• Introducing TamilBrahmins.com Classifieds - Connect, Engage, and Transact within our Community!
    A dedicated platform for the Tamil Brahmin community to connect and transact. Find matches, explore real estate, discover jobs, access education, connect with services, and engage in community events. Join us as we empower and foster growth within our community through our vibrant Classifieds.
    Learn More
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஆலய அதிசயங்கள்.....[ tvk ]

Status
Not open for further replies.
காலை மாலை இருபொழுதும் பூக்களைக் கொய்து வந்து அம்பாளுக்கு மாலையாக அணிவித்து கைகளைக் கூப்பிக்கொண்டு பூஜித்து அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும் போதே கருணை நிறைந்த ஸ்ரீ மதுரகாளியினுடைய திருவடிகளைப மலர்போலும் போற்றுவோம். அம்பாளின் அபிஷேக ஜலம் அனைத்தையும் பரிசுத்தமாக்க கூடியது. பக்தியுடன் பூஜையைச் செய்தார். இது ஓர் உத்வேகத்தைக் கொடுத்தது. துறவி போன்று காவியுடை அணியத் துவங்கினார். அம்பாளின் பக்தராகிய ஒருவர் நிதானத்தை இழக்காமல் புண்ணியங்கள் செய்தவறாக துதித்து வெற்றி அடைந்தவர்களாக அம்பாளின் திவ்யரூப படத்தை தனது தலையின்மேல் வைத்து மங்கள பாட ச்லோகம் சொல்லி வலம் வந்து நீ உலகங்களுக்கெல்லாம் தலைவி என்று சொல்லி சந்தோஷத்தால் நடனம் செய்தார். என்ன ஆச்சர்யம்! தன்னுடைய உயிரை துச்சமாக மதித்து பல கைங்கர்யங்களை மேற்கொண்டவர். அவள் கேட்டதை எல்லாவற்றையும் நான் மறுக்காமல் கொடுப்பேன் என்று சொன்னார். சரணாகதி செய்வது எல்லா இடத்திலும் பிரார்த்திக்கப்படுகிறது. ஸ்மரிக்கிறவர்களுக்கு வரம் அருளுவது அவளுடைய சக்தி. ஜய ஜய ஜகதம்பிகே ஸ்ரீ மதுராம்பிகே
 
பரந்த மனமுடைய அம்பாளை காண கருணா ஸமுத்ரம் கண்டு
சக்தி கிடைக்கச் செய்வாள்
அவளை சரணடைந்து பக்தியுடன் பூஜையைச் செய்தால்
தன் வசமாக்கிக் கொள்வாள்
நன்னாளில் பூஜை/விரதத்தின் முடிவில், கைகூப்பித் தொழுது கொண்டிருக்கும் போதே, ஸர்வாபரண கூடிய திவ்யரூப மேனியுடன் நான்கு கரங்களுடன் பக்தரின் முன்னால் தோன்றி அருள் தந்து ஒளிந்திருந்த சக்தி கிடைக்கச் செய்வாள்
தன் புதல்வர்கள் போல ஸஹாயம் அளிப்பாள்
என்னைக் கண்டதை யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக வைத்திரு என்று சொல்லி மறைவாள். லோகத்தில் பெரிய பாக்யம். சொன்னாலும் சொல்லாவிட்டாலும், ஸ்மரிக்கிறவர்களுக்கு வரம் அருளுவது, ப்ரகாசத்தை உண்டாக்குபவது அவள் அவதாரம். ஸங்கல்பம் செய்து, சுபமான புத்தியை அநுக்ரஹிக்கட்டும் என்று நான் அவளை யோக்யதாம்சமுள்ளவனாக சரணடைகிறேன். பொற்பாதம் பணிந்து, லோகத்திலுள்ள எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.அன்னை ஸ்ரீ மதுரகாளியின் அவதாரம் லோகத்தின் பெரிய பாக்யம்.
 
