• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஆலய அதிசயங்கள்.....[ tvk ]

Status
Not open for further replies.
ஒரு நாள் இரண்டு தேவதைகளுக்கு சந்தேகம் வந்தது.
உண்மையான பக்தி உடையவன் யார் என்பது தான்
அதை நேராக இறைவனிடம் சென்று தங்கள் சந்தேகத்தை கேட்டன.
அப்போது இறைவன், "தேவதைகளே! இந்த ஊரில் போய்
யார் எனது உண்மையான பக்தன் என்பதை விசாரித்து வாருங்கள்" என்றார்.
உடனே தேவதைகள் புறப்பட்டு பலரிடமும் சென்று விசாரித்தன.
ஒருவன், "நான் கோவிலுக்குப் போகாத நாளே இல்லை...
தினமும் மூன்று வேளை கடவுளை வணங்குகிறேன்," என்றான்.
அடுத்தவன், "நான் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் கோவில் போவேன்," என்றான்.
மற்றவன், "நான் வாரத்தில் ஒரு நாள் நிச்சயம் கோவிலுக்குச் செல்லுவேன்," என்றான்.
இன்னொருவன், "எனக்கு கஷ்டம் வரும் சமயத்தில் கடவுளிடம் முறையிடுவேன்," என்றான்.
இப்படியாக பலரும் ஏதோ ஒரு சமயத்தில் கடவுளை நினைப்பவராகவே இருக்க, "இதில் யார் உண்மையான பக்தன்' எனக் கண்டு பிடிப்பது எப்படி என்ற குழப்பம் தேவதைக்கு ஏற்பட்டது.
அப்போது அந்தவழியே அவசரமாகச் சென்று கொண்டிருந்த ஒருவனை நிறுத்தி, "அய்யனே! உனக்குக் கடவுள் பக்தி உண்டா? நீ எப்போது கடவுளை வழிபடுவாய்?'' என்று ஒரு தேவதை கேட்டது.
அதற்கு அவன், "எனக்குக் கடவுளை நினைக்கவே நேரமில்லை... அவசரமாக சிலருக்கு உதவி செய்ய வேண்டியிருக்கிறது. நான் போகிறேன்...'' என்று பதில் கூறிவிட்டு ஏழைகளுக்கு உதவிட அவன் விரைந்தான்.
தேவதைகள் கடவுளிடம் திரும்பி வந்து நடந்ததை அப்படியே விவரித்தன.
எல்லாவற்றையும் கேட்ட கடவுள் மவுனம் சாதித்தார்.
"தேவனே... உண்மையான பக்தன் யார் என்று கண்டுபிடித்து விட்டீர்களா?'' என்று கேட்டன.
"கண்டுபிடித்துவிட்டேன்!'' என்றார் கடவுள்.
"யார் பிரபு? தினமும் மூன்று வேளை கோவிலுக்கு வருபவர்தானே?'' என்று கேட்டன தேவதைகள்.
கடவுள் புன்னகைத்தபடியே, "இல்லை... இல்லை... கடைசியாக என்னை நினைக்கக்கூட நேரமில்லாது ஏழைகளுக்கு சேவை செய்ய ஓடினானே... உண்மையில் அவன் தான் எனது உண்மைப் பக்தன்,'' என்றார். உண்மை புரிந்தது தேவதைகளுக்கு
 
[h=2]தடைகளை நீக்கும் சிவ வடிவங்கள்[/h]




1. லிங்கோத்பவர் - மோட்சம் சித்திக்கும்
2. திரிமூர்த்தி - குழந்தைப்பேறு கிட்டும்
3. கல்யாண சுந்தரர் - திருமணப் பேறு கிடைக்கும்
4. சுகாசனர் - நியாயமான ஆசைகள் நிறைவேறும்
5. கங்காதரர் - பாவங்கள் விலகும்
6. நடேசர் - மகப்பேறு கிட்டும்
7. சண்டேச அனுக்ரகர் - கெட்ட எண்ணம் நீங்கும்
8. ரிஷபாரூடர் - நல்ல முயற்சிகளில் வெற்றி கிட்டும்
9. நீலகண்டர் - விஷ ஜந்துக்களினால் ஏற்படும் ஆபத்து நீங்கும்
10. ஹரிஹர மூர்த்தி - வழக்குகளில் வெல்லலாம்
11. ஏகபாத மூர்த்தி - தம்பதியினரிடையே ஒற்றுமை நிலவும்
12. உமாசகாயர் - மனைவியின் உடல்நலம் சீராகும்
13. அர்த்தநாரீஸ்வரர் - தம்பதியினரிடையே ஒற்றுமை நிலவும்
14. தட்சிணாமூர்த்தி - கலை ஞானம், கல்வி ஞானம் வளரும்
15. சோமாதி நாயகர் - சகலமும் சித்தியாகும்
16. சோமாஸ்கந்தர் - குழந்தைகள் ஆரோக்கியம் நிலைக்கும்
17. சந்திர மவுலீஸ்வரர் - தனமும் தானியமும் சேரும்
18. வீரபத்ரர் - எதிரி பயம் நீங்கும்
19. காலசம்ஹாரர் - மரண பயமும், அகால மரணமும் நேராது
20. காமாந்தகர் - தடைகள் நீங்கும், ஞானம் சித்திக்கும்
21. கஜசம்ஹாரர் - பிறர் செய்த தீவினையின் பாதிப்புகள் அகலும்
22. திரிபுர சம்ஹாரர் - பிறவிப் பிணி தீரும், எம பயம் நேராது.
23. பிட்சாடனர் - மோகமாயை விலகும்
24. ஜலந்தர சம்ஹாரர் - விரோதிகள் விலகுவர்
25. சரப மூர்த்தி - மாயை, கன்மம் விலகும்
26. பைரவர் - இறையருள் எப்போதும் காக்கும்​
 
