Sahasra nAma AvaLi

4. ஸ்ரீ லக்ஷ்மி ஸ்துதி​


b4

மஹாலக்ஷ்மி நமஸ்துப்4யம் நமஸ்துப்4யம் ஸுரேச்’வரி |
ஹரிப்ரியே நமஸ்துப்4யம் நமஸ்துப்4யம் த3யாநிதே4 || (4)

மஹா லக்ஷ்மி தேவியே! உனக்கு நமஸ்காரம், தேவர்களின் ஈஸ்வரியே! உனக்கு நமஸ்காரம். ஹரியின் ப்ரிய சகியே! உனக்கு நமஸ்காரம். கருணையின் இருப்பிடமானவளே! உனக்கு நமஸ்காரம்.
 

1. ஸ்ரீ ஸரஸ்வதி ஸ்துதி​


c0

யாகுந்தே3ந்து3 துஷாரஹார த4வளா யா ஸுப்3ர வஸ்த்ராவ்ருதா
யா வீணா வர த3ண்ட3மண்டி3தகரா யா ஸ்வேதபத்மாஸனா |
யா ப்3ரஹ்மாச்யூத ச’ங்கர ப்ரப்4ருதிபி4: தே3வைஸ்ஸதா3பூஜிதா
ஸா மாம் பாது ஸரஸ்வதி ப4க3வதி நிச்’சேஷ ஜாட்3யாபஹா || (1)


எந்த பகவதி மல்லிகை, சந்திரன், பனி இவற்றைபோன்ற முத்து மாலையை அணிந்தவளோ ; வெண் பட்டு உடுத்தியவளோ; வீணையை மீட்டும் அழகிய கரங்களை உடையவளோ; வெள்ளைத் தாமைரயில் வீற்று இருப்பவளோ; பிரமன், விஷ்ணு, சிவன் ஆகியோரால் பூஜிக்கப் படுபவளோ; அந்த சரஸ்வதி தேவி என் அறியாமையின் இருளை அகற்றி என்னை காத்தருளவேண்டும்.
 

2. ஸ்ரீ ஸரஸ்வதி ஸ்துதி​


c2

ஸ்ரீமச் சந்த3ன சர்ச்சிதோஜ்வலவபு: சு’க்லாம்ப3ர மல்லிகா
மாலாலாலித குந்த3ளா ப்ரவிலஸன் முக்தாவளி சோ’ப4னா |
ஸர்வஜ்ஞான நிதா3ன புஸ்தகத4ரா ருத்ராக்ஷ மாலாங்கிதா
வாக்3தே3வி வத3நாம்பு4ஜே வஸதுமே த்ரைலோக்யமாதா சு’பா4 ||(2)


சந்தனக் கலைவையினால் ஜொலிக்கும் சரீரத்தை உடையவள்; மல்லிகை மாலை சூடிய கூந்தலை உடையவள்; பிரகாசிக்கும் முத்து மாலைகளால் அழகு பெற்றவள்; எல்லா அறிவையும் அளிக்கும் புத்தகங்களை ஏந்தியவள்; ருத்திராக்ஷ மாலையை அணிந்தவள்; அழகிய வடிவினை உடையவள்; மூன்று உலகங்களுக்கும் தாய்; வாக்குக்கு ஈஸ்வரி ஆகிய சரஸ்வதி அன்னை என் முக கமலத்தில் வசிக்க வேண்டும்.
 

Devi Sthuthi​


a11

தேவி மாஹாத்மியத்தில் அமைந்துள்ள
தேவி ஸ்துதிகளை மட்டும் காண்போம்!


உலகில் நிரம்பி வழியும் கலகங்களே போதும்!
கொலைக்களக் காட்சிகள் இங்கே வேண்டாமே!

அடுத்து வருவது மார்கண்டேய மகரிஷியின்
அர்க்கலா ஸ்தோத்திரம் எனப் புகழ் பெற்றது.
 

அர்க்க3லா ( 1 and 2)​


a21

ஜயந்தி மங்க3லா காளீ பத்3ரகாளி கபாலினீ |
துர்கா3 க்ஷமா சி’வா தா4த்ரீ ஸ்வாஹா ஸ்வதா4 நமோஸ்து தே || (1)


ஜயந்தீ, மங்கலா, காளீ, பத்ரகாளீ, கபாலினீ, துர்கா, க்ஷமா, சிவா, தாத்ரீ, ஸ்வாஹா, ஸ்வதா என்னும் பல பெயர்களைப் பெற்றுள்ள அன்னையே உனக்கு நமஸ்காரம்.

