ஆலய அதிசயங்கள்.....[ tvk ]

Status
Not open for further replies.
தமிழ்ப் புத்தாண்டு "துர்முகி". ‘துர்முக’ என்றால் குதிரை என்று அர்த்தம். துர்முகி தமிழ்ப் புத்தாண்டு முழுவதும் சுக்கிரனின் ஆதிக்கம் உள்ளது. ஸ்ரீ ஹயக்ரீவ பகவானின் பெண்ணாகிய இப்புத்தாண்டிற்கு ‘துர்முகி’ என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீ ஹயக்ரீவரின் அனுக்கிரஹத்தை அள்ளித்தரப் போகும் ஆண்டாகத் திகழப் போவதை துர்முகி என்ற பெயர் சூட்சுமமாக எடுத்துக் காட்டுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் குரு பகவான், சிம்ம ராசியை விட்டு, கன்னி ராசிக்கு மாறுகிறார்
 
குலம் காத்திடும் தாயவளின் சந்நிதி
மிக உயர்ந்த குணம் தந்து குறை நீக்கும் சந்நிதி
அற்புத நிழலாய் அமைந்திடும் சந்நிதி
சிறப்பான பாதைதனை காட்டிடும் சந்நிதி
கள்ளமில்லா உள்ளத்திலே காட்சி தரும் சந்நிதி
கருணை அருளாலே ஆட்சி செய்யும் சந்நிதி
வினை தீர வழி காட்டிடும் சந்நிதி
அஞ்சேல் என அபயக்கரம் காட்டி நிற்கும் சந்நிதி
மங்காத புகழ் வாய்ந்த திவ்யரூப சந்நிதி
நடமாடும் தெய்வமென பக்தர்கள் போற்றும் சந்நிதி
வளம் பல கூட்டிடும் புவி காக்கும் சந்நிதி
தர்ம சம்ரக்ஷன பவித்திர ஷேத்ரம் சிறுவாச்சுர்
ஸ்ரீ காஞ்சீ காமகோடீ ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி
ஆச்சார்யாள் குலம் காத்திடும் சந்நிதி
நம் நெஞ்சமெனும் கோவிலிலே குடி கொண்டருளும் சந்நிதி
பிறவிப் பிணி நீங்கப்பெற வழி காட்டிடும் சந்நிதி
அனைவருக்கும் காட்சி தரும் சந்நிதி
சிறுவாச்சுர் ஸ்ரீ மதுரகாளி திவ்யரூபதெய்வம் சந்நிதி.
 
உனக்கு அலங்காரம் செய்ய ஆசை
வாசம் மிகுந்த பூவை உனது அழகான திவ்யரூபத்தில் சூட்ட ஆசை. பேசாமல் இங்கேயே இருந்துவிடு என் சொல்லைக்கேட்டு
நான் உனக்கு என்னவெல்லாம் அலங்காரம் செய்வேன் தெரியுமா
உன்னால் எதையும் எங்கும் செய்ய முடியும்
உனக்கே உரித்தான சொற்களைக்கூறி அழை
உனக்கு அழகழகான வாசனைமிகுந்த பூக்களைச் சூட்டுகிறேன்
நீயோ கிடைத்தற்கரிய அமுதம். உனக்கு என்ன வேண்டும்
என்னை நீ அறியவில்லையா
உன் அழகை ஆசைதீர வருணிக்க ஆசை
உன் அழகினைக் காணக் கோடிக்கண்கள் வேண்டும்
உன் இந்த அவதாரம் எதற்காக எனக்குத் தெரியும்
உன் உரையாடலைக் கேட்க ஆசை
உன்னுடைய வீடு என்று நினைத்துக்கொண்டு வந்துவிடு தாயே
உன்னுடைய ஒளியில் நான் என்னை இழந்து நிற்பதைத்தவிர வேறென்ன செய்ய இயலும் தாயே
யார் யாரெல்லாமோ என்னென்னவோ கெடுதல்களை விளைவிக்க முயலுவார்கள்
அத்தனையையும் உன் அருளால் வென்று விட முடியும்
எல்லாருக்கும் இனிமையானவள் நீ
இப்போதைக்கு இன்னும் ஒன்றே ஒன்று
உன் பாதங்களில் வீழ ஆசை என் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை
நம்பாதவர்களுக்கு இது ஒரு அழகான கதை மட்டுமே
நம்புவோருக்கு (பக்தர்கள்) இது அவளுடன் ஐக்கியப்படுத்திக்கொள்ளச் செய்யும் பிரபஞ்ச விளையாட்டு
 