ஸ்ரீசங்கர பகவத்பாத அருட்சேவகரடிபோற்றி! காத்திட வந்த கண் கண்ட ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா போற்றி!நிறைந்த வண்ண மயமான வாழ்வைப் பெற்றிடவே வாழ்த்திங்கு தரும் ஸ்ரீ ஸ்ரீ மதுரகாளி தெய்வமே போற்றி! ஆலயம் தெரிந்து கொள்வோமே நியமங்களோடுஅனுதினமும் பூஜிக்க திருக்காட்சி அளித்தருள்கிறார். பிள்ளை வரம் பெற அரசன் தர்மவர்மனோ தரிசிக்க இறைபணியில் பக்தியோடு பலகாலம் தவமிருந்தவன். அங்க பிரதக்ஷ்ணம் செய்தார் என்று சொல்கிறார்களே!இவ்வாறாக பக்தியில் உறுதியாய் நிற்பதற்காக பின்னர் வழிவழியாய் பல்
வேறு பக்தர்கள் அம்பிகையை அங்க பிரதக்ஷ்ணம் செய்தார்கள்.தரிசனம் செய்யும் தருணம் இதன் தொன்மைச் சிறப்பினையும் நினைவு கூர்வோம் கண்களை மூடி தினம் மனதினில் பணிவுடன் நினைத்து, கவலைகள் சொல்லி இங்கே கருத்தினில் வைத்து, கண்களில் நீர் வழிய உருகியே வேண்டி, உன் சரணமே சரணம் என்று உனை கைகள் குவித்து இங்கே செய்திடுவோம் நமஸ்காரம். அன்பும் நியமமும் கொண்டு பூஜித்து வருகிறேன். ஓம் ஷ்ரீ துர்க்கா லஷ்மி ஸ்ரீ மதுரகாள்யை நமஹ. ஓம் நமோ பகவதே ஸ்ரீ ஸ்ரீ மதுரகாளி தேவ்யை ஸர்வ தேவதா வசீகராய! ஸர்வாரிட்ட வினாஸனாய! ஸர்வ துர்மந்தர ஶேதனாய! த்ரைலோக்யம் வஸமானய ஸ்வாஹா! உன் திரு உருவையே உளமாற நினைத்திட காலமெல்லாம் உன்புகழ் சொல்லிடுவோம் தெய்வமே நித்திய மங்களம் அனைவருக்கும் அளித்தாய் தெய்வமே, நேரும் துன்பம் நீக்குவாய், வரும் துன்பம் அறிந்து நீ விரட்டிடுவாய் தெய்வமே. குறை உண்டோ இனிமேல், அகத்திலும் முகத்திலும் சந்தோஷத்தையும் தெளிவையும் கொடுக்கும் உனைப் பணிந்து பாடுகின்ற பாக்கியம் தந்தருளவேண்டும்! அதுதான் உன் திவ்விய நாமத்தின் மகிமை!
 
. ஸ்ரீ மதுரகாளியை சிந்தயில் செல்லம்மாக நிறுத்தி வழிபட்டால், உண்மையான பக்தி செய்தால் நமக்கு அவள் அருளை அனுக்கிரஹம் கிடைக்கப் பண்ணுகிறாள். தீமை நமக்கு யாரும் தர முடியாது.அவள் திருநாமம் என் தாரக மந்திரம். வருமானம் ஏதும் இல்லாத ஒருவர் மனம் நொந்து கண்ணீர் சிந்தி மானசீகமாக கேட்கிறார். பகல் ஸ்வப்பனத்தில் ஒரு குட்டையான அக்காள் உனக்குப் பணம்தானே வேண்டும், கட்டாயம் தருகிறேன் என்று கூறி மறைந்து விட்டா ள். பகல் ஸ்வப்பனம் பலிக்காதே என்ற கவலை. மீண்டும் தன் எண்ணம் ஈடேறும் வரை ஆகாரம் எடுக்காமல் தியானத்திலேயே இருக்கிறார்.அப்பொழுது
அவர் தம்பி மகன், பெரியப்பாஉனக்கு மணி ஆர்டர் வந்திருக்கிறது” என்று கூறினார். அனுப்பியது யார் என்ற விவரம் அதில் இல்லை. புரியாமல் திகைத்தார். தன் ஆசையை நிறைவேற்றச் செய்த ஆச்சரியத்தை எண்ணி அவர் ஆனந்த கண்ணீர் விட்டார். உடனே ஆலயத்தில் பணத்தைக் கட்டி புஜை செய்து பேரானந்தம் அடைந்தார்.
அவளது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ தெரியாது ஸ்ரீ மதுரகாளி தெய்வத்தை பூரணமாக நம்புகின்றேனா தெரியாது .இதுவரை வாழ்ந்து என்ன சாதித்தேன் ஆனாலும் வாழ்கின்றேன் இப்படி ஒன்றும் தெளிவில்லாமல் ஏன் வாழவேண்டும். அவர் மனம் சொன்னது.எத்தனை பெரிய பாக்யம், பார்ப்பதற்கும் அவளது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ ஶ்ரீமதுரகாளியின் தரிசனம் காணக்காணப் புண்ணியம்
 
Last edited:
ஓம் ஸ்ரீ சக்தி தேவ்யை நம அவள் அடியவர்க்கு எளிதில் அறியக் கூடியவள் நல்ல எண்ணமில்லாதார்க்கு எட்டாதவள் பக்தியையுடையார்க்கு எளியவள் அவள் அவதார ரஹஸ்யம் எல்லோரும் அறியவொண்ணாதவள் ஞானத்தையுடையவர்களால் அவள் க்ருபைக்கு பாத்திரர்களாகிரார்கள். இதைக் காண நாம் என்ன பாக்யம் செய்தோமோ. எங்க அப்பா காலத்திலேர்ந்து ஸ்ரீ மதுரகாளியை தரிசனம் செய்ய வந்து
கொண்டிருக்கிறேனாக்கும்''என்ற பெருமை எங்களுக்கு
உண்டு. ஏகக் கூட்டம் கொஞ்ச நேரத்தில் சரியாயிடும் என்று பக்தர்கள் வரிசை நகர்ந்ததால் அவர்களுக்கு இடமளிக்க சற்று ஒதுங்கி நின்றேன் சட்டென்று ஒரு இடத்தில் நிறுத்தினார் .அம்மா நீ தான் எல்லாத்தையும் கவனிச்சுக்கணும். வந்தனம் செய்து விட்டு வெளியே சென்றோம்.நெஞ்சத்துள் அவளிருக்க நமக்கென்ன கவலையடி மனமதை திறந்து கும்பிட்டு வேண்டி சென்றோம் வாழ்க்கையில கஷ்டம் வரலாம், துனபம் வரலாம். ஆனா ஒண்ணு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோ. அடுத்த வாரம் தரிசனத்துக்கு மலர்ந்த முகத்துடன் வந்தோம். உள்ளத்தில் பெருகிடும் பாக்கியங்கள் என் இதய துடிப்பு அதிகரித்தது இங்கு அம்பாளுக்குசெவ்வரளி மாலை சாத்தி, மாவிளக்கு ஏற்றிவேண்டிக் கொள்கிறார்கள். இப்பகுதியில் வசித்த ஏழை பக்தர் ஒருவர் அம்பாளை தன் இஷ்ட தெய்வமாக வழிபட்டார். ஒருநாள் இரவில் அவரது கனவில் அம்பாள் தோன்றினாள் அம்பாளை சாந்தமானவள் என்பதால், சாந்தசொரூப காளி என்று அழைக்கிறார்கள். இவ்விடத்தில் அம்பாளை வடக்கு நோக்கி வழிபடுவது விசேஷமானதாக கருதப்படுகிறது.நல்வாக்கு தந்திடும்,நல்லதெல்லாம் தரும், நல்லாசி அள்ளித் தரும், நினைத்தால் நேரில் வரும் தெய்வம் பொற்பதம் பற்றிட நற்கதி தருவாய் தாயே
 
