ஆலய அதிசயங்கள்.....[ tvk ]

Status
Not open for further replies.
நம் மனஸை உருக்கும்படியாக பலர் அபிப்ராயம் சொல்வார்கள். ஸதாகாலமும் கொஞ்சங்கூட அம்பாள் பாவமே இல்லாததாயிருந்தாலும் நம்முடைய பக்தியும், சரணாகதியும்தான் முக்யம். அப்படியிருக்கும்போது, ஒரு க்ஷூத்ர தேவதையையோ, ஸ்ரீ மதுரகாளியையோ, நம்முடைய பக்தி சுத்தமானதாக இருந்தால், அம்பாள் நமக்கு அநுக்ரஹம் பண்ணிவிடுவாள். அநுக்ரஹத்தைப் பெறமுடியும் என்று எண்ணும்போது நம்முடைய பக்தி முக்யம். செல்வம் தருவது (லக்ஷ்மி), அறிவு தருவது (ஸரஸ்வதி), விக்னத்தை போக்குவது (பிள்ளையார்), ஆரோக்யம் தருவது (தன்வந்தரி; ஸூரியபகவானும் தான்), அல்லது நவக்ரஹங்கள் மாதிரி நமது ஜாதக பீடைகளைப் போக்குவது, ஐயனார், மாரியம்மன் மாதிரி துஷ்ட சக்திகளையும் நோய்நொடிகளையும் போக்குவது – ஸ்ரீ மதுரகாளி அன்னை. முழுமுதலாக நின்று கொண்டு என்றும் அநுக்ரஹிக்க கூடியவள். என்றும் சக்தியான அம்பாளின் தாஸனாக இருந்து கொண்டே அவளை பூஜிக்கும் ஸ்தானத்தைப் பெற்றிருக்க ஆவல். நம்முடைய ஆசார்யாளும் சக்தியான அம்பாள் என்றும் சொல்லியிருக்கிறார்.* என்னை தூண்டிவிடும் சக்தியே அவள்தான். அவளை நாம் வேண்டிப் பெறக்கூடிய ஒன்றை அருளுவதாக இருக்க வேண்டும். நமக்கு அநுக்ரஹம் பண்ணும் அவளுக்கு அருளும் சக்தி பற்றி தெரியவில்லையோ!என்று சந்தேகம் மட்டும் இருக்க கூடாது.
நம்முடைய பக்தி சுத்தமானதாக இருந்தால் நமக்கு அநுக்ரஹம் பண்ணிவிடுவாள். அம்பாள், ஸாக்ஷாத் பராசக்தி. ஒரு பெரிய தெய்வத்தினை, பூர்ணசக்தியை, முறையே ஸ்துதிக்க வேண்டும். அவள் திருப்பாதம் பணிந்து, எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்
 
துர்க்கை என்றும் காளி என்றும் திருப்பெயர்களை கொண்டவளே, ஐஸ்வரியமாக விளங்கும் உன்னை எவர் தலை வணங்கி உன் திருப்பெயரைச் சொல்லி காலையிலும் பகற்குப் பிறகும், மாலையிலும், மிகவும் வணக்கத்தோடு துதிக்கிறார்களோ அவர்களுடைய பிரார்த்தனைகளை சிறப்புற விளங்க செய்கிறாய் என்பதில் சற்றும் சந்தேகம் இல்லை தேவி பார்வதியின் அம்சமாக இருக்கும் உன்னை, உன் சன்னதியில் சக்தியால் தூண்டப்பட்ட புத்தியுடன் உன்னை ஆலயத்திலே வணங்கி பெருமை பெற்று என்றும் உன் பாக்கியத்தை அனுக்கிரகத்தால் தப்பாமல் எல்லாருக்கும் கைக்கூடச் செய்வேன். பாரத பூமியையெல்லாம் சிறப்புற்று விளங்கச் செய்த உன்னை, உன் மீதுள்ள பெருமையால் மிகவும் வணக்கத்தோடு துதிக்க செய்வேன்.
 
நினைப்பவர், நினையாதார் உள்ளத்திலும் எண்ணத்திலும் நிற்கும் தெய்வம் நீயல்லவா. அம்பிகையைப் பெரிதும் புகழ்ந்து, பலர் சொல்லி கேட்டதுண்டு. சாதாரணமாக இதைத்தான் பெரும்பான்மையான மக்கள் தெரிவிக்கும் தகவல். தண்ணீர் கலக்காத சுத்தமான பாலினால் ஸ்ரீ மதுரகாளி அன்னையை அபிசேகம் செய்ய வேண்டும். என்றென்றும் எனை இயக்கும் உயரிய பெரும் சக்தி உமது கருணையல்லவா. அனுதினமும் வந்து ஆசிகள் தருகின்ற குலதெய்வம் நீயல்லவா. எளிய வாழ்வுக்கு என்றும் துணை வரும், உடன் கூட வருகின்ற என் தாயே நான் தொடர்ந்து உனைப் பாட அருள் தருவாய் தாயே இருள் விலக நீங்க வைப்பதும் உன் அருள் அல்லவா உன்னை எண்ணி எந்நாளும் உருகியே அழைப்பேன் தாயே காவலாய் இருந்தே நல்வழி தந்திடுவாய் உன் திருவடி போற்றி தாயே உரைப்பேன் உன் திரு நாமம் எந்நாளும். இது மனிதனின் தற்காப்பு. சந்தோஷத்தாலும், அன்பாலும், ஆனந்தத்தாலும் பெருக்கெடுக்கும் கண்ணீர் உங்கள் கன்னங்களை நனைக்காவிட்டால், ஸ்ரீ மதுரகாளி அன்னையை நீங்கள் இன்னும் காணவில்லை என்றே அர்த்தம்.
 
