Sahasra nAma AvaLi

தேவியின் உறுதி மொழி (20)​

# 35.
ப்ரணதானாம் ப்ரஸீத த்வம் தே3வி விச்’வார்த்தி ஹாரிணி |
த்ரைலோக்ய வாஸீனாமீட்3யே லோகானாம் வரதா3 ப4வ ||


தேவி! மூன்று உலகங்களில் வசிப்பவர்களும் போற்றுபவளே! உலகனைத்தின் இன்னல்களைப் போக்குகின்றவளே! நீ உலகங்களுக்கு சிறந்த நன்மைகளையே புரிவாய். உன்னை வணங்குவோருக்கு அருள் பாலிப்பாய்.

# 36.
தே3வ்யு வாச||

# 37.
வரதா3ஹம் ஸுரக3ணா வரம் யன் மனசேச்ச2த |
த்வம் வ்ருணுத்4வம் ப்ரயச்சா2மி ஜக3தமுபகாரகம் ||


தேவி கூறியது :-
தேவ கணங்களே!உலகுக்கு பயன் அளிக்கும் எந்த வரத்தையும் நீங்கள் என்னிடம் கோரலாம். நான் அதை உங்களுக்கு அளிப்பேன்.
 

தேவியின் உறுதி மொழி (21)​

# 38.
தே3வா ஊசு : ||

# 39 .
ஸர்வாபா3தா4 ப்ரச’மனம் த்ரைலோக்யஸ்யாகிலேச்’வரி |
ஏவமேவ த்வயா கார்யமஸ்மாத்3வைரி விநாச’னம் ||


அகில உலகின் நாயகியே! இவ்வாறே மூன்று உலகங்களின் துன்பங்கள் முழுவதும் அழிக்கப்பட வேண்டும். உன்னால் எங்கள் சத்ருக்கள் நாசம் செய்யப்பட வேண்டும்.

# 40.
தேவ்யுவாச ||

# 41 .
வைவஸ்வதேன்தரே ப்ராப்தே
அஷ்டாவிம்ச்திமே யுகே3 |
சு’ம்போ நிசு’ம்பாஸ் சைவான்யா
வுத்பத்ஸ்யேதே மஹா ஸுரௌ ||


தேவி கூறியது:-
வைவஸ்வத மன்வந்தரத்தில், இருபத்தெட்டாவது சதுர் யுகம் நிகழும்போது, சும்பன், நிசும்பன் என்ற இரண்டு கொடிய அசுரர்கள் தோன்றப் போகின்றார்கள்
 

தேவியின் உறுதி மொழி (22)​


# 42.
நந்த3கோ3ப க்3ருஹே ஜாதா யசோ’தா3 க3ர்ப்ப4 ஸம்ப4வா |
ததஸ்தௌ நாச’யிஷ்யாமி விந்த்4யாசல நிவாஸிநீ ||


யசோதையின் கர்ப்பத்தில் தோன்றி, நந்தகோபர் இல்லத்தில் பிறந்து, விந்தியாசலத்தில் வசிக்கப்போகும் நான், அப்போது அந்த அசுரர்களை நாசம் செய்யப்போகின்றேன்.

# 43
புனரப்யதிரௌத்3ரேண ரூபேண ப்ருதிவீதலே |
அவதீர்ய ஹநிஷ்யாமி வைப்ரசித்தாம்ஸ்து த3னவான் ||


மீண்டும் பூலோகத்தில் மிகவும் பயங்கரமான வடிவில் அவதரித்து,
வைப்ரசித்தர்கள் என்னும் அசுரர்களையும் நாசம் செய்வேன்.

# 44
ப4க்ஷயந்த்யாச்’ச தானுக்3ரான் வைப்ரசித்தான் மஹாஸுரான் |
ரக்த த3ந்தா ப4விஷ்யந்தி தா3டி3மீ குஸுமோபமா : ||


மிகவும் கொடிய அசுரகள் ஆகிய அந்த வைப்ரசித்தர்களை நான் உண்ணும் போது, என்னுடைய பற்கள் மாதுளம் பூவைப் போன்று சிவந்து காணப்படும்.
 

தேவியின் உறுதி மொழி (23)​

# 45.
ததோ மாம் தே3வதா : ஸ்வர்கே3 மர்த்ய லோகே சா மானவா: |
ஸ்துவந்தோ வ்யாஹரிஷ்யந்தி ஸததம் ரக்த த3ந்திகாம் ||


அதனால் சுவர்க்கத்தில் உள்ள தேவர்களும், மனித உலகில் வாழும் மனிதர்களும் என்னை ‘ரக்ததந்திகா’ என்ற பெயரால் குறிப்பிடுவார்கள்.

# 46.
பூ4யச்’ச ச’த வார்ஷிக்யா மனாவ்ருஷ்ட்யா மனாம்ப4ஸி |
முனிபி4:ஸம்ஸ்துதா பூ4மௌ ஸம்பவிஷ்யாம்யயோநிஜா ||


மறுபடியும் நூறு வருடங்கள் மழை பெய்யாமல் இருக்க, முனிவர்களால் துதிக்கப்பட்டு நீரின்றி வறண்ட பூமியில், கர்ப்பவாசம் செய்யாமலேயே நான் தோன்றுவேன்.
 

தேவியின் உறுதி மொழி (24)​


# 47.
தத: ச’தேன நேத்ராணாம் நிரீக்ஷிஷ்யாமி யன்முனீன் |
கீர்தயிஷ்யந்தி மனுஜா : ஸதாக்ஷீமிதி மாம் தத: ||


அப்போது முனிவர்களை நான் நூறு கண்கள் கொண்டு பார்க்கப் போவதால் மனிதர்கள் என்னை ‘சதாக்ஷீ’ என்ற போற்றுவார்.

