Sahasra nAma AvaLi

தேவர்களின் ஸ்துதி (9)​


ஐந்தாவது அத்யாயத்தில் காணப்படும்
தேவர்கள் செய்த தேவி ஸ்துதி இது.

யாதே3வி ஸர்வபூ4தே ஷு சா’ந்தி ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: || (47 – 49)


எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் சாந்தி வடிவில் உறைகின்றாளோ,
அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யாதே3வி ஸர்வபூ4தே ஷு ச்’ரத்3தா4 ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: || (50 – 52)


எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் சிரத்தையின் வடிவில் உறைகின்றாளோ,
அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
 

தேவர்களின் ஸ்துதி (10)​

ஐந்தாவது அத்யாயத்தில் காணப்படும்
தேவர்கள் செய்த தேவி ஸ்துதி இது.

யாதே3வி ஸர்வபூ4தே ஷு காந்தி ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : || (53 – 55)


எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் காந்தியின் வடிவில் உறைகின்றாளோ,
அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யாதே3வி ஸர்வபூ4தே ஷு லக்ஷ்மீ ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : || (56 – 58)


எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் செல்வத்தின் வடிவில் உறைகின்றாளோ,
அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
 

தேவர்களின் ஸ்துதி (11)​

ஐந்தாவது அத்யாயத்தில் காணப்படும்
தேவர்கள் செய்த தேவி ஸ்துதி இது.

யாதே3வி ஸர்வபூ4தே ஷு வ்ருத்தி ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : || (59 – 61)


எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் ஜீவனோபாயம் என்னும் வடிவில் உறைகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யாதே3வி ஸர்வபூ4தே ஷு ஸ்ம்ருதி ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : || (62 – 64)


எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் ஞாபக சக்தியின் வடிவில் உறைகின்றாளோ,
அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
 

தேவர்களின் ஸ்துதி (12)​

ஐந்தாவது அத்யாயத்தில் காணப்படும்
தேவர்கள் செய்த தேவி ஸ்துதி இது.

யாதே3வி ஸர்வபூ4தே ஷு த3யா ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: || (65 – 67)


எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் இரக்கத்தின் வடிவில் உறைகின்றாளோ,
அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யாதே3வி ஸர்வபூ4தே ஷு துஷ்டி ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம: || (68 – 7
0)

எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் திருப்தியின் வடிவில் உறைகின்றாளோ,
அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
 

தேவர்களின் ஸ்துதி (13)​

ஐந்தாவது அத்யாயத்தில் காணப்படும்
தேவர்கள் செய்த தேவி ஸ்துதி இது.

யாதே3வி ஸர்வபூ4தே ஷு மாத்ரு ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : || (71 – 73)


எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் தாயின் வடிவில் உறைகின்றாளோ,
அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யாதே3வி ஸர்வபூ4தே ஷு ப்4ராந்தி ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : || (74 -76)


எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் மயக்கத்தின் வடிவில் உறைகின்றாளோ,
அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
 

தேவர்களின் ஸ்துதி (14)​

ஐந்தாவது அத்யாயத்தில் காணப்படும்
தேவர்கள் செய்த தேவி ஸ்துதி இது.

இந்த்3ரியாணாமதி4ஷ்டாத்ரீ பூ4தானாஞ்சாகி2லே ஷுயா |
பூ4தே ஷு ஸததம் தஸ்யை வ்யாப்திதே3வ்யை நமோ நம: || (77)


எந்ததேவி இந்திரியங்களை ஆள்பவளாக, எல்லா உயிர்களிடத்தும்,
எல்லாப் பொருட்களிடத்தும் வியாபித்து நிற்கின்றாளோ;
அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

சிதிரூபேண யா க்ருத்ஸனமேதத் வ்யாப்ய ஸ்திதா ஜக3த் |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை|| நமஸ்தஸ்யை நமோ நம: || (78 – 80)


எந்ததேவி இந்த உலகம் முழுவதிலும் சைதன்யவடிவினளாக வியாபித்து நிற்கின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
 

தேவியின் உறுதி மொழி (1)​


தேவி ஸ்துதி (பதினோராவது அத்தியாயத்தில் காணப்படுவது).