அம்பாளை கண்குளிரக் காண மனது அலைபாய்கின்றது. மெய்மறந்து கண்டு ரசிக்கும் என் தாய் அவள்
நமது நலனுக்காக அடைக்கலம் தருபவள் அவள். மங்களத்தை அநுக்ரஹம் செய்து அருள்பவள் அவள்
அம்பாளை வேண்டிக்கொண்டால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.
வாழ்க்கையில் இடையூறு ஏற்பட்டுத் துன்பம் உண்டானாலும் தீவினைப் பயனால் நோய் தொடர்ந்து வந்தாலும்
அம்பாளின் ஸம்பந்தம் இல்லாமலிருப்பது எது. உன் திருவருளுக்கு விடாமல் திருவடிகளைத்
தொழுது வணங்குவேன். ஒரு குழந்தை தன் தாயைப் பார்க்க எப்படி ஆவலாக இருக்குமோ அப்படி ஓர் ஆவல். ஒருபோதும் அவளிடமிருந்து என்னை பிரிக்கவே முடியாது. நீ சாமானியனல்லவம்மா! அம்பாளுக்கு எங்களுடன் அங்க ப்ரதக்ஷிணம் செய்தார்கள். விபூதி ப்ரசாதத்தை இட்டுக் கொண்டு முதல் முதலாக ஈரத்துணியுடன் அங்கப்ரதக்ஷிணம்
செய்தவன் நான் தான். கோவிலில் பக்தர்கள் சென்று அம்பாளை சன்னிதிக்கு வந்து தரிசித்து, சந்தனம், மாலை சார்த்தி, புடவை சார்த்தி அழகு பார்த்தார்கள். கண்கள் குளிர்ச்சியடையும்படி பக்தர்கள் மனத்தில் என்றென்றும் நிலைத்து நிற்பவளே! உனக்கு மிகவும் பிடித்தமான பழங்களைத் தேடிக்கொண்டு வந்து வைத்திருக்கிறேன் தாயே. அம்பாளின் முகம் அழகோ அழகு. எல்லா அழகும் ஒன்றாகச் சேர்ந்த நிலை. எப்படி வர்ணித்தாலும் திருப்தியில்லை. அம்பாள் ஒளி ப்ரகாசம் கொண்டவளாக இருக்கிறாள். வெள்ளிக்கிழமை தோறும் காலை மாலை வேளைகளில் லக்ஷ்மிகரமான அலங்காரம். கடைக்கண் அழகு, ஸர்வாபரண பூஷிதா. கண்முன்னே தோன்றுகின்ற காட்சிகள். மாபெரும் சக்தி அனைத்திலும் இருந்துகொண்டு ஆர்பாட்டமில்லாமல் இயக்கிகொண்டிருக்கிறது. கேட்காமல் அருளும் உயர்வான தெய்வம். உலகனைத்திற்கும் தாய் ஆனவளும், ஏகாங்கியாக லோகத்தில் காளி சக்தி ஸ்வரூபத்தில் பல தினுஸாக காட்சி கொடுக்கும் ஸாக்ஷாத் அம்பிகையுமான ஸ்ரீ மதுரகாளியின் அநுக்ரஹம் பெற, மனமார்ந்த பிரார்த்தனை செய்து வழிபட, இறை நம்பிக்கையுடன் நம்மாலான முயற்சி செய்யவேண்டும்.நம் ஆசைகளை ஈடேற்றிவைப்பவள். அனைவருக்கும் மோட்சம் தந்தருள்பவள். பக்தி தருவது அன்னையின் திருநீறே. அனைவறின் விருப்பத்தை நிறைவேற்றட்டும். அம்பிகையின் வழிபாடு, வழிபடுபவனுக்கு எல்லா வித செல்வங்களையும் நல்கும். அவ்வன்னைக்கு நமஸ்காரம். நீ எங்களுக்கு தரிசனம் தந்தது போல் இத்தலத்திற்கு வருவோர்களுக்கு அருள் தந்து தரிசனம் கொடுத்தருள வேண்டும். ஜய ஜய ஜகதம்பிகே ஸ்ரீ மதுராம்பிகே
 