நற்கதி நல்கிடு நம்பிடும் என்குலம் ஸ்ரீ மதுரகாளி அன்னையே
உன் பொற்பதம் பற்றிட அருளிடு அன்னையே
தீதெலாம் நீங்கிடும் வாழ்விலே இன்பமே காணுவோம்
உன் திருவடி நாடி நலம்பெற தேடி சரண்புகும் அடியார்க்கு
ஏனினும் தாமதம் சோதனை செய்கிறாய்
தேவியர் எல்லாம் உன் அவதாரத்தில் மகிழ
பூமிக்கு வந்த பராசக்தி உன் பீடம் அருள் சுரக்கும் கலியுக தெய்வமே
உன் பீடம் கோடி நலன்களை தந்திடுமே வேண்டும் வரங்களை தந்திடுமே
நாளும் அகமதில் தூய நினைவுகள் கொண்டதன் பயனாலே
வேதனை யாவுமே நீங்கிட உன்னை காணுவோம்
உன்னருள் வேண்டினோம் ஸ்ரீ மதுரகாளி தாயே
எங்களைக் காத்தருள் சத்யவதியே சாந்தரூபியே
நற்கதி பெற உன்னருள் வேண்டினோம்
உந்தன் காலடி பணிந்தோம் காப்பாயே
என் கண் கண்ட கலியுக தெய்வமே
எல்லா நேரமும் உன் பதம் நாட
எல்லா நலனும் எங்களுடன் வந்து சேர
எல்லார் மனதிலும் அமைதி கூத்தாட
கருணைக் கடலே கண் கண்ட தெய்வமே
கருத்தினில் வைத்தேன் உனை கணமும் மறவேன்
நம்பி வந்தேன் உன் சன்னதியில் நன்மை தர வர வேண்டுமென்று
உன் பெயரை பாடி வந்தேன்
பாக்கிய மிகவே தந்தருள்வாய் தெய்வமே
என் பிழை பொருத்து பெற்றோரை போல் எனை என்றும் ஆதரிப்பாய் கருணை அருளிட வேண்டும்
என் கண் கண்ட கலியுக தெய்வமே
 
ஒரு தாய் தன் குழந்தையோடு விளையாடும்போது, தான் தோற்றுப்போவதுபோல நடிப்பாள். இது குழந்தையைச் சந்தோஷப்படுத்துவதற்காக.அது போல நடித்துக்கொண்டு
நல்வழிகாட்ட முயற்சி செய்வாள். தாய்க்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முயற்சி செய்ய வேண்டும். எடுத்துக்கொண்ட இந்த விடாமுயற்சியைப் பாராட்டுவாள். என்ன வரம் கேட்டாலும் தருவாயா வேண்டுமானால் நீ வேண்டும் வரங்களைக் கேள் தருகிறேன்! என்பாள். கையில் உள்ள அக்ஷய கலசத்தை காண்பித்தாள். அப்படிக் கேட்கத் தோன்றவில்லை. பணிபுரியும் பாக்கியத்தை தா என்றார் பக்தர். தேவலோக அமிர்தத்தை கொடுப்பது போல தருகிறேன்! என்றாள்.
தொடர்ந்து உன் சந்நிதியில் பூஜித்து வழிபாடு செய்ய வேண்டும். திருப்பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். நீ எடுத்துக்கொண்ட இந்த விடாமுயற்சியைப் பாராட்டுகிறேன். அமிர்தம் அருந்தாமலேயே, நீ மரணமில்லாமல் சிரஞ்சீவியாக பல காலம் வாழ என்னுடன் இருப்பாய் என்று ஆசி கூறினாள். தாயை வணங்கி ஆசிபெற்று சேவையில் தொடர்ந்து ஈடுபட்டார். 

 
உயிர் ஆனாய் நீ என் உயிரில் ஊறும் உணர்வானாய்
ஞானப் பேரொளியின் பொருள் ஆனாய்
தேன் ஆனாய் உயிர்க்கு உயிரே ஆனாய்
மோட்ச சாம்ராஜ்யத்தின் கடைக்கண் பார்வையால் கடாட்சம் ஆனாய்
உன்னை உபாசனை, செய்யும் அனைவருக்கும்
எல்லா சம்பத்துகளையும் ஏராளமாக அள்ளிக் கொடுக்கும் தெய்வமே நீ ஆனாய்
உன்னை வாக்கு, காயம், மனம் எல்லாவற்றாலும் துதிக்கிறேன்.
வேதங்களின் ஸ்வரூபிணியாகத் திகழ்பவளே தாயே
தினமும் உன்னை யார் துதிக்கிறார்களோ, அவர்,
இவ்வுலகில் எல்லா நற்குணங்களும் நிறைந்தவர்களாகவும், மிகுந்த பாக்யசாலிகளாகவும்
புத்திப் பலம் உள்ளவர்களாகவும் ஆகிறார்கள்

உனக்கு தண்டனிட்ட நமஸ்காரம், தாயே
கடைக்கண் கடாட்சம் எல்லா ஐஸ்வர்யங்களையும் அளிக்க வல்லது.
எப்படி ஒரு பிரமாண்டமான மரம் எல்லா ஜீவராசிகளுக் கும் நிழல் கொடுத்து
அவர்களுடைய களைப்பைப் போக்கிப் புத்துணர்வு பெற வைக்கிறதோ
அது போன்ற கருணை கொண்டவள் நீ தேவியே நமஸ்காரம் உன் பேரழகை யாரால் வர்ணிக்க முடியும்

பார்வதி என்றும் போற்றித் துதிக்கப் படுகிற ஸ்ரீ மதுரகாளி தாயே
பக்தர்களின் ஏழ்மையைத் தொலைத்து ஐஸ்வர்யம் பெருக அருள்வாயாக.
குடும்பத்தில் மன அமைதியை இழந்து தவிப்பவர்கள் மன நிம்மதியையும், மகிழ்ச்சியையும் பெறவும்,
குடும்பத்திலுள்ள பிரச்சனைகள் தீரவும் அருள்வாயாக.
உன் கருணைக்கு உண்மையான பாத்திரவானாக என்னை ஆக்குவாயாக.
உன் கடைக்கண் பார்வையால் உடலே சிலிர்க்கும் ஸ்ரீ மதுரகாளி தாயே
உன் திருப்பாதம் பணிந்து, எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.
 