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்; மாவட்டம் : திருச்சிமாநிலம் : தமிழ்நாடு
அமர்ந்த நிலையில் தனிச்சன்னதியில் அம்பாள்
க்கு நோக்கியபடி இருக்கிறாள்
இத்தலம் வந்து இங்குள்ள உயிர்களுக்கெல்லாம் மூலாதாரமாக இருக்கும் அம்பாளை முனிவர் ஒருவர் அம்பாளின் மீது பக்தி கொண்டிருந்த அவர் ஒருநாள் தரிசனம் செய்துவிட்டுச் சென்றார். இவ்வளவு அழகான அம்பாளை இதுவரையில் நான் பார்த்ததில்லையே என்று சொல்லிப்பார்த்தார் அவருக்கு காட்சி தந்து சாபவிமோசனம்
கொடுத்தார் என்பது நம்பிக்கை. பிற்காலத்தில் சோழமன்னர் ஒருவர் வணங்கி இருக்கி றார் சிறப்பான வாழ்க்கையைப் பெறுவதில் அவருக்கு காட்சி தந்தாள் சோழமன்னர் ஒருவர் இங்கு கோயில் கட்டினார்.
இவளிடம் வேண்டிக் கொண்டால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை இத்தலத்தில் தரிசனம் செய்வது விசேஷமான பலன்களைத் தரும் என்கிறார்கள்.
ஸ்ரீ மதுரகாளி கோவிலுக்குப் போ திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட்ல் இருந்து பஸ் வசதி உண்டு.

 
Last edited:
ஸ்ரீ சக்ரபூஷிதனாய் சிறுவாச்சுறிலே அவதரித்து நம்மைக் காக்க வந்த மதிரமலைபதி அவதாரியான ஸ்ரீ மதுரகாளியின் சக்தி கூடம் இந்த தரிசனம் எவ்வளவு பாரம் மனதை அழுத்தினாலும், இவளின் தரிசனம் கண்டமாத்திரத்திலேயே மனம் உருகிடத் தொடங்குகிறது.. சித்தர்கள் நன்றாக உபாசித்தனர். இந்த அம்பாளின் பெருமையை என்னவென்பது, உபாசித்தால் தர்மார்த்த காம மோக்ஷம் கிட்டும். அறிந்ததோர் மொழிதனிலே குழந்தையாய் அவரை நினைந்துருகி பாடுதல்லல்லாது வேறேதும் அறியேனே சாந்த ஸ்வரூப த்ரிநேத்ரவதாரியே சகலகாலாமய கருணாகரியே சர்வேஸ்வரி நீயே நின் பதகமலம் அருளும் நினைந்துருகி நிதமும் பலவிதமாய் உந்தன் தரிசனம் கண்டிட பவபயம் போக்கிடும் உருகியுனைத் துதிக்க உத்தமன் ஆக்கிடுவாய்
அன்னையின் கருணையும் பொன்னருளும் ஒருங்கே கிட்டிடும் நிச்சயமாய் வாழ்வும் நன்னிலை யடையுமே
உன் சன்னிதானம் நின் பதமலரன்றோ உன் க்ருபை குலங்களைக் காக்கும் அம்மையே அபயம்! அபயம்!
ஸ்ரீ சிம்மாசனேஸ்வரீ வேண்டுதல் வழியும் அறியேன் வேறேன்றும் அறியேனே நீயே கதி என்பதை மட்டுமே அறிந்து வாழ்கின்றேன் அம்மையே
 
அண்டமெல்லாம் உன்னில் அடக்கம் என்று
அனைவருக்கும் காட்டிடவே உள்ளம் மகிழும்
ஆன்மாக்களை விடுவிக்க உனக்கு வணக்கம்
வெள்ளையான மனம் இருந்தால் உன் அருள் பெறலாம்
எல்லாம் உனதாய் இருக்க உன்னைச் சரணடைந்தவர்
பக்கம் நின்றாய் அஞ்ஞானம் ஒழிந்திட ஆனந்தம் மலர்ந்திட
உன்னை போற்றி துதிக்க உன் அற்புதமான நாமத்தை
எங்களுக்கு அளித்தாய் உன் பெருமை அளவிடலாமோ
உன் கருணைக்கு நிகருண்டோ
காலமெல்லாம் உன் புகழ் பாடுவேன்
எந்த பிறவி எடுத்தாலும் உன் காலடியில்
என்றென்றும் கிடப்பேன் உன்னோடு
அயிக்கியமாகும் வரை 
 
தன்னை நினைத்து வணங்கும் பக்தர்களுக்கு அளவற்ற செல்வத்தை அள்ளித்தரும் இந்த அன்னையின் கோவிலுக்கு சென்று அன்னையை பயபக்தியுடன் வணங்கி அவரது ஆற்றலை பெறலாம். பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு ஆலயம் வசதியாக தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் நடை திறந்து இருக்கும். அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களிலும், திங்கள், வெள்ளிக்கிழமைகளிலும் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெறும். கோவில் பூசாரி அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்வார் அம்மனுக்கு சிறப்பு பூஜை முடிவடைந்ததும், அம்மனின் சக்திதான் என்ன செல்வத்தை அன்று மாலை அம்மன் உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். அள்ளித்தரும் அம்மனை பக்தர்கள் வழிபட்டு வந்தனர் அம்மன் தங்க கவசத்துடன் புதுப்பொலிவுடன் தகதகவென்று மின்னியபடி காட்சியளித்தார். அம்மனின் மகிமையை கண்டு அதைப்பார்த்த அனைவரும் இது அம்மனின் சக்திதான் என்று முடிவு செய்தனர். 
 