தே3வி ப்ரபன்னார்த்திஹரே ப்ரஸீத3
ப்ரஸீத3 மாதர் ஜக3தோகி2லஸ்ய |
ப்ரஸீத3 விச்’வேச்’வரி பாஹி விஸ்வம்
த்வமீச்’வரி தே3வி சராசரஸ்ய || (3)


தேவி! சரணம் அடைந்தவர்களின் துன்பங்களைத் துடைத்தருள்பவளே! அருள்புரிவாய்! அருள்புரிவாய்! உலகனைத்துக்கும் அன்னையே! அருள்புரிவாய்! உலகத்தின் ஈஸ்வரி! உலகினைக் காப்பாய்! தேவி! நீயே சரம், அசரம் ஆகிய அனைத்தையும் ஆள்பவள்.
 

தேவியின் உறுதி மொழி (2)​

தேவி ஸ்துதி ( பதினோராவது அத்தியாயத்தில் காணப்படுவது)
.
ஆதா4ரபூ4தா ஜகதஸ்த்வமேகா
மஹீஸ்வரூபேண யத: ஸ்தி2தாஸி |
அபாம் ஸ்வரூப ஸ்தி2தயா த்வயைத
தா3ப்யாயதே க்ருத்ஸ்ன மலங்க்4யவீர்யே || (4)


பிருதிவியின் வடிவில் இருப்பதனால் உலகிற்கு நீ ஒருத்தியே ஆதாரம் ஆகின்றாய். கடப்பதற்கரிய வீரியம் வாய்ந்தவளே! நீரின் வடிவில் நீ இருப்பதனாலேயே இது நிகழ்கின்றது.
 

தேவியின் உறுதி மொழி (3)​

தேவி ஸ்துதி (பதினோராவது அத்தியாயத்தில் காணப்படுவது).

த்வம் வைஷ்ணவீ ச’க்திரானந்த வீர்யா
விச்வஸ்ய பீ3ஜம் பரமாஸி மாயா |
ஸம்மோஹிதம் தே3வி ஸமஸ்தமேதத்
த்வம் வை ப்ரஸன்னா பு4வி முக்திஹேது || (5)


அளவுகடந்த வீரியம் படைத்த விஷ்ணுவின் சக்தி நீயே!
உலகத்தின் வித்தாககிய மஹாமாயையும் நீயே!
எல்லாமே உன்னாலேயே மயக்கத்தில் ஆழ்த்தப்பட்டுள்ளன!
நீ அருள் செய்தால் மட்டுமே முக்தி என்பது சாத்தியம்.
 

தேவியின் உறுதி மொழி (4)​

தேவி ஸ்துதி (பதினோராவது அத்தியாயத்தில் காணப்படுவது).

வித்3யா: ஸமஸ்தாஸ் தவ தே3வி பே4தா3:
ஸ்த்ரிய: ஸமஸ்தா: ஸகலா ஜக3த்ஸு |
த்வயைகயா பூரித மம்ப3யைதத்
கா தே ஸ்துதி: ஸ்தவ்ய பராபரோக்தி: || (6)


எல்லா வித்தைகளும் உனது அம்சங்களே ஆகும். கலையுடன் கூடிய எல்லாப் பெண்களும் உன்னுடைய வெவ்வேறு வடிவங்களே ஆவார்கள். உன்னாலேயே உலகு முழுவதும் நிறைந்து உள்ளதால் நீயே அனைத்துக்கும் ஒரே தாய். துதி செய்வதற்கு உரிய பரமும் அபரமும் ஆகிய வாக்குகளே நீ என்னும் போது, உன்னைத் துதிப்பது எங்கனம் என்று கூறு?
 

தேவியின் உறுதி மொழி (5)​

தேவி ஸ்துதி (பதினோராவது அத்தியாயத்தில் காணப்படுவது).

# 7.
ஸர்வ பூ4த யதா3 தே3வி ஸ்வர்க3 முக்தி ப்ர3தாயிநீ|
த்வம் ஸ்துதா ஸ்துதயே காவா ப4வந்து பரமோக்தய : ||


எல்லாமாக நீயே உள்ளாய்! போகத்தையும் மோக்ஷத்தையும் அளிக்கும் பரதேவதையும் நீயே! இத்தனை சிறப்புக்கள் உடைய உன்னை எத்தனை சிறப்புடைய சொற்களாலுமே துதிக்க முடியாது.