Last edited:
சாந்த நிலையில், வாஸ்தவத்தில், விச்வரூப தர்சனம் காலை 06.30 மணி. அம்பாளைக் காண ஒரே ஜனங்கள் நிற்பார்கள். துஷ்ட ஜன ஸம்ஹாரத்திற்கு (சத்ருக்களை வதம் பண்ணி தர்ம மார்க்கத்தில்) மட்டுமே வந்த அம்பாள், சாந்தமாக, (உக்ரகரூபத்தில் இல்லை) ஹிதமாக, ஸர்வ லோகத்திற்கும் வாழ்க்கையின் ஓயாத சஞ்சலங்களிலிருந்து ஓய்வு தருகிறாள். விச்வரூபத்தை, அம்பாள் கண்ணைப்பார்த்தால் தைர்யம் வரும். வர்ணிக்க வார்த்தை இல்லை. மிகைப்படுத்திச் சொன்னதல்ல. நமக்கு வேண்டியது, நம்மால் முடிந்தது. விச்வரூப தர்சனத்தின் போது என் மனஸில் அம்பாளை பற்றி, லயித்து, ஸங்கல்பம், ஒரு ஸத்கார்யம், அமைதியில் இல்லாதவர்களுக்கும் நாமே பக்தியுடன் நினைத்து பொறுப்புடன் பண்ணிவிடலாம். அம்பாள் சாந்த ஸ்வரூபியாக ஜனங்களுக்கு ஆபத்து ஏற்படாமல் ஆயுள் காலம்பூரா, அதர்ம சக்திகளை அழித்து, ஸஹாயம் செய்ய காப்பதான ரக்ஷணம் செய்கிறாள். எல்லாருடைய ஹ்ருதயத்திலும் இருக்கிறாள். அவளுடைய பெருமை ஸாதனா மார்க்கத்தில் போகிறவர்களுக்கு மட்டுமே தெரியும். அவளையே சரண் அடைய வேண்டும் என்பது என் லக்ஷயம். ஜய ஜய ஜகதம்பிகே ஜய ஜய ஸ்ரீ மதுராம்பிகா தாயே.
 
ஒரு தாய் தன்னுடைய குழந்தைகளை எப்படி காப்பாற்றுவாள் என்பதற்கு ஸ்ரீ மதுரகாளியினுடைய மகாமந்திர நாமம் ஒரு உதாரணம். ஒவ்வொரு ஜீவனும் அவளது உள்ளத்தில் ஒடுங்குகிறது. அம்பாளைக் குறித்த சொல் என்றாலே மங்களம் என்று அர்த்தம். அம்பாள் சக்தியால் எல்லாம் இயங்குகிறது.
அம்பாள் வழங்கும் குணம் உடையவள். வேண்டிவரும் நாம் கேட்பதைக் வாழ்நாள் முழுவதும் வாரி வழங்க மாட்டாளா! மனவருத்தங்களுக்கு ஆளாக நேர்வதில்லை.ஆசைகள் அனைத்தும் நம்மை விட்டு எப்போது விலகிச் செல்கிறதோ அந்தப் பிறவிதான் நம்முடைய கடைசிப் பிறவியாகும். ஆசாரியார் சதாசிவ பகவத்பாதாள் அனுக்ரஹ ஸ்ரீசக்ர பீடத்தில் அமர்ந்தவள் அம்பாள். அவளின் கருணையால் செல்வத்திற்கு குறையில்லை. எந்த மந்திரமும் அறியாதவன் கூட ஸ்ரீ மதுரகாளியினுடைய நாமம் உளப்பூர்வமாகச் சொன்னால் ஸ்ரீ மதுரகாளி ஓடி வருவாள். அருள் பெற இதைப் போல அற்புதம் வேறில்லை.
 
