• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

quotes and sayings

Status
Not open for further replies.
அர்த்தமுள்ளஇந்துமதம்

10492004_446727975476035_6986374613792971994_n.jpg
 
Golden words of Sree Ramakrishna Paramahamsa

  • You see many stars in the sky at night, but not when the sun rises. Can you thereforesay that there are no stars in the heavens during day? O man because you cannot find Godin the days of your ignorance, say not that there is no God.
  • He is born in vain, who having attained the human birth, so difficult to get, does notattempt to realize God this very life.
  • A man is rewarded according to his thoughts and motives. The Lord is like Kalpataru,the widh yielding tree of heaven. Everyone gets from Him whatever he seeks. A poor man's son having received education and become a judge of the High Court by hard work is apt to think,"Now I am happy, I have reached the highest rung of the ladder. It is alrightnow." To him the Lord says, "Do thou remain so." But when the judge of the High Courtretires on pension and reviews his past, he understands that he has wasted his life andexclaims alas,"Alas, what is the real work have I done in this life!" To him the Lord says,"Alas! What hast thou done!"
  • Man is born in this world with two tendencies-Vidya, the tendency to pursue the pathof liberation and Avidya, the leaning towards worldliness and bondage. At his birth, boththese tendencies are as it were, in equilibrium like the two scales of the balance.Theworld soon places its enjoyments and pleasures in one scale and the Spirit, its attractionsin the other. If the mind chooses the world, the scale of Avidya becomes heavy, and mangravitates towards the earth; but if it chooses the Spirit, the scale of Vidya becomesheavier and pulls him towards God.
  • Know the one, and you will know the all. Ciphers placed after the figure 1 get thevalue of hundreds and of thousands, but they become valueless if you wipe out the figure.The many ciphers have the value only because of their one. First the one and then themany. First God and then the Jivas and the Jagat (creatures and the world)
— Sri Ramakrishna Paramahamsa
 
Last edited:
வேஷம்

வேஷம் போடுபவர்களிற்கு
கொடுக்கும் மதிப்பை
இவ் உலகம் உண்மை உறவுகளிற்கு
கொடுப்பது இல்லை,
களங்கப்படுத்தி கஷ்டப்படுத்தி
அவ் உறவுகளை .நசுக்கின்றனர்
போராடி போராடி ஒரு நாள் களைத்து போய்
பிரிவை மட்டுமே விரும்புகின்றனர்
 
புதுமை வழி


1-08-18-31.jpg


முதுமைப் பருவத்தில் சோதனையின்றி வாழப்
புதுமை வழி உண்டு; அறிந்து கொள்வோம்!

“சொல்வதை மட்டுமே கேட்கணும்!
கேட்டதை மட்டுமே சொல்லணும்!”

எளிதாகத் தோன்றும் இவை இரண்டும்
எளிதல்ல என்பதை அறிந்து கொள்வோம்!

பிணைப்பே இல்லாது இருந்தால், நம் மேல்
பிணக்கம் கொண்டுவிடுவார் விரைவிலேயே!

என்ன என்ன என எப்போதும் கேட்டிருந்தாலோ,
எள்ளளவும் பிடிக்காது போய்விடும் யாருக்கும்!

நம் வயது, அனுபவத்தை மதித்து எப்போது
நம்மிடம் வழி கேட்டாலும், சொல்லணும் தப்பாது!

தொட்டும் தொடாமல், தாமரையிலை நீர் போல
பட்டும் படாமல் வாழ்ந்திடப் பழக வேண்டும்.

வாழும் நல்வழி இது என்று உணர்ந்து, இனி
வாழும் நாட்களை எளிதாய் அமைத்திடுவோம்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
வெள்ளைப் பொய்கள்


people62.gif


உலகமே ஒரு நாடக மேடை, அதில்
உள்ளோர் எல்லோரும் நடிகர்களே!
உலவுகின்றது இப்படியும் ஒரு கருத்து;
உண்மையும் இதில் கலந்து உள்ளது.

நாம் நினைப்பதை எல்லாம் வெளியே
நால்வரிடம் விவரமாகக் கூற முடியாது;
அல்லவை நேரினும் நல்லறிவுரை கூடாது;
நல்லவைபோல் எண்ணுவோம்; அது பாசாங்கு!

வெள்ளை பொய்கள் என்று ஒன்று உண்டு;
வெள்ளை மனத்தவர் கூறிடும் பொய்கள்;
விபரீதம் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டி
விளம்பப்படும் இவ்வகைப் பொய்கள்!