மது4கைடப4 வித்3ராவி விதா4த்ரு வரதே3நம: |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி || (2)


மது கைடபர்களை அழித்தவளே! பிரம்மதேவனுக்கு அருள் புரிந்தவளே !
உனக்கு என்னுடைய நமஸ்காரம். எனக்கு நல்ல ரூபத்தைத் தருவாய்!
நல்ல வெற்றியைத் தருவாய்! நல்ல புகழை அளிப்பாய்!
என் பகைவர்களை முற்றும் அழிப்பாய்!
 

அர்க்க3லா ( 3 and 4)​


a3

மஹிஷாஸுர நிர்நாச’ விதா4த்ரி வரதே3 நம : |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி || (3)

மகிஷாசுரனைக் கொன்று உலகினைக்காத்தவளே! பிரம்மதேவனுக்கு அருள் புரிந்தவளே! எனக்கு நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்! நல்ல புகழை அளிப்பாய்! என் பகைவர்களை முற்றும் அழிப்பாய்!

வந்தி3தாங்க்4ரி யுகே3 தே3வி சௌபா4க்3யதா3யினி |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி || (4)

உலகம் அனைத்தும் வணங்கும் திருவடிகளை உடையவளே!
தேவர்களுக்கு வெற்றி என்னும் சௌபக்கியத்தைத் தருபவளே!
எனக்கு நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்!
நல்ல புகழை அளிப்பாய்! என் பகைவர்களை முற்றும் அழிப்பாய்!
 

அர்க்க3லா ( 5 and 6)​


a4

ரக்த பீ3ஜ வதே4 தே3வி சண்ட3 முண்ட3 விநாஸினி |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி || (5)


ரக்த பீஜன் என்னும் கொடியவனை வதைத்தவளே!
சண்ட முண்டாசுரர்களைக் கண்டனம் செய்தவளே!
எனக்கு நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்!
நல்ல புகழை அளிப்பாய்! என் பகைவர்களை முற்றும் அழிப்பாய்!

அசிந்த்ய ரூப சரிதே ஸர்வ ச’த்ரு விநாஸினி |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி || (6)


நினைப்பதற்கே அரிய வடிவினையும் அற்புதமான வரலாற்றையும் உடையவளே!
எல்லாப் பகைவர்களையும் நாசம் செய்பவளே!
எனக்கு நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்!
நல்ல புகழை அளிப்பாய்! என் பகைவர்களை முற்றும் அழிப்பாய்!
 

அர்க்க3லா ( 7 and 8)​


a5

நதேப்4யோ ஸர்வதா3 பக்த்யா சண்டி3கே ப்ரணதாயமே |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி || (7)


பரப்ரம்ம ஸ்வரூபிணி ஆகிய அன்னையே!எப்போதும் மாறாத பக்தியுடன் உன்னை வணங்குவோருக்கும் எனக்கும நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்! நல்ல புகழை அளிப்பாய்! எம் பகைவர்களை முற்றும் அழிப்பாய்!

ஸ்துவத்ப்௪ : ப4க்திபூர்வம் த்வாம் சண்டி3கே வ்யாதி3 நாசி’னி |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி || (8)


சண்டிகையே! அனைத்து வியாதிகளையும் நாசம் செய்பவளே!பக்தியுடன் உன்னைத் துதிப்பபவர்களுக்கு நீ நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்! நல்ல புகழை அளிப்பாய்! அவர்களின் பகைவர்களை முற்றும் அழிப்பாய்!
 

அர்க்க3லா ( 9 and 10)​


a6

சண்டி3கே ஸததம் யே த்வாமர்சயந்தீஹ ப4க்தித: |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி || 9

சண்டிகையே! எவர் எவர் உன்னை எப்போதும் மாறாத பக்தியுடன்
அர்சிக்கின்றார்களோ அவர்களுக்கு நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்! நல்ல புகழை அளிப்பாய்! அவர்களின் பகைவர்களை முற்றும் அழிப்பாய்!

தே3ஹி சௌபா4க்4யமாரோக்3யம் தே3ஹிதே3வி பரம் ஸுக2ம் |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி || 10


தேவி! சௌபாக்கியத்தையும் ஆரோக்கியத்தையும் அளிப்பாய்.
பிரமானந்தம் ஆகிய பேரின்பத்தையும் அளிப்பாய்.
நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்!
நல்ல புகழை அளிப்பாய்! பகைவர்களை முற்றும் அழிப்பாய்!
 