இங்கு ஆலய சிறப்பு அன்னை ஸ்ரீ மதுரகாளி சக்தி சொரூபிணியாய் காட்சி தருகின்றாள்.வடக்கு நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் உள்ளே நுழைந்தால், முழுமுதற் கடவுள் விநாயகரும் சற்று வெளியே அமர்ந்து, ஒரே சந்நிதியில் காட்சி தருவது விசேஷ அம்சம் என்கிறார்கள். விநாயகனை வழிபடின் வெற்றிக்கு இல்லை தடை என்ற நோக்கில், இந்த இருபெரும் தெய்வங்களும் ஒருங்கே சந்நிதி கொண்டுள்ள இந்தக் கோயில், சுமார் 1000 ஆண்டுகள் பழைமையானது. ஆலயத்துக்கு வரும் பக்தர்களின் தடைகளையும் குறைகளையும், தரிசனம் தருகின்ற ஸ்ரீவிநாயகரும் ஸ்ரீ மதுரகாளியும் விரைவில் தீர்க்கின்றனர் என்பது நம்பிக்கை. மாணவர்கள் இங்கு வந்து வணங்கிச் சென்றால், கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை. இந்த வழிபாட்டின் மூலம் மாணவர்களின் நினை வாற்றல் அதிகரிக்கும், தேவியை மனமுருக வேண்டி, தேன் மற்றும் பால் கொண்டு அபிஷேகம் செய்தால் கல்வியில் சிறந்து விளங்கமுடியும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. சக்தி சொரூபிணியான ஸ்ரீ மதுரகாளியின் திருப்பாதத்தில் வைத்து வழிபடப்படும் முறை இங்கு விசேஷம். அம்மனுக்கு காசு எடுத்து வைத்து வேண்டிக்கொண்டால், நினைத்தது நடக்கும். சிலருக்கு, ஆதி சங்கரர், முனிவர்கள்.நேருக்கு நேர் பேசிய தெய்வம் என வரலாற்றுச் சம்பவம் ஒன்று கூறப்படுவதால், அம்பாளை பேசும் தெய்வம் என்றே அழைக்கின்றனர் இப்பகுதி மக்கள். இங்கு ஸ்ரீ மதுரகாளியை வழிபடுவதால் மோட்சம் கிட்டும் ஸ்தலம் இது. இங்கு உறைந்திருக்கும் அம்பாளை வழிபட திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.


 
எப்பொழுதும், நிலைத்திருப்பினும் மாபெரும் மலைகள் போலெழும், தடைகளை தகர்க்கின்றவளும், ஸ்ரீ ஆதிசங்கரரால், ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவரால் ஆராதிக்கப்பட்டவளும், வர்ணணைகளுக்கு எட்டாதவளும், ஸ்ரீ மதுரகாளி என்ற பெயருடையவளுமான அந்த மங்களகரமானவளை, தன்னை துதிக்கின்றவர்களுக்கு ஏற்படும் அனைத்துவித தடைகளையும் அகற்றி வெற்றியை அடைய செய்கிறாள். தங்களது முயற்சிகளில் வெற்றி பெற இவளைத்தான் தேடி வரவேண்டியிருக்கும். இவளையோ, இவளது மகிமைகளையோ முழுமையாக வர்ணிப்பதென்பது இயலாத காரியம்.
ஸ்தலத்தைப் பற்றி பாடல்கள் ஓதுவது தல வழிபாட்டு முறை. பூசாரிகள் பிரார்த்தனைகளை முறையாகக் கற்று ஓதுவார்கள். மற்றவர்கள் கேட்டு அனுபவித்தால் போதும். தெய்வீக பாடல்களுக்கு மிக்க மந்த்ர சக்தி உண்டு. காண்பவர்களின் மனதைத் தன் வசப்படுத்தக் கூடிய அழகும் மகிமையும் உடையவள். எல்லார் மனத்தையும் தன் வசமாக்கிக் கொள்ளுகின்ற உண்மைத் தெய்வமானவள். இவளைச் சதா என் நினைவில் வைத்துள்ளேன். அனைத்து உலகங்களையும் காத்து இரட்சிக்கின்றவள். சிறுவாச்சுர் மிகவும் பழமை வாய்ந்த புனித ஸ்தலம். பலர் உபாசனா தெய்வமாக கொள்கிறார்கள். பக்தர்களுக்கு ஏற்படும், ஏற்படவிருக்கும் அனைத்து ஆபத்துகளும் அவள் ஆலயத்தை நெருங்கியதுமே அழிந்துவிடுகின்றன. அன்னை பராசத்தியை தியானம் செய்து துதிப்போம். அவள் சந்நிதியில், கடலில் அலைகள் அழிதல் போல பக்தர்களின் தீவினைகளும் அழிந்து விடும்.
 