நாம் அன்னை ஸ்ரீ மதுரகாளியை
நினைத்தவுடன் நாம் எதுவும் கேளாமலேயே
அனைத்து இன்பங்களையும் தருகிறாள்.
நம் மனதிற்கு ஆறுதல் தருகிறாள்.
துன்பங்களைப் போக்குகிறாள்.
ஜீவன் அன்னையிடம் இருக்கும்போது அவள் மகிமை தெரிவதில்லை
அன்னையை மறந்து உலக பொருட்களின் மீது
ஆசைவயப்பட்டு துன்பத்தில் சிக்கிகொள்ளுகிறது இந்த ஜீவன்
அவளை பிரிந்தவுடன்தான் தவறு செய்துவிட்டதை உணர்ந்து ஏங்குகிறது
அவள் மாயவலையில் சிக்கிச் சுழல்வதேன்
மன உறுதி பெற, வாழ்க்கை வசதி அதிகரிக்க, கல்வி அபிவிருத்தி,
தடைபட்ட பணிகள் சுலபமாக முடிய, உலகத்துக்கே நன்மை உண்டாக, செய்த பாவங்கள் நீங்க, சகல பீடைகளும் ஒழிய, ஆயுள் விருத்தி மற்றும் முக்தி பெற. இவற்றை ஞானதிருஷ்டியால் மட்டுமே அறிய முடியும்.
இனி வாழ்க்கை எவ்வாறு அமயப்போகிறது தெரியுமா
அத்தனையையும் அன்னையின் அருளால்
மனம் முழுவதும் இன்றும் அவள் தான் நிறைந்திருக்கிறாள்
அன்னையை நினைத்துக் கொள்ளுங்கள்
அவள் மாதிரி தெய்வங்கள் இல்லை
அனைத்து ஜீவன்களும் முக்தியடைய
உனக்கு நமஸ்காரம்.
 
வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்க வேண்டிய உலக சிறப்புமிக்க அம்பாள் ஸ்தலம். ஸ்ரீ மதுரகாளியினுடைய திருவடிகளாகிய தாமரைமலர்களுக்கு அழகான மலர் போட்டு துதிக்கிறேன். அவள் அருள் ஆரோக்கியத்தை அளித்து மேம்படுத்தும். அவள் அருளால் நிவ்ருத்தி மார்க்கம் உண்டு.
பக்தர்களுக்குப் பலவிதமான ஆசைகள் இருக்கின்றன.அவற்றை நிறைவேற்றிக் கொள்வதென்றால் அவள் திருப்பாதம் பணிந்து வேண்ட வேண்டும். ஒவ்வொருத்தரும் தன்னிஷ்டப்படியே பண்ணி கஷ்டத்தில் அழுந்திவிடாமல் தர்மமாக இருக்க வழியமைத்துக் கொள்ள வேண்டும். எல்லோரும் ச்ரேயஸை அடைய, க்ஷேமமடைய, ஸந்தோஷத்தைப் பெற, சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன். மோக்ஷம் வேறு, ஸ்வர்கம் வேறு. மோக்ஷம்தான் ஸம்ஸாரத்திலிருந்து நிரந்தர விடுதலை பெறும் ஸ்தானம். "ஸ்ரீ மதுராம்பிகா" என்ற நாமம் ஒரு முறை சொன்னாலும் பலனுண்டு.
 
பக்தர்கள் கனவில் தோன்றி, தெய்வீக தோற்றத்தில் மனமகிழ்ந்து தங்க கவசம் (ஆபரணத்தை) அணிவித்து மகிழ்கின்றனர். இது பிரசித்திப் பெற்றது. புஷ்பக் கைங்கர்ய செய்யவேண்டும். திருமுகத்தில் இருக்கும் பச்சைக் கற்பூரம் அவளது லீலையை உணர்த்துகிறது. வெள்ளிக் கிழமைகளில் திருமுகத்தில் காணலாம். இந்த ஸ்லோகத்தை சொல்லி பால் அல்லது முடிந்த ப்ரஸாதத்தை நைவேத்யம் செய்து வந்தால் அம்பாள் அருள் நிச்சயம் கிட்டும்

வேலாதிலங்க்ய கருணே விபு தேந்த்ர வந்த்யே
லீலா விநிர்மித சராசரஹ்ருந்நிவாஸே |
மாலா கிரீட மணி குண்டல மண்டி தாங்கே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
கஞ்ஜாஸனாதிமணி மஞ்ஜு கிரீட கோடி ப்ரத்யும்த
ரத்ன ருசி ரஞ்சிதபாத பத்மே |
மஞ்ஜீர மஞ்சுல விநிர்ஜித ஹம்ஸ நாதே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
ப்ராளேய பானு கவிகா கலிதாதிரம்யே பாதாக்ரஜ
வளி வினிர்ஜித மௌக்திகாபே |
ப்ராணேஸ்வரீ ப்ரமத லோகபதே ப்ரஜானம்
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
ஜங்காதிபிர் விஜித சித்தஜ தூணிபாகா
ரம்பாதி மார்தவ கரீந்த்ர கரோருயுக்மே |
கம்பாசதாதிக ஸமுஜ்வல சேலீலோ
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
மாணிக்ய மௌக்திக விநிர்ஜித மேகலாட்யே
மாயா விலக்ன விலஸன் மணி பட்டபந்தே |
லோலம்பராஜி விலஸந்நவ ரோம ஜாலே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
ந்யக்ரோத பல்லபத லோதர நிம்ன நாபே
நிர்தூத ஹார விலஸத் குசச் சக்ரவாகே |
நிஷ்காதி மணிபூஷண பூஷிதாங்கே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
கந்தர்ய சாப மதபங்க கிருதாதிரம்யே
ப்ரூ வல்லரீ விவிதா சேஷ்டத ரம்யமானே |
கந்தர்ப ஸோதர ஸமாகிருதி பாலதேசே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
மௌக்தாவனீ விலஸதூர்மித கம்பு கண்டே
மந்தஸ் பிதாளன விநிர்ஜித சந்த்ர பிம்பே |
பக்தேஷ்டதான நிரதா மிருத பூர்ணத் ருஷ்டே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
கர்ணா வலம்பி மணிகுண்டல கண்டபாகே
காணாந்த தீர்கநவ நீரஜபத்ர நேத்ரேஸ்வர் |
ணாயகாதி குண மௌக்திக சோபிநாஸே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
லோலம் பராஜி லலிதாலக ஜாலசோபே
மல்லீ நவீன களிகா நவ குந்தஜாலே |
பாலேந்து மஞ்ஜுல கிரீட விராஜமானே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
பாலாம்பிகே மஹாராக்ஞி வித்யாநாத ப்ரியேஸ்வரி |
பாஹிமாமம்ப க்ருபயா த்வத் பாதம் சரணம் கத:
 