# 8.
ஸர்வஸ்ய புத்3தி4 ரூபேண ஜனஸ்ய ஹ்ருதி3 ஸம்ஸ்திதே|
ஸ்வர்க்கா3பவர்க3தே3 தே3வி நாராயணி நமோஸ்துதே ||


எல்லா ஜீவராசிகளின் இதயத்திலும், புத்தி வடிவிலும் உறைபவளும்; சுவர்க்கத்தையும், மோக்ஷத்தையும் அளிப்பவளும் ஆகிய நாராயணீ தேவிக்கு நமஸ்காரம்.
 

தேவியின் உறுதி மொழி (6)​

தேவி ஸ்துதி (பதினோராவது அத்தியாயத்தில் காணப்படுவது).

# 9.
கலா காஷ்டாதி3ரூபேண பரிணாம ப்ரதா3யினி |
விச்’வஸ்யோபரதௌ ச’க்தே நாராயணீ நமோஸ்துதே ||


கலை வடிவிலும், காலத்தின் அளவாகிய காஷ்டை முதலிய வடிவங்களிலும் இருந்து கொண்டு, மாற்றங்களை ஏற்படுத்தி, உலகின் ஒடுக்கத்துக் காரண சக்தியாக இருக்கும் நாராயணிதேவியே நமஸ்காரம்.

# 10.
ஸர்வமங்க3ள மாங்க3ல்யே சி’வே ஸர்வார்த்த2 ஸாதி4கே |
ச’ரண்யே த்ரயம்ப3கே கௌ3ரி நாராயணீ நமோஸ்துதே ||


எல்லா மங்கலப் பொருட்களின் மங்களமாகத் திகழ்பவளே!
எல்லா நன்மைகளையும் தருபவளே!
எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்றுபவளே!
சரணம் அடைவதற்கு தகுந்தவளே!
மூன்று நயனங்களை உடையவளே!
நாராயணீ தேவியே ! நமஸ்காரம்.
 

தேவியின் உறுதி மொழி (7)​


# 11.
ஸ்ருஷ்டி ஸ்தி2தி வினாசா’னாம் ச’க்திபூ4தே ஸநாதனி |
கு3ணாச்’ரயே கு3ணமயே நாராயணீ நமோஸ்துதே ||


ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம் என்னும் மூன்று தொழில்களுக்கும் காரண சக்தியானவளே! என்றும் இருப்பவளே! எல்லா குணங்களின் இருப்பிடம் ஆனவளே! குணங்களையே உன் வடிவாகக் கொண்டுள்ளவளே! நாராயணீ தேவியே! நமஸ்காரம்.

# 12.
ச’ரணாக3த தீ3னார்த்த பரித்ராண பராயணே |
ஸர்வஸ்யார்த்தி ஹரே தே3வி நாராயணீ நமோஸ்துதே ||


உன்னைச் சரணம் அடைந்த தீனர்களையும், துன்பத்தில் உழல்பவர்களையும் காப்பாற்றுவதையே உன் தொழிலாகக் கொண்டுள்ளவளே! எல்லோர் துயரையும் துடைப்பவளே! நாராயணீ தேவியே! நமஸ்காரம்
 

தேவியின் உறுதி மொழி (8)​

தேவி ஸ்துதி (பதினோராவது அத்தியாயத்தில் காணப்படுவது).

# 13.
ஹம்ஸயுக்த விமானஸ்தே ப்3ரஹ்மாணீ ரூப தா4ரிணி |
கௌசாம்ப4: க்ஷரிகே தே3வி நாராயணீ நமோஸ்துதே ||


ஹம்சப் பறவை பூட்டிய விமானத்தில் உறைபவளே ! பிரம்மாணீ வடிவை எடுத்தவளே! கூர்ச்சத்தினால் தீர்த்தத்தைப் புரோக்ஷிப்பவளே! நாராயணீ தேவியே! நமஸ்காரம்.

# 14.
த்ரிசூ’ல சந்த்3ராஹி த4ரே மஹா வ்ருஷப4வாஹினி |
மாஹேச்’வரி ஸ்வரூபேண நாராயணீ நமோஸ்துதே ||


மகேஸ்வரியாக வடிவம் எடுத்து திரிசூலத்தையும், சந்திரனையும், விஷ நாகத்தையும் அணிபவளே! விருஷபத்தை வாகனமாகக் கொண்டவளே! நாராயணீ தேவியே! நமஸ்காரம்.
 

தேவியின் உறுதி மொழி (9)​

தேவி ஸ்துதி (பதினோராவது அத்தியாயத்தில் காணப்படுவது).