அனைத்து ஜீவன்களும் முக்தியடைய கைதூக்கி விடும் ஈஸ்வரியே உமக்கு நமஸ்காரம். கர்ம பலன்களைச் சரியானபடி கொடுப்பவளே, பூதகணங்களுக்கெல்லாம் அதிபதியே, உமக்கு நமஸ்காரம். இசையில் இச்சை கொள்பவளே, சிங்கத்தை வாகனமாகக் கொண்டவளே உனக்கு நமஸ்காரம் சந்தோஷமான வாழ்வை அருள்பவளே, மஹேஸ்வரியே உனக்கு நமஸ்காரம் . வறுமை நீங்க, வளம் பெருக, மழலை வரம் கிட்ட, குடும்பம் மேன்மையுற. உனக்கு நமஸ்காரம். ஆதிசங்கரர்க்கு, ஒரு சமயம் இந்த மலையில் கடுமையான தாகம் ஏற்பட்டது அடுத்த விநாடியே ஒரு அதிசயம் நடந்தது. சில நிமிடங்களில் ஊற்றுப் பெருக்கெடுத்து ஊறியது ஒளி பேரானந்தத்தை மகிழ்ந்துபோன ஆதிசங்கரர்க்கு அருளியவளே இந்த ஊற்றுப் பெருக்கை இன்றும் காணலாம்.கிடைத்தற்கரிய பெறும் பேரை அருளிய உன் திருவடிகளுக்கு என் நமஸ்காரம். அனைவருக்கும் பக்தியுடன் உன்னை போற்றி துதித்தால் மழலை வரம் வேண்டி ஏங்குவோருக்கு அந்த வரம் கிட்டும் இது இரண்டு பிரகாரங்களைக் கொண்ட கோயில் சிறப்பான அலங்காரத்தில் ஜொலிக்கிறாள் இந்தச் சிறப்பு அபிஷேகத்தை 8 வாரங்கள் தொடர்ந்து தரிசித்தால், மனதில் நினைத்து வணங்கியது நிறைவேறும். சிவன் வார்த்தைகளாலேயே பார்வதி ஸ்ரீ மதுரகாளியாக இந்தக் கோயிலில்அழைக்கப்படுகிறார். உட்பிராகாரத்தை சுற்றி வந்தோமானால் ஸ்ரீ மதுரகாளி அன்னையை தரிசிக்கலாம் முதலாம் குலோத்துங்கச்சோழன் காலத்திலேயே, இந்தக் கோயிலுக்கு சோழன், தானம் வழங்கியுள்ளதை சரித்திரம் கூறுகிறது இவருடைய மகனும் இந்தக் கோயிலின் புணரத்துவத்தில் உதவியுள்ளார் என மற்றொரு சரித்திரம் கூறுகிறது. மலையை தூரத்திலிருந்து பார்த்து
தரிசிக்கலாம்
 
எந்த மக்கள் ஸ்ரீ மதுரகாளி அன்னையை சிந்திக்கின்றார்களோ
அஞ்ஞானமாகிய சாகரத்தில் மூழ்கிக் கிடப்பதை அறிந்து
ஸ்ரீ மதுரகாளி நம்மைக் கூப்பிடுகின்றாள்
உன்னை தேடி உன் வீட்டிற்கு வரப்போகிறாள்
சரணாகதி அடைந்துவிடு
உன்னோடு பேசப் போகிறாள்
உன்னோடு சாப்பிடப் போகிறாள்
உன்னைக் கொஞ்சப் போகிறாள்
உன்னோடு சிரிக்கப் போகிறாள்
உன் அழுகையை மாற்றப் போகிறாள்
உன் துக்கத்தை தீர்க்கப் போகிறாள்
உன்னோடு விளையாடப் போகிறாள்
உன் பிரச்சனைகளை சரிசெய்யப் போகிறாள்
உன் கேள்விக்குப் பதில் சொல்லப்போகிறாள்
உனக்கு உதவப் போகிறாள்
உன்னோடு வாழப் போகிறாள்
உன்னோடு இருக்கப் போகிறாள்
உனக்கு சமாதானம் தரப் போகிறாள்
உனக்கு தன் அன்பைத் கொடுக்கப் போகிறாள்
உன்னைக் குஷிபடுத்தப் போகிறாள்
உனக்கு அறிவுரை சொல்லப் போகிறாள்
உன்னை அனுபவிக்கப் போகிறாள்
உனக்குத் தன்னைத் தரப் போகிறாள்
உனக்காக வரும் நாள்
தயாராகு வரும் நாள்
உன்னிடம் தேடி வரும் நாள்
அவள் இத்தனை பரிசுகளோடு உன்னைப் பார்க்க வருகிறாள்
உனக்கு துன்பம் வரும்போது தாங்கும் சக்தி குறைவது அதனாலேயே
 