அர்க்க3லா ( 11 and 12)​


a7

விதே4ஹி த்3விஷதாம் நாச’ம் விதே4ஹி ப3லமுச்சகை : |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி|| (11)


சத்ருக்களை நாசம் செய்வாய்! அற்புதமான பலத்தைத் தருவாய்!
நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்!
நல்ல புகழை அளிப்பாய்! பகைவர்களை முற்றும் அழிப்பாய்!

விதே4ஹி தே3வி கல்யாணம் விதே4ஹி விபுலாம் ச்’ரியம் |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி || (12)


தேவி! மங்கலத்தை அளிப்பாய்! நிறைந்த செல்வத்தை தருவாய்!
நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்!
நல்ல புகழை அளிப்பாய்! பகைவர்களை முற்றும் அழிப்பாய்!
 

அர்க்க3லா (13 and 14)​


a8

வித்3யாவந்தம் யச’ஸ்வந்தம் லக்ஷ்மிவந்தம் ஜனம் குரு |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி || 13


கல்விமான் ஆக்குவாய்! புகழ் பெற்றவன் ஆக்குவாய்!
செல்வம் படைத்தவனாகவும் இந்த மனிதர்களை ஆக்குவாய்!
நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்!
நல்ல புகழை அளிப்பாய்! பகைவர்களை முற்றும் அழிப்பாய்!

ப்ரசண்ட3 தை3த்ய த3ர்பக்4னே சண்டி3கே ப்ரணதாய மே |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி || 14

பெயர்பெற்ற தைத்தியர்களின் செருக்கை அழித்தவளே!
சண்டிகையே! வணங்கும் எனக்கு நல்ல ரூபத்தைத் தருவாய்!
நல்ல வெற்றியைத் தருவாய்! நல்ல புகழை அளிப்பாய்!
பகைவர்களை முற்றும் அழிப்பாய்!
 

அர்க்க3லா ( 15 and 16)​


a9

சதுர்பு4ஜே சதுர்வக்த்ர ஸம்ஸ்துதே பரமேச்’வரி |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி || 15


நான்கு புஜங்களை உடையவளே! நான் முகனால் துதிக்கப் படுபவளே! பரமேச்வரி! நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்! நல்ல புகழை அளிப்பாய்! பகைவர்களை முற்றும் அழிப்பாய்.

க்ருஷ்ணேன ஸம்ஸ்துதேதே3வி ச’ச்’வத்ப4க்த்யா ததா2ம்பி3கே |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி || 16

அம்பிகையே! தேவி! கிருஷ்ணபகவானால் இடைவிடாது பக்தியுடன் துதிக்கப் பட்டவளே! நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்! நல்ல புகழை அளிப்பாய்! பகைவர்களை முற்றும் அழிப்பாய்.
 

அர்க்க3லா (17 and 18)​


a10

ஹிமாசல ஸுதாநாத2 பூஜிதே பரமேச்’வரி |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி | | 17


பார்வதி நாதனால் பூஜிக்கப் பட்டவளே! பரமேச்வரி!
நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்!
நல்ல புகழை அளிப்பாய்! பகைவர்களை முற்றும் அழிப்பாய்!

ஸுராஸுர சி’ரோரத்ன நிக்4ருஷ்ட சரணேம்பிகே |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி| | 18


தேவர்களும் அசுரர்களும் தங்கள் கிரீடத்தில் உள்ள ரத்தினங்களால் தொட்டு வணங்கும் அழகிய பாதங்களை உடையவளே! அம்பிகையே! நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்! நல்ல புகழை அளிப்பாய்! பகைவர்களை முற்றும் அழிப்பாய்!
 

அர்க்க3லா (19 and 20)​


A

இந்த3ராணீபதி ஸத்3பா4வ பூஜிதே பரமேச்’வரி |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி | | 19

இந்திராணியின் பதியாகிய இந்திரனால் நன்கு பூஜிக்கப் பட்டவளே! பரமேஸ்வரி! நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்! நல்ல புகழை அளிப்பாய்! பகைவர்களை முற்றும் அழிப்பாய்!

தே3வி ப்ரசண்ட3தோ3ர்த3ண்ட3 தை3த்ய த3ர்ப விநாசி’னி |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி || 20


தேவி! கொடிய தோள் வலிமை படைத்த தைத்தியர்களின் கர்வத்தை நாசம் செய்தவளே! நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்! நல்ல புகழை அளிப்பாய்! பகைவர்களை முற்றும் அழிப்பாய்!
 