சிறுவாச்சுர் ஸ்ரீ மதுரகாளிதனை
வெள்ளிதனில் கண்டு வலம் வருவோம்
ஞானமும் கல்வியும் பெற்றிடுவோம்
திங்கள் வலம் வந்து புகழ் பாடி
திகட்டா இன்பம் பெற்றிடுவோம்
சேதங்களில்லா வாழ்வடைவோம்
வலம் வந்து மேன்மைகள் அடைந்திடுவோம்
வெள்ளியில் வலம் வந்து வேண்டி நிற்போம்
வெளிச்சம் வழி வரக் கண்டிடுவோம்
புதியதாய் நாமும் மாறிடுவோம்
சர்வ மங்களமும் பெற்றிடுவோம்
எல்லா நாளும் நலமும் தர வேண்டி
வலமே வந்தே வணங்கிடுவோம்
 
அன்னை ஸ்ரீ மதுரகாளியம்மன் கனவில் வந்து பேச ஆரம்பித்தாள் என்று "பற்றிச் சொன்னேன்". தரிசனத்துக்கு வரச் சொல் என்றாள். என் பேத்தி, இளவயது, தரிசனத்துக்குத்தானே என்பாள். சொப்பனத்தில் வந்தால், போகணுமா, கோவிலுக்குப் போனால் போறது. இப்படி சில சிந்தனைகள். வைராக்யமாக இருக்க முடியவில்லை. என் பேத்தியுடன் சிறுவாச்சூர் சென்று கூட்டமில்லாத ஓர் நாளில் அன்னையின் தரிசனம் செய்தேன். அவள் பக்தியுணர்வுடன் அழகு உருவத்தை கையெடுத்துக் கும்பிட்டு குனிந்த தலை நிமிராமல் பிரார்த்தனை செய்தாள். இதுதான் லோகத்தில் எல்லாவற்றுக்கும், லோகத்திற்குமே மூலமாக இருப்பது அன்னை ஸ்ரீ மதுரகாளியம்மன் சக்தி என்று இந்த நாளில் சொல்வது போன்றது என் மனஸ். இப்போ அது மாதிரி கிடையாது. கனவு தோன்றிய மறு நாள். உனக்கு எப்போ சௌகர்யமோ வெச்சுக்கோ சங்கடப்பட்டுண்டே இருக்காதே என்று சொல்லிட்டாள். இது எப்படி இருக்கு. சொல்லத் தெரியாத ஸ்வர்கத்துக்கு மேலான பலன்களை அவள் தருகிறாள். நித்யானந்த பதமாக இருக்கக்கூடிய மோக்ஷம். பார்த்தாலே போதும். பாபம் போகும். வேண்டியதை தந்திட குறை ஒன்றும் இல்லாமல் நிலையாக சிறுவாச்சூர் கோவிலில் இருகின்றாய். ஒரு உயர்ந்த லக்ஷ்யத்தில் நிறுத்துவதற்கு, அவள் திருப்பாதம், சரணாகதி பணிந்து, கடைக்கண் பார்வையால் ரக்ஷிக்க, பக்தர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன். மனதை ஒருநிலைப்படுத்தி, தீவிர தியானத்தைச் செய்வோமே! இழைத்த பாவம் விலகும்.பைசாச உபாதைகளும் துஷ்டப் பரயோகங்களும், பிரம்மஹத்தி தோஷமும் விலகும். அனைத்து நற்குணங்களும், நன்மைகளும் கிடைக்கும். வாழ்வில் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று உய்வோம். பொருட் செல்வம் பெருகும். அம்பாளை நம் சிந்தையில் இருத்துவோம், அவள் நம்மை நிச்சயம் காப்பாற்றுவாள்.
 
அன்னை ஸ்ரீ மதுரகாளியின் திருநீறு தனை அணிந்தவர்க்கு
கவலையெல்லாம் ஓடிவிடுமே
அவளின் நாமம் சொல்லி குங்குமம் அணிபவர்க்கு
தொல்லை துன்பமெல்லாம் சொல்லாமல் ஓடுமே
வேரோடு வினையகற்றி விதியின் வழி மாற்றி
நேரான வாழ்வு தரும் உயர்வான தாய் அவள் அருள்
தீராத நோயெல்லாம் தீர்த்து வைக்கும் தெய்வம் அவள்
எந்தவித ஐயமும் இன்றி அம்பாளை நாடியிருந்தால்
எல்லா ஐஸ்வர்யங்களும் அதிகரிக்கிறது
அன்னை ஸ்ரீ மதுரகாளி அம்பாளை நாம் தெரிந்துகொண்டால்
அவள்பால் பக்தி நமக்கு அதிகரிக்கிறது.
வாழ்க்கையின் தத்துவம் முழுதும் விளங்கிவிடும்
நல்லதும், கெட்டதும் ஒரே மனதில் உற்பத்தி ஆகும்.
மனம் தான் நம் செயல்களுக்கு காரணமாக அமைகிறது.
அதனால்தான் விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
அநுஷ்டானங்கள், நியம ஒழுக்கங்கள் தெரியாது போனாலும்
அனைவரும் தினமும் பிரார்த்தனையில் ஈடுபடுவது நல்லது.
எல்லாவற்றிலுமே நல்லதாக என்னென்ன அம்சம் இருக்கிறதோ
அதெல்லாம் நம் வேதத்தில் இருப்பதுதான்.
 
நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் பாருங்கள் த்ருசூலிணியை அன்னை ஸ்ரீ மதுரகாளி
ஒவ்வொரு செயலுக்கும் ப்ரதிச் செயல் உண்டு. ஒவ்வொரு வினைக்கும்
விளைவு உண்டு. நாம் செய்யும் நல்ல கார்யம், கெட்ட கார்யம் ஒவ்வொன்றுக்கும்
விளைவு உண்டு. இந்த விளைவுகளை அநுபவித்தேயாகவேண்டும். இதற்காகத்தான்
அன்னை ஸ்ரீ மதுரகாளியின்அநுக்ரஹம் வேண்டும். முதல்படியாக ஈச்வர பக்தி செய்ய வேண்டும்.
ஒரு ஜீவனுக்கு ஒரு சரீரத்தில் மரணம் ஏற்பட்டாலும் கூட அது மறுபடி இன்னொரு
சரீரத்தில் ஜன்மா எடுத்து அநுபவிக்க ஸம்ஸார சக்ரம் என்பது சுற்றிக்கொண்டே போகிறது
இது தான் கர்மா தியரி. . நல்லது செய்வதால் ஞான மார்க்கத்திற்குப் போகமுடியும்.. அவளது
திருவடியை நினைத்தாலும் போதும். ஒவ்வொரு சிறிய பெரிய விஷயத்திலும் வழி நடத்தி வருபவள் அவளுடைய ஸ்தூல சொரூபத்தை நிதானமாக முதலில் அறிய, புரிஞ்சுக்க முயற்சி, முயலுதல் நன்று. மதிப்பற்ற பொக்கிஷத்தை நமக்கு தருவாள். கருணை எனும் மழை பொழிவாள் அருள்புரியும்
அன்னை ஸ்ரீ மதுரகாளி. மனதில் அன்பை நிறைப்பதே அவள் நாமம். .பலனை எதிர்பாராமல் அவள் நாமத்தைச் சொன்னால், என்றும் நம்மோடு இருப்பாள். அறிவும் நன்கு வளர்ச்சியடையும் .
 
சொல்லச் சொல்ல அவள் பெருமை தீரவில்லையே
எவ்வளவு நினைத்தாலும் சலிக்கவில்லையே
உண்டாகும் மகிழ்ச்சி சொல்ல வார்த்தையில்லையே
பக்தி செய்தே
அவளருளை அடைந்துக் கொள்கிறேன்
மலர்ச்சரம் கொண்டு
பிடித்து கொள்கிறேன்
நினைத்து நினைத்து என் மனது வலிக்கவில்லையே
ஆதிசங்கரர்
அவர் முன் தோன்றிட ஸ்தாபித்து பாராயணம் செய்து ருக்கிறார்
முனிவர்களுக்கும் தரிசனமளித்துள்ளாள், சாருகன் என்ற அசுரனை அழிப்பதற்காக.
அவளுடைய அவதாரத்தின் மூலமே இன்று காணமுடிகிறது
அவர்
நமது நலனுக்காக உருவாக்கித் தந்திருக்கிறார்
உண்மையான பக்தி ஞானம் பெற்றால் எதிலும் அம்பாளைக் காணலாம்.
அம்பாள் வாத்ஸல்யம், சௌலப்யம், சௌசீல்யம் என்ற குணங்களை
கொண்டவளாக இருக்கிறாள். பக்தர்களுக்கு பக்த சௌபாக்ய தாயினி
அவள்.




 
சக்தி உபாஸனை அநுஷ்டானங்கள் பண்ணுவதால் புத்துயிர் பெறலாம். அநுஷ்டானம் மூலமாக நல்ல ஒரு சக்தி தோன்றி ஆத்ம ச்ரேயஸுக்கான மார்க்கம் ஏற்படுகிறது. சாஸ்த்ரங்களை அப்யாஸம் செய்து வாஸ்தவமாகவே ஒரு சக்தியையோ, ஸித்தியையோ பெற முடியும் ஆத்ம ஸம்பந்தமான சில ப்ரயோஜனங்களை கூட பெறலாம். விக்ரஹங்களை வழிபாட்டிற்காக ஏற்படுத்தினார்கள் என்று பார்த்தோமல்லவா! அநேகவிதமான பக்தி ஸ்ம்ப்ரதாயங்கள் சொல்லிக் கொண்டாலும் வாஸ்தவத்தில் யாரானாலும் ப்ரகாசித்திருக்கும் தேவதைகளிடம் பக்திகொண்டு வழிபாடு செய்வது நல்லது. பக்தியுபாஸனை வழியில் இவையாவும் பெருமையும், செல்வாக்கும் தேடிக் கொள்ள வேண்டிய ஸ்திதி. இவை நல்ல மார்க்கமும் கூட.
 
