quotes and sayings

Status
Not open for further replies.
இன்றைய தத்துவம்

12038468_1634209850171809_8897763742462700783_n.jpg
 
சுயிங்கம்

சுயிங்கம் மென்றால்?
சுயிங்கம் மெல்வது செரிமானத்துக்கும் உதவியாக இருக்கிறது. குறிப்பாக சாப்பிட்டதற்குப் பிறகு சுயிங்கம் மெல்வது மிகவும் நல்லது. இப்படிச் செய்யும்போது அதிக அளவில் எச்சில் சுரக்கப்பட்டு இரைப்பைக்குள் அனுப்பப்படுகிறது. இது வயிற்றில் உள்ள அமிலங்களைக் கட்டுப்படுத்துகிறது. மேலும், புளித்த ஏப்பம் பிரச்னை உள்ளவர்கள், இதனை மெல்லும்போது உருவாகும் உமிழ் நீர், அமில - காரத்தன்மையைச் சீர்செய்கிறது.
உணவு உண்ட பின் இதனை மெல்லுவதன் மூலம், பல் இடுக்குகளில் உள்ள உணவுத் துகள்கள் வெளியேற்றப்படும். இதனால், உணவுக்குப் பின் பல் தேய்ப்பது, மவுத் வாஷ் உபயோகிப்பது போன்றவற்றுக்கு அவசியமே இருக்காது. இது பல் மற்றும் தாடைகளுக்கு நல்லதொரு பயிற்சியாகவும் அமைகிறது.
'சர்க்கரைகொண்டு தயாரிக்கப்படும் சுயிங்கம்களை தொடர்ந்து மெல்லுவதன் மூலம், பற்சிதைவு ஏற்பட வாய்ப்பு உண்டு. காரணம், அதில் உள்ள சர்க்கரை, பல் இடுக்குகளில் படிந்துள்ள பாக்டீரியாக்களுக்கு உணவாகிவிடுவதால், அவை வேகமாக வளர்ந்து பற்களைச் சிதைக்கும். இதனால் சிறுவர்கள், சிறுவயதிலேயே பல் சம்பந்தப்பட்ட பாதிப்புகளுக்கு ஆளாகலாம்.
மற்றொரு பிரச்னை, சுயிங்கம்மைத் தெரியாமல் விழுங்கிவிடுவது. சுயிங்கம்மை விழுங்கினாலும் பாதிப்புகள் பெரிய அளவில் இருக்காது. காரணம், இது உடலுக்குள் எங்கும் ஒட்டாமல் நமது குடலை அடைந்துவிட்டால், மிக எளிதாக மலத்தில் வெளியேறிவிடும். மாறாக இது உணவுக்குழாயில் ஒட்டிக்கொள்ளும்போதுதான், மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தும். சுயிங்கம்மைத் தெரியாமல் விழுங்கிவிட்டால், உடனடியாக அதிகப்படியான நீர் அருந்த வேண்டும். இது, சூவிங்கம் குடலை அடைந்து வெளியேறி விடுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. இல்லையெனில் அறுவைசிகிச்சை மூலமே வெளியேற்ற இயலும்.

சுயிங்கம் பிரியர்கள் சுகர் ஃப்ரீ சுயிங்கம் மெல்லுவதால், முகத்துக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும்.'

Source: Dr.Vikatan
 
அடியாத மாடு படியாது

அடியாத மாடு படியாது.
உண்மை பொருள் என்னவென்றால் மாட்டின் கால்களுக்கு லாடம் அடித்தால் தான் அதனால் கடுமையான வேலைகளை (உழுதல் போன்ற ) செய்ய முடியும் என்பது தான்.
 
ஒரே ஒரு குடை

ஒரே ஒரு குடை
அப்பாவுக்கும் எனக்குமாய்
ஒரே ஒரு குடை

இன்னொரு குடைக்கான
தேவை இருப்பின்
அதை வாங்க
நானும் அவரும்
விரும்பியதில்லை
மழை வரும்
குடை எடுத்து போடா
என் கைகளில்
திணித்து விட்டு செல்கிறார்
அப்பா
அவருக்கு தெரியாமல்
அந்த குடையை
அவரின் பையில்
வைத்துவிட்டு வெளியேறுகிறேன்
அவர் என்னோடு
அதிகமாய் பேசமாட்டார்
எல்லா அப்பாவும் அப்படித்தானோ
அவரின் இந்த அன்புதான்
என்னோடு அதிகமாய் பேசும்
அதனாலையே
அப்பாவையும் பிடிக்கும்
அவரை என்னோடு
பேச வைக்கும் மழையையும்
பிடிக்கும்…
- மழை பயணம் வலைப்பூவிலிருந்து...
 