கலகங்கள், கலவரங்கள் பரவுவதைக்
கவனத்துடன் தடுக்கவேண்டிய அரசே,
பரப்பும் பல வித ஊடகங்கள் மூலம்,
பலப் பல வெள்ளைப் பொய்களை!

குடும்பத்தில் குழப்பம் வராமல் இருக்க,
கூறவேண்டும் சில வெள்ளைப் பொய்கள்!
குறைகளை மறைத்து நிறைவைக் காட்ட,
கூற வேண்டும் சில வெள்ளைப் பொய்கள்!

உண்மை இல்லாது இருந்தபோதிலும்,
உலகில் விரும்பப்படுகின்றன இவைகள்;
வெள்ளை மனத்துடன், நன்மை விரும்பி,
வெளிச் சொல்லும் இவைகள் மெய்களே!


வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
குடும்பமா? குழப்பமா?


go163-v.jpg


கூட்டுக் குடும்பம் என்னும் அழகிய ஆலமரம்
பட்டுப்போய் விழுகின்ற அவலம் கண்டீர்!
“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்று
கூவினாலும் காதில் விழுவதே இல்லை!

ஒருவர் ஊதியத்தில் வாழ இயலாமல்,
இருவரும் செல்வர் வெளியே பணி புரிய.
பூட்டிய கதவுகளால் வரவேற்கப்படும் சிறார்,
மாட்டிக் கொள்ளுவர் கெட்ட பழக்கங்களில்.

என்ன செய்தாலும் தெரியப் போவதும் இல்லை;
என்ன என்று கேட்க யாருக்கும் நேரமும் இல்லை;
தானே தனிக்காட்டு ராஜா என்று இருப்பதனால்,
தன் மனம் போனபடி எல்லாம் நடக்கலாமே!

கணவன் மனைவியர் இடையே தோன்றும்
பிணக்குகள், சில பல சிறு பிரச்சனைகள்.
பெரிவர்கள் இருந்தால் பாங்காய் பேசி,
சரி செய்து விடுவார்கள் பிரச்சனைகளை.

வளர்ந்து வரும் விவாஹரத்துக்கள் வரை,
வளர விடமாட்டார்கள் சிறு விவகாரங்களை.
வளரும் குழந்தைகளை மிகவும் நோகடிப்பது,
தளரும் தன் தாய் தந்தையரின் உறவல்லவா?

தன் வீடும், கூடும் காலியாகி விட்டதால்,
தனியே தவித்து, வெறுமையில் வாடி;
மனோ வியாதிகளும், உடல் வியாதிகளும்,
மாறி மாறித் தாக்குவதால் துவண்டு போய்;

வாழ்வே சுமையாகிவிட்ட வயோதிகர்கள்,
வாழ்வில் எதிர்நோக்குவது ஒன்றே ஒன்று.
தம் வாரிசுகளின் வாரிசுகளுடன் கூடி,
தம் மீதி நாட்களைக் கழிப்பதே ஆகும்!

மனோ வியாதிகள் உற்பத்தி ஆகாது.
மறந்தே போய்விடும் உடல் வியாதிகள்.
மாசற்ற மழலைகளின் ஸ்பரிசத்தால்
மாறியே போய்விடும் அத்தனையுமே!

அனைவருக்குமே நன்மை பயக்கும் அந்த
அருமையான வாழ்க்கை முறையை மீண்டும்
அரங்கேற்ற வேண்டாமா? ஆராய்ந்து கூறுவீர்!
அதற்கு ஆவனவற்றை செய்ய வேண்டாமா?

“கூட்டுக் குடும்பத்தில் குழப்பமே மிஞ்சும்!”
கூற்றில் உண்மை கடுகளவும் இல்லை.
தனிக் குடும்பத்தில் தகராறுகள் இல்லையா?
தனி நபர்கள் அதில் தலையிடுவது இல்லையா?

கூடி வாழும் போது பொறுமை வளரும்;
பொறுப்பும், சகிப்புத் தன்மையும் வளரும்;
பகிர்ந்து உண்ணும் நல்ல பண்புகளும்,
பரந்த மனப்பான்மையும் ஓங்கி வளரும்.