அம்பாள் சொப்பனத்தில் வந்தால் எத்தகைய ஆனந்தம். உறங்கிய சில நேரம் சென்று அம்பாள் எதிரே காட்சி அளிக்கிறாள் கோவிலில் இருக்கும் விக்ரஹம் போன்ற அதே பொலிவுடன் அலங்காரங்களுடன் என்னை அருகே
வரும்படி பணிக்கிறாள் வந்து நமஸ்காரம் செய்யும் சமயம். என் சிரசில் தன் கைகளை வைத்து சூலாயுதத்தாலேயே ஆசி கூறுகிறாள் இந்த கோயிலில் தீபம் ஏற்றி ‘ஸ்ரீ மதுரகாளிகாய நம’ என்று பக்தி பூர்வமாக வேண்டினால் இதுவரை நாம் ஏற்றிய தீபத்தின் எண்ணிக்கையை விட பல மடங்கு பலனை நமக்கு தரவல்லது என இக்கோயிலின் ஸ்தல புராணம் கூறுகிறது. சோழர் காலத்தை சேர்ந்த இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இவ்வூர் மக்கள் கூறுகின்றனர். இக்கோயிலை குலோத்துங்க சோழன் பராமரித்துள்ளார். கருவறையின் முன்புறம் அர்த்த மண்டபம் உள்ளது.கோயிலைச் சுற்றி மிக உயரமான சுவர்கள் இருந்துள்ளது. இவ்வுலகத்தில் ஞானத்தைப் போல் தூய்மை தரும் பொருள் வேறெதுவுமில்லை. யோகத்தில் நல்ல சித்தியடைந்தவன் தானாகவே தக்க பருவத்தில் அதைத் தனக்குள் கிடைக்கப் பெறுகிறான். மனிதனுக்குத் தன் சொரூப ஞானம் உதயமாகுங்கால் ஜனன மரணம் என்ற அக்ஞான அழுக்கினின்று நித்திய சுத்தனாக மாற்றப்பெறுகிறான். அம்மனைத் துதிக்கும் செய்து சாதனையிலேயே பலன் பெறலாம். மிக அற்புதமான இந்திரியங்களைக் கட்டுப்படுத்தி நாளடைவில் மன பரிபாகம் அடைந்து ஞானத்தை நிச்சயமாகப் பெறுகிறான். எவ்விடத்தில் உண்மையான சிரத்தையும், ஞான முயற்சியும், புலனடக்கமும் மேலோங்கியிருக்கின்றனவோ அங்கு ஞான வளர்ச்சி உருவெடுப்பது உறுதிசிரத்தை முதலியவைகளின் தீவிரத்திற்கு ஏற்றவாறு ஞானம் விரைவில் வந்தமையலாம்; பல ஜன்மங்களில் அது கைகூடலாம்; ஒரே ஜன்மத்தில் வந்தமையலாம்; சில வருஷங்களில் சித்தியாகலாம். ஞானத்தை அடைபவன் எல்லாம் ஈசுவரனிடத்து அடங்கப் பெற்றிருப்பதாகக் காண்பது மட்டுமல்ல, ஞானத்துக்கு ஏற்ற சாந்தியை அல்லது முக்தியையும் அக்கணமே பெறுகிறான். மனதை அடக்கி வாழ கற்றுக் கொள்ள வேண்டும் நியாயத்தை அனுசரிப்பது தான் நல்லது. பவுர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், அம்பாளுக்கு உகந்த திருநாட்களிலும், அம்பாளுக்கு செவ்வரளி முதலான சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து, சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பித்து, இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபட, சகல நன்மைகளும் உண்டாகும். செல்வம், புத்திரப்பேறு, கீர்த்தி, உத்தியோகம் ஆகியவற்றை விரும்புவோர் இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்து பலன் பெறலாம்.
ச்ரியம் வித்யாம்தத்யாஜ்னனி நமதாம் கீர்த்திமமிதாம்
ஸுபுத்ரம் ப்ராதத்தே தவ ஜடிதி காமாக்ஷி
கருணா த்ரிலோக்யாமாதிக்யம் த்ரிபுரபரிபந்திப்ரணயினி
ப்ரணாமஸ்த்வத்பாதே ஸமிததுரிதே கிம் ந குருதே மற்றும்
மனதில் நிம்மதியிருக்கும்
புத்தியில் தெளிவு பிறக்கும்
சிந்தனையில் ஒரு நேர்த்தி இருக்கும்
வாழ்க்கையின் யதார்த்தம் புரியும்
தீயவைகள் பயந்து விலகும்
பக்தி உன்னைக் கொஞ்சும்
ஆனந்தம் உன்னை தோளில் சுமக்கும்
விஷக்கடிகள், தீராத நோய்களுக்கு பலன் தரும் ஆன்மிகத் திருத்தலம்
இதில் துளியும் சந்தேகம் இல்லை. தடைகளே, பிரச்சனைகளே, தொல்லைகளே,
குழப்பங்களே, வந்தாலும் என் ஸ்ரீ மதுரகாளி என்னிடம்
இருப்பதால் எனக்கு பயமில்லை. உலகின் ஆதி சக்தி
எனக்கு பலமாயிருக்கும்போது, நான் ஒன்றும் ஓய்ந்துபோக மாட்டேன்.
அம்மா என் சொப்பனத்துலே வந்தா எதுவுமே எனக்குத் தெரியல்லை
எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அதை எப்படி வார்த்தைகளில் சொல்றதுன்னு தெரியல்லை.
முழிப்பும் வந்துடுத்து உடம்பெல்லாம் நடுங்குகிறது என் கண்ணுலேர்ந்து
தண்ணியா வந்தது. அடைக்கலம் நீயே அம்மா.
அம்பாள் சொப்பனத்தில் வந்தால் எத்தகைய ஆனந்தம். சிந்தித்து ப்ரார்த்தித்துக் கொண்டே
உறங்கி விட்டேன். இந்த நல்ல செய்தியை, ஸ்வப்ன அனுபவத்தை கண் விழித்தவுடன் என் மனைவியுடனும் பகிர்ந்து கொள்ள ஆவல். இப்போது ஞாபகம் வரவில்லை அன்று ஜன்மமே சாபல்யம் அடைந்தாற்போல் ஓர் மகிழ்ச்சி. எனக்குக் காட்சி கொடுத்து ஆசிர்வதித்தது ஓர் இன்ப அனுபவம். இந்த நாள் இனிமையாக அமைய நம் ஸ்ரீ மதுரகாளி அன்னையின் திருப்பாதம் பணிந்து, எளிமையாக, எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.ஸகல ஹிந்துக்களுக்கும் வேதம் ஆதாரமாக இருப்பதால் வேதம் சொல்ல வேண்டும். ஸகல ஸமயாசாரங்களும், ஸாதனைகளும் ஜன்ம நிவ்ருத்தி என்ற ஒன்றுக்காகத்தானே இருக்கிறது. நெற்றியில் உன் திறுநீரை பூசிக்கிட்டு, நெஞ்சினில் தாய் உன்னை ஏந்திக்கிட்டு மனம் எப்போதும் அமைதி நிலையில் இருக்க உனைத் தொழுதோம். எங்களை தாங்கிக்கிட்டு. துணை நீயும் வருவாய். துயர் களைவாய். இப்பிறப்பிலாவது நல்லதை எண்ணி நலம் பெறுவோம். நம் பிறப்புக்கும் நாம் முற்பிறப்பில் செய்த நல்வினை, தீவினைகளே காரணம். அன்னையிடம் எந்த நிலையிலும் அசைக்கமுடியாத நம்பிக்கையும் முயற்சியும் வேண்டும். தெய்வீக தன்மையைக் கண்டு வியந்தனர். தீர்த்துவைக்க முடியாத நோய்களையும் பாதிப்புக்களையும் கூட தனது அருட்பார்வையால் போக்கியிருக்கிறாள். எந்த சூழ்ந்லையிலும் அமைதியாக ஆனந்தமான மன நிலையில் இருக்க, நம் இதயத்திற்குள் ஒளி வீசும், ஸ்ரீ மதுரகாளி அன்னையின் திருவடிகளை பக்தியுடன் வணங்கியது நிறைவேறும்.
 
