• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Sahasra nAma AvaLi

1. வற்றாத பொய்கை​


A2

வற்றாத பொய்கை வளநாடு கண்டு மலை மேலிருந்த குமாரா
உற்றார் எனக்கு ஒருவருமில்லை உமையாள் தனக்கு மகனே
முத்தாடை தந்து அடியேனை ஆளும் முருஹேசன் என்றன் அரசே !
வித்தாரமாக மயில் மீதிலேறி வரவேணும் எந்தன் அருகே! …… 1


Lord Kumara who lives on the mountain looking upon the land of perennial water;
I have none who I can all as my own, oh son of Uma Devi!
You are the provider and the ruler of me, oh King MurugEsa!
I request you to come near me, mounted on your beautiful peacock.
 

2. ஆலால முண்டோன்​

A3

ஆலால முண்டோன் மகானாகி வந்து அடியார் தமக்குமுதவி
பாலுறல் உண்டு கனிவாய் திறந்து பயனஞ்செழுத்தை மறவேன்
மாலான வள்ளி தனைநாடி வந்து வடிவாகி நின்றகுமரா!
மேலான வெற்றி மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே (2 )


You are born as the son of Siva who swallowed the aalaahala poison. You drink the divine milk, speak words as sweet as fruits and help your sincere devotees with your infinite grace. The purpose of life is not to forget the panchaaksharam OM NAMA: SIVAAYA.
You came to bless Valli who was filled with sincere love towards you. Please come to me, oh lord! mounted on your glorious and victorious peacock.
 

3. திருவாசல்தோறும்​

A4

திருவாசல்தோறும் அருள்வேதமோத சிவனஞ்செழுத்தை மறவேன்
முருகேசரென்று அறியார் தமக்கு முதலாகி நின்றகுமரா
குருநாத சுவாமி குறமாதுநாதர் குமரேசரென்ற பொருளே!
மறவாமல்வெற்றி மயில்மீதிலேறி வரவேணு மென்றனருகே! (3)


Vedas are being chanted in every house.
I shall never forget the Siva panchaaksharam.
You are the supreme God even to those who
do not realize that you are the supreme God.
You are the guru Swaminathan.
You are the lord of Kura mangai Valli.
You are the Lord Kumaresan.
Oh Lord! Do not forget to mount on your victorious peacock and come to me.
 

4. உதிரந்திறந்து​


A5

உதிரந்திறந்து பணியீரலுண்டு உருவாசல் தேடிவருமுன்
ததிபோலெழுந்த திருமேனிநாதர் கடைவீடு தந்துமருள்வாய்
முதிறஞ்சிறந்த வயல்வீறு செங்கை வடிவேல் எடுத்த குமரா !
எதிராய்நடந்து மயில்மீதிலேறி வரவேணு மென்றனருகே ! (4)


Before my physical body is destroyed by the God of death, please take me into the highest abode of the Lord Siva. Oh Lord! who lives in the land of fertile fields! You who carry the mighty Velaayutham in your beautiful hand! Mount on your peacock and come to me, flying in front of me!
 

5. மண்ணாடுமீசன்​


A6

மண்ணாடுமீசன் மகனாராயுந்தன் மலைவீடுதந்து மருள்வாய்
வண்டூறல்பாயும் வயலூரில் செங்கை வடிவேல் எடுத்த குமரா!
நன்றாக வந்து அடியேனையாண்டு நல்வீடு தந்த குகனே!
கொண்டாடி வெற்றி மயில்மீதிலேறி வரவேணு மென்றனருகே (5)


You are the son of Lord Siva- whom the whole world worships.
Please give me a place in one of your temple situated on the hills.
Oh Lord! the wielder of Shakti Ayudham residing in Vayaloor – the land of milk and honey!
You have come to me, blessed me and given me (jeevan) mukthi.
Please come to me mounted on your victorious and celebrated peacock.
 