கூடி வாழுகின்றன கொடிய விலங்குகள் கூட;
கூடி உண்கின்றன கரிய காகங்களும் கூட;
கூடி வாழ்கின்றன எறும்புகளும், தேனீயும்;
கூடி மனிதர்கள் வாழ்வது எப்போது?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
தங்களுடைய அவ்வளவு கவிதைகளும் பொன் னெழுத்தால் எழுதபடவேண்டிவை..உங்களுடைய போஸ்ட் 5ந்தை படிக்கும்போது கண்ணீர் பெருக்கெடுத்துவிட்டது.ஏன் நமது பிராமணசமூகம் தறிகெட்டு,குணம் கெட்டு ,மதி கெட்டு எந்த ஒரு கட்டுக்கும் அடங்காத சமூகமாக போய் கொண்டு இருக்கிறது. இதை அடியேன் சொன்னால் இந்த வயோதிகர்களே எப்போதும் ஒப்பாரி,முகாரி வைப்பவர்களே என்று ஏளனம் செய்கிறார்கள் இக்காலத்து விடலைகள்..என்ன செய்வது.
 
அன்பு

அன்பை
கேட்டுப்பெறும் நிலைகூட வந்துவிடலாம் - ஆனால்
கெஞ்சிப்பெறும் நிலைமட்டும் வந்துவிட கூடாது ...

பசிக்காக
பிச்சைஎடுத்துகூட உண்ணும் நிலையில் தள்ளப்படலாம் - ஆனால்
பாசத்தை மட்டும்
பிச்சைகேட்கும் நிலைக்கு காலம் தள்ளிவிடக் கூடாது ...

இது கற்பனையில் கண்ட வார்த்தையல்ல
என் காயங்கள் தந்த வார்த்தை ...
 
ஏளனம் செய்யட்டும் முகாரி, ஆஹிரி என்று! :blabla:

எக்காளம் இடட்டும் வயோதிகன், மூதாட்டி என்று!!
301.gif


நாம் நினைப்பதைச் சொல்லும் துணிவு வேண்டும்! :thumb:

நாம் நம்புவதைச் செய்யும் துணிவும் வேண்டும்! :moony:


கேட்கும் செவிகள் செவிடாக இருந்தாலும் :ear:
ஊதும் சங்கை நாம் ஊதத்தானே வேண்டும்! :horn:


நீங்களும் நானும் அதைச் செய்யாவிட்டால்


தாங்களே செய்வார்களா அந்த இளைஞர்கள்??? :rolleyes:
 
கேட்டுப் பெறுவது அல்ல அன்பு. தானே வருவது தான் அன்பு.


ஒரு முறை படித்தேன் எங்கேயோ, எப்போதோ.


நம்மைக் காரணம் இன்றி வெறுக்கின்றவர்களுக்காக


நாம் அதிகமாகப் பிரார்த்தனை செய்ய வேண்டுமாம்.


அந்தப் பிரார்த்னை மெல்ல மெல்ல அவர்களை அடைந்து


அவர்கள் கல் மனத்தை கரைத்து அன்பைத் தோற்றுவிக்குமாம் !


முயன்று பாருங்கள். முயற்சி திருவினையாகும்.


பிரார்த்தனை செய்வதில் தவறு ஒன்றும் இல்லையே!
 
[FONT=arial, sans-serif]பாசம் வேண்டாம்!

அது நம்மை பந்திக்கும்!! [/FONT]

[FONT=arial, sans-serif]Affection afflicts.[/FONT]


நேசம் வேண்டும்!

அது நம்மை விடுவிக்கும்!!

Love Liberates!!!

 
I have a story to share with you here.
Two men went to the sea shore.
The first man filled up his palm with sand
and it stayed on there as a huge heap.
The second man took a palm full of sand
and clenched his fist hard and tight.
Most of the sand fell off from his palm.
When he opened his palm again
there was very little sand left.
Relationship works in the same way.
The lighter we hold and less try to control
more people will remain attached to us.
Tougher our hold and harder our control
most of the relations will vanish -
except those who are too close to vanish.
I know people who exert so much control that
we actually feel breathless in their presence!
Relationship like everything must be
by free choice and not by compulsion!
 
பொன்மொழிகள்

1 அவசரமாக கல்யாணம் செய்து கொண்டால் மெதுவாக உட்கார்ந்து கொண்டுதான் அழ வேண்டும்.

2 அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல்.

3 மறக்க வேண்டியவைகளை நினைத்து வருந்துவதும், நினைக்க வேண்டியவைகளை மறந்து விடுவதும்தான் துன்பங்கள் அனைத்திற்கும் காரணம்.

4 தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

5 யார் சொல்வது சரி என்பதை விட, எது சரி என்பதே முக்கியம்

6 பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

7 பணம் என்ற ஒன்று நுழையாத வரை எல்லா உறவுகளும் மேன்மையாகத்தான் இருக்கின்றன.