Last edited:
॥ காலீகவசம் ॥
பை⁴ரவ் உவாச -
காலிகா யா மஹாவித்³யா கதி²தா பு⁴வி து³ர்லபா⁴ ।
ததா²பி ஹ்ருʼத³யே ஶல்யமஸ்தி தே³வி க்ருʼபாம் குரு ॥ 1॥
கவசந்து மஹாதே³வி கத²யஸ்வானுகம்பயா ।
யதி³ நோ கத்²யதே மாதர்வ்விமுஞ்சாமி ததா³ தனும் ॥ 2॥
ஶ்ரீதே³வ்யுவாச -
ஶங்காபி ஜாயதே வத்ஸ தவ ஸ்னேஹாத் ப்ரகாஶிதம் ।
ந வக்தவ்யம் ந த்³ரஷ்டவ்யமதிகு³ஹ்யதரம் மஹத் ॥ 3॥
காலிகா ஜக³தாம் மாதா ஶோகது:³க²வினாஶினீ ।
விஶேஷத: கலியுகே³ மஹாபாதகஹாரிணீ ॥ 4॥
காலீ மே புரத: பாது ப்ருʼஷ்ட²தஶ்ச கபாலினீ ।
குல்லா மே த³க்ஷிணே பாது குருகுல்லா ததோ²த்தரே ॥ 5॥
விரோதி⁴னீ ஶிர: பாது விப்ரசித்தா து சக்ஷுஷீ ।
உக்³ரா மே நாஸிகாம் பாது கர்ணௌ சோக்³ரப்ரபா⁴ மதா ॥
வத³னம் பாது மே தீ³ப்தா நீலா ச சிபு³கம் ஸதா³ ।
க⁴னா க்³ரீவாம் ஸதா³ பாது ப³லாகா பா³ஹுயுக்³மகம் ॥ 7॥
மாத்ரா பாது கரத்³வந்த்³வம் வக்ஷோமுத்³ரா ஸதா³வது ।
மிதா பாது ஸ்தனத்³வந்த்³வம் யோனிமண்ட³லதே³வதா ॥
ப்³ராஹ்மீ மே ஜட²ரம் பாது நாபி⁴ம் நாராயணீ ததா² ।
ஊரு மாஹேஶ்வரீ நித்யம் சாமுண்டா³ பாது லிஞ்க³கம் ॥
கௌமாரீ ச கடீம் பாது ததை²வ ஜானுயுக்³மகம் ।
அபராஜிதா ச பாதௌ³ மே வாராஹீ பாது சாஞ்கு³லீன் ॥ 10॥
ஸந்தி⁴ஸ்தா²னம் நாரஸிம்ஹீ பத்ரஸ்தா² தே³வதாவது ।
ரக்ஷாஹீனந்து யத்ஸ்தா²னம் வர்ஜ்ஜிதம் கவசேன து ॥ 11॥
தத்ஸர்வ்வம் ரக்ஷ மே தே³வி காலிகே கோ⁴ரத³க்ஷிணே ।
ஊர்த்³த⁴மத⁴ஸ்ததா² தி³க்ஷு பாது தே³வீ ஸ்வயம் வபு: ॥
ஹிம்ஸ்ரேப்⁴ய: ஸர்வ்வதா³ பாது ஸாத⁴கஞ்ச ஜலாதி⁴காத் ।
த³க்ஷிணாகாலிகா தே³வீ வ்யபகத்வே ஸதா³வது ॥ 13॥
இத³ம் கவசமஜ்ஞாத்வா யோ ஜபேத்³தே³வத³க்ஷிணாம் ।
ந பூஜாப²லமாப்னோதி விக்⁴னஸ்தஸ்ய பதே³ பதே³ ॥ 14॥
கவசேனாவ்ருʼதோ நித்யம் யத்ர தத்ரைவ க³ச்ச²தி ।
தத்ர தத்ராப⁴யம் தஸ்ய ந க்ஷோப⁴ம் வித்³யதே க்வசித் ॥ 15॥
இதி காலீகுலஸர்வ்வஸ்வே காலீகவசம் ஸமாப்தம் ॥
 
மாயா லோக வாழ்க்கையிலிருந்தே, ஜீவனை விடுவித்து மோக்ஷ பதத்தைத் தருவதுதான் அநுக்ரஹம். சரீரம், மனஸ், புத்தி முதலியவைமாயா லோக வாழ்க்கையிலிருந்தே, ஜீவனை விடுவித்து மோக்ஷ பதத்தைத் தருவதுதான் அநுக்ரஹம். சரீரம், மனஸ், புத்தி முதலியவை வைத்துக்கொண்டு வினையை அறுவடை செய்கிற களமாக உள்ள இந்த ஜகம் என்பது, அறுவடையை அநுபவிப்பது என்பவை தேவையாயிருக்கின்றன. பரமாத்மா கொடுப்பதுதான் அநுக்ரஹம். சிவனுடைய அநேக ரூபங்களில் ஒன்றுதான் ருத்ரன் என்று சொல்வார்கள். சிவம்தான் ஸகல க்ருத்யங்களுக்கும் காரணமான முழுமுதற் கடவுள். தூக்கிய திருவடியை வணங்க நன்மைகளும் உண்டாகும் சைவ சாஸ்திரப்படி மஹேச்வரி அநுக்ரஹங்கள் தேவையாயிருக்கின்றன என்று சொல்லியிருக்கிறது. கையில் அவர் பிடித்துக் கொண்டிருக்கிற டமருகத்தின் சப்தத்தினால்தான் ஸ்ருஷ்டி உண்டாகிறது. சுருங்கச்சொன்னால் மாதா ஸ்ரீ மதுரகாளியும் டமருகத்தினை பிடித்துக் கொண்டிருக்கிறள். பஞ்ச க்ருத்ய சாக்தத்தில் சிவத்துக்குப் பதில் சக்தியைப் “பஞ்சக்ருத்ய பராயணா” என்று சொல்லியிருக்கிறது.அம்மா உன் பதகமலம் பணிந்து விட்டேன் பக்திவரம் தாராய். அவள் திருப்பாதம் பணிந்து, எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்
 
Last edited:
அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்
உதவி உங்களுக்கு எப்போதும் கிடைக்கும்
பக்தர்களின் ஷேமத்தை காப்பாற்றி கொண்டே இருப்பாள்
மனதைத் அவளிடம் திருப்புங்கள்.
அவள் செய்யும் உதவி அற்புதங்களாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும்.