அம்பாளுக்கு மிகப் பிடித்தமானது பத்மங்கள் எனப்படும் தாமரை மலர்கள். நேற்று விளக்கியபடி நாம் அம்பாளை நம் வீட்டில் கொலுவிருக்கச் செய்யவேண்டும். லட்சுமி கடாட்ச அமுத கிரணங்களைப் பொழிவாள். அம்பாள் உபாஸனை சக்தி மனம் இயங்க வைக்கும். தேவையற்ற எண்ணங்களை ஒதுக்கி அன்னையிடம் மீது கவனம் செலுத்தி ஸ்ரீ மதுராம்பிகை நாமம் சொல்லிக்கொண்டே இருங்கள், அவளின் ஆசிகளின்படி, நற்பலனை நீங்களே உணருவீர்கள். பலருக்கும் இது ஓர் பெரிய சவால். தனியாக தவிக்கின்ற பேதைக்கு, தானாக மனதில் என்னைத் தேடி வந்த தூய்மை மாற்றங்கள். எல்லாமே அம்மா அற்புதங்கள் . அவள் பொற்பாதம் பணிந்து, எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.
 
அம்பாளை தூய்மையான மனதோடு பற்றிக் கொள்ளுங்கள். அவளைச் சார்ந்து நின்று வாழுங்கள். உங்களை யாராலும் வெல்ல முடியாது. கவலைப்படுவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. யாவற்றையும் அன்னை கவனித்துக் கொண்டிருக்கிறாள். இனி வரும் காலங்களிலாவது நல்லது நடக்கும் என்று பூரணமாக நம்பி எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆனந்தமாய் வாழ அவளைச் சரணடையுங்கள் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். அன்னையின் ஸ்லோகங்களை தினமுமே பாராயணம் செய்து வளங்கள் பெறலாம்.
 
எந்தக் கார்யமானாலும், லோக க்ஷேமத்திற்காக, ஸ்வய நலம் கருதாமல், ஸர்வ க்ஷேமமா இருக்க, பரநலம் மட்டுமே கருதிச் செய்கிற கார்யம்தான், கர்மாவையே போக்கிக்கொள்ள உதவுகிற கர்மயோகம். இதனால் மனிதன் மீளாப் பதம் பெறுவான் என்று சொல்கிறார்கள். ஜீவனை உயர்நிலைக்கு சாசுவதமாக எடுத்துச் செல்லவல்லது அன்னை ஸ்ரீ மதுரகாளியின் அருள். பல வருடங்களுக்கு முன்பு தரிசனத்துக்கு ஏகக் கூட்டம். கோயிலில் க்யூவில் நின்றிருந்த பக்தர்கள் அனைவரும் விரைந்து, அன்னை நாமத்தை பக்தியுடன் சொல்லிண்டே கிட்ட போய், வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த, ஒவ்வொருவராக, என்னமோ கஷ்டத்தயெல்லாம் சொல்லிண்டு, நமஸ்கரித்து விட்டுப் பவ்யமாக அநுக்ரகம் பண்ண, அன்னை ஸ்ரீ மதுரகாளியிடம், நடமாடும் தெய்வத்திடம், கருணையுடன் ஆசி பெற்று நகர்ந்தனர். கேட்டுக் கொண்டிருந்த அனைவரின் கண்களிலும் நீர் கசிந்தது. வளர்பிறையில் வரும் சுக்ல பக்ஷ வெள்ளிக் கிழமை, இருக்கிற மகிமை, முன்னேற்றமடைய மேன்மைக்குரியது. அப்போ நடந்த ஒரு சம்பவத்ததைதான் இப்போ நான் சொல்கிறேன். அனைவரும் வணங்க வேண்டும். ச்ரத்தையுடன் அன்னையின் ச்லோகம் சொல்லி, மஹாமந்திர நாமம் "ஜய ஜய ஜகதம்பிகே ஸ்ரீ மதுராம்பிகே" பிரதி தினமும், துதித்து செய்பவர்களுக்கு எல்லா பாதுகாப்பும் வெற்றியும், அருளும் கிடைக்கும். நம் பாவங்களையெல்லாம் போக்க வல்ல சிறந்த பரிகார மந்திரம். கடும் நோய்கள் விலக, துன்பங்கள் ஓடிட கடன், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு, கோரிக்கை நிறைவேற நாமும் பிரார்த்தன பண்ணி, துதித்து நன்மை அடைவோமாக. ஸ்ரீ ஆதி சங்கரரை நமது நலனுக்காக அருளிய அம்பாளை ஸ்தோத்திரம் பாராயணம் செய்து, நற்கதி அடைய, வளங்கள் பெற நாம் சரணாகதி செய்யவேண்டும். பக்தர்களின் இதயக் குகையில் சஞ்சரிப்பவள். பக்தர்களது துயரத்தைத் துடைப்பவள். நம்மை ரக்ஷிப்பாள்!
 