8 மனிதனின் அத்தனை கோர முகங்களையும் அறிந்த உயிரற்ற பொருள்-பணம்.

 
I have one suggestion for you sir!

Instead of launching a fresh thread for each saying/ quote

why not have a single thread and enrich it will all your posts?

I am sure you have heard the saying in Tamil

"அகல உழுவதிலும் ஆழ உழு!"

It has two advantages.

1. It will be growing longer and stronger all the time. :bump2:

2. People will be able to access all the quotes more easily. :ranger:

Think about it please!!! :decision:
 
that is why kandha sashti kavasam says "paasa vinaygal patrathu neengi
unpatham peravay unarulaaga
anbudan rakshi annamum sornamum
metha methathaaga velayudharanar sithi petru adiyen sirapudan Vaazgha!
 
The word paasam means a rope used for binding things together.
Naturally it will bind persons even more strongly.
Thirumanthiram delas with this in detail.
I shall post those poems here now. :)
 
# 114. பவளம் பதித்தான்

களிம்பு அறுத்தான் எங்கள் கண்ணுதல் நந்தி
களிம்பு அறுத்தான் அருட்கண் விழிப்பித்துக்
களிம்பு அணுகாத கதிர்ஒளி காட்டிப்
பளிங்கில் பவளம் பதித்தான் பதியே.

கண்ணுதல் பிரான் ஆணவம், கன்மம் , மாயை என்னும்
களிம்புகளை முற்றுலுமாக அகற்றி அருளினான்.

மீண்டும் பாசம் என்ற இருள் அணுகாத வண்ணம்

அங்கே சிவ சூரியனைத் தோற்றுவித்தான் பிரான்.

பளிங்கு போன்ற ஜீவனில், ஞானம் தரும் அந்தச்

சிவந்த சிவஒளி, பவழம் போலப் பதிந்தது.
 
115. பசு, பாசம் நிலாவே!


பதி, பசு, பாசம் எனப் பகர் மூன்றில்
பதியினைப் போல் பசு பாசம் அனாதி;
பதியினைச் சென்று அணுகா பசு, பாசம்,
பதி அணுகின் பசு பாசம் நிலாவே.


நம் தலைவன் = பதி; ஜீவன் = பசு; தளை = பாசம்.
இம்மூன்றுமே மிகவும் தொன்மையானவை.
பசுத் தன்மையும், பாசத் தன்மையும் பதியை அணுகிட இயலாது.
பதியே நம்மை அணுகிடில் பசுத் தன்மையும், பாசத் தன்மையும் நீங்கும்.
 
Food for thoughts...

தொடரும் வகையில்


தாய் தந்தையருக்குத் தருவதற்குத்
தாமதம் செய்யும் அவர் மகன்கள்,
தாம் பெற்ற செல்வங்களுக்கு மட்டும்
தங்கு தடை இன்றி அளிப்பது ஏன்?

தம்மை வாரிசுகளாகப் பெற்றவரைவிடத்
தம் வாரிசுகளிடம் அதிக அக்கறை ஏன்?
விடுகதை போலத் தோற்றம் அளித்ததை,
விடாமல் ஒரு நாள் நான் ஆராய்ந்தேன்!

ஓடும் ஒரு பெரு நதியைப் போலவே
ஓடவேண்டும் சந்ததிகளும் என்றே,
கடவுள் வகுத்த நியதியே இந்தக்
காரணம் கூற இயலாத பண்பு!

தனக்குத் தந்தவருக்கே தானும் தந்தால்,
கணக்குத் தீர்ந்து, முடிந்து போகுமே!
கணக்குத் தொடர நாம் விரும்பினால்,
கணக்கைத் தீர்த்துவிடக் கூடாது!

தந்தை தன் மகனுக்கு என்றும், அவன்
தன்னுடைய மகனுக்கு என்றும் ஒரு
சங்கிலித் தொடர்போலத் தொடருவதே
இங்கிதமான வாழ்க்கை முறை ஆம்.

இறைவன் அறிவான் நல்ல வழிகளை,
இயல்பை அமைப்பான் தகுந்தபடியே.
செய்தவனுக்குத் தெரியாதா மீண்டும்
செய்ய வேண்டியது என்ன என்று?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
Visalakshi Ramani - nice ones.. these things make us mature.. but in reality it will be very very difficult to move away from people around us!! like "un kannil neer vazhinthaal en