# 15.
மயூர குக்குட வ்ருதே மஹாச’க்தி த4ரோனகே4 |
கௌமாரீ ரூப ஸம்ஸ்தாநே நாராயணீ நமோஸ்துதே ||


கௌமாரீ தேவியாக வடிவம் எடுத்துப் பெரிய வேலாயுதத்தைத் தங்கியவளே! மயிலும், சேவலும் சூழப் பெற்றவளே! பாபமற்றவளே! நாராயணீ தேவியே! நமஸ்காரம்.

# 16
ச’ங்க சக்ர க3தா3 சா’ர்ங்க3 க்3ருஹீத பரமாயுதே4 |
ப்ரஸீத வைஷ்ணவி ரூபே நாராயணீ நமோஸ்துதே ||


வைஷ்ணவீ தேவியாக வடிவம் எடுத்து சங்கு, சக்கரம், கதை, வில் ஆகிய சிறந்த ஆயுதங்களை ஏந்தியவளே! நாராயணீ தேவியே! அருள் புரிவாய்!
 

தேவியின் உறுதி மொழி (10)​

# 17.

க்3ருஹீதோக்3ர மஹாசக்ரே த3ம்ஷ்ட்ரோத்3த்4ருத வஸுந்த4ரே|
வராஹ ரூபிணி சி’வே நாராயணீ நமோஸ்துதே ||


தெற்றுப் பல்லில் பூமியையே தூக்கிக் கொண்டு நின்ற வராஹரூபம் தரித்து, பெரிய சக்கராயுதத்தை ஏந்திய மங்கள வடிவினளே! நாராயணீ தேவியே! நமஸ்காரம்.

# 18
ந்ருசிம்ஹ ரூபேணோக்3ரேண ஹந்தும் தை3த்யான் க்ருதோத்3யமே |
த்ரைலோக்ய த்ராண ஸஹிதே நாராயணீ நமோஸ்துதே ||


உக்கிரமான நரசிம்ஹ வடிவம் எடுத்துக்கொண்டு, மூவுலகையும் காப்பதற்காக அசுரர்களைக் கொல்ல முற்பட்டவளே! நாராயணீ தேவியே! நமஸ்காரம்.
 

தேவியின் உறுதி மொழி (11)​

# 19
கிரீடினி மஹாவஜ்ரே ஸஹஸ்ர நயநோஜ்ஜ்வலே |
வ்ருத்ர ப்ராணஹரே சைந்த்3ரி நாராயணீ நமோஸ்துதே ||


கிரீடம் தரித்து, பெரிய வஜ்ஜிராயுதத்தைத் தாங்கி, ஆயிரம் கண்களுடன் ஜொலிக்கும் இந்திரனின் சக்தியே! விருத்திராசுரனை அழித்தவளே! நாராயணீ தேவியே! நமஸ்காரம்.

# 20.
சி’வதூ3தி ஸ்வரூபேண ஹததை3த்ய மஹாப3லே |
கோ4ரரூபே மஹாராவே நாராயணீ நமோஸ்துதே ||


கோரமான வடிவமும், பயம் தரும் த்வனியையும் உடையவளே! மிகுந்த பலம் பொருந்திய சிவதூதியின் வடிவில் அசுரர்களை அழித்தவளே! நாராயணீ உனக்கு நமஸ்காரம்.
 

தேவியின் உறுதி மொழி (12)​


# 21
த3ம்ஷ்ட்ரா கரால வத3னே சி’ரோமாலா விபூ4ஷணே |
சாமுண்டே3 முண்ட3 மத2னே நாராயணீ நமோஸ்துதே ||


தலைமாலையை ஆபரணமாகத் தரித்துக்கொண்டு, தெற்றுப் பற்களுடன் விளங்கும் சாமுண்டா தேவியே! முண்டாசுரனை வதைத்தவளே! நாராயணீ தேவியே! நமஸ்காரம்.

# 22.
லக்ஷ்மி லஜ்ஜே மஹா வித்3யே ச்’ரத்3தே4 புஷ்டி ஸ்வதே4 த்4ருவே |
மஹா ராத்ரி மஹா வித்3யே நாராயணீ நமோஸ்துதே ||


லக்ஷ்மி தேவியாகவும், லஜ்ஜையாகவும், மஹாவித்யையாகவும், சிரத்தையாகவும், புஷ்டி அளிக்கும் ஸ்வதா தேவியாகவும், மஹாராத்ரியாகவும், மஹா மாயையாகவும் நிலை பெற்று விளங்குபவளே ! நாராயணீ தேவியே! நமஸ்காரம்.
 

