ஆலய அதிசயங்கள்.....[ tvk ]

Status
Not open for further replies.
ஸ்ரீமதுரகாளியே எங்கள் குல தேவதயே
சகல சக்தியும் தந்திடுவாள் தேஜோரூபியே
சர்வ துக்கம் தீர்த்திடுவாள் சுபதேவதயே
வீரமான வெற்றி தரும் விஜயதேவதயே
நம்பிக்கை விருத்தி செய்யும் தேவதயே
கேட்கும் வரங்கள் தந்திடுவாள்
செல்வம் பல தந்திடுவாள்
பிள்ளைப் பேறைக் கொடுத்திடுவாள்
சர்வலோகம் காத்திடுவாள்
இதயத்தில் குடியிருப்பாள்
இருளை நீக்கி அருளைப் பொழியும் தேஜோரூபியே
 
வாடினேன் வாடி வருந்தினேன் ஸ்ரீமதுரகாளியைக் காண
மனத்தால் பெருந்துயர் இப்பிறவியில் பிறந்து
கூடினேன் நம்பிக்கை காத்து சக்தி அருள்பவளை
அவள் தரும் நலம் கருதி
ஓடினேன் ஆம் சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளியைத் தேடி
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
ஸ்ரீமதுரகாளி என்னும் நாமம்
 
உம் நாமம் துதி பாடும் பக்தர் கூட்டம்
கூப்பியே கையிரண்டும் உருகியே மனதினில்
தரணியில் முன்னம் நினைத்ததுமில்லை
தப்பித் தவித்து துள்ளித் துடித்து
துன்பத்தில் ஆழ்ந்து அல்லல் பட்டு
வாடும் பக்தர்களை காத்திடும் என் தாயே
பெறியது உன்னுள்ளம்
வேறொன்றும் நானறியேன்
எப்படித்தான் கண்டெடுத்தீரோ
ஒப்புயர்வில்லாத உத்தம நாயகியை
கடைக்கண் வைத்தெங்களை
கதி தந்து காத்திடுவாயே
வேறொன்றும் நானறியேன்
ஸ்ரீமதுரகாளி தாயே
 
ஸ்ரீ மதுரகாளிதேவியம்மன் ரொம்ப சாந் சொரூபத்துடன் அமர்ந்திருப்பது விசேஷ அம்சம் என்கிறார்கள். மேலும், இந்த அம்மன் அருள் கூட்டும் முக பருவத்துடன் திகழ்வதாக ஐதீகம். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் ஸ்ரீ மதுரகாளிதேவி கோவில் சந்நிதிக்கு வந்து அர்ச்சனை செய்து வேண்டிக்கொண்டால், விரைவில் குழந்தை வரம் வாய்க்குமாம். திருமணத் தடை உள்ளவர்கள் அம்மனுக்கு பட்டுப்பாவாடை மற்றும் தங்கவசம் சமர்ப்பித்து வழிபட்டால் விரைவில் கல்யாணம் கைகூடும் என்பது ஐதீகம். இந்தக் கோயிலின் பங்குனி/சித்திரைத் திருவிழாவும், பூச்சொரிதல் வைபவமும் வெகு பிரசித்தம். பக்தர்கள் மாவிளக்கு ஏற்றுவது இந்தக் கோயிலின் சிறப்பம்சம். கோவில் அம்மையிடம் வரம் கேட்கும் குழந்தை முகம் ஒன்று. இடத்தை அடைந்தபோது, கூட்டமான கூட்டம். பக்தி பிரவாகத்தில் ஆண்களும், பெண்களும், பெரியவர்களும், நடுத்தர வயதினரும், இளைய தலைமுறையினரும், சிறுவர்கள், சிறுமிகளுமாக ஜாதி பேதமில்லாமல் உட்கார்ந்துகொண்டிருந்தார்கள். உட்கார இடம் கிடைக்காதவர்கள் ஓரமாக நின்று கொண்டிருந்தார்கள். !ஆம் நாம் இவ்வுலகில் காண்பதனைத்தும் இறைவியின் கைவண்ணமே தவிர வேறெதுவுமில்லை. நாம் காண்பதனைத்தும் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் அவளுடையதே. நம்முடைய உயிரும் அது தங்கியுள்ள உடலுமவள் அளித்ததே நமகென்று எதுவுமே சொந்தமில்லாத நிலைமையில் நான் என்றும் .எனது என்றும் என்ற எண்ணம் எங்கிருந்து வந்தது ? ம்பாளை மட்டும் உங்கள் உள்ளத்தில் விளையாட விடுங்கள்.
அவன் உங்கள் மனதில் உள்ள அனைத்து அசுரர்களையும் அழித்து உங்களுக்கு ஆனந்தமயமான வாழ்வை நிச்சயம் அருள்வாள்
தாய்போல கருணை தரும் அன்பு முகம் நம்மிடையில் காட்சிதரும் ஆனந்த முகம் நமஸ்காரம் புரிகின்றோம் நம் தாயை இன்று
ஆடி வெள்ளி மற்றும் தை வெள்ளிக்கிழமைகளும் இங்கே விசேஷம். இந்த நாட்களில் அம்மனுக்குப் பாலபிஷேகம் செய்வதால், நமது இல்லத்தில் சகல சுபிட்சங்களும் பெருகும். இந்தத் தினங்களில் மஞ்சள் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்ய, மாங்கல்ய பலம் பெருகும் என்று சிலிர்ப்புடன் விவரிக்கிறார்கள் பக்தர்கள். மேலும், ஆடி மாதம் வெள்ளி மற்றும் கடைசிதை வெள்ளிக் கிழமைகளில் இந்தக் கோயிலில் நடைபெறும் விசேஷ அபிஷேக, பூஜை ஆராதனைகளில் கலந்துகொண்டு அம்மனைத் தரிசிக்க, அவளருளால் சகல நலன்களும் கிடைக்கும்.அவள் திருநீறணிந்தால்; தயை கூர்ந்த அருள் புரிவாள். நம் நாவால் விவரிக்க இயலாத இறையம்சம் உடையள் உலகம் ஈன்றத் தாயவள் சிறுவாச்சுரில் வந்து வீற்றிருக்கும்போது நமக்கு கவலைஎதற்கு அவள் தம் திருவடியை தலைமேற் கொண்டு வாழ்வோம் அவள் நாம ஸ்மரணை ஒன்றேதுணையாக இருக்கும் எங்கும் ஸ்ரீ மதுரகாளி எதிலும் ஸ்ரீ மதுரகாளி என்று நினைத்தால் அதிசயம் மட்டுமில்லாமல் அவள் க்ருபை ஒன்றே துணையாக இருக்கும் நம்பினோர் கெடுவதில்லை என நிதமும் நிரூபிக்கும் ,அ ம்பாள் கருணைக் கடல்.
எண்ணியது எண்ணியாங்கு நமக்கருளும் தெய்வம்