சகல மங்களங்களையும் அளிப்பவளே
தீராநோய் தீர்த்தருள வல்லாளே
உன் கடைக்கண் பார்வை சற்றே மலர்ந்த புஷ்பம் போல் விளங்குகின்றது.
அந்தப் பார்வையால் தயவு செய்து பார்
அதனால் நான் புண்ணியமும் செல்வமும் பெறுவேன்
ஸ்ரீ மதுரகாளி அம்மா
 
அருள்மிகு அம்பிகையின் அருள்பாதம் பணிந்தேன்
ஆனந்த ஜோதியே ஆதரிப்பாய் எமையே
இகபர சௌபாக்கியம் அளித்ததிடும் தேவியே
ஈரேழுலகமும் காத்திடும் அன்னையே
உலகம் உய்யவே உலகில் உதித்தவளே
ஊழ்வினையைத்தீர்த்து உண்மையைக்காப்பவளே
எங்கும் நிறைந்தவளே ஏகாந்த நாயகியே
ஏற்ற மிகு வாழ்வளிக்கும் எழில்மிகு அம்பிகையே
ஐந்தொழில் புரிந்திடும் ஐயனின் தேவியே
ஒன்றும் அறியாதவரை உயர்வடையச் செய்பவளே
ஓங்கார நாயகியே ஓம் சக்தித்தாயே
ஔடதமாய் நீ இருந்து அனைவரையும் காத்திடுவாய்
அகிலாண்ட நாயகியே ஆதிபராசக்தியே
கண்கண்ட தெய்வமே கருணையின் வடிவமே
கலியுகம் காக்கவே காட்சியளிப்பவளே
வெற்றித்திருமகளே வேண்டியவரமருள்பவளே
பெற்ற அன்னையாய்ப் பேணிக்காப்பவளே
மின்னும் ஒளியாய்க்காட்சி தருபவளே
சி றுவாச்சூரில் சீருடன் அமர்ந்து
ஸ்ரீ மதுரகாளி எனும் நாமமும் கொண்டவளே
எங்கும் நிறைந்திருந்து பயம் நீக்கிடுவாய்
எல்லையில்லா பேரின்பப் பெருவாழ்வு தந்திடுவாய்
குங்குமத்தில் குடியிருந்து குடும்பத்தைக்காத்திடுவாய்
சத்தியமாய் இருப்போர்க்கு சாட்சியாய் இருந்திடுவாய்
விரும்பியே வருவோர்க்கு வீரத்தை அளித்திடுவாய்
நின்பாதம் பணிவோர்க்கு நிம்மதியைக்கொடுத்திடுவாய்
பன்மலரால் பூஜிப்போர்க்கு பக்கபலமாய் இருந்திடுவாய்
மஞ்சளில் குடியிருந்து மாங்கல்யம் காத்திடுவாய்
நெஞ்சில் நிறைந்திருந்து நெஞ்சத்தைக்காத்திடுவாய்
நம்பியே வருவோர்க்கு நல்லதே செய்திடுவாய்
தெம்பில்லாதவர்க்கு தெய்வபலம் அளித்திடுவாய்
கும்பிடவருவோரின் குறைகளைக்களைந்திடுவாய்
தேடி வருவோர்க்குத் தைரியத்தை அளித்திடுவாய்
வாடி வருவோரின் வ்றுமையைபோக்கிடுவாய்
நாடிவருவோர்க்கு நன்மையே புரிந்திடுவாய்
போற்றி போற்றி ஜகத் ரக்ஷகியே போற்றி
ஓம் சக்தி; ஓம்சக்தி ; ஓம்சக்தி ஓம்
 
கடவுள் நமக்குத்துணையாயிக்கும்போது மற்றவைகள் நமக்கு என்ன கேடு செய்யவல்லது
கடவுள் துணை நமக்கில்லாது போய்விட்டால் அனுகூலமானவைகள் நமக்கு என்ன தான் நன்மை செய்துவிடும். கடவுளுக்கு நிச்சயமாக உருவம் உண்டு.
பௌதீகப் பார்வையால் கடவுளின் உருவத்தை காண ஏற்பட்டதே உருவ,விக்ரஹ வழிபாடு. பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பிறவி எடுப்போம். இந்த உண்மையை உணர வேண்டும். நாம் நம் கடமையைச் செய்வோம். இதற்கு மேல் இது குறித்து கவலைப்படுவது நமக்கு அழகல்ல. சில ஏமாற்றங்கள் பெரிதாகவே பாதிக்கும். அம்பாளுக்கு யார் செய்தால் என்ன. பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்று திருவானைக்காவல். இதில் குடிகொண்டிருப்பவள் அகிலாண்டேஸ்வரி. இவளது அணிகளில் காதுத்தாடங்கம் என்பது ஒரு முக்கியமான அணி. திருக்கடவூரில் அபிராமி பட்டன் அமாவாசை அன்று நிலவுவரும் என்று தன்னை மறந்து சொல்லி விட, அந்த பட்டனின் – பக்தனின், வாக்கு பொய்யாகிவிடாதிருக்க, சரபோஜி மன்னன் முன்னாலே, அந்த அபிராமி தன் தாடங்கத்தை கழற்றித்தான் வானில் வீசி எறிந்தாள். அதுவே முழு நிலவாகி ஜொலித்து அபிராமி பட்டரை காப்பாற்றியது. தாடங்கத்துக்கு பின்னாலே ஒரு சம்பவம் உண்டு. இந்த தாடங்கங்கள் அகிலாண்டேஸ்வரிக்கும் மிக பிரசித்தி. காரணம் ஆதிசங்கர பகவத்பாதாள் தான் முதலில் அகிலாண்டேஸ்வரிக்கு தாடங்கம் சாற்றி, அவளின் பேரெழிலை பிறர் காணச் செய்தவர். பக்தர்களுடைய மனக் கவலையைப் போக்கி அருள்பவரே,கடவுள். சகல மங்களங்களும் பெருக
 
Last edited:
கருணை ததும்பும் கண்களை உடையவளே, ஒளி மிகுந்த ரத்ன மாலையை அணிந்தவளே, சிம்மத்தில் வீற்றிருப்பவளே, வாக்கினிலே இனிமையும் அழகும் கொண்டவளே, எளியவர்களான பக்தர்களுக்கு கற்பக விருட்சமாகத் திகழ்பவளே, உலகோர் அனைவராலும் வணங்கத் தக்கவளே, ஸ்ரீ மதுரகாளி தாயே, நமஸ்காரம்.
 