தேவியின் உறுதி மொழி (13)​


# 23.
மேதே4 ஸரஸ்வதி வரே பூ4தி ப3ப்4ராவி தாமஸி |
நியதே தம் ப்ரசீதே3சே’ நாராயணி நமோஸ்துதே ||


சிறந்தே மேதா தேவி நீயே! சரஸ்வதியும் நீயே ! ஐஸ்வரியமும், விஷ்ணு சக்தியும் நீயே! தாமஸ வடிவினளாகவும், இயற்கை வடிவினள் ஆகவும் விளங்குபவள் நீயே! ஈஸ்வரி அருள் புரிவாய்! நாராயணீ உனக்கு நமஸ்காரம்.

# 24.
ஸர்வஸ்வரூபே ஸர்வேசே’ ஸர்வ ச’க்தி ஸமன்விதே |
ப4யேப்யஸ் த்ராஹி நோ தே3வி து3ர்க்கே தே3வி நமோஸ்துதே ||


அனைத்து வஸ்துகளின் வடிவம் நீயே!
அனைத்தையும் ஆள்பவள் நீயே!
அனைத்து சக்தியும் பொருந்தியவள் நீயே!
பயங்கரமானவைகளில் இருந்து எங்களைக் காப்பாய்!
துர்க்கா தேவியே! நமஸ்காரம்!
 

தேவியின் உறுதி மொழி (14)​


# 25.
ஏதத்தே வத3னம் ஸௌம்யம் லோச்சனத்ரய பூ4ஷிதம் |
பாது ந: ஸர்வ பீ4திப்4ய: காத்யாயனி நமோஸ்துதே ||


அழகு மிகுந்து விளங்குவதும், மூன்று கண்களால் அலங்கரிக்கப் பட்டதும் ஆன உன்னுடைய முகம் எங்களை எல்லா பயங்களில் இருந்தும் காக்க வேண்டும்.
காத்யாயனீ! உனக்கு நமஸ்காரம்.

# 26
ஜ்வாலா கரால மத்யுக்3ர மசேஷாஸுர ஸூத3னம் |
த்ரிசூ’லம் பாது நோ பீ4தே பத்3ரகாலி நமோஸ்துதே ||


பயங்கரமான சுவாலை வீசுவதும், மிகுந்த கூர்மை உடையதும்,
அசுரர்களை மொத்தமாக அழிக்கும் உன்னுடைய த்ரிசூலம் எங்களை
பயத்திலிருந்து காக்க வேண்டும். பத்ரகாளியே! உனக்கு நமஸ்காரம்.
 

தேவியின் உறுதி மொழி (15)​


# 27.
ஹிநஸ்தி தை3த்ய தேஜாம்ஸி ஸ்வனேனாபூர்யா யா ஜகத் |
ஸா க4ண்டா பாது நோ தே3வி பாபேப்4யோsன: ஸுதானிவ ||


தன் நாதத்தினால் உலகை நிரப்பி தைத்தியர்களின் வீரியத்தை அழிக்கின்ற அந்த மணி, சகடத்திடையில் விழுவதில் இருந்து புத்திரர்களைத் தாய் காப்பது போல எங்களைப் பாவங்களில் இருந்து காக்கட்டும்.

# 28.
அஸுராஸ்ருக்3வஸாபங்க சர்ச்சிதஸ்தே கரோஜ்ஜ்வல: |
சு’பா4ய கட்3கோ3 ப4வது சண்டி3கே த்வம் நதா வயம் ||


அசுரகளின் ரத்தமும், கொழுப்பும் கலந்த சேற்றால் பூசப்பட்டதும்; கிரணம் விடும் ஒளி பொருந்தியதுமான உனது வாள் நன்மை பயக்கட்டும். சண்டிகையே! உன்னை நாங்கள் வணங்குகின்றோம்.
 

தேவியின் உறுதி மொழி (16)​


# 29.
ரோக3னசே’ஷா னபஹம்சி துஷ்டா
ருஷ்டா து காமான் ஸகலானபீ4ஷ்டான் |
த்வாமாச்’ரிதானாம் ந விபன் நராணாம்
த்வாமாச்’ரிதா ஹ்யாச்’ரயதாம் ப்ரயாந்தி ||


தேவி! நீ சந்தோஷம் அடைந்தால் எல்லா வியாதிகளையும் அறவே போக்குகின்றாய்! கோபத்தினால், வேண்டப்படும் ஆசைகளை எல்லாம் அறவே ஒழிக்கின்றாய்! உன்னை அண்டியவர்களுக்கு எந்த விபத்தும் நேராது. உன்னை அண்டுபவர்கள் பிறர் அண்டுதற்குத் தகுதி அடைத்து விடுகின்றார்களே!

