shri Mathurakali) and they were distributed to the devotees in the temple premises an year back.
 
Last edited:
சிறுவாச்சூர் தனிலே
ஸ்ரீமதுரகாளி சன்னிதானம்
பக்தரை காப்பதற்கு
பார்வதி ஏற்ற பல கோலம்
வேதம் போற்றும் தெய்வமென
விரும்பி ஏற்ற ஒரு கோலம்
பந்த பாசம் ஒளி பாய்ச்சி இங்கு
தாய் ஏற்ற தவக்கோலம்
நினைக்கும் பக்தர் மனமது வாடமல் இருக்க
அற்புதமான அருட்கோலம்
சக்தியுள்ள ஒரு தெய்வமென
சிறுவாச்சூர் தான் சென்று
அவளைப் பார்த்து வணங்கிடுவோம்
நம் கோரிக்கை வைத்திடுவோம்
ஸ்ரீமதுரகாளியை வணங்கி நாமும்
பேரருளைப் பெற்றிடுவோம்
பெறு வாழ்வு வாழ்ந்திடுவோம்

Madam Lalithaji. If you are keen to know more about Ambal, you may like to read my articles in website Dr.Ravi Shankar, Shantipriya, etc which appear if you open the website Shri Mathurakaliamman, Siruvachur.
 
Last edited:
ஸ்ரீமதுரகாளி தாயே அம்மா உந்தன் மலரடியே சரணம்
நாமெல்லாரும் இப்பிறவியில் நம்மை ஈன்றெடுத்த தாயாரை அம்மா என்கிறோம். நூறு வயது வரை வாழ்ந்தாலும் இப்பிறவிக்கு ஒரு தாயார்தான். அடுத்த பிறவியில் யாருடைய வயிறோ? யாரை நாம் அம்மா என அழைத்தபடி எவள் பின்னால் ஓடுவோமோ? அதை யாராலும் அறிய முடியாது. ஆனால் எத்தனையெத்தனை பிறவி எடுத்தாலும் நமக்கென ஒரு தாய் நிரந்தரமாய் இருக்கிறாள். கண்ணையும், கருத்தையும் நம் மீதே பதித்தபடி. அவளை நாம் அழைக்கக் கூடத் தேவையில்லை. தானே வந்து உதவுவாள். அவள் யார்?

அவள் தான் சிறுவாச்சூர். ஆம் ஸ்ரீமதுரகாளி அம்மன் தான். அகில உலக அன்னைக்கு பக்தர்கள் பல உண்டு உலகத்தவரின் நம்பிக்கைக்கு கலங்கரை விளக்காக ஆங்காங்கு சக்தி பீடங்கள் விளங்கி வருகின்றன. அவ்வாறு உலக மக்களால் போற்றப்படும் தலங்களில் குறிப்பிடும்படியான ஒன்றாக விளங்கி வருகிறது அருள்மிகு தேவி ஸ்ரீமதுரகாளிஅம்மன் திருத்தலம் .

தமிழ்நாட்டில் புகழ்பெற்று விளங்கும் சக்தித் திருத்தலங்களில் மகிமை மிக்கது இத்திருத்தலம். தாய்! ஒரு குழந்தை காணும் முதல் முகம்! அந்தத் தாய் தன் குழந்தையிடம் அளப்பரிய அன்பு கொண்டவள். எனவே குழந்தைகள் அன்னையைத்தான் முதலில் நாடும். தனக்குத் தேவையானவற்றை அன்னையிடம் கூறி அவள் மூலம் பெறுவதே குழந்தையின் இயல்பு. அதே போல ஆண்டவனின் அருளை நாடுவோர் முதலில் அன்னையை நாடுவர். அம்மை மனம் கனிந்தால் அப்பனின் அருள் எளிதில் கிடைக்கும். அந்த அன்னை எண்ணிலா வடிவங்களில், எண்ணிலாப் பெயர்களில் எண்ணிலாத் திருக்கோவில்களில் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறாள்.

ஏழை, பணக்காரன் படித்தவன் முதல் பாமரன் வரை அவள் பாதம் காண ஓடி வருவர். அனைவருக்கும் அருளும் அன்பு தெய்வம் அவள்! குறை தீர்க்கும் கற்பகவல்லி! நிறை வாழ்வு நல்கும் நாயகி! அகில உலகமும் காக்கும் அந்த அன்பு அன்னையைத் தொழுவோம்! அனைத்து அருளும் பெறுவோம்.
 
நம்மிடம் எல்லாரையும்விட அன்பாக இருப்பது தாயார் தான். தாயாரிடம் எதை வேண்டுமானாலும் பயமில்லாமல் சொல்லலாம். பகவான் எல்லா ரூபமாக இருந்தாலும் மாதா ரூபமாக வந்தால் ரொம்பவும் ஹிதமாக இருக்கிறது. மனப் பூர்வமாக நமஸ்காரம் செய்துவிட்டால் போதும். அம்பாளை நம்பிக்கையுடன் நமஸ்கரித்தால் மோக்ஷம் நிச்சயம். ஸ்ரீமதுரகாளி தாயே அம்மா உந்தன் மலரடியே சரணம்
 
அருளைத் தருபவள் அன்பை வளர்ப்பவள்
ஆறுதல் தந்து ஆசி தருபவள்
இடரை அழிப்பவள் இன்பம் தருபவள்
ஈர்த்து அருளிடும் உயர்ந்த தாயார் அவள்
எங்கும் நிறைந்தவள் என்னுள் அமர்ந்தவள்
வாழ்த்துகின்ற அறிய துணை அவ ள்
ஒளியாய் வருபவ ள் வாழ்வில் ஒளியைத் தருபவள்
ஓங்காரப் பரம்பொருளாய் உயர்ந்து நிற்பவ ள்
ஔடதமாய் இருந்து என்றும் துயர் துடைப்பவ
ள்
 
காணக் காண பேரின்பம் பெருகுதே
காத்தருள் புரியும் தேஜோ ரூபி நாயகியை
அன்னை வீற்றிருக்கும் அழகு தலத்திலே
தானும் இருந்து பக்தர்களை தாங்கிடும் தேவதயை
சோதனை தாங்கிடும் சக்தி தருபவளை
சேதங்கள் வாராமல் காத்து அருள்பவளை
பேதமேதுமின்றி காத்தருள் புரிபவளை
காணக் காண பேரின்பம் பெருகுதே
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top