அர்க்க3லா (21 and 22)​


AA

தே3வி! ப4க்த ஜனோத்3தா3ம த3த்தானந்தோ3த3யேம்பி3கே |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி || 21


தேவி! பக்தர்களுக்கு பரமானந்தத்தின் மூலமான முக்தியை அளிப்பவளே!அம்பிகையே! நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்! நல்ல புகழை அளிப்பாய்! பகைவர்களை முற்றும் அழிப்பாய்!

பத்னீம் மனோரமாம் தே3ஹி மனோவ்ருத்தானுஸாரிணீம் |
தாரிணீம் து3ர்க3 ஸம்ஸார ஸாக3ரஸ்ய குலோத்3ப4வாம் || 22


மனதுக்கு இனியவளாகவும், மனதின் போக்கை அறிந்து நடந்து கொள்ளுபவளாகாவும், கடப்பதற்கு அரிய ஸம்சார சாகரத்தைக் கடக்க உதவுபவளாகவும், நல்ல குலத்தில் உதித்தவளும் ஆகிய மனைவியை அளிப்பாய்.

ப2லஸ்ருதி:

இத3ம் ஸ்தோத்ரம் படி2த்வா து மஹாஸ்தோத்ரம் படே2ன் நர: |
ஸ து ஸப்த ச’தி ஸங்க்2யா வர மாப்நோதி ஸம்பத3: ||


இந்த ஸ்தோதிரத்தைப் படித்த பிறகே தேவி மாஹாத்மியத்தைப் படிக்க வேண்டும்.
அதனால் சிறந்த பலன் கைக்கூடும், சகல சம்பத்தும் கிடைக்கும்.

இதி ஸ்ரீ மார்கண்டே3ய புராணே அர்க்க3லா ஸ்தோத்ரம் ஸமாப்தம். 🙏
 

From tomorrow onwards this will follow.​

தேவர்களின் ஸ்துதி (1)​

ஐந்தாவது அத்யாயத்தில் காணப்படும் தேவர்கள் செய்த தேவி ஸ்துதி இது.
 

தேவர்களின் ஸ்துதி(1)​

ஐந்தாவது அத்யாயத்தில் காணப்படும்
தேவர்கள் செய்த தேவி ஸ்துதி இது.

தே3வா ஊசு: || (8)

நமோ தே3வ்யை மஹா தே3வ்யை சி’வாயை ஸததம் நம : |
நம: ப்ரக்ருத்யை ப4த்3ராயை நியதா: ப்ரணதாஸ்மதாம் || (9)


தேவர்கள் கூறியது:-

தேவிக்கு நமஸ்காரம். மஹா தேவிக்கு நமஸ்காரம்.
மங்கள வடிவினளுக்கு என்றென்றும் நமஸ்காரம்.
இயற்கை என்கின்ற வடிவானவளுக்கு நமஸ்காரம்.
மங்கள ஸ்வரூபிணியான அன்னையை
அடக்க ஒடுக்கமாக நாங்கள் வழிபடுகின்றோம்.

ரௌத்3ராயை நமோ நித்யாயை கௌ3ர்யை தா4த்ர்யை நமோ நம:|
ஜ்யோத்ஸ்நாயை சேந்து3ரூபிண்யை ஸுகா2யை ஸததம் நம: || (10)


பயங்கர வடிவை உடைய தேவிக்கு நமஸ்காரம்.
நித்தியமானவளுக்கு நமஸ்காரம்.
கௌரிக்கு நமஸ்காரம்.
உலகையே தாங்குபவளுக்கு நமஸ்காரம்.
ஒளி வடிவானவளுக்கு நமஸ்காரம்.
சந்திரப்பிரபையை போன்ற தேவிக்கு நமஸ்காரம்.
இன்ப வடிவானவளுக்கு என்றென்றும் எங்கள் நமஸ்காரம்.
 

தேவர்களின் ஸ்துதி (2)​


ஐந்தாவது அத்யாயத்தில் காணப்படும்
தேவர்கள் செய்த தேவி ஸ்துதி இது.

கல்யாண்யை ப்ரணதாம் வ்ருத்3த்யை ஸித்3த்4யை குர்மோ நமோ நம : |
நைர்ருத்யை பூ4ப்4ருதாம் லக்ஷ்ம்யை ச’ர்வாண்யை தே நமோ நம : || (11)


சரணமடைந்தோருக்கு எல்லா நலன்களுமாகத் தானே ஆகியவளுக்கும், வளர்ச்சியும் வெற்றியும் ஆகியவளுக்கும், மீண்டும் மீண்டும் எங்கள் நமஸ்காரம். புவியாளும் அரசருக்கு அலக்ஷ்மியும் லக்ஷ்மியும் ஆகும் சிவனின் பத்தினிக்கு மீண்டும் மீண்டும் எங்கள் நமஸ்காரங்கள்.