 
Last edited:
ஞான மார்க்கத்தின் உயரிய நிலை முக்தியடைதல் அல்லது வீடு பேறடைதல். இத்தகைய நிலையினை அடையும் பாதையானது அத்தனை எளிதானதில்லை. கடவுள் அருள் துனண நிற்க கவனத்துடன் கூடிய தொடர் பயிற்சி மற்றும் விடா முயற்சியினால் மட்டுமே இது சாத்தியமாகும். மதிர மலையில் ஆச்சர்யங்கள் இருக்கின்றன முதலில் சென்று அடையும் பாதையானது அத்தனை எளிதானதில்லை ஆண்கள் மட்டும் செல்லலாம் ஆனால் தற்போது தரிசிப்பவர்களுக்கு சாத்தியமாகும் தற்போது சுனையருவியையும் தரிசிக்கலாம் சித்தர்கள் பாறை காணக் கிடைக்கிறது. அவள் அருளுக்கு ஸ்ரீ மதுரகாளி தாயே ஈடாக வேறொன்றும் இல்லை அவள் துணையே நாமம்.அவள் அருளை மனதில் வைத்து கவலையெல்லாம் மறப்போம் காலையும் மாலையும் தொழுது வேண்டியதை பெறுவோம் ஒரு முறை வாழ்வில் வந்ததும் நிரந்தரமானது அவள் துணையே நாமம் ஒரு முறை உரைத்ததும் மறுபடி உரைத்திட வைப்பது அவளருளே. ஆலயம் சென்று அவளைத் தொழுது கோரிக்கையும் வைப்போம் வேளையும் பொழுதும் அவளை எண்ணியே கடமைகளைச் செய்வோம் தோளில் உள்ள சுமைகளை எல்லாம் அவளிடமே சேர்ப்போம் வாழ்வில் வந்திடும் நன்மைகள் அறிந்து நம் நன்றியை கூறிடுவோம் அவளின் கருணையில் பாதைகள் தெளிந்திடும் நல்ல பயணத்தை தொடர்ந்திடுவோம் மருளில்லாத வாழ்கையை அடைவோம் மேலும் நன்மைகள் செய்திடுவோம். பொருள்களின் மீது பற்று வைக்காது பக்தியில் திளைத்திடுவோம் கருணைக் கடலின் பார்வையில் வீழ்ந்து அவள் குடை நிழலில் சேர்வோம் மலர் போன்ற மனமும் மதிப்பான குணமும் தெளிவான எண்ணமும் துணிந்த செய்கையும் நிலையான அன்பும் உயர்வான பண்பும் அளவில்லா அடக்கமும் அளவோடு பெருமையும் விலகாத தன்னம்பிக்கையும் விலையில்லா வெற்றியும் தளராத பக்தியும் துதி பாடும் உள்ளமும் இவையாவும் தந்தெனக்கு நீ அருள வேண்டுகிறேன் ஸ்ரீ மதுரகாளி தாயே சரணம் சரணம் நின் தாள் சரணமம்மா சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளி தாயே நமஸ்காரம்.





1

 
உருகிடும் பக்தர்களின் மனதிலே உன் அருளாசி கண்ணிற்கு ஒரு இமைபோல காக்கும்
எங்கள் தெய்வமே
கலியுகத்தில் வாழும் தெய்வமே குல தெய்வமே கண் கண்ட தெய்வமே
காணும் பக்தர் யாவரும் கண்களில் நீர் சோர கசிந்து உருகும் தோற்றமே
கண்டோர் உன்னை பலருண்டு கலங்கி தவிப்பதில் நானுமுண்டு
கலக்கத்தைப் போக்கி அருள்வாய் கவர்ந்திழுத்திடுவாய்
உருகிடும் பக்தர்களின் மனதிலே உ ன் அருளாசி பல உண்டு
உம் திரு உருவையே உளமாற நினைத்திட அனைவருக்கும் தளராத மனம் தந்திடு தாயே
ஸ்ரீ காஞ்சீ குரு சந்திர சேகர சரஸ்வதி ஸ்வாமியின் குலதெய்வமே
உனைச் சரண் அடைந்திடவே முழுவதும் காத்திடுவாய்
முற்பிறப்பும் அறிந்த தெய்வமே உம் திரு உருவையே உளமாற நினைத்திட
அருள் மழையை பொழிவாயே வரும் துன்பம் அறிந்து நீ விரட்டிடுவாய் உன் சூலத்தால்
முழு பரம் பொருளாய் உனைச் சரண் அடைந்திடவேனே
கருணை விழிப்பார்வையால் மன இருளை போக்கிடுவாயே
கற்பகத் தருவே போற்றி காலமெல்லாம் உன்புகழ் சொல்லிடுவோம்
உன் காலடியை தொடர்ந்திடுவோம் காப்பாற்று
உன் நாமம் சொல்லவே தித்திக்கும் வாழ்கையை தந்திடுவாய் தாயே
சூலம் ஏந்திய தெய்வமே வருவாய் மலர்வாய்
நித்தம் நித்தம் உன்னை நினைத்துருக வேண்டி
காலமெல்லாம் உனைப் பணிந்து பாடுகின்ற பாக்கியம் தந்தருளவேண்டும்
அனுதினமும் அருளாசி என் மன கண்ணில் நின் தயவால் வழிந்திடும் தாயின் ஆசி
குறை உண்டோ இனிமேல் நம் வாழ்விலே
ஓம் சிறுவாச்சூர் வாஸாய வித்மஹே
சாந்த ரூபாய தீமஹி தன்னோ ஸ்ரீ மதுரகாளி ப்ரசோதயாத்
 