அகிலம் வாழ்த்தும் தாயாம்
தாயைப் போல் துணை வருபவளாம்
தரணியில் உயர்ந்திடச் செய்பவளாம்
அன்புடன் துணையாய் வருபவளாம்
சிறுவாச்சூரில் உருவான பேரருளாம்
எளிமையே உருவாய் அமைந்தவளாம்
ஏற்றங்கள் வாழ்வில் தருபவளாம்
தஞ்சமென்றால் உடன் அருள் மழையாம்
அம்மா சரணம் என்றபடி
அன்னையை வலம் வர நலமாகும்
முதலாம் சுற்றில் நிம்மதியாம்
இரண்டாம் சுற்றில் விலகும் பாவங்களாம்
ஒவ்வொரு சுற்றிலும் சேர்ந்திடுமாம்
நலன்கள் இங்கே பலகோடி
மங்களம் தந்திடும் தாய் அவளாம்
அம்மா சரணம் அவளை சரணடைந்து
சிறப்புகள் பெற்றே வாழ்ந்திடலாம்
 
இறைவன் எல்லா உயிரிலும் இருப்பதால் ஒவ்வொருவரும் பிச்சை இடும்போது இறைவன் அவன் வடிவில் வந்துள்ளதாக கருதி அன்போடு பிசையிடவேண்டும். அவன் நிலைக்கு தன்னை வைக்காமல் மற்றவருக்கு உதவும் நிலையில் தன்னை இறைவன் வைத்துள்ளானே என்று இறைவனை நன்றியுடன் நினைக்க வேண்டும். அப்போதுதான் அகந்தை விலகி பணிவு தோன்றும். பணிவு இருந்தால்தான் ஆன்மீக முன்னேற்றம் சித்திக்கும் செல்வத்தின் பயன் ஈதல் என்பது தமிழர் பண்பாடு .
போன பிறவியில் செல்வம் இருந்தும் வறியவர்களுக்கு கொடுக்காதவன்தான் அடுத்த பிறவியில் வறுமையின் கொடுமையை அனுபவித்து திருந்தும் பொருட்டு ஏழையாக பிறவி எடுக்கிறான் என்று சாத்திரங்கள் சொல்லுகின்றன.
உங்களிடம் பிச்சை கேட்கிறான். உங்களிடம் இருந்தால் உதவுங்கள். இல்லையேல் அவனை கோபிக்காமல் அனுப்பிவிடுங்கள்.
 
அம்மா உங்களுக்காக காத்திருப்பாள்
சீக்கிரம் போய்விட்டு வரவேண்டும் சரியா
மனம் குளிர பாடி மகிழவேண்டும் தெரிந்ததா
சமத்தாக சன்னிதியில் உட்கார்ந்து இருக்கவேண்டும் புரிந்ததா
அன்னையை பார்த்து விட்டு வரவேண்டும் தெரிந்ததா
பார்க்கும்போது நான் கட்டாயம் அவளை வரச்சொன்னதாகச் சொல்
உங்களுக்காக நிறைய பக்ஷணங்கள் தருவாள் விளங்கியதா
 

எது சரி, எது தவறு, எது நல்லது, எது கெட்டது
எது தேவை, எது தேவையில்லை, எது உயர்ந்தது, எது தாழ்ந்தது,
எது நடக்கும், எது நடக்காது, ஒன்றும் புரியவில்லை
எல்லாம் அன்னைக்கு தெரியும் புரிந்ததா
நம்பிக்கையே உனக்கு எல்லாம் தரும்
நம்பினார் கெடுவதில்லை
நிச்சயம் ஒரு நாள் வாழ்வில் விடியல் வரும்
வசந்தத்தை வரவேற்கவும், அனுபவிக்கவும் உன்னை
தயார்படுத்திக்கொள்

 
திவ்யதரிசனம் எங்கே எங்கே
பாவமெல்லாம் அழியும் இடம், எங்கே எங்கே
மோக்ஷம் தரும் அன்னை எங்கே எங்கே
சிறுவாச்சூரில் ஸ்ரீ மதுரகாளியை வந்து பார்
கருணை கண்ணழகியின் திருமேனியை வந்து பார்
மஹாபெரியவா அனுபவங்கள், மகிழ்ந்த இடம் எங்கே எங்கே
சிறுவாச்சூரில் ஸ்ரீ மதுரகாளியை வந்து பார்
உடனே உன் மனக் கவலை தீரும் இங்கே
பல விஷயங்களை வாழ்வில் நாம் மறந்து விட்டோம்
சில விஷயங்கள்மட்டுமே ஞாபமிருக்கிறது
போன ஜன்மம் மறந்து போனது, அடுத்த ஜன்மம் தெரியாது
இந்த ஜன்மாவில் இன்னும் எத்தனை நாள், தெரியவில்லை
ஆனால் மறக்கப் போவதில்லை, இது சத்தியம்
"ஸ்ரீ மதுராம்பிகா"
நிச்சயமாய் இந்த நாமம் என்னை கைவிடாது
உறுதியாய் இந்த நாமம் என்னை விட்டு விலகாது







 
சித்தர்களால் பலவாறும் துதிக்கப்பட்ட தேவியானவள் உலக ரக்ஷணைக்காக தை மாதத்தில்
வெள்ளியன்று சந்திரனது நிலவைப்போல யாவர்க்கும் மகிழ்ச்சியூட்டுவதாக இருந்தது.
சித்தர்கள் மலர் மழை பொழிந்தனர். இவ்விதமான லோகஹிதமாய் பூப்போன்ற திருமேனியுமாக
அவதரித்த ஸ்வரூபத்தை பிரார்த்தித்தார்கள். அடியார்களுக்கு அனுக்கிரகஞ் செய்தருளவேண்டும்
என்று பிரார்த்தித்தார்கள். சகலலோகங்களையும் திருமேனியாலே தாங்கிக் கொண்டிருப்பவளாக விளங்கும் இம்மாயை என்கின்ற ஸ்ரீ மதுரகாளியை சாதாரண அம்பாள் வடிவில், நான்கு கரங்களுடன் தோற்றமளித்ததை கண்டு, திவ்ய லட்சணங்களுடன் கூடிய இந்தத் திவ்ய ரூபத்தை சித்தர்கள் ஆச்சரியமாக பார்த்து அருள வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள், துதித்தார்கள். எங்கள் வேண்டுதல் தேவியே, பெற்றதாய் போல எங்களை அனுக்கிரகத்து அருளவேண்டும்

 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top