6. நீலஞ்சிறந்த​


A7

நீலஞ்சிறந்த குறமாதுவள்ளி நின்பாகம் வைத்தகுமரா
காலனெழுந்து வெகுபூசைசெய்து கயிறுமெடுத்து வருமுன்
வேலும்பிடித்து அடியார் தமக்கு வீராதி வீரருடனே
சாலப்பரிந்து மயில்மீதிலேறி வரவேணு மென்றனருகே! ( 6 )


You have placed the dark skinned Valli in one of your laps. Before the cruel Yama approaches me with his unfailing paasam, take hold of your VElAyudham and come to me with your valorous army, with boundless kindness, mounted on your lovely peacock.
 

7. தலைகட்ட நூலின்​


A8

தலைகட்ட நூலின் நிழல்போல நின்று தடுமாறி நொந்து அடியேன்
நிலைகெட்டு யானும் புவிமீதில் நின்று நெடுமூச்செறிய விதியோ?
அலைதொட்ட செங்கை வடுவேர் கடம்பா அடியேனை ஆளுமுருகா!
மலையேறிமேவு மயில்மீதிலேறி வரவேணு மென்றனருகே! …… 7


I am as helpless and vulnerable as the shadow of a mere thread.
Is it in my fate that I have to heave sighs of sorrow and feel wretched all my life on this earth?
Kadamba living on the land kissed by the waves of the sea! You are my lord and my ruler!
Come to me mounted on your stately peacock, which lives on your lovely hilly resorts.
 

8. வண்டுபூவில்​


A9

வண்டுபூவில் மதுவூரில்பாயும் வயலூரில் செங்கைவடிவேல்
கண்டொன்று சொல்லித்திரிவார்கள் வாசல் கடனென்று கேட்கவிதியோ?
வண்டூறு பூவி விதழ்மேவும்வள்ளி தெய்வானைக்குகந்த வேலா!
நன்றென்றுசொல்லி மயில்மீதிலேறி வரவேணு மென்றனருகே! …… 8



Oh Lord who is holding the mighty Shakthi ayudham in your strong hand!
Is it my ill fate that I should seek the help of those wretches –
who see something and go about saying something else?
You are the befitting Lord of both the lovely Valli and the stately Deivayaanai!
It is time for you to utter the words “Well! here I come” and come to me sitting on your lovely peacock.
 

9. விடதூதரோடி​


A10


விடதூதரோடி வரும்போதுஉம்மை வெகுவாக நம்பினேனே!
குறமாது வள்ளி இடமாக வைத்து மயிலேறி வந்த குமரா!
திடமாகச்சோலை மலைமீதில்வாழும் திருமால்தமக்கு மருகா!
வடமானபழனி வடிவேல்நாதா வரவேணு மென்றனருகே!......9


I have placed my faith in you for your protection, When the Yama kinkaraas approach me,
Oh Lord who always keeps Valli on your left side !
You live on the lovely pahzamuthirch cholai. You are the loving nephew of lord Vishnu.
You are the lord not only in Then-Pazhani but also of Vada-Pazhani.
You the wielder of the Shakthi Aayudham, must come near me now.
 

10. ஓங்காரசக்தி​


A11

ஓங்காரசக்தி உமைப்பால்குடித்து உபதேசமுரைத்த பரனே!
பூங்காவனத்தில் இதழ்மேவும்வள்ளி புஜமீதிருந்த குஹனே!
ஆங்காரசூரர் படைவீடுசோர வடிவேல் விடுத்த பூபா!
பாங்கானவெற்றி மயில்மீதிலேறி வரவேணுமென்றனருகே! …… 10


You drank the divine milk of the Onkaara Sakthi Uma Devi.
You did upadesam to your own father as SwaminAthan.
You enjoy the proximity of the loving Valli, in the flower laden gardens.
You have cast your VElAyudham so as to destroy the cities of the wicked asuras.
It is time for you to come to me, riding upon your victorious peacock.
 

11. ஆறாறுமாறு​


A12

ஆறாறுமாறு வயதானபோது அடியேன் நினைத்தபடியால்
வேறேதுசிந்தை நினையாமலுந்தன் ஆசாரசங்கமருள்வாய்
அசுரேசர்போல யமதூதரென்னைத் தொட்டோட கட்டவருமுன்
மாறாதுதோஹை மயில்மீதிலேறி வரவேணு மென்றனருகே!…… 11


When I become old and infirm with advancing age, I request you to keep my mind focused on nothing but you, all the time. When the Yama Kinakraas approach me like the merciless asuras and try to bind me with their paasam, you must come to my rescue, flying on your constant companion – the stately peacock.
 