ஓம் ஸ்ரீ சிறுவாக்க்ஷயை நமோ நம
கரம் குவிக்க ஜெகம் போற்றித் துதி பாட வருவாயே ஸ்ரீ மதுரகாளி தாயே
சாந்தம் அவளது கண்களிலே
வாழ்வினிலே விதிகள் மாறிடும் நொடியினிலே
வினைகள் அழியும் வேரோடு
ஸ்ரீ மதுரகாளிகதியெனக் கழலடி பற்றிடவே
கவலைகள் ஓடிடும் வரும் வழியே
உண்மையாய் பணிந்திடும் அடியவர்க்கு நன்மைகள் யாவையும் தருகின்றாள்
உருகிடும் பக்தியை உடனேற்று அருளை வாரி வழங்குகிறாள்
கருணை மழையை பொழிகின்றாள்
நம்பிக்கை வைத்தே தொழுதிடும் அடியவர் நற்கதி அடையச் செய்கின்றாள்
அனுதினமும் வந்து ஆசிகள் தருகின்ற அன்னை நீயல்லவா
ஸ்ரீ சிறுவாச்சுர் வாஸாய பரம ஈஸ்வரியே சரணம்
சௌபாக்கியம் தருவாயே
 
Last edited:
தாயே நின் சரணங்கள் நமஸ்கரித்தோம்
யாருமே எளிதில் மறக்க இயலாதவள்
ஸ்ரீ மதுரகாளி அன்னை அவதார பேரொளி
ஜகத்குரு காருண்ய பேரொளியை நமஸ்கரித்தவர்
திருப்பாதம் விழுந்தேன் அபயம் தா கருணைக் கடலே
ஞானத்தை அள்ளி தருபவள் நீயே என தஞ்சம் புகுந்தேன்
நெஞ்சம் நினைத்துனை நாடி தஞ்சமென வந்த
என்னை தவிக்க விடுதல் ஞாயமா ஸ்ரீ மதுரகாளி தாயே
ஒவ்வொரு நொடியும் கண் கண்ட கலியுக கருணைக் கடலே
பாமரனுக்கும் அருளும் ஜெகம் போற்றும் தாயே
முழுமை நிறைந்த ஆனந்தத்தின் அழகு உருவே
மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் செய்தேன்
உன் அருள் வாக்கு ஒலித்தது உள்ளத்தில்
உனக்குப் பணியாற்றப் பூமியில் பிறப்பது மகிழ்ச்சி
உனது அருள் மொழி கேட்டு அனைவரும் அகமகிழ்ந்தனர்
மனம் அமைதியடைந்தனர்
கவலையின்றித் திரும்பிச் சென்றனர்
எங்கும் நிறைந்த தேவியே
என்னைக் காப்பாற்றி அருள் புரிய வேண்டும்
 
உரைத்திடுவேன் உன் நாமம் உரைத்திடுவேன் தெய்வமே
இவ்வுலகம் உள்ள வரை எங்கும் உன் நாமம் உரைத்திடுவேன்
வேதனை யாவுமே நீங்கிட உன் நாமம் உரைத்திடுவேன்
உன் நாமம் பாடி நாடி வந்தேன் ஸ்ரீ மதுரகாளி தாயே
தாயாய் இருந்தென்னை ஊக்குவிப்பாய்
வாழும் வழி அதனை காட்டி தாழும் நிலை என்றும் வாராமல்
எங்களைக் காத்தருள் சத்ய சாந்தரூபியே


 
ஓம் சக்தி எனும் மந்திர ஒலியின் நடுவே அவள் இருப்பதை பாருங்களேன்
சிறுவாச்சுர் வாருங்களேன்
அவள் பாத கமலங்கள் நாடுங்களேன்
திவ்ய தரிசனம் பாருங்களேன்
நமக்குள்ளே உள்ள தீயதை யாவையும் நீக்கினாளே
துன்பங்கள் தீர்த்து அருளினாளே
தூய உள்ளத்தில் குடி ஏறினாளே
அன்பர் குறைகளை கேட்டு தினம் அன்புடனே அவை நீக்கினாளே
அண்டிடும் பிணிகளை அகற்றி நமக்குள்ளே நிம்மதி தந்திட்டாளே
அந்த ஆலயம் வாருங்களேன் ஸ்ரீ மதுரகாளியின்
திவ்ய தரிசனம் பாருங்களேன்
 
ஸ்ரீஆதிசங்கரரால் அருளப்பட்டது

ஸ்ரீ தேவி அஷ்டகம்
ஸ்ரீகணேஸாய நம:

மஹாதேவீம் மஹாஸக்திம் பவானீம் பவவல்லபாம்
பவார்திபஞ்ஜநகரீம் வந்தே த்வாம் லோகமாதரம்
பக்தப்ரியாம் பக்திகம்யாம் பக்தானாம் கீர்திவர்திகாம்
பவப்ரியாம் ஸதீம் தேவீம் வந்தே த்வாம் பக்தவத்ஸலாம்
அன்னபூர்ணாம் ஸதாபூர்ணாம் பார்வதீம் பர்வபூஜிதாம்
மஹேஸ்வரீம் வ்ருஷாரூடாம் வந்தே த்வாம் பரமேஸ்வரீம்
காலராத்ரிம் மஹாராத்ரிம் மோஹராத்ரிம் ஜனேஸ்வரீம்
ஸிவகாந்தாம் ஸம்புஸக்திம் வந்தே த்வாம் ஜனனீமுமாம்
ஜகத்கர்த்ரீம் ஜகத்தாத்ரீம் ஜகத்ஸம்ஹாரகாரிணீம்
முனிபி: ஸம்ஸ்துதாம் பத்ராம்வந்தே த்வாம் மோக்ஷதாயினீம்
தேவது: கஹராமம்பாம் ஸதா தேவஸஹாயகாம்
முனிதேவை: ஸதாஸேவ்யாம் வந்தே த்வாம் தேவபூஜிதாம்
த்ரிநேத்ராம் ஸங்கரீம் கௌரீம் போகமோக்ஷப்ரதாம் ஸிவாம்
மஹாமாயாம் ஜகத்பீஜாம் வந்தே த்வாம் ஜகதீஸ்வரீம்
ஸரணாகதஜீவானாம் ஸர்வது: கவினாஸினீம்
ஸுக ஸம்பத்கராம் நித்யம் வந்தே த்வாம் ப்ரக்ருதிம் பராம்