ஆனந்த ரூபமானவளே! பிரார்த்தனை செய்து எல்லாரும் அன்னை ஸ்ரீ மதுரகாளியை தியானித்தனர். பக்தர்கள் உன்னைப் பூஜிக்க பூமியில் பிறப்பார்கள் என்று ஸ்ரீ ஆதி சங்கரர் கூறினார்கள். அன்னை ஸ்ரீ மதுரகாளி, கருணையைப் பெற, ஆனந்தம் தரும் பெருமை நிரம்பிய சொற்களைக் கேட்டு அனைவரும் மகிழ்ந்து திரும்பிச் சென்றனர். தொட்டசெயல் அத்தனையில் வெற்றிபெற, நல்லவனாய், செல்வனாக, சத்தியனாய், மென்மைகுணம் கொண்டு, மனநோயும், உடல்நோயும் இன்றி வாழ, கெடுதல் அகற்றிட, ஆத்மார்த்தமாக தினமும் நாம் நினைத்தாலே முக்திதரும் அன்னை ஸ்ரீ மதுரகாளி என்னும் நாமம். உசத்தியான கார்யம் எது? ஞானம் உண்டாகி மனக்கவலையும் கிரஹதோஷமும் நீங்கும். எத்தனை ஸந்தர்பத்தில் நினைத்திருக்கிறோம்!! மனஸுக்கு ஏற்காத விஷயங்கள் ப்ரச்னை தரும். ஸ்வய நலம் கருதாமல் ஸத்கார்யத்தினால் யாருக்கும் எந்தக் கெடுதலும் வராது. உத்தமமான சரீர பணிகள் செய்வது தான் நல்லது. சாஸ்த்ர, புராணங்களிலும், மனஸை உருக்கும் விதத்தில் இவற்றை நிறையச் சொல்லியிருக்கிறதை பார்க்கலாம். ஸமயம் போகப் போக இதையெல்லாம் பார்க்கலாம். ஒருவரிடம் தவறு இருந்தாலும், அவளைப் பணிந்தால் தண்டிக்காமல் விட்டு விடுவாள். அன்னை ஸ்ரீ மதுரகாளி அம்பாளை, அந்த நடமாடும் தெய்வத்தினை அறிந்தவன் ஆசைப்பட மாட்டான், கோவப்பட மாட்டான். அம்பாள் எல்லாரிடத்திலும் இருக்கிறாள். நல்லது பண்ணினால் அபிவ்ருத்தி. இப்பிறவியில் அனுபவித்துத் தீர்க்கவேண்டிய நமது கர்ம வினைகளை, பிராரப்தம், அல்லது ஊழ் என்று சொல்வார்கள். விதியினை யாரும் மாற்ற இயலாது. ஸத்கார்யத்தினால் யாருக்கும் எந்தக் கெடுதலும் வராது, மனம் தூய்மையாகி விடும். தன்னை சேவித்து நம்பி உயிர் வாழ்கிற மகிழும் பக்தர்களுக்கு வ்ருத்தியாக தாயாக தாங்குவாள். தர்ஶனம் பண்ண முடியலியே என்று நினைத்து ஆன்மிக நெறியில் மனதைக் அம்பாளிடம் செலுத்தினால், அம்பாளின் அனுக்ரஹத்தால் சில நாட்களிலேயே இறைக்காட்சி கிடைக்கும். அம்பாள் செய்யும் அற்புதங்கள் சொல்லிட வார்த்தையில்லை. தானாக சென்று தவிக்கின்ற மனம் கண்டு துடிக்கின்ற இதயத்தில் அமைதியைத் தந்து துயரம் களைவாள். முயற்சி திருவினையாக்கும். அம்பாளின் தாத்பர்யத்தை, நம்பிக்கையுடன் இருந்து, அறிந்து வணங்குகிறோம், நமஸ்கரிக்கிறோம். அம்பாள் ஒரு ராஜ்யதாயினி. லோக க்ஷேமத்திற்காக, அவள் பொற்பாதம் பணிந்து, எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.
 