# 30
ஏதத் க்ருதம் யத் கத3னம் த்வயாத்3ய
த4ர்மத்3விஷம் தே3வி மஹா ஸுராணாம் |
ரூபைரநேகைர் ப3ஹுதா4த்ம மூர்த்திம்
க்ருத்வம்பி3கே தத் ப்ரகரோதி கான்யா||


தேவி! தர்மத்தைப் பகைக்கும் கொடிய அசுரர்களை வதைக்க, உன் மூர்த்தியையே பலவாக்கி, பல வடிவங்களில் பல அசுரர்களை அழித்து போல, உன்னைத் தவிர யாரால் செய்ய இயலும் ?
 

தேவியின் உறுதி மொழி (17)​

# 31.

வித்3யாஸு சா’ஸ்த்ரே ஷு விவேக தீ3பேஷ் –
வாத்3யே ஷு வாக்யே ஷு ச கா த்வத3ன்யா |
மமத்வக3ர்தேதி மஹாந்த4காரே
விப்4ராமயத்யேத த3தீவ விச்’வம் ||


வித்தைகளிலும், சாஸ்திரங்களிலும், விவேகத்தின் விளக்காகிய வேதங்களின் வாக்கியங்களிலும் பேசப்படுவது உன்னை அன்றி வேறு எவர்? இவ்வுலகை மமதையால் கவ்வப்பட்ட கொடிய அஞ்ஞான இருளில் உழலவும், சுழலவும் வைப்பது உன்னை அன்றி வேறு எவர்?

# 32.

ரக்ஷாம்ஸி யத்ரோக்3ர விஷாச்’ச நாகா3
யத்ராரயோ தச்’யுப3லானி யத்ர |
தா3வானலோ யத்ர ததா2ப்3தி4 மத்3யே
தத்ர ஸ்தி2தா த்வம் பரிபாஸி விச்’வம் ||


ராக்ஷசர்கள் உள்ள இடத்திலும், கொடிய விஷ நாகங்கள் உள்ள இடத்திலும், சத்ருக்கள் நிறைந்த இடத்திலும், திருடர்கள் கூட்டம் நிறைந்துள்ள இடத்திலும், காட்டுத் தீ பரவிய இடத்திலும், நடுக்கடலிலும், அங்கங்கு இருந்தவாறு நீயே உலகை எல்லாம் ரக்ஷிக்கின்றாய்.
 

தேவியின் உறுதி மொழி (18)​

# 33.
விச்’வேச்’வரி தம் பரிபாஸி விச்வம்
விச்’வாத்மிகா தா4ரயஸீதி விச்வம் |
விச்’வேச’ வந்த்3யா ப4வதி ப4வந்தி
விச்’வாச்’ரயா யே த்வயி பக்தி நம்ரா : ||


உலக நாயகியாகிய நீ உலகைக் பாலிக்கின்றாய்.
உலக வடிவினளாக நீ உலகையே தாங்குகின்றாய்.
உலகத்தின் நாயகர்களால் நீ பூஜிக்கப் படுகின்றாய்.
உன்னை உள்ளன்போடு வணங்குபவர்கள் உலகினுக்கே புகலிடம் ஆவார்கள்.
 

தேவியின் உறுதி மொழி (19)​

# 34 .
தே3வி ப்ரஸீத3 பரிபாலய நோsரி பீ4தேர்
நித்யம் யதா2ஸுரவதா4 த3து4னைவ ஸத்3ய: |
பாபானி ஸர்வ ஜக3தாம் ப்ரச’மம் நயாசு’
உத்பாத பாக ஜனிதாம்ச்’ச மஹோபஸர்கா3ன் ||


தேவி! அருள் புரிவாய்! இப்போது விரைவில் அசுரர்களைக் கொன்று எங்களைக் காத்தது போன்றே எப்போதும் சத்ரு பயத்தில் இருந்து எங்களைக் காக்க வேண்டும். உலகத்தில் உள்ள அனைத்து பாவங்களையும், தீய செயல்களின் பயனாகத் தோன்றும் பெருங்கொடுமைகளையும் நீ விரைந்து நாசம் செய்ய வேண்டும்.
 
Back
Top