திவ்ய அம்பாளை நம்மால் ஏன் காணமுடியவில்லை! அவளிடத்து அடைக்கலம் புகுகின்றவர்களுக்கு அவள் எல்லாக் காரியங்களையும் நடத்தி தருகிறாள். பக்தர்கள் மாயையாகிய திரையைத் தாண்டி அவளை தரிசிக்க வேண்டும். மெய்க் காட்சி கிட்டும்பொழுது மாயையின் பொய்க் காட்சி மறைகிறது. அவளுடைய பக்தர்கள் அவளைத் தரிசிக்கின்றனர். அவளை சரண்புகாதவர் யார். கண்முன் கொண்டு நிறுத்துவது ச்ரமம். கண்களை மூடிக் கொண்டு த்யானம் செய்வதை விட நம் போல் சாமானியர்கள் கண்ணுக்கு எதிராகவே அம்பாள் உருவத்தைப் பார்த்து த்யானித்தால் பலன் கிடைக்கும் என்பது என் கருத்து. அங்கும் இங்கும் போகாமல் அம்பாளின் ஸ்வரூபத்தை நிறுத்துவது நல்லது. தெய்வ சொரூபத் தன்மையை, மகிமையைப்பற்றி நுண்மையான ஞானத்தால் அறிவது விவேகம். ஞானம் மாயையினால் அபகரிக்கப்படுகிறது. வேதத்தில் சொல்லியுள்ள எதையுமே ஆக்ஷேபிக்கக் கூடாது. வேதத்துக்கு முரணாக போகக்கூடாது. ஸ்ரீ மதுராம்பிகை என்றாலே இனிமையானவள், மென்மையானவள், மனதில் மகிழ்ச்சியையும் மென்மையையும் தருபவள் என்றே பொருள். ஆஹா எவ்வளவு அழகானத் தோற்றம் கொண்ட அம்மையவள். சாக்ஷாத் புன்னகை புரியும் காமேச்வரி அவள். தனக்கே உரித்தான தங்கக்கவசத்தில் அழகானத் தோற்றம். எல்லா அம்சங்களையும் தன் உருவாய்க் கொண்ட கருணாமூர்த்தி அவள். ஜய ஜய ஜகதம்பிகே
 
அன்னையிடம் பக்தி வைத்து வழிபட்டு, அவளருள் பெறுவது தான் பக்தர்களின் நோக்கமாக இருக்க வேண்டும். “அதைக் கொடு, இதைக் கொடு’ என்று கேட்பது.நல்லதல்ல. எனக்கு உயர்ந்ததென எதைக் கொடுக்க விரும்புகிறாயோ, அதையே கொடு, என்று கூறினாலே போதும், கிடைக்கும். எப்படி நடத்தி வைக்க வேண்டுமென்பதையும் தீர்மானம் செய்வதும், நடத்தி வைப்பதும் அவள் தான். யாரொருவர் அவளை அடையவேண்டும் என்று எப்போதும் ஏங்குகிறாரோ, ஆன்மிகப்பயிற்சியில் உணரலாம். தரிசிக்கும்பேறும் உண்டாகும். இறைவனை எப்போதும் தன் இதயகமலத்தில் தாங்கிக் கொண்டு வாழ்பவனே பக்தன். வாழ்வில் எத்தனை இடையூறு, ஆபத்து நேர்ந்தாலும் பக்தன் ஒருபோதும் கவலை கொள்வதில்லை. பக்தனுக்கு இறைநாமத்தின் மீது அதீத நம்பிக்கை இருக்கவேண்டும். ஆன்மிகம் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. விவேகமும், வைராக்கியமும் ஆன்மிக வளர்ச்சிக்கான அடிப்படைப் பண்புகள். உருவற்ற இறைவனை தியானிப்பது கடினம். அதனால் தான் கடவுளை உருவ வடிவில் வழிபடுகிறோம். எல்லாம் உன் சித்தம். எது நல்லதோ, அதைச் செய், என்று சொல்லி, அவளையே சரணடைந்து விட்டால் போதும்… காப்பாற்ற வேண்டியது அவ​ள் கடமை, அவள் செய்வாள்! மனிதனை மனிதன் ஏமாற்றி விடலாம்; தெய்வத்தை ஏமாற்ற முடியாது. அன்னையின் சித்தம் வேறு விதமாக இருக்கும். எல்லாராலும் கொண்டாடப்பட்டு வருள்.
 