Last edited:
ஆச்சர்யங்கள் இருக்கின்றன அவள் கடாக்க்ஷம் கேட்கவேண்டாம் அம்மன் அருள் வெள்ளியன் று சாத்திய மலர்கள் திங்களில் வாடாது இன்று காலையில் பூத்த மலர்கள் மாதிரி ஆனந்தமாய் சிரிக்கின்றன அவளுக்கு நன்றி செலுத்தும் வகையில் நாமும் ஏதாவது ஒரு வழியில் அவளிடம் ஈடுபாடு கொண்டு விட்டால் அவள் அருள் செய்வாள் வருகின்ற கஷ்டங்களில் அனுக்ரஹத்தை உணர்ந்தாலே போதும். மனதில் நம்பிக்கை வைத்தாலே போதும். எத்தனை பேர் என்ன சொன்னாலும் உன் அம்மனிடத்தில் நம்பிக்கை மாறாமலிருந்தாலே போதும் நீ இருக்குமிடத்தில் இருந்து கொண்டு அவளை விடாமல் பிடித்துக்கொண்டு அவள் நாம ஜபம் செய்துகொண்டு வருவதை ஏற்றுக்கொண்டு உன் கடமைகளை பண்ணிக்கொண்டு வாழ்க்கையை ஒழுங்காக வாழ்ந்தாலே போதும் சந்தோஷத்தை உணர்ந்தாலே போதும். அவள் பாக்கியம் பெற்ற நீ ஒரு போதும் கலங்கலாமா அழலாமா புலம்பலாமா பரிதவிக்கலாமா நொந்து போகலாமா சோர்ந்து விடலாமா
வாழ்க்கையை வெறுக்கலாமா நம்பிக்கையை இழக்கலாமா துவண்டு போகலாமா உற்சாகத்தோடு
வாழ் வாழ்க்கையில் ஒளியை நீயும் கொஞ்சம் தருவாயே ஸ்ரீ மதுரகாளி தாயே குல தெய்வமே 
 
நமக்கு ஒவ்வொரு நொடியும் கண் கண்ட கலியுக விருந்து அம்மனின் ஆசிகளே! உன்னை பற்றி சிந்திக்கும் நேரம் எனக்கு போதவில்லை தாயே. உன்னை தவிர்த்து சிந்திக்க என்னிடம் வேறு ஒன்றும் இல்லை தாயே
உன்னையே நினைத்து நினைத்து என்னை நான் மறந்து போன தாயே அந்த நொடிகள் மட்டுமே போதும் எனக்கு தாயே
உன்னுடன் இருக்கும் அந்த நொடி நகராமல் அப்படியே உறைய வேண்டும் தாயே உன் தனி கருணை என் இதயமதில் நுழைந்த பின்னர் வேறு எதுவும் அதில் நுழைய என் இதயத்திற்கு வாசலே இல்லாமல் போனதில் ஒரு வியப்பும் இல்லை தாயே உன் பெருமை[FONT=bookman old style, new york, times, serif]யை[/FONT] புரிந்த பின்னர் வேறு எதையும் நான் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை தாயே
உன் திருமுகத்தில் தோன்றும் அந்த ஒளி விளக்கை பல முறைகள் கண்டுகளிக்கவேண்டும் தாயே உன் அருகில் கூட தேவையில்லை ஏதோ ஒரு மூலையிலே அமர்ந்து உன் திவ்ய தர்சனம் அதை ஒரு நொடியும் கண் இமைக்காமல் காண வேண்டும் தாயே உன் அருகில் அமர்ந்து கொண்டு பய பக்தியுடனே வாய் மேல் கை வைத்து பலரும் தன மன குறைகளை கூற நீ அதனை ஏற்று உடனே சீர் செய்யும் அந்த கலையை காலம் போவதே தெரியாமல் கண்டு கண்கள் பளிக்க வேண்டும் தாயே உன் அருள் என்ற காப்பு என்னை சுற்றி எப்பொழுதும் இருக்க, எதை கண்டும் எனக்கு பயம் எதற்கு நீயே சொல் தாயே உன் அருளாட்சி நடக்கும் சிறுவாச்சூரில் என் கால்கள் பட்ட உடன் என் உடம்பெல்லாம் புது மின்சாரம் பாய்வது போல் ஒரு பரவசம் தாயே அதை எடுத்து சொல்ல எந்த மொழியிலும் வார்த்தைகளே இல்லையே என்ன செய்வேன் தாயே உன் அன்பெனும் தர்பாரில் என்றுமே பேதம் இருந்தது இல்லை அனைவரும் சமமே என்று சொல்லும் [FONT=bookman old style, new york, times, serif][/FONT]தா[FONT=bookman old style, new york, times, serif]ணங்கள்[/FONT] பல உண்டு இதில் மாற்றமே இல்லை தாயே உன் ஆசிகளை நாளும் அனைவருக்கும் அளித்து விட்டு பிறகு இன்னும் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க சத்தியமாக உன்னால் மட்டுமே முடியும் ஆவலோடு வரங்கள் அளிக்கின்ற மாதாவே வேறு என்ன சொல்ல தாயே காலமெலாம் உன் காலடியில் நமஸ்கரிக்க ஆசை விளக்காகி காலமெல்லாம் காவலாகி இருக்க ஆசை கற்ப்பூரமாகி அன்னை உனக்கு கரைந்துருக ஆசை எம் மனதுக்கு/நெஞ்சுக்கு ஒவ்வொரு நொடியும் கண் கண்ட விருந்து கலியுக ஜெகம் போற்றும் தெய்வமே காலமெலாம் உன் காலடியில் நமஸ்கரிக்க/அருள் பெற ஆசை தினம் என் சிந்தையிலே வந்து சஞ்சலங்கள் தீர்த்து சங்கடங்கள் மாற்றி மைதி[FONT=bookman old style, new york, times, serif]யை[/FONT] தருவாய் உன்னை சுற்றி வந்து ஒவ்வொரு நொடியும் விருந்து கண் கண்ட கலியுக குலதெய்வமே உன் கழலடியை நான் பற்றிடப் பற்றிட எனை கண்ணிமை போல் காப்பாய் என்னை என் தாயே [FONT=bookman old style, new york, times, serif] ஸ்ரீ மதுரகாளி தாயே குல தெய்வமே [/FONT]சரணம் சரணம் நின் தாள் சரணமம்[FONT=bookman old style, new york, times, serif]மா[/FONT]
 