து3ர்கா3யை துர்க3பாராயை ஸாராயை ஸர்வகாரிண்யை |
க்யாத்யை ததை2வ க்ருஷ்ணாயை தூ4ம்ராயை ஸததம் நம: || (12)


கஷ்டங்களைக் கடக்க உதவும் துர்க்கை வடிவினளும், அனைத்தின் சாராம்சம் ஆனவளும், அனைத்தயுமே ஆக்குபவளும், கியாதி வடிவினளும், கரிய நிறத்தவளும், புகை வடிவினளும் ஆன தேவிக்கு என்றென்றும் நமஸ்காரம்.
 

தேவர்களின் ஸ்துதி (3)​

ஐந்தாவது அத்யாயத்தில் காணப்படும்
தேவர்கள் செய்த தேவி ஸ்துதி இது.

அதிஸௌம்யாதி ரௌத்3ராயை நாதாஸ் தஸ்யை நமோ நம : |
நமோ ஜக3த்ப்ரதிஷ்ட்டா2யை தே3வ்யை க்ருத்யை நமோ நம : || (13)


இனிய வடிவினை உடையவளும், பயங்கர வடிவினை உடையவளும் ஆகிய தேவிக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம். உலகின் ஆதாரமாகவும், உலகின் இயக்கமாகவும் உள்ள தேவிக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.

யாதே3வி ஸர்வ பூ4தே ஷு விஷ்ணு மாயேதி ச’ப்3தி3தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : || (14 -16 )


எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் விஷ்ணு மாயை என்று கூறப்படுகின்றாளோ,
அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்
 

தேவர்களின் ஸ்துதி (4)​

ஐந்தாவது அத்யாயத்தில் காணப்படும்
தேவர்கள் செய்த தேவி ஸ்துதி இது.

யாதே3வி ஸர்வபூ4தே ஷு சேதநேத்யபி4தீ4யதே |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: || (17 -19)


எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் சைதன்ய வடிவினள் என்று கூறப்படுகின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யாதே3வி ஸர்வபூ4தே ஷு புத்3தி4ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: || (20 – 22)


எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் புத்திவடிவில் உறைகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
 

தேவர்களின் ஸ்துதி (5)​

ஐந்தாவது அத்யாயத்தில் காணப்படும்
தேவர்கள் செய்த தேவி ஸ்துதி இது.

யாதே3வி ஸர்வபூ4தே ஷு நித்3ராரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: ||(23 – 25)


எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் நித்திரைவடிவில் உறைகின்றாளோ,
அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யாதே3வி ஸர்வபூ4தே ஷு க்ஷுதா4ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: || (26 – 28)


எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் பசிவடிவில் உறைகின்றாளோ,
அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
 

தேவர்களின் ஸ்துதி (6)​

ஐந்தாவது அத்யாயத்தில் காணப்படும்
தேவர்கள் செய்த தேவி ஸ்துதி இது.

யாதே3வி ஸர்வபூ4தே ஷு ச்சா2யாரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: || (29 – 31)


எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் பிரதி பிம்பவடிவில் உறைகின்றாளோ,
அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யாதே3வி ஸர்வபூ4தே ஷு ச’க்தி ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: || (32 -34)


எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் சக்தி வடிவில் உறை கின்றாளோ,
அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

 

தேவர்களின் ஸ்துதி (7)​

ஐந்தாவது அத்யாயத்தில் காணப்படும்
தேவர்கள் செய்த தேவி ஸ்துதி இது.

யாதே3வி ஸர்வபூ4தே ஷு த்ருஷ்ணா ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: || (35 – 37)


எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் வேட்க்கையின் வடிவில் உறைகின்றாளோ,
அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யாதே3வி ஸர்வபூ4தே ஷு க்ஷாந்தி ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: || (38 – 40)


எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் பொறுமையின் வடிவில் உறைகின்றாளோ,
அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
 

தேவர்களின் ஸ்துதி (8)​

ஐந்தாவது அத்யாயத்தில் காணப்படும்
தேவர்கள் செய்த தேவி ஸ்துதி இது.

யாதே3வி ஸர்வபூ4தே ஷு ஜாதி ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: || (41 – 43)


எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் ஜாதியின் வடிவில் உறைகின்றாளோ,
அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யாதே3வி ஸர்வபூ4தே ஷு லஜ்ஜா ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: || (44 – 46)


எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் நாணத்தின் வடிவில் உறைகின்றாளோ,
அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
 
Back
Top