கலியுக அவதாரமாக நம்மிடையே விளங்கி வருகின்ற ஸ்ரீ மதுரகாளி, ஸ்ரீ ஆதி சங்கரரின் இதயத்தில் திருவிளையாடினவள். அவரிடம் அலாதி வாஞ்சை. அவதாரம் வந்தால்தான் ஸரியாயிருக்கும் என்று நினைத்தாறோ!! சிறுவாச்சூர் சென்று ஸ்ரீமதுரகாளியம்மனை ஐந்தடி உயரத்தில் தரிசித்தவர். பக்தர்களுக்கு/பூக்காரருக்கு தெரிந்த விஷயம். விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட மாலைகளை மகா பெரியவா ஆசைப்பட ஒரு முறை சாத்தினார்கள் என்று சொல்வதுண்டு. பக்தர் ஒருவர், நம்பிக்கையின் உச்சம், கஷ்டம் இல்லாமலிருக்க வேண்டுமானால், ஒரு அபகாரமும் வரமாலிருக்க அன்னை ஸ்ரீ மதுரகாளி அம்பாளை, அம்மாவை பக்தியுடன் தரிசனம் செய்து வேலையை ஆரம்பிக்கப் போறோம் என்றார். தெய்வத்தால் ஆகாதது எது!! ப்ரத்யக்ஷம் கண்ணெதிரே. உயிர்ப் பிச்சை வேண்டி வழங்கினாள். எல்லா ஜீவனுக்கும் உரிமையுண்டு. ஞானம் என்னும் விழிப்பு மனிதனுக்கு உண்டானால் பிறவிப் பெருங்கடலில் அவனுக்கு உண்டாகும் துன்பத்தையெல்லாம் அது துடைத்துத் தள்ளுகிறது. ஞானம் மனிதனைத் தூயவனாக்குகிறது. கேளாமலே அனைத்தையும் கொடுப்பவள். இன்புற்று வாழ அவளை அறிதல் வேண்டும். அம்பாளின் நாமத்தை அனுதினமும் பாராயணம் செய்வோம்.
 
சந்திரோதய வேளையில், ஸ்ரீ ஆதி சங்கரரின் முன்னால் ஒருக்ஷணத்தில் லக்ஷ்மிகரமாக காட்சி அளித்தாள். மூவுலகங்களின் துன்பங்களையும் போக்குபவளாக அவதரித்தாள். கருணை வடிவான திவ்யஸ்வரூபத்தை ஸ்ரீ ஆதி சங்கரர் மயிர்க்கூச்சலுடன், ஆனந்தக் கண்ணீர் வடித்து, கண்களால் தரிசித்தார். ஆச்சர்யம்!. பல பெருமைகள் வாய்ந்த அம்பாளைத் துதித்தார். கடைக்கண் பார்வையால் பக்தர்களின் துக்கங்களைப் போக்கி அனுக்ரஹிக்கவேண்டும் என்று துதித்தார். ஜோதி ரூபியே உன் காலடியில் என் பாவம் களைந்திட சரணடைந்தேன். நித்தம் உன் நினைவில் அதில் என் சித்தம் உன் பாதம் பணிகின்றேன். உனது நாமத்தில் மனதைச்செலுத்த, அதிகாலையில் தரிசிக்க, திருப்பாதம் விழுந்து தொழ, அனைவரும் ஏங்கித் தவிக்கையில், ஆசை. இது என் பாக்கியம்
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top
Thank you for visiting TamilBrahmins.com

You seem to have an Ad Blocker on.

We depend on advertising to keep our content free for you. Please consider whitelisting us in your ad blocker so that we can continue to provide the content you have come here to enjoy.

Alternatively, consider upgrading your account to enjoy an ad-free experience along with numerous other benefits. To upgrade your account, please visit the account upgrades page

You can also donate financially if you can. Please Click Here on how you can do that.

I've Disabled AdBlock    No Thanks