# 48.
ததோஹமகி2லம் லோகமாத்மதேஹ ஸமுத்3ப4யை : |
ப4ரிஷ்யாமி ஸுரா: சா’கைராவ்ருஷ்டே: ப்ராணதா4ரகை: ||


பின்னர் மழை பெய்யும் வரை, உயிரைக் காக்கும் ஔ ஷதிகளை என்னுடைய உடலிலிருந்தே தோற்றுவித்து, அவற்றால் உலகைப் போஷிக்கப்போகின்றேன்.
 

தேவியின் உறுதி மொழி (25)​


# 49.
சா’கம்ப4ரீதி விக்யாதிம் ததா3 யாஸ்யாம்யஹம் பு4வி |
தத்ரைவ ச வதி4ஷ்யாமி து3ர்க்கமாக்2யம் மஹாஸுரம் ||


அப்போது பூமியில் நான் சாகம்பரீ என்று புகழ் அடைவேன்.
அதே காலத்தில் துர்க்கமன் என்னும் கொடிய அசுரனையும் வதம் செய்வேன்.

# 50
து3ர்க்கா3 தே3விதி விக்2யாதம் தன்மே நாம ப4விஷ்யதி |
புனச்’சாஹம் யதா3 பீ4மம் ரூபம் க்ருத்வா ஹிமாச்சலே ||


அதனால் எனக்கு துர்க்காதேவி என்னும் சிறந்த பெயர் ஏற்படும்.
மீண்டும் இமயமலையில் முனிவர்களைக் காப்பாற்ற ஒரு பயங்கரமான
வடிவத்தை எடுத்துக் கொண்டு ராக்ஷசர்களை அழிப்பேன்.
 

தேவியின் உறுதி மொழி(26)​

# 49.
சா’கம்ப4ரீதி விக்யாதிம் ததா3 யாஸ்யாம்யஹம் பு4வி |
தத்ரைவ ச வதி4ஷ்யாமி து3ர்க்கமாக்2யம் மஹாஸுரம் ||


அப்போது பூமியில் நான் சாகம்பரீ என்று புகழ் அடைவேன்.
அதே காலத்தில் துர்க்கமன் என்னும் கொடிய அசுரனையும் வதம் செய்வேன்.

# 50
து3ர்க்கா3 தே3விதி விக்2யாதம் தன்மே நாம ப4விஷ்யதி |
புனச்’சாஹம் யதா3 பீ4மம் ரூபம் க்ருத்வா ஹிமாச்சலே ||

# 51
ரக்ஷாம்ஸி ப4க்ஷயிஷ்யாமி முனீனாம் த்ராணகாரணாத் |
ததா3 மாம் முனய: ஸர்வே ஸ்தோஷ்யந்த்யா நம்ரமூர்த்தய : ||

# 52.
பீ4மா தே3வீதி விக்யாதம் தன்மே நாம ப4விஷ்யதி |
யதா3ருணாக்யஸ் த்ரைலோக்யே மஹாபா3தா4ம் கரிஷ்யதி ||

# 53.
ததா3ஹம் ப்4ராமரம் ரூபம் க்ருத்வா ஸங்க்யேய ஷட்பத3ம் |
த்ரைலோக்யஸ்ச ஹிதார்தா2ய வதி3ஷ்யாமி மஹாஸுரான் ||


அதனால் எனக்கு துர்க்காதேவி என்னும் சிறந்த பெயர் ஏற்படும்.
மீண்டும் இமயமலையில் முனிவர்களைக் காப்பாற்ற ஒரு பயங்கரமான
வடிவத்தை எடுத்துக் கொண்டு ராக்ஷசர்களை அழிப்பேன்.
அப்போது முனிவர்கள் என்னைத் தலை வணங்கி
எனக்கு பீமா தேவி என்ற சிறந்த பெயரை அளிப்பார்கள்.
அருணன் என்னும் அசுரன் மூன்று உலகங்களுக்கும் கொடுமை
இழைக்கும்போது நான் ஆறு கால்களுடைய வண்டுக்களின்
கூட்டமாகத் தோன்றி அக்கொடிய அசுரனை வதம் செய்வேன்.
 

தேவியின் உறுதி மொழி (27)​


# 55.
ததா3ததா3வதீர்யாஹம் கரிஷ்யாம்யரி ஸம்க்ஷயம் || ஓம் ||


அப்போது உலக மக்கள் எல்லோரும் எங்கும் என்னை ‘ப்ராமரீ’ என்ற பெயரில் துதிக்கப் போகின்றார்கள். இவ்வாறு எப்போதெல்லாம் தானவர்களின் வளர்ச்சியும், நல்லவர்களின் தளர்ச்சியும் ஏற்படுகின்றதோ, அப்போதெல்லாம் நான் அவதரித்து சத்ருக்களை நாசம் செய்வேன்.

ஓம் ஜெய ஜெய ஸ்ரீ மார்கண்ட3புராணே ஸாவர்ணிகே மன்வன்தரே
தே3விமாஹாத்ம்யே ஏகாத3சோ’த்3யாய:


ஓம் ஜெய ஜெய ஸ்ரீ மார்கண்டேய புராணத்தில் ஸாவர்ணிக மன்வந்தரத்தில் உள்ள தேவி மஹாத்மியத்தில் பதினோராவது அத்தியாயம் முற்றிற்று.

அன்னையின் புகழ் வாழ்க! அன்னையின் புகழ் வளர்க! 🙏
அன்னையின் அருள் அனைவருக்கும் நல்லறிவையும்,
நல்ல வாழ்க்கை நெறியையும், நீண்ட ஆயுளையும் தருக! 🙏
 
Back
Top