(இதி தேவி அஷ்டகம் ஸம்பூர்ணம்)
 
மனம் பதை பதைக்க
பேதை நான் என்ன செய்வேன்
நானும் எத்தனை நாள் இருந்திடுவேன்
அம்மா என் கவலை உனக்கு தெரியாதா
வேரெங்கு எடுத்து சொல்வேன்
நான் என்ன உனக்கு அறியாதவனா அம்மா
யாரிடம் நான் முறையிடுவேன்
என் அருமை அம்மா
உன் நாமம் தவிர இன்பம் வேரெதிலும் இல்லை
நான் என்ன செய்யுமுடியும் தாயே
சூரியன் எங்குச்சென்று தேடினாலும் இருளைக் காணாது
உயிர்வகைகளுக்கு எல்லாம் நீ தான் ஒளி
ஞானத்தை அடைபவன் உள்ளும் புறமும் உன் சொரூபத்தையே காண்கின்றான்.
உன் தரிசனத்தால் முற்றிலும் மேலான ஞானம் உதயமாகிறதென்பதையும் நான் தெரிந்துகொண்டிருக்கிறேன். ஸ்ரீ மதுரகாளி தாயே



 
மிகுந்த சக்தி வாய்ந்தவளும் மனக் கவலையை போக்குகிறவளும்,
உலகங்களுக்கு தாயுமான தங்களை வணங்குகிறேன்.

பக்தர்களிடம் அன்பு கொண்டவளும்
பக்தியால் அடைய தகுந்தவளும்
பக்தர்களுக்கு கீர்த்தியை வளர்ப்பவளும்
பக்தர்களிடம் அன்பு கொண்டவளுமான உங்களை வணங்குகிறேன்
பௌர்ணமி முதலிய பர்வ தினங்களில் பூஜிக்கப்படுபவளும்
சிங்க வாகனத்தில் அமர்ந்தவளும், தேவர்களுக்கெல்லாம்
ஈஸ்வரியுமான உங்களை வணங்குகிறேன்.
ஜனங்களுக்கு ஈஸ்வரியாக இருப்பவளும்,
அன்பு காட்டுகிறவளும், ஜகத்தை ரக்ஷிப்பவளும்,
ரிஷிகளால் ஸ்தோத்திரம் செய்யப்பட்டவளும்
பக்தர்களுக்கு மங்களத்தை அளிப்பவளும்
பக்தர்களின் துயரங்களைப் போக்குபவளும்
எப்போதும் உதவி புரிபவளும்
தேவதைகளாலும் ஸேவிக்கத் தகுந்தவளும்
மங்கள ஸ்வரூபமாய் இருப்பவளும்
மஹாமாய ஸ்வரூபிணியாக இருப்பவளும்
சுகங்களையும், அஷ்ட சம்பத்துகளையும் அளிப்பவளும்
மோக்ஷத்தைக் கொடுப்பவளுமான
உங்களை வணங்குகிறேன்.
 
Last edited:
அவள் நாமம் எப்போதும் நாவில் கொண்டால்,
பக்தி உள்ளவன் என்ன வேண்டும் என்று நினைக்கிறானோ,
அவையெல்லாம் அடைகிறான்.
லக்ஷ்மிகரம் நிச்சயம் அடைகிறான்.
பக்தர்களுக்கு லக்ஷ்மி கடாக்ஷம் தானாகவே வந்து சேரும்
என ஆதிசங்கரர் கூறுகிறார்
அம்பிகையின் பக்தி உள்ளவர்களுக்கு அம்பிகையின் கடாக்ஷம் பட்டால் லக்ஷ்மி கடாக்ஷம் தானாகவே வந்து சேரும்.
எப்படி நியாயமான வழியில் தர்ம கார்யங்களில் செலவழிக்கலாம்
என அம்பிகையின் அனுக்ரஹத்தால் தெரியும்.
லக்ஷ்மி கடாக்ஷம் வந்தால் நல்ல புத்தி கிடைக்கும்.
வஞ்சக எண்ணங்கள் நம் மனதில் தோன்றாமல் தப்பிக்கலாம்
அன்பே வடிவமானஅவளை நினைத்தால்தான்
நம் மூச்சு சீராக இருக்கும்
பேச்சும் நேராக இருக்கும்
இகமும் பரமும் இன்பமாய் இருக்கும்
அகிலத்தில் உள்ள அனைத்து உயிர்கள் மீது நாம்
அன்பு செலுத்த முடியும். சிரமம் இல்லாமல் வாழ்வில் ஏற்றம் காண வாய்ப்பு. அவளது பாதாரவிந்தங்கள் வேண்டி நல்ல வழியில் போக, ஹிம்சை இல்லாமல் இருக்க, க்ஷேமத்திர்காகவும் அருளைப் பெற பிரார்த்திக்கிறேன்.
 
அம்பிகையின் தரிசனத்துக்குச் செல்லும்போது ஒரு சமயம் மணமுள்ள
ரோஜா மலர்களாகப் பார்த்துப் பொறுக்கிகூடையில் வைத்தேன்.
தூய பக்தியுடனும்,அன்புடனும், பணிவுடன், அளிக்கும் எதையும்
ஒப்புயர்வில்லா ஒளிர்மிகு அம்பிகை ஏற்றுக்கொள்கிறாள்.
ஊழ்வினை நீக்கிட ஐம்புலன் அடக்கி பிரார்த்தித்தேன்
அடியேன் ரோஜா மாலையை ஏற்று அருளும்
அன்பின் வடிவமான அம்மையை வணங்கி நமஸ்கரித்தேன்
தூங்கியது போதும் விழித்துக்கொள் என்று உணர்த்தும்
ஆசிர்வாத அருள்மொழி அபார கருணா சிந்தும் சர்வவியாபி
சாந்தரூபி வழங்கினாள்.