Last edited:
தஞ்சம் என்று வந்தோரை தயையுடன் காக்கும் தெய்வம்
நெஞ்சத்தில் வீற்றிருந்து நாளும் காக்கும் தெய்வம்
நம்பி வேண்டி வந்தோரை நலமுடன் காக்கும் தெய்வம்
துன்பங்கள் தீர்க்கும் தெய்வம் தூயவராய் நம்மை ஆக்கும் தெய்வம்
கர்ம வினை நீக்கும் தெய்வம் காத்தருள் புரியும் தெய்வம்
சிறுவாச்சூரில் உரை காஞ்சியில் வாழ்ந்த மாமுனி காமகோடியின் குலதெய்வம்
வேண்டிடும் ப்ரார்த்தனையை என்றென்றும் நான் தொடர
ந்தன் ஆசியின் அருகாமை வேண்டும்
 
வந்தாளே ஸ்ரீ மதுரகாளி மனமாறி ஆவலோடு வந்தாளே
நின்றாளே நெஞ்சத்து நின்றாளே
தந்தாளே வரம் நூறு தந்தாளே
இருப்பாளே துணை என்றும் இருப்பாளே
காப்பாளே அரவணைத்து காப்பாளே
திறப்பாளே அகக் கண்ணை திறப்பாளே
நிறைப்பாளே அருள் கொண்டு நிறைப்பாளே
இறைவியை ஜகம் காக்கும் இறைவியை
சிரம் தாழ்த்தி வணங்குவோமே
கருணை விழிப்பார்வையால் மன இருளை போக்கிடுவாயே
பேரும்புகழும் பெற்றிடுவோம் உன் பாதம் தொழ
காலமெல்லாம் உன்புகழ் சொல்லிடுவோம்
மெருகிடும் உன் பட்டு ஆடை
காண கண் கோடி வேண்டும்
ஞான ஒளி காட்டினாய்
உன்னைப் பணிந்து பாடுகின்ற பாக்கியம் தந்தருளவேண்டும்
உன் திருநாமங்களை உச்சரிக்க உச்சரிக்க, உள்ளம் பூரிக்கும்
சந்தோஷத்தையும் தெளிவையும் கொடுக்கும்
இது தான் உன் சக்தி இது தான் உன் திவ்விய நாமத்தின் மகிமை
ஒவ்வொருவருக்கும் ஆச்சர்யம் எனப்படும்
 
இந்த காரியம் நிறைவேற, இந்த பிரச்சனை தீர அதற்கேற்ற தெய்வத்தை வணங்க வேண்டும் என குறிப்பு எழுதி வைத்துள்ளனர். அதன் படி எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன குறை தீரும் என்பதை பார்ப்போம்.
விக்னங்கள், இடையூறுகள் நீங்க - விநாயகர் செல்வம் சேர - ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர் நோய் தீர - ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி வீடும், நிலமும் பெற - ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான் ஆயுள், ஆரோக்கியம் பெற - ருத்திரன் மனவலிமை, உடல் வலிமை பெற - ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர் கல்வியில் சிறந்து விளங்க - ஸ்ரீ சரஸ்வதி திருமணம் நடைபெற - ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை மாங்கல்யம் நிலைக்க - மங்கள கௌரி புத்திர பாக்கியம் பெற - சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி தொழில் சிறந்து லாபம் பெற - திருப்பதி வெங்கிடாசலபதி புதிய தொழில் துவங்க - ஸ்ரீகஜலட்சுமி விவசாயம் தழைக்க - ஸ்ரீ தான்யலட்சுமி உணவுக் கஷ்டம் நீங்க - ஸ்ரீ அன்னபூரணி வழக்குகளில் வெற்றி பெற - விநாயகர் சனி தோஷம் நீங்க - ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர்பகைவர் தொல்லை நீங்க - திருச்செந்தூர் முருகன் பில்லி, சூன்யம், செய்வினை அகல - ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர்அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற - சிவஸ்துதிமுடி நரைத்தல், உதிர்தல் - மகாலட்சுமி, வள்ளி கண் பார்வைக் கோளாறுகள் - சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர் காது, மூக்கு, தொண்டை நோய்கள் - முருகன் ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் கோளாறுகள் - மகாவிஷ்ணு மாரடைப்பு, இருதய கோளாறுகள் - சக்தி, கருமாரி, துர்க்கை

அஜீரணம், குடல்வால், அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சள் காமாலை, காலரா - தட்சிணாமூர்த்தி, முருகன்

நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு - முருகன்

பால்வினை நோய்கள், பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுகள்- ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ரங்கநாதர், வள்ளி

மூட்டுவலி, கால் வியாதிகள் - சக்கரத்தாழ்வார்வாதங்கள் - சனிபகவான், சிவபெருமான் பித்தம் - முருகன் வாயுக் கோளாறுகள் - ஆஞ்சநேயர் எலும்பு வியாதிகள் - சிவபெருமான், முருகன் ரத்தசோகை, ரத்த அழுத்தம் - முருகன், செவ்வாய் பகவான் குஷ்டம், சொறி சிரங்கு - சங்கர நாராயணன் அம்மை நோய்கள் - மாரியம்மன் தலைவலி, ஜீரம் - பிள்ளையார் புற்று நோய் - சிவபெருமான் ஞாபகசக்தி குறைவு - விஷ்ணு

உங்களுக்கான பிரச்சனைகளுக்கு அதற்கென்று கூறப்பட்டுள்ள தெய்வத்தை வணங்கி நலம் பெருக!
 