அன்னையிடம் சிரம் தாழ்த்தி என்னையும் காக்க வேண்டும் நீ பார் தாயே
மனம் முழுவதும் உந்தன் நாமம் நிறைய வேண்டும் தாயே
நான் குணமோடு வாழ வழி சொல்லி தர வேண்டும் தாயே
என்னை உன் நிழலில் கரம் நீட்டி காக்க வேண்டும் தாயே
எந்தன் மனதில் தீபம் ஏற்ற வேண்டும் தாயே
உந்தன் வரம் தந்து எனைக் காத்து ரக்ஷித்திட வேண்டும் தாயே
தெய்வீக இசை இடையறாது ஒலிக்க வேண்டும் தாயே
ஸ்ரீ மதுராம்பிகை என்ற மந்திரத்துக்கு பல பொருள்கள் உண்டு
சொல்வோருக்கும், எழுதுவோருக்கும் லட்சுமி கடாட்சத்தை வழங்குவது மட்டுமின்றி எங்கும் எதிலும் வெற்றி உண்டாகும்.
நமக்கு வெல்லும் சக்தியைத் தரும்
பாவங்களைப் போக்கும் குணங்களை உடையது
ஒருவன் லக்ஷ்யத்தை முறைப்படி அடையலாம்
ரொம்ப விசித்ரம் என்னவென்றால் அன்னையின் சக்தி
 
தேவ காரியம் செய்வதால் அவள் ரக்ஷிக்க வருவாள்
நாம் பரிபூரணமான அருள் பெற அவள் வருவாள்
எல்லா சத் காரியங்களையும் செய்ய வேண்டும்.
தர்ம காரியங்களை ரக்ஷிக்க வருவாள்
அவளை உணரும் தன்மை நமக்குள் இருக்க வேண்டும்
ஜீவன் இறைவனின் துகள் துகள்கள்
சாதாரண கார்யத்துக்காகத் தொன்றியவளா என்று
சற்று கவனிக்க வேண்டும்.
தேவ கார்யத்துக்காகத் தொன்றியவள்
அவள் பரதேவதையின் பிம்பம்.
தர்ம காரியங்களை ரக்ஷிப்பாள்
ஆயிரம் சூரியங்கள் சேர்ந்தால் உதிக்கும் போது
உள்ள ப்ரகாசத்தைக் கொண்டவள்
மகான் காஞ்சி மகாபெரியவர் தரிசித்த தாயார் அவள்
ஸ்ரீ மதுராம்பிகை தெய்வத்தை நேரில் தரிசனம் செய்ய வாருங்கள்
எப்பொழுதும் 6 கஜம் புடவை கட்டும் அம்மாவிற்கு 9 கஜம் புடவை மனதார வேண்டி கட்டி பார்க்கலாம் வாருங்கள். என ஏதோ தோண, 9 கஜம் புடவையுடன் பூஜைக்கு கூப்பிட்டு இருகிறார்கள். தரிசிக்க வாருங்கள். அவளைப் பார்ப்பதற்கும் அவளது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ! காணக்காணப் புண்ணியம். உயர்ந்த பக்தன் யாரு
தூக்கத்தில் கூட, அவளை, தன் அறியாமையை எண்ணி தலை குனிபவன். உலகத்துக்கே எஜமானி, இன்னும் கேளுங்கப்பா.
ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய ஜய ஸ்ரீ மதுராம்பிகே
 
சௌபாக்கியம் தருபவள் ஸ்ரீ மதுராம்பிகை
அம்பாள் ஆபரணங்கள் அணிந்து சர்வாலங்கார
பூஷிதையாக கால் மேல் கால் போட்டு
அமர்ந்திருப்பது கண் கொள்ளாக் காட்சி
இதற்கு சிவராஜ யோகம் என்று பெயர்
எங்கும் காணக் கிடைக்காத நிலை இது
மனசுக்குள் அம்பாளிடம் எதை கேட்பது
அம்பாளிடம் பக்தர் வேண்டுமென்று கேட்பது ஒரு ஆசை - முக்தி
அம்பாளை தரிசனம் செய்த பின் த்ருப்தி
எவ்வளவு கிடைத்தாலும் மனம் என்பது
த்ருப்தி அடையாத ஒன்று - அல்ப ஆசை
மனதில் அம்பாள் தரிசனம் மட்டும் போதும்
மனதில் வேறு எதுவும் வேண்டாம் என்ற தன்மை இருக்கிறதே
அதையும் அருள்வது அவளேதான்
அதுதான் உண்மையான சௌபாக்யம்
அதனால்தான் அவளை சௌபாக்யதாயினி
என்று நினைக்கிறோம்
 
சௌபாக்கியம் தருபவள் ஸ்ரீ மதுராம்பிகை
அம்பாள் ஆபரணங்கள் அணிந்து சர்வாலங்கார
பூஷிதையாக கால் மேல் கால் போட்டு
அமர்ந்திருப்பது கண் கொள்ளாக் காட்சி
இதற்கு சிவராஜ யோகம் என்று பெயர்
எங்கும் காணக் கிடைக்காத நிலை இது
மனசுக்குள் அம்பாளிடம் எதை கேட்பது
அம்பாளிடம் பக்தர் வேண்டுமென்று கேட்பது ஒரு ஆசை - முக்தி
அம்பாளை தரிசனம் செய்த பின் த்ருப்தி
எவ்வளவு கிடைத்தாலும் மனம் என்பது
த்ருப்தி அடையாத ஒன்று - அல்ப ஆசை
மனதில் அம்பாள் தரிசனம் மட்டும் போதும்
மனதில் வேறு எதுவும் வேண்டாம் என்ற தன்மை இருக்கிறதே
அதையும் அருள்வது அவளேதான்
அதுதான் உண்மையான சௌபாக்யம்
அதனால்தான் அவளை சௌபாக்யதாயினி
என்று நினைக்கிறோம்
 