 
Last edited:
உன்னை சரணடைந்தவர்க்கு ஏது பயமும் இல்லை
என் நெஞ்சும் உனை அருகில் கண்டு
மனம் தரிஸனம் போதாதென்றதே
என் விழி நடந்திடவே உன் விழி ஒளி கூட்டி நடத்திடு தாயே
உன்னை காண ஒரு கணம் போதுமா
உன் முன் நிற்கும் முன்னே கையிரண்டும் கூப்புகையில்
கண்ணிரண்டால் காண்கையிலே
கண்ணிரண்டும் நீர் சோர நிற்குதே
உனைப் பற்றி நினைத்தாலே
உனை எண்ணித் துதித்தாலே
எனைக் காக்க அழைத்தாலே
உன் அருள் எப்போதும் வந்து காக்கும்
இனி எனக்கென்று நீ அருளும்
ஜீவன் முக்தித் தவிர வேறேது வேண்டும்
உன்னடி மனம் பணியுதே சரணம் சரணம் சரணம்
 
நிர்மலமான மனமும் தந்து
நிறைகுணமும் பெரிதாய்த் தந்து
அரைக்கணமும் விட்டு விலகாமல்
துணை இருந்து காத்திடுவாய் தாயே
வெறுமை வாழ்வில் சூழ்ந்திடாமல்
பொறுமை என்னில் மறைந்திடாமல்
அருமையாய் நீ பார்த்திடுவாய் தாயே
உந்தன் அருளான கைகளினால்
இருளில்லா வாழ்வும் தந்து
அருளான ஆசிகள் தந்து
காத்திடுவாய் தாயே
 
மனதை ஒருமுகப்படுத்தி செய்வதே மிகச்சிறந்த தெய்வத்தொண்டு.
அவரவர் கடமையை பொறுப்பாக கவனமாகச் செய்ய வேண்டாமா
கடவுளை வணங்குவது ஒரு பக்தியின் மரியாதை
உறுதியான உள்ளம் உன்னிடம் உள்ள பக்தி
இல்லாதவனுடைய நட்பு எனக்கு நஞ்சைத் தருகின்றது
உன்பால் நன்றியை மறந்து விடுபவன் பால் மகிழ்ச்சி இல்லை
சிலர் உன்பால் வருகின்ற போதெல்லாம்
உன்னிடம் என்ன இருகின்றது என்று
வினா எழுப்புவர்களை எப்போதும் எனக்கு பிடிக்காது
அது போன்றவனிடம் ஒரு விநாடி கூடபழகக்கூடாது
சிலர் உன்னிடம் என்ன இருகின்றது என்று
சுற்றும் முற்றும் பார்ப்பார்கள். நன்றி பெற்றவன்
கையீரம் உலர்வதற்குமுன் செய்த
நன்றியை மறந்து விடுவான்.
நல்ல உள்ளம் இல்லாதவனுடைய நட்பு
பாம்பைப் போன்றது
நிலவின் தன்மை, வீசுகின்ற தென்றலின் குளிர்ச்சி
இனிமையாக அமைய அவள் திருப்பாதம் பணிந்து
பிரார்த்திக்க வேண்டும்
அவள் ஜ்யோதி சக்திக்கே காரணம் அவள் ப்ரத்யேக ஆலயம்
ஸதா ஸர்வ காலமும் அவள் நாம கீர்த்தனம்
எல்லாரும், எக்காலமும், எங்கே வேண்டுமானாலும்
சொல்லக்கூடிய அந்த மந்த்ரம் "ஸ்ரீ மதுராம்பிகா"
இப்படிச் சொல்லும்போது நாம் பரம ஞான வடிவமான
அவள் சக்தியை பெறலாம்
இது கொஞ்சம் ஆறுதலாயிருக்கும்
த்யானத்தை ஆரம்பிக்கும்போது "ஸ்ரீ மதுராம்பிகா" என்று
நன்றாக வாய்விட்டே சொன்னால்
ஞானத்தைப் பெறலாம் அல்லவா!
அடுத்ததாக அவளுடைய ரூபத்தை பூலோகத்திலேயே தோன்ற
பூஜை என்று எதுவுமில்லாவிட்டாலும், "ஸ்ரீ மதுராம்பிகா"
என்று சொல்லி நமஸ்காரம் பண்ணலாம்.
ஸென்டிமென்டலான ரிஸர்வேஷன்கள் இருக்காது
என்று வேதமும் சொல்கிறது.
ஜய ஜய ஜயஹே ஸ்ரீ மதுராம்பிஹே
 
சிறுவாச்சுரிலே அவளுடைய திருக்கோலம்
சிலிர்க்க வைக்கும் காட்சி எந்நாளும்
பூஜை பார்க்கக் கண் கொள்ளாக் காட்சிதான்
மெய் மறந்து உருகி நிற்கும் பக்தர் குறை தீர்க்க
தெய்வம் மண்ணில் அருளி நிற்கும் காட்சியன்றோ
மணக்கும் சந்தனப் பொட்டுடனே
துதிக்கும் பக்தர் துதி ஏற்று
தன் அருள் தரும் திருக்கோலம்
பூசாரி வரிசையில் நின்றுதான் தரிசனம் செய்ய வேண்டும்
எனச் சொல்ல, தனியாகக் கூப்பிட்டு சாயந்திரம்
அம்பிகையின் தரிசனத்துக்கு வா, ஏகாந்த தரிசனம் செய்யலாம் என கூறினார்.
தஞ்சம் எனச் செல்ல அவளை போய் நமஸ்காரம் செய்யும் போது
ஏதும் சொல்லாமல் நான் எப்போதும் உன்னிடம் இருப்பேன் 'என அமுதம் போல் அன்னை கூறினாள்
கண் கொள்ளாக் காட்சிதான். இது நிகழ்ந்து சில காலத்திலேயே
ஸ்ரீ வித்யா உபதேசம் முறையாக ஆகிவிட்டது. ஜய ஜய ஸ்ரீ மதுராம்பிஹே