உன்னுடைய க்ருபயை எல்லோரையும் விட மிகப்பெரியது உன்னிடத்தில் பரிவுடையவன் அக்கறையுடையவன் உன்னிடத்தில் பாசமுடையவன் உன்னிடத்தில் விசுவாசம் உடையவன் உன்னிடத்தில் நன்றியுடையவன் மற்றவருக்கு உன்னை சில வருஷங்களாகத் தான் தெரியும் ஆனால் உன்னை நான் பிறந்ததிலிருந்து தெரியும் என்னுடைய பூர்வஜன்மாவோ பாவ புண்ணியங்களோ ஏதும் தெரியவே தெரியாது உன் மனதை உனக்குள்ளிருந்தே பார்த்துக் கொண்டிருக்கிற ஆசை நல்ல பாதையதை காட்டி விடு உன்னை திடமாக எல்லோரையும் விட என்றென்றும் நிச்சயம் நம்புகிறோம் பிறவியின் நோக்கம் நிறைவேற தாயே சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளி தாயே நமஸ்காரம்
 
இந்த தெய்வத்தை/அம்மனை பக்தியோடு தர்சனம் செய்வதால்/வணங்குவதால் ஒருவருக்கு சொப்பனத்தில் கூட எவ்வித கஷ்டமும் ஏற்படாது/வாராது எந்தெந்த ஆசைகளுடன் அவளுக்கு யார் பூசைகள் செய்கின்றனரோ அந்த மனோ ஆசைகள் நிறைபெரும் என்று கூறியிருக்கிறார் இதென்ன விந்தை யதார்த்தமாக இது எப்படி சாத்தியம் எனக்கே இதைப் போலத்தான் ஆனால் ஒவ்வொருவரும் பலனை எதிர்பாராமல் செய்கின்ற செயல்கள் உரிய நேரத்தில் பயனளிக்கும் கருணை தெய்வமென்றுனை பக்தர் சொல்லக் கேட்டேன் மெல்ல உன் மேல் ஆர்வம் கொண்டேன் சொல்லிச் சொல்லி உன் நாமம் படித்தேன் தெளிவான சிந்தனை மனம் வரக் கண்டேன் விளித்ததும் வருகின்ற தாய் மனம் கண்டேன் ஒளியான உன் அருள் எனை சூழக் கண்டேன் உலக பிரசித்தம் புது மலர்களைக் கொண்டு நான் வணங்குவேன் அவள் நாமம் என் வாயில்
வருகிறதென்றால் அது அவள் க்ருபை அற்புதமே (உன்) பொற்பதமே சரணம் அடைந்தேன்
 
ஸ்ரீ காஞ்சி காமகோடீ மஹா பெரியவா கண்ட சர்வ சக்தி ஸ்ரீ மதுரகாளி
ஆதி சங்கரரின் மனதினில் தோன்றி அவர்கள் முன் அவதாரமாய் வந்த ஆச்சர்ய ஸ்வரூபமாள்
அம்பாள் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு அவதாரம்
ஆஸ்வாசம் மேலிட நம் மனம்: சரணமென சொல்லவொண்ணா ஆனந்தத்தில் மனமும் துள்ளுது
உந்தன் திருச்சந்நிதி நம் வீடாகுமே ம்மா தாயே
என் இரு விழி நீரே உனக்கு புஷ்பாஞ்சலி
உன் பெயர் ஒலிக்குது இங்கு மணம் வீசுது
உன்னை வலம் வரும் போதிலே மனம் லேசாகுது
ஏன்னென்று புரியாமல் மனம் நடுங்குது
அறியாமல் உன் நாமம் உடன் வெளி வருகுது
சொன்னவுடன் சோதனையும் விலகி ஓடுது
ஆனந்தத்தில் மனமும் உன்னை ஈர்த்து துள்ளுது
அள்ள அள்ளக் குறையாத அருளும் பெருகுது
உன் கோயில் வலம் வந்து என்றும் நலம் காண
உன் புகழ் பாட என்றும் உன்னை வேண்ட
என் மனதாலே நான் செய்யும் ஆராதனை
இது தானே என்றென்றும் என் பிரார்த்தனை.
எல்லாருக்கும் இன்பம் கேட்டேன் ஈவாய் போற்றி
எல்லாருக்கும் துன்பம் வேண்டேன் துடைப்பாய் போற்றி
எல்லாருக்கும் அமுதம் கேட்டேன் அளிப்பாய் போற்றி
சர்வ சக்தி நீ, என்னை. ஆள்வது நீயே
உன் தீபத்தின் ஒளி எங்கும் பிரகாசிக்கிறது
புகழை நான் வேண்டவா
பொருளை நான் வேண்டவா
நல்ல பண்பை நான் வேண்டவா
நற்செயல்களேயே செய்யும் நீ, ,துன்பமும் அண்டாதபோது
வேறென்ன கேட்கலாம் உணர்வால் நான் அறிகிறேன்
உன்னுடைய ஒளியால் இவ்வுலகமே ஒளி பெற்று பிரகாசிக்கிறது
தேஹிமே க்ருபையை சாந்த ஸ்வரூபியே
உன் நாமம் சொல்ல இந்த ஜன்மம் போதாது
பல கோடி ஜன்மாவாக உன் பைத்தியம்
உனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.
உன் மாயை என் மன அறியாமை அகற்றும்
நின் பொற்பாதம் போற்றி