12. கையாரஉன்னை​


a13

கையாரஉன்னைத் தொழுதேத்தமனது கபடேது சற்றுமறியேன்!
ஐயாஉனக்கு ஆளாகும்போது அடியார் தமக்குஎளியேன்
பொய்யானகாயம் அறவேஒடுங்க உயிர்கொண்டு போகவருமுன்
வையாளியாக மயில்மீதிலேறி வரவேணு மென்றனருகே!…… 12


I wish to worship you with my mind and body to my heart’s content. When I become your devotee, I become the devotee of all your devotees too. Before my physical body drops down and gets separated from my eternal soul, please come to me flying on your portly peacock – as strong and invincible as the mythological Yaali.
Note:
Yaali is a creature with a lion’s body and face but bestowed with an elephants trunk and tusks. Yaalis are depicted on the pillars in the ancient temples of Tamilnadu.
 

13. ஏதேதுஜென்ம​


A14

ஏதேதுஜென்ம மெடுத்தேனோமுந்தி இந்தப்பிறப்பில் அறியேன்
மாதாபிதாநீ மாயன்தனக்கு மருகா குறத்திகணவா!
காதோடுகண்ணை இருளாகமூடி உயிர்கொண்டு போகவருமுன்
வாதாடிநின்று மயில்மீதிலேறி வரவேணுமென்றனருகே!…… 13


I do not remember all the births I had taken prior to this human form.
You are my mother and father oh nephew of Lord Vishnu!
The loving husband of Valli!
Before I lose my sense of hearing and seeing and lose my precious life,
you must come to my side, flying on your majestic peacock,
to argue on my behalf with the cruel Yama and save me.
 
ஆறிரு தடந்தோள் வாழ்க!

A15

ஆறிரு தடந்தோள் வாழ்க
ஆறுமுகம் வாழ்க – வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க
குக்குடம் வாழ்க – செவ்வேள்
ஏறிய மஞ்சை வாழ்க
யானைதன் அணங்கு வாழ்க
மாறில்லா வள்ளி வாழ்க
வாழ்க சீர் அடியார் எல்லாம். 🙏
 

சிவ ஸ்துதி​

s1

முக்தி அளிக்கும் சிவனை பக்தியுடன் துதிக்கும் அன்பர்கள்
நித்தியம் படித்துப் பயன் பெறவேண்டும் இந்த ஸ்லோகங்களை.

நித்தியம் படிக்க இயலாதவர்களும் படிக்கலாம் இவற்றை
பக்தியுடன் பிரதி திங்கள் மற்றும் விசேஷ நாட்களில்!
 

1. ஸ்ரீ நந்தி3 ஸ்துதி.​

s2

நந்தி3கேச’ மஹாபா4க3 சி’வத்3யான பராயண |
கௌ3ரி ச’ங்கர ஸேவார்த2ம் அனுஜ்ஞாம் தா3துமர்ஹசி ||


சிவபிரான் திருவடியில் சரணம் புகுந்து,
சிவ தியானத்தில் ஆழ்ந்து இருக்கும்
புண்ணியசாலியாகிய நந்திகேஸ்வரனே!
சந்நிதியில் சென்று பார்வதி பரமேஸ்வரர்களைத்
தரிசிக்க எனக்கு உத்தரவு தருவாய்.
 