 
Last edited:
உலகில் வாழுகின்ற எல்லா உயிர்களுக்கும் ஆனந்தம் அருள்வது அன்னை
எல்லையில்லா பெருமைகளையும், ஆனந்தத்தையும் அவளுடைய வடிவத்தில் ஒரு சேர உணர முடியும்.
பக்தர்ளைக் காக்கும் பொறுப்பு அவளுடையது
அழகிய கோலத்துடன் சிங்க வாகனமாகக் கொண்ட அற்புதக் கோலம்
அழகே உருவாய் பக்தர்ளை பித்து பிடிக்க வைத்த வடிவம்
அம்பிகையின் மேன்மையை உலகிற்கு
உணர்த்துவதற்காக அன்னை பார்வதி எடுத்த வடிவம்
சிறுவாச்சுர் மக்களைக் காக்கும் பொருட்டு அன்னை பார்வதி
எடுத்த வடிவமே
வட திசையை நோக்கி காளியின் அற்புதக் கோலம்
காட்சி அளிக்கும் வடிவினில் அமர்ந்திருப்பது வசீகரத்தின் சிகரம்.
அன்னை பார்வதி சாருகன் ஆணவத்தை அடக்க எடுத்த கோலம்.
சிவ தத்துவத்தை இந்த ஆலயத்தில் ஒரு சேர உணர முடியும்.
சாந்தம், ஆனந்தம், வசீகரம், கருணை என ஆகிய
நான்கு குணங்களையும் இந்த வடிவத்தில் ஒரு சேர
உணர முடியும். எக்காலமும் கருணாமூர்த்தி என உணர்த்துவதற்கான அன்னை எடுத்த வடிவம். இந்த காட்சி அளிக்கும் வடிவத்தை எல்லாரும் உலகில் முழு பக்தியுடன் வணங்குகின்றனர். உலகில் வாழுகின்ற எல்லா உயிர்களுக்கும் அவள் தாய் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
அன்னையை அடைக்கலம் புகுந்து ஞானத்தவத்தால் தூய்மை பெற்று ஐக்கியம் எய்தினோர் பலர். அவள் பெருமையை அறிந்தபின் அவளிடத்து அடைக்கலம் புகுதல் எளிதாகிறது. சுகம் எந்த தியானத்தால் விளைகிறதோ அதை பக்தர் பெறுகிறார். ஆகையால் இந்த ஞானத்துக்கு நிகரான தபசு இல்லை. சக்கரவாகம் என்னும் பக்ஷி எப்போதும் ஆகாயத்தில் பறந்துகொண்டே இருக்கும். அப்பறவை மழை நீரையன்றி, எவ்வளவுதான் தாகத்தால் தொண்டை வறண்டு போயினும் மழை நீரைத் தவிர்த்து வேறு எந்த நீரையுமே அது அருந்தவே அருந்தாது. அதுபோல விவேகமுடையவன் அம்பிகையின் தரிசனத்தை நாடிச் செல்லுகின்றான். மனம் தெளிவடைகிறபடியால் அழியாத இன்பத்தை எய்துகிறான்.
 
துர்க்கா ஸ்துதி

ஸ்ரீ மங்கள சண்டிகா ஸ்தோத்ரம்
ஸாரே மங்கள தாரே பாரேச ஸர்வ கர்மணாம்
ப்ரதி மங்களா தாரேச பூஜ்யே மங்கள சுகப்ரதே
தேவீம் ÷ஷாடஸ வர்ஷியாம் ஸுஸ்திர யௌவனாம்
பிம்போஷ்டீம் ஸுதீதம் சுந்தரம் சரத் பத்ம நிபாநநாம்
ஸ்வேத சம்பக வர்ணாம் ஸுநீலோத்லப லோசநாம்
ஜகதாத்ரீம் சதாத்ரீம் ச ஸந்வேப்ய : ஸர்வ சம்பதாம்
ஸ்ம்ஸார சாகரே கோரே ஜ்யோதிரூபாம் சதாபஜே
தேவ்யாச்ச த்யான மித்யேவம் ஸ்தவ நம் ச்ருயதாம் முனே
மங்கள மங்களார் ஹே ச சர்வ மங்கள மங்களே
ஸதாம் மங்களதே தேவி ஸர்வேஷாம் மங்களாலயே
பூஜ்ய மங்கள வாரே ச மங்களா பீஷ்ட தேவதே
பூஜ்யே மங்கள பூபஸ்ய மனுவம்சஸ்ய ஸந்தகம்
மங்களா திஷ்டாத்ரு தேவி மங்களநாம்ச மங்களே
ஸம்ஸார மங்களா தாரே மோக்ஷ மங்கள தாயினி
ஸாரே மங்கள தாரே பாரேச ஸர்வ கர்மணாம்
ப்ரதி மங்களா தாரேச பூஜ்ய மங்கள சுகப்ரதே
பலஸ்ருதி
ஸ்தோத்ரேனாநேந சம்பிஸ் ச ஸ்துத்வா மங்கள சண்டிகாம்
ப்ரதி மங்கள வாரே ராகு காலௌ பூஜரம் தத்வா கத: சிவ
தேவ்யாஸ் ச மங்கள ஸ்தோத்ரம் ய ச்ருணோதி ஸமாஹித
தத்மங்களம் பவேத் தஸ்ய நபவேத் தத் மங்களம்
வர்த்ததே புத்ர பௌத்ரஸ்ச மங்களம் ச திநே திநே
பவானி த்வம் தாஸேமயீ விதிர க்ருஷ்டியும் ஸகருணாம்
இதி ஸ்தோதும் வாஞ்சன் கதயதிபவானி த்வமிதிய:
தவைத த்வம் தஸ்மை திசஸி நிஜ ஸாயுஜ்ய பதவீம்
முகுந்த ப்ரஹ்மேந்திர ஸ்புட மகுட நீராஜித பதாம்
ஓம் துர்லபாம் துர்கமாம் துர்காம்
துக்க ஹந்த்ரீம் ஸுகப்ரதாம்
துஷ்டதூராம் துராசார ஸமனீம்
தோஷவர்ஜிதாம் ஜெயப்ரதாம் ஓம்
மூலமந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் ஸ்ரீதுர்காதேவ்யை நமஹ ஓம்
மங்களத்திற்கு ஆதாரமானவளே
பூஜிக்கத் தக்கவளே மங்களத்தை அருளும் அன்னையே உன்தாள் பணிகின்றேன்.
பயங்கரமான பிறவிப் பெருங்கடலைத் தாண்ட, மணி விளக்காய் வழிகாட்டும் தேவியின் பாதங்களை நினைப்பதே சிறந்த மார்க்கமாகும்.
மனித வர்க்கத்திற்கு என்றும் சுபத்தை அளிக்கும் தேவியே
நல்வாழ்வுக்கு ஆதாரமானவளே
நல்வாழ்வை நல்குவாயாக
அன்னையை பூஜித்து துதித்தால் சகலநன்மைகளையும் அளிப்பாள்.
என்னிடம் கருணையுடன் கூடிய பார்வையை நீ செலுத்தி அருள்வாயாக
அன்னையை
போற்றும் ஸ்துதியை சொல்ல உலகில் கிடைக்காத
பாக்கியமே இல்லை, சகல சம்பத்துகளும் வம்ச விருத்தியும்
எண்ணற்ற பாக்யங்களும் நாளுக்கு நாள் பெருகும் என்பதில் ஐயமே இல்லை.
 