 
முழுமதி போல் முகம் ஜொலித்திடும் பிம்பம் விழிகள் இரண்டும் காருண்யம் பேசும் இருண்ட வாழ்வுக்கு ஒளி தரும் பிழைகள் எல்லாம் பொறுத்திடும் தெய்வம் துணை வரும் என்றும் நமக்கது மாத்திரம் விதியை மாற்றும் வழி சொல்லி வாழ்த்தும் கை காட்டும் அபயம் எப்போதும் துணை வரும் என்றும் நமக்கது மாத்திரம் தாமதம் செய்யாதே இன்று இல்லையேல் என்றுமே இல்லை உலகிற்கே ஒரு எடுத்துக்காட்டாக உருவெடுத்துள்ளாள் இது போன்ற காருண்ய ரூபியை இந்தியாவில் எங்கும் காணவில்லை ஸ்ரீ மதுரகாளி தாயே குல தெய்வமே கண் கண்ட தெய்வமே உனது நாமத்துக்கீடாக மருந்து ஒன்றுண்டோ சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளி தாயே நமஸ்காரம்
 
ஒரு சமயம் பக்தர்கள் எத்தகைய பாக்யம் செய்திருக்கவேண்டும் தனக்கு இப்படியொரு தெய்வீக சம்பந்தம் கிடைத்ததை உணர்ந்து. மனம் மகிழ்ச்சிக்கடலில் திளைத்தது காற்றிருக்கும் வரை கடலில் அலை இருக்கும் நம் உடலில் மூச்சு காற்று வந்து போகும் வரை வாழ்வில் இன்ப துன்பமிருக்கும் எது வந்த போதும் எல்லாம் அவள் செயல் என்றுணர்ந்தவர்கள் உள்ளத்தில் நிச்சயம் அமைதி இருக்கும் மகிழ்ச்சியுடன் சன்னிதானத்தில் அமர்ந்து கொள்ள அவள் தரிசனம் கிடைக்க வழி செய்தார்கள் மானஸ பூஜையைப் பார்க்கும் பாக்யம் எங்களுக்கு அன்று கிட்டியது நான் கொண்டு சென்ற புஷ்பங்கள் வீணாகவில்லை த்யானம், ஆவாஹனம், ஆஸனம், பாத்யம், அர்க்யம், மது பர்க்யம்,ஸ்னானம் என்று செய்து ஷோடசோபசார பூஜை மலர்களாலேயே பூக்களை பூசாரிகள் தூவினார்கள் பூஜையை நடத்தினர் அன்னையின் திருவடிகளில்தான் போய்ச் சேர்ந்தன. கண்களால் தரிசித்த அவர்கள் மஹா பாக்யசாலி கவலை வேண்டாம் கருணைக்கடலான அவள் உன்னை ஏற்று அருள் செய்வாள் சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளி தாயே நமஸ்காரம்
 
நாவே ஸ்ரீ மதுரகாளியின் நாமத்தை துதி செய்வாயாக; மனமே ! சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளியை வாழ்த்தும் பஜனை செய்வாயாக; கைகளே அபயம் தரும் தெய்வத்துக்கு அர்ச்சனை செய்வீர்; காதுகளே அம்பாளின் கதைகளைக் கேட்பீர்; கண்களே அம்பாளை காண்பீர்; கால்களே அம்பாளின் ஆலயத்திற்கு செல்லுங்கள்; நாசியே அம்பாளின் பாத துளியை நுகர்வாயாக; தலையே ! நீஅம்பாளை வணங்குவாயாக உனது நாமத்துக்கீடாக மருந்து ஒன்றுண்டோ சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளி தாயே நமஸ்காரம்
 
Last edited:
உன் வாழ்க்கையை யாரையெல்லாமோ நம்பி கொடுத்திருக்கிறாய் எப்போதும் துணை வரும் சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளி தாயை நம்பு ஏன் யோசிக்கிறாய் இனியாவது உன் தாயை பூரணமாக நம்பி உன் வாழ்வில் ஏமாறாமல் இரு உனது உள்ளேயும், உன் கூடவும், எப்போதும் இருக்கும் தாயை மரியாதை செலுத்தி பூரணமாக நம்பு உன்னை நீ அம்பாளிடம் ஒப்படைப்பதால், உனது பாரத்தை நீ அவளிடம் கொடுத்துவிடுகிறாய் பிறகென்ன ஆனந்தத்தை அனுபவிப்பது மட்டுமே உன் வேலை சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளி தாயே நமஸ்காரம்
 
ஸ்ரீ மதுரகாளி என்ற பெயர் கொண்ட தெய்வம்
ஸ்ரீ காஞ்சி காமகோடீ மஹா பெரியவா கண்ட சர்வ சக்தி தெய்வம்
எந்நாளும் பக்தர்களின் சொந்தமான தெய்வம்
அன்புடனே மனதில் வைத்து வணங்கி வந்தாலே
அன்னையாக அடுத்து நின்று அருளிடும் தெய்வம்
சக்தியுள்ள
ஆலயத்தில் அமர்ந்திருக்கும் தெய்வம்
சங்கடங்கள் நீக்கிடவே துணை நிற்கும் தெய்வம்
சிறுவாச்சுர் கிராமத்தில் ஆட்சி செய்யும் தெய்வம்
சட்டெனவே ஓடி வந்து காத்து நிற்கும் தெய்வம்
பொதுவாக பெரிசாமிமலையில் சித்தர்களுடன் அமர்ந்திருக்கும் தெய்வம் தாங்கி நின்று, நம்மையே, தாங்கி நின்று வழி நடத்தும் அன்பான தெய்வம்
 