2. ஸ்ரீ சிவ ஸ்தோத்திரம்.​

s3

ஹே சந்த்3ரசூட3 மத3னாந்தக சூ’ல பாணே
ஸ்தாணோ கி3ரீச’ மஹேச’ ச’ம்போ4|
பூ4தேச பீ4தப4ய ஸூத3ன மமநாத2ம்
ஸம்ஸார து3க்க க3ஹநாத் ஜக3தீ3ச’ ரக்ஷ || (1)


சந்திரனை ஜடையில் தரித்தவனே!
மன்மதனை எரித்தவனே!
கையில் சூலாயுதம் ஏந்தியவனே!
அசையாத நிலையில் அமர்ந்தவனே!
கிரியின் அரசனே! மகேஸ்வரனே!
சுகம் அருள்பவனே!
பூதகணங்களின் தலைவனே!
பக்தர்களின் பயத்தைப் போக்குபவனே!
ஜகத்துக்கெல்லாம் ஈஸ்வரனே!
என்னை காக்கும் தலைவனே!
சம்சாரம் என்னும் பெரும் துன்பத்திலிருந்து
என்னைக் காத்தருள்வாய் ஜகதீசனே!
 

3. ஸ்ரீ சிவ ஸ்தோத்திரம்.​


s4

ஹே பார்வதி ஹ்ருத3ய வல்லப4சந்த்3ரமௌனே
பூ4தாதி4ப ப்ரமதநாத2கி3ரீச’ சாப |
ஹே வாமதே3வ ப4வ ருத்3ர பினாகபாணே |
ஸம்ஸார துக்க க3ஹநாத் ஜக3தீ3ச’ ரக்ஷ || (2 )


ஹே பார்வதியின் மனம் கவர்ந்தவனே! சந்திரசூட!
பூதங்களின் தலைவனே! ப்ரமத கணங்களின் நாதனே!
மேருவை வில்லாக வளைத்தவனே! வாமதேவனே!
ஜகத்துக்குக் காரணமானவனே! துயர்களைத் துடைப்பவனே!
பினாகம் என்ற வில்லை ஏந்தியவனே!
சம்சாரம் என்னும் பெரும் துன்பத்திலிருந்து
என்னைக் காத்தருள்வாய் ஜகதீசனே !


 

ஸ்ரீ சிவ ஸ்தோத்திரம்.​


4. ஹே நீலகண்டனே!​


s5

ஹே நீலகண்ட2வ்ருஷப4த்4வஜ பஞ்சவக்த்ர
லோகேச’ சே’ஷ வலய ப்ரமதே2ச’ ச’ர்வ |
ஹே தூர்ஜடே பசு’பதே கிரிஜாபதே மாம்
ஸம்ஸார துக்க க3ஹநாத் ஜக3தீ3ச’ ரக்ஷ ||


ஹே நீலகண்டனே! விருஷபக் கொடியோனே!
ஐந்து திரு முகங்கள் உடையவனே! லோக நாதனே!
ஆதிசேஷனைக் கங்கணமாக அணிந்தவனே!
ப்ரமத கணங்களின் தலைவனே! சர்வ சம்ஹாரனே!
பரந்து விரிந்த ஜடை உடையவனே!
அனைத்து ஜீவராசிகளின் தலைவனே!
மலைமகள் மணவாளனே!
சம்சாரம் என்னும் பெரும் துன்பத்திலிருந்து
என்னைக் காத்தருள்வாய் ஜகதீசனே !
 

5. ஹே விச்’வநாத2!​


s6

ஹே விச்’வநாத2 சி’வச’ங்கர தே3வதே3வ
க3ங்கா3த4ர ப்ரமத நாயக நந்தி3கேச’ |
பா3ணேச்’வராந்தகரிபோ ஹரலோக நாத2
ஸம்ஸார துக்க2 க3ஹநாத் ஜக3தீ3ச’ ரக்ஷ ||


புவனாதிபதியே! மங்கள மூர்த்தியே!
நன்மைகள் செய்பவனே! தேவாதி தேவனே! கங்காதரனே!
ப்ரமத கணங்களின் தலைவனாக நந்தியை உடையவனே!
பாணாசுரனுடைய ஈஸ்வரனே!
அந்தகாசுரனைக் கொன்றவனே!
பாபங்களைத் தொலைப்பவனே!
உலகனைத்துக்கும் நாதனே!
சம்சாரம் என்னும் பெரும் துன்பத்திலிருந்து
என்னைக் காத்தருள்வாய் ஜகதீசனே !
 