ஒரு தடவை காஞ்சி மஹா பெரியவரை தரிசனம் செய்ய சென்றபோது அம்பாள் ஸ்ரீ மதுராம்பிகையை சற்றே மிக இயல்பாக ரொம்ப ரொம்ப சந்தோஷமாக அருமையாக வெளிப்படுத்திய காஞ்சி ஸ்ரீ மஹாபெரியவா தெய்வீகம். ஸ்ரீ மஹாபெரியவா முன் குனிந்து பணிவோடு அவர்களை மனமார வணங்கிநேன். இது நடந்து சில தினங்கள் சென்றன. எனக்கு அம்பாளை வழி பட மனசில் ஓர் ஆசை. கோவிலுக்கு சென்றால் அன்று ஓர் வினோதமான அனுபவம். புடவையை காணிக்கையாகக் கொடுத்துவிட கன கச்சிதமாக அம்பாள் விக்ரஹத்துக்குப் பொருந்துமாறு இருக்கக் கண்டு சார்த்தியிருந்தார்கள். என் நெருங்கிய சினேகிதர் அப்புறம் போகலாம், அவசரமில்லை. என சொல்கிறார். அம்பாளிடம் உத்தரவு கேட்கிறேன் என என்னிடம் சொன்னவர் விடைக்காகக் கார்த்திருக்கிறேன், விடை கிடைக்கவில்லை. அவர் மெதுவாகச் சொல்கிறார். நீ இன்னும் இங்கு குல ஆசாரப்படி இரண்டு காரியங்கள் முடிக்க வேண்டும். ஆனால் ஒரே ஒளி மயம். கண்களைக் கூசவைக்கும் அளவுக்கு. எனக்கு மெய் சிலிர்ப்பு. நம் பழக்க வழக்கங்களை விடாமல் அனுசரித்து செய்து தேவி ச்லோகங்கள் எல்லாம் சொல்லி, அலங்கார - அபிஷேகம் கண்டு காத்திருந்து, பெருந்தேவியர் செல்லியம்மன், செங்கமல சுவாமி தரிசனம் கண்டு, வலம் வந்து, மகிழ்ந்து வழி படுவது, சாலச் சிறப்பு. அன்பர்களுக்கு அம்பாள் அருள் பாலிக்கின்றாள்.
 
அம்பிகைதான் குரு என ஸௌந்தர்யலஹரியில் பகவத் பாதாள் சொல்லியுள்ளார். இதனையே பஜகோவிந்தத் திலும் குரு சரணாம்புஜ என சொல்லியுள்ளார். அம்பாளை உணர வேண்டுமானால் நாம் ஐந்து இந்திரியங்களையும்
மனதையும் அம்பாளின் பாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அப்படி என்றால் நம் உள்ளே இருக்கும்
தெய்வத்தன்மையை நிஜமான அம்பாளின் ரூபத்தைப் பார்க்க முடியும். பக்தர்க்கு நாளும் தானே தான் அனைத்தும் என அழகாக காட்டுகின்றாள், தோன்றுகின்றாள், வாழ்த்தியே காக்கின்றாள். வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை என்று சொல்லியுள்ளார். அம்பாள் தியானம், தரிசனம் மனதை, உடலைப் புதுப்பித்துத் தெளிவுபடுத்துகிறது. சஞ்சலத்தையும் அகற்றுகிறது. அவளை எவனொருவன் நம்பித் தனியாக இருக்கும்போது மௌனமாயும் மறைவாயும் கண்ணெடுத்துப் பார்க்கிறாள். வாஸ்தவமான சொல். இதை உணர வேண்டும்.
 
சிறுவாச்சூரில் வெள்ளிக் கிழமைதன்னில் விளங்குகின்ற ஸ்ரீ மதுராம்பிகையம்மா திங்கள் கிழமைதன்னில் செழிக்க வந்த செந்திருவே திருவிளக்கும் ஏற்றி வைத்து பழங்களுடன் தேங்காயும் தாம்பூலம் தட்டில் வைத்து என்ன பலன் என்று பூசாரிதான் கேட்க மங்களமாக மகிழ்ந்துரைப்பாள் எனை வைத்து உபாசித்தவர்களுக்கு தீவினையைப் போக்கி சிறந்தபலன் நானளிப்பேன் கன்னிகைகள் பூஜை செய்தால் நல்ல கணவரைக் கூட்டுவிப்பேன் கிருஹஸ்தர்கள் பூஜை செய்தால் கீர்த்தியுடன் வாழவைப்பேன் தரிதிரத்தை நீக்கி செல்வத்தை நான் கொடுப்பேன் புத்திரன் இல்லாதவர்க்கு புத்திர பாக்கியம் அளிப்பேன் தீராத பிணியை நீக்கி அஷ்ட ஐஸ்வர்யம் நான் அளிப்பேன் மாதாவே உந்தன் தாளினை நான் பணிந்தேன் பரதேவதே தன் அருளால் அற்பப் பிறப்பை தவிர்ப்பாய் நமோஸ்துதே
 