எல்லாவற்றையும் படைத்து ,காத்து, அழித்து,மறைத்து தன்னுள் ஒடுக்கி கொள்கின்ற அம்பாளின் மகிமையை யாரும் எளிதில் அறிய முடியாது. பாலில் நெய் இருந்தும் பாலை கடையாமல் வெண்ணை எடுத்து, அதிலிருந்து நெய் எடுக்க முடியாது அதை போலதான் க்தி. அதை அறிய அம்பாளின் மகிமையை தான் முயற்சிக்கவேண்டும் ஸ்ரீ மதுரகாளியினை, வளின் மகிமையை யாரும் எளிதில் அறிய முடியாது, இன்றைய வாதங்களை ஒதுக்கிவிட்டு நம்பிக்கையுடன் அன்பே வடிவான ஸ்ரீ மதுரகாளியினை அனுதினமும்பிரபஞ்சத்தின் அனைத்திற்கும் மூலமாள், வழிபட்டுவந்தால், சிவ சக்தி ஐக்கியம் எனக்கூறப்படுகிறது, மாறுகின்ற மனதை கொண்டுதான் என்றும் மாறாத இறைதத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும் இவ்வுலகில் தோன்றுமனைத்தும் மாறிக்கொண்டே இருப்பன நிலையற்ற இந்த உடலைகொண்டுதான் நிலையான
இறைவனை அறிந்து கொள்ளவேண்டும் இதுதான் மாயை அபயம் தரும் அவளின் திருவடிகளை பற்றிக்கொள்ள வேண்டும் பக்தர்களின் தூய பக்திக்குத்தான் அவள் முதலிடம் தருகிறாள். மனிதர்களின் உயிர் எப்படி போகும், எங்கு போகும், எதன் மூலம் போகும் என்பதெல்லாம் யாரும் அறிய இயலா ரகசியம். எனவே உடலில் உயிர் இருக்கும்போதே, மனம் முதலிய கருவிகள் நல்ல நிலையில் இருக்கும்போதே அம்பாளை நினையுங்கள் நல்ல வாழ்க்கை வாழ்ந்தால் நல்ல பிறவியும் தீய வாழ்க்கை வாழ்ந்தால் இழி பிறவியும் தான். கிடைக்கும் .அதனால்தான் உடலில் உயிர் நீங்குவதற்குள் தவறு செய்பவர்கள் தங்களை திருத்தி கொண்டு நல்லவர்களாக வாழ முயற்சிக்கவேண்டும் இது பெரியவர்கள் வாக்கு. அனைத்து நலன்களும் தேடி
வரும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்


 
கலியுகத்தில் நல்லவர் கெட்டவர் என்ற பாகுபாடின்றி எல்லோருக்கும் கஷ்டங்கள் ஏற்படத்தான் செய்கிறது பகவான் நாமத்தைச்சொல்லிக் கொண்டே இருப்பது ஓரளவாவது நம்மைக் காப்பாற்றக் கூடியது ஒரு நாள் ஸ்ரீ மதுரகாளி விடிகாலை நேரத்தில் அச்சரீரியாக சொப்பனத்தில் சொன்னாள். சூட்சுமமாகவும் குறிப்பிட்டாள். சொன்னதைக் கேட்டு என்னை மெய்சிலிர்க்க வைத்தது. அம்பிகையையும் பெரியவாளையும் பிரார்த்திக்கிறேன். மஹாபெரியவா குருநாதர் அருளிருந்தால் குறைகளெல்லாம் தீர்ந்து விடும். சஞ்சலமில்லாமல் அம்பிகையின் ஆக்ஜ்யை படி அருளை வேண்டி அணுகிரகத்தை அடைய எடுத்துக்கூறுகிறேன் இவ்வுலகில் ஒரு நடமாடும் தெய்வமாகவே விளங்குபவள். மொத்த இந்தியாவையும் கவர்ந்திழுக்கின்றாள். எனக்கு இது ஒரு விதமான நம்பிக்கை. தெய்வீக சூட்சுமம் அனைவரும் பெற்று மனதில் பிரார்த்தித்து, கோரிக்கைகளை சொர்ண ஆகர்ஷன அம்பிகையிடம் சமர்ப்பித்தால் பிராத்தனைகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும். அப்படியென்ன நற்குணங்கள். நன்கு தியானம் செய்து பார்த்து அந்த குணங்களுள்ளவளை பற்றி சொல்லுகிறேன். அவளருளால் மதுரமொழியால் உலக னைத்தையும் உணர்த்துபவள். குறிப்பிட்ட நாட்களில் பரம்பரை,பரம்பரையாக வந்து பூஜித்து வழிபடும் நம்பிக்கை உள்ளதாகவும், பிறவியின் பெருங்கடலை நீந்திட இருள் விலகும் ஒளி தோன்றும்,சில பக்தர்கள் தெரிவிக்கின்றனர். ரம்யமான இந்நேரம், திருக்கோவில் தேடி வந்து திருவடியை நாடி நின்றோம். நிதர்சனமான எடுத்துக் காட்டு. இவ்வாலயத்தில் சுந்தர மாகாளியாக இருந்து அருள்பாலிக்கிறாள். தொடர்ந்து 12 வெள்ளிக்கிழமைகள் இராகு காலத்தில் காளியை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும், துன்பங்களை நீக்கிப் பேரின்பப் பெருவாழ்வை அருளுவாள் என்பது நம்பிக்கை. அம்பாளிடம் மனம் ஈடுபட சில நாட்களாக என் கனவில் இந்த அழகு தேவதையின் தரிசனம் காண்கிறேன். நீ என் எண்ணத்தில் எப்பொழுதும் இருக்க வேண்டும் நீ செய்திடும் செயல் யாவையும் நீ எப்பொழுதும் முன்னின்று பார்க்க வேண்டும் எப்போதும் காக்க வேண்டும் துணையாக வர வேண்டும் நமஸ்காரம் செய்கிறேன்.அம்பிகையின் சன்னிதிக்கு சென்று இரண்டு கைகளையும் தலைக்கு மேலே தூக்கிக் கைகூப்பி வணங்கி, பின்பு கண்மூடியபடி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி ன். அவள் யார் என்பதன் விளக்கமும் இங்கு கிடைத்து
விட்டது. பக்தர்களின் பாபத்தைப் போக்குகிற அவள் சரணத்தில் செய்த நமஸ்காரமானது எதைத்தான் கொடாது.தன் தேஜஸ் மூலம் அனைவருக்கும் அருள் வழங்குவதே அவள் நோக்கம். ஹே தாயே ஸ்ம்ஹாரம் செய்த பரமேச்வரரின் ப்ரிய பத்தினியே. அம்பாளை வணங்கி வந்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள் கூட நீங்கி நிம்மதியாக வாழலாம். இப்பூவுலகில் அவளின் அவதாரத்துக்கு முக்கிய பிரயோஜனம் என்ன என்பதைக் காட்டுகிறது. சிறுவாச்சூர் ஆலயத்திற்குள் சுந்தர மாகாளி அன்பு வடிவாய் அமர்ந்து அன்பர்களுக்கு அருள் பாலிக்கிறாள். பரிபூர்ண அருள் மற்றும் க்ருபை கிடைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. பிறவியின் பெருங்கடலை நீந்திட இருள் விலகும் ரம்யமான திருக்கோவில். மனம் தூய்மை பெற வேண்டுமானால்,தியானம் செய்வதை அன்றாட கடமையாக்கிக் கொள்ள வேண்டும். இறைவனின் திருநாமத்தை வாய்விட்டோ, உதட்டளவிலோ உச்சரிக்காமல் மனத்திலிருந்து திரும்பத்திருமப சொல்லும்போது உயர் இரத்த அழுத்தத்திலிருந்து விடுபடலாமே பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவளை உணர முயற்சி செய்து பாருங்களேன். ஒவ்வொரு அவதாரத்துக்கும் அவளுடைய ஒவ்வொரு திருநாமத்துக்கும் அளப்பரிய சக்தி உண்டு. அந்தக் காரணங்களைத் தெரிந்து கொண்டால், அவளின் கருணையை எளிதாக அறிந்து கொள்ளலாம். நமக்கெல்லாம் ஞானத்தை அள்ளிக் கொடுப்பவள்.அவளுடைய பரிபூரண அன்பும் ஆசீர்வாதமும் நமக்கு என்றைக்கும் வேண்டும். கோடி வேலைகளிருந்தாலும் அவற்றை புறக்கணித்து மாகாளியை ஸ்மரிக்க வேண்டும். வெற்றியினில் முடிவதெல்லாம் அவளருளால். இதனை தெரியாத சமாசாரம் இப்பூவுலகில் உண்டோ. 