நானும் அம்மாவும்

நானும் மழையும்
அம்மாவும் நானும்

மழை வரும்போல
குடை எடுத்துட்டு போடா
இது அம்மாவின் குரல்

ஒவ்வொரு முறையும்
வீட்டை விட்டு வெளியேறும் போதும்
அம்மவாவின் குரல்
உள்ளிருந்து ஒலிக்கும்…
மழையில் நனையத்தான்
வெளியே செல்கிறேன் என்பதனை
அம்மா அறிவால் இருந்தும்
அவள் குரல்தான்
அன்பு…
நனைந்து பின்
வீடு சேரும்போது
நான்தான் அப்பவே
சொன்னேனே
இந்த வார்த்தைகளோடு
புடவை தலைப்பில்
தலை துவட்டிவிடும்போது
இன்னும் அதிகமாகிறது
வாழ்வதற்கான ஆசைகள்…
- மழை பயணம் வலைப் பூவிலிருந்து..

Chutti vikatan
 
போலீஸ்,வாத்தியார்

போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை
விளக்கம்: போக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை. வாக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பதாகும்.
 
வீட்டு குறிப்புகள்

1. டிவி, குளிர்சாதனப்பெட்டி, ட்யூப் லைட் இவற்றை உபயோகத்திற்குப்பின் அணைத்து விட்டு மீண்டும் உடனே போடக்கூடாது. ரெஃப்ரிஜிரேட்டரில் கம்ப்ரெஸ்ஸரும், டிவியில் பிக்சர் ட்யூபும் ட்யூப் லைட்டில் பாலண்டும் பழுதாகி விடும். நிறுத்திய பின் உள்ளே மாற்றங்கள் நிகழ்ந்து பூர்த்தியாக சில நிமிடங்கள் பிடிக்கும். சில நிமிடங்கள் விட்டு மறுபடியும் போடுவது நல்லது.
2. குளிர்சாதனப்பெட்டியைத் துடைக்கும்போது பச்சைக்கற்பூரம் கலந்த நீரினால் துடைத்தால் பூச்சிகள், சிறு வன்டுகள் உள்ளே நுழையாது.
3. கறுத்துப்போன வெள்ளி சாமான்களை தாம்பூல சுண்ணாம்பு கொண்டு தேய்த்தால் பளபளவென்று ஆகி விடும்.
4. சர்க்கரை வைத்திருக்கும் பாட்டிலில் சில ஏலக்காய்களைப் போட்டு வைத்தால் எறும்புகள் சீனியை மொய்க்காது.
5. சில வகை தண்ணீரில் துணிகள் துவைக்கும்போது துணிகள் பழுப்பாகி விடுகின்றன. இதற்கு அவற்றை சோப் பவுடரில் ஊறவைக்கும்போது 2 மேசைக்கரண்டி கல் உப்பும் சேர்த்து ஊறவைத்தால் துணிகள் பழுப்பு நிறம் நீங்கி பளிச்சென்றாகி விடும்.
6. ம‌ர‌ச்சாமான்க‌ளை பாலீஷ் செய்வ‌த‌ற்கு, முத‌லில் அவற்றை வினீகர் கலந்த நீரால் கழுவி, துடைத்து காய வைத்து பிற‌குதான் பாலீஷ் பூச வேண்டும்.
7. மூட்டைப்பூச்சி தொந்தரவிற்கு, கட்டிலின் நான்கு கால்களிலும் சூடம் அல்லது புரசம் பூவை வைத்து கட்டி வைக்க வேண்டும். தலையணை, மெத்தை இவற்றில் கற்பூரத்தைத் தூள் செய்து தூவலாம்.
8. தோல் பொருள்க‌ளின் நிற‌ம் ம‌ங்காதிருக்க‌, அவ‌ற்றின் மீது லின்ஸிட் ஆயில் என‌ப்ப‌டும் ஆளி விதை எண்ணையைப் பூசி துடைக்க‌ வேண்டும்.
9. ஈக்க‌ள் அதிக‌ம் உள்ள‌‌ இட‌த்தில் தூவக்காலில் நெருப்பிட்டு கிராம்புத்தூளைத் தூவினால் ஈக்கள் பறந்து விடும்.
10. மெழுகுவ‌ர்த்தி அதிக‌ வெளிச்ச்ச‌ம் த‌ர‌, அதை ஒரு பாத்திரத்தில் நிற்க வைத்து அதன் அடியில் தண்ணீர் ஊற்றி எரிய விடவும். உப்பில் புதைத்து வைத்தும் எரிய விடலாம்.

Mohandass Samuel
 
Status
Not open for further replies.
Back
Top