ஸ்ரீ மதுராம்பிகையம்மா திவ்ய ரூபத்தை கன்னத்தில் போட்டுக்கொண்டு அம்பாள் தியானம் செய்து வழி காட்டுவதற்காக ஸங்கல்பம் செய்ய வேண்டும். குழந்தைகள் எப்படியிருந்தாலும் அவற்றோடு சேர்ந்து இருக்கணுமென்று மாதாவிற்க்கு இல்லாமல் போகுமா! தர்சன மாத்திரத்திலேயே அவளிடம் ஸஹஜமாக கலந்து பழக ஆசை, அதி உத்தமமான ப்ரேமை. எத்தனை தான் மநுஷன் எப்படி இருந்தாலும் அவளை கிரஹிக்க உபாசித்து அம்பாளின் பாதத்தில் ஐந்து இந்திரியங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அவளுடைய லீலா விசித்திரம் பக்தர்களுக்கு நன்கு விளங்குகிறது. சாதாரண மனுஷ்யர்களுக்கு காணச் சக்தியில்லை. அவளை, அகண்ட சொரூபத்தை, ஒளியாகிய யோகமாயா, உள்ளாய்க் கலந்து பற்றிக்கொள்ளச் சக்தியுள்ளவர்களாக இருக்கவேண்டும். அம்பாளின் த்யானித்தால் நல்ல எண்ணங்கள் வளரும். அவளது ஸர்வ அபிமானத்தையும் பெற்றவன். அம்பாளை வர்ணிக்கும் நாமா மிக அழகானது. இரு கண்கள் ஒன்று சேரவிடில் என்ன பயன். வாழ்க்கையில் எண்ணங்கள் ஆயிரம் தோன்றும். அம்பாளின் முகமண்டலத்தைப் பார்த்து ஆதி சங்கரர் அம்மா உன் திருவதனத்தில் முழு நிலவு கிடைக்கும் என்பதாக ஸௌந்தர்யலஹரியில் சொல்கிறார். தர்மவழியில் உத்தேசிக்க வேண்டும். நம்மைச் சரணடையச் செய்வதற்காக, தயக்கத்தை போக்கி, சந்தேகம் இன்றி வணங்க வேண்டும். சுலபமானதல்ல. நாம் தனித்திருந்து தவம் செய்ய வேண்டும். மனதை வெல்ல அந்தளவு பக்குவம் வர வேண்டும். ஆனந்தம் என்ற உண்மையை உணர முடியும். எல்லோரும் எல்லையில்லா இன்புற்று வாழ வேண்டும். என் உள்ளத்தில் வாசம் செய்யும், தாயே. ஒரு கண நேரமும், உன்னை மறவேன். என் இதயம் என்றும் மறவாது உன் இனிய திருநாமம் தன்னை. உன் பக்தர்களைக் காக்கும் குணம் கொண்ட தாயே. என்றும் உன் திருநாமம் என் நாவில் நடமிட வரமருள்வாய். எல்லாம் உன் சித்தம். நாமம் சொல்லுங்கள். நிலைத்த இன்பத்தையும் சாந்தியையும் தருவது, உத்ஸாஹம் உண்டாகும், லோகத்துக்கு ஆனந்தமூட்டும். ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய ஜய ஸ்ரீ மதுராம்பிகே.
 
உபதேசம் வாங்கிக் கொண்டு ஆவலுடன் சாட்சாத் அம்பாளின் பாதத்தில் ஐந்து இந்திரியங்களையும் சமர்ப்பிக்க நினைத்து தெய்விக ஞானத்துடன் அம்பாளின் திருநாமம் பய பக்தியுடன் என் நாவில் நடமிட, ஒருத்தர் எத்தனை பேருக்கு இந்த பாக்யம் கிட்டும் என கூற, அவளுடைய திருப்பாதங்களில் நமஸ்காரம் பண்ண சிறுவாச்சூர் சென்று வந்தோம். அம்பாள் நாமம் நமக்குத் துணையாயிக்கும்போது பிரதிகூலமான மற்றவைகள் நமக்கு என்ன கேடு செய்யவல்லது! உறுதியான உள்ளத்தோடு பக்தி ஒருவித மயக்கத்தை உண்டு பண்ணுகிறது. மாறாத பக்தி என்னும் காந்தத்தால் இழுக்கப்படுகிறது. மனதைத் தூயதாக்கி உறுதியான உள்ளத்தோடு சுயநலத்தை அகற்றும் செயல்களெல்லாம் புண்ணிய செயல்கள் ஆகின்றன. சிறுவயதிலேயே சிலாரூபங்களை நாள் தவறாமல் பூஜித்து வந்ததால் உணர்வு பூர்வமான பக்தி ஆன்மாவுடன் கலந்து நிரந்தர இடம் அளிக்கிறது. உயிரோடு ஒட்டிக் கொண்டுவிடுகிறது. உட்காரும்போதும் எழும்போதும் உந்தன் நாமம் ஸ்மரித்தல் தாயே. என் க்ருஹ வாயிலில் அம்பாளின் ப்ரகாசமான அழகுப் ப்ரவாக சொரூபம். அம்பாளின் கண்களும் சதா தன் குழந்தைகள் பத்திரமாக இருக்கிறார்களா என சுற்றி சுற்றித் தன் கருணா கடாக்ஷத்தால், பார்வையைச் சுழல விடுகிறாதாக என் நம்பிக்கை. பிரார்த்தனை செய்யுங்கள். தன்னைக் காண வந்த பக்தருக்கு அன்போடு காப்பாற்றும் என்று உறுதி, தடைகளற்ற நெஞ்சிற்கு நிம்மதி. அவள் பொற்பாதம் பணிந்து, எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.
 
Status
Not open for further replies.
Back
Top