 

எந்நாளும் பக்தர்களின் சொந்தமான தெய்வம்
ஸ்ரீ மதுரகாளி, ஆதி சங்கரர் காட்டிய அருளான கோலம் உன் திவ்ய நாமம்
நாவில் வந்தே நல்லருள் தருபவளே
ஆதரித்தருளும் அன்னையின் இதயம்
உன் பதமலர் பற்றி பணிவுடன் நிதமும்
வேண்டிடும் பிழைகள் எல்லாம் பொறுத்திடும் தெய்வம் ஜகதம்பியின் ஜொலித்திடும் பிம்பம்
அபய அம்சம் அன்பரைக் காத்திடும் நாளும்
இருண்ட வாழ்வுக்கு என்றும் துணை வரும்
சிக்கலைத் தீர்த்து நலம் தரவே நாளும் பணிவுடன்
வேண்டிடுவே ஒளி தரும் காருண்யம் பேசும் தெய்வமவள் ஶ்ரீ காஞ்சி குரு சந்த்ர சேகர
மாமுனி குல தெய்வமவள் நேர்த்தியாய் நல்ல வழிகளைக் காட்டும் தெய்வமவள்
சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளி தாயே நமஸ்காரம்





 
ஸ்ரீ மதுரகாளியின் திருநாமம் நினைத்தாலே ஞானம் உண்டாகும்.
அவள் நாமம் சொல்லச் சொல்ல ஷேமம் உண்டாகும்
உலகம் எங்கும் ஒலிக்கின்ற ஒரு மந்திரம் அவள் திருநாமம்
பாவங்கள் போக்குகின்ற ஜீவ மந்திரம்

ஒரு நாள் விடியற்காலையில்
கனவிலும், நினைவிலும் அவள் உருவம்
உலகத்துக்கே படியளக்கும் நாயகியை
சிந்தித்த வண்ணம் இருந்தேன்
இப்படி ஒரு கோலத்தில் நான் பார்த்ததே இல்லை
பக்தியில் உறுதியாய் நிற்பதற்காக
உன்னை நான் அதிகமாகவே சோதித்து விட்டேன் என்றாள்
தூக்கி வாரிபோட்டது.
அம்பாளின் ப்ரசாதமாக குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொண்டு
மாலையைக் கண்களில் ஒற்றிக் கொண்டேன்
தினமும் இறைபணியில் ஈடுபடும் நானா பைத்தியம்
பக்தியோடு பாடி நின்றால் மனம் பரவசம் அடையும் சித்தி உண்டாகும்
சித்தி வந்து சேர்ந்து பின்னே முக்தி உண்டாகும்
அவளைக் காணக் காண பக்குவம் சேரும்
பக்குவம் சேர்ந்த நெஞ்சம் பரவசம் அடையும்
பரவசமாய் பக்தி செய்து ஆனந்தம் காணும்
ஆனந்தத்தில் கண்களில் கண்ணீர் பெருகிடும்
அழகான அலங்காரம். பாருங்கள்.
மனமதை திறந்து வைத்தால்
கும்பிட்டு வேண்டி நின்றால்
அனைவருக்கும் சங்கடங்கள் சஞ்சலங்கள் மாற்றுகின்ற நிவாரணியே
என் நடமாடும் தெய்வமே என் கண் கண்ட தெய்வமே
சர்வவியாபியே மாயப் பிறப்பறுக்கும் தெய்வமே
இருளான என் மனதில் ஒளியாக நீ வருவாய்
இன்றைய பிரார்த்தனைப் பாடலை சமர்ப்பிக்கிறேன்
 
Status
Not open for further replies.
Back
Top