6. ஸ்ரீ வாரணாஸீபுரபதே!​


s7

வாரணாஸீபுரபதே மணிகர்ணிகேச’
வீரேச’ த3க்ஷ மக2கால விபோ க3ணேச’ |
ஸர்வக்ஞ ஸர்வ ஹ்ருத3யைக நிவாஸ நாத2
ஸம்ஸார துக்க க3ஹநாத் ஜக3தீ3ச’ ரக்ஷ || (5 )


காசி மாநகர் உள்ளானே! மணிகர்ணிகைக்கு நாயகனே!
வீரபத்ரனுக்கு ஈசனே! தக்ஷனின் யாகத்தை அழித்தவனே!
எங்கும் நிறைந்துள்ளவனே! தேவ கணங்களின் தலைவனே!
எல்லாம் அறிந்தவனே! எல்லா ஜீவராசிகளின் இருதயங்களில் வாழ்பவனே!
என்னுடைய நாதனே! சம்சாரம் என்னும் பெரும் துன்பத்திலிருந்து
என்னைக் காத்தருள்வாய் ஜகதீசனே !
 

7. ஹே மஹேச்’வர!​


s8

ஸ்ரீமன் மஹேச்’வர க்ருபாமய ஹே த3யாளோ
ஹே வ்யோமகேச’ சி’திகண்ட2 க3ணாதி4 நாத2 |
பஸ்மாங்க3ராக3 ந்ருகபால கலாப மால
ஸம்ஸார துக்க க3ஹநாத் ஜக3தீ3ச’ ரக்ஷ || (6)


தன்னிகர் இல்லாத அழகு வாய்ந்தவனே! மகேஸ்வரனே!
கருணையின் வடிவானவனே! தயை நிரம்பிய உள்ளம் கொண்டவனே!
ஆகாயத்தையே உன் கேசமாகக் கொண்டவனே!
நீல கண்டம் உடையவனே! பூத கணங்களின் தலைவனே!
விபூதி அணிந்தவனே! கபால மாலையை அணிந்தவனே!
சம்சாரம் என்னும் பெரும் துன்பத்திலிருந்து என்னைக் காத்தருள்வாய் ஜகதீசனே !
 

8. ஹே ம்ருத்யுஞ்ஜய!​


s9

கைலாஸசைலவிநிவாஸ வ்ருஷாகபே ஹே
ம்ருத்யுஞ்ஜய த்ரிநயன த்ரிஜக3ன்நிவாஸ |
நாராயணப்ரிய மதா3பஹ ச’க்திநாத2
ஸம்ஸார துக்க க3ஹநாத் ஜக3தீ3ச’ ரக்ஷ || (7)


கைலாஸ கிரியை இருப்பிடமாகக் கொண்டவனே!
தர்மஸ்வரூபனே! காலனை ஜெயித்தவனே!
முக்கண்ணனே! மூன்று உலகங்களிலும் நிறைந்துள்ளவனே!
நாராயணப்ரியனே! கர்வத்தை அழிப்பவனே! பராசக்தியின் பதியே!
சம்சாரம் என்னும் பெரும் துன்பத்திலிருந்து என்னைக் காத்தருள்வாய் ஜகதீசனே !
 

9. ஹே விச்’வரூப!​


s10

விச்’வேச’ விச்’வப4வநாஸக விச்’வரூப
விச்’வாத்மக த்ரிபு4வனைக கு3ணாதி4கேச’ |
ஹே விச்’வநாத2 கருணாலய தீ3னப3ந்தோ4
ஸம்ஸார துக்க க3ஹநாத் ஜக3தீ3ச’ ரக்ஷ || (8)


ஹே விஸ்வச்வர! உலகெல்லாம் படைத்தது அழிப்பவனே!
விஸ்வரூபம் தரித்தவனே! உலகங்களின் பரம் பொருளே!
அனைத்து நற்குணங்களின் இருப்பிடம் ஆனவனே!
உலகத்தின் நாதனே! கருணைக் கடலே! ஏழைப்பங்காளனே !
சம்சாரம் என்னும் பெரும் துன்பத்திலிருந்து என்னைக் காத்தருள்வாய் ஜகதீசனே !
 

Latest ads

Back
Top