அன்னையே உன்னைப் பார்த்துக்கொண்டே இருக்க ரொம்ப பிடிக்கும். உன் அருளால் ஜீவன் கிடைக்கிறது. உலகத்திற்கே நீ ஒரு பொக்கிஷம். உன் வாயிலாக பகுத்தறிவை அறிந்து கொண்டிருக்கிறோம். மனித பிறவி எடுத்ததின் நோக்கமே இந்த மண்ணில் உன் பூரணமான சக்தியின் உணர்வை பெறுவது. கிடைத்தற்கரியது மானிடப்பிறவி. நாம் முற்பிறவியில் செய்த புண்ணிய பாவங்களின் பயனால் இறையருளால் கிடைப்பதே இம்மானிடப்பிறவி. இவ்வாறு கிடைத்த பிறவியிலும் நமக்கு இறைவன் பால் ஆழ்ந்த பக்தியும் நம்பிக்கையும் கொண்டு தூய நெறியுடன் வாழ அவள் அருள் வேண்டும். அவளுடைய திவ்ய தரிசனத்தை அனுபவிப்பதற்க்கும் நாம் முற்பிறவியில் நற்காரியங்கள் செய்திருக்கவேண்டும். இனி வரும் பிறவியில் முக்தி நிலையை அடையவும் தூய நெறியில் வாழ்வது அவசியம். அவள் கடைக்கண்ணால் பார்த்தாலே போதுமே, எல்லா சுபிக்ஷங்களும் மழையெனக்கொட்டும். அனுதினமும் ஸ்லோகங்களைச் சொல்லி ஸ்ரீ மதுரகாளியை வழிபடுங்கள். பக்தர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். நமது விருப்பங்கள் யாவும் நிறைவேறும். பக்தர்களால் ஜபிக்கின்ற போதும் தரிசனத்தை அளிப்பவளும் தாயே தங்களுக்கு நமஸ்காரம்.
 
ஓடி வா அன்னையே ஓடி வா
ஓடி வா தாயே நீயும் ஓடி வா
அன்பும் அருளும் நிறைந்த தாயே
ஓடி வா தாயே நீயும் ஓடி வா
அடியார்க்கு நல்ல குறை தீர்க்கும் அன்னையே ஓடி வா
என்னை ஆட்கொள்ள நீயும் ஓடி வா
ஏதும் அரியா என்னை காத்திடும் தாயே
என்னை முற்றிலும் ஆட்கொள்ள ஓடி வா
காருண்யமான ஞான ரூபியே
உன் கருணாவிலாசம் காட்ட ஓடி வா
நித்தம் உன் நினைவில் அதில் என் சித்தம் சிறகடிக்க
ஓடி வா தாயே நீயும் ஓடி வா
உன் தவஞானம் தேடி சென்றேன்
அதில் நானும் இன்று வென்றேன்.
ஜோதி ரூபியே உன் பாதம் பணிகின்றோம்
அவளைப் பார்ப்பதற்கும் அவளது அருள் வாக்கைக்
கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ
ஓடி வா தாயே நீயும் ஓடி வா
வாஸ்தவத்தில் துரித லேசமும் அண்ட முடியாத தாயே
உன்னைப் ப்ரார்த்திக்கக் கற்றுக்கொடு தாயே
உன்னை நமஸ்கரிக்கிற எண்ணமொன்றை மாத்திரம் அநுக்ரஹிக்க வேண்டும்
எப்படி வேண்டிக்கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடு
என்னை விடாமல் பிடித்துக்கொண்டிருக்க வேண்டும்
என் ப்ரார்த்தனை
என்னை வந்தடைவையா
 
Status
Not open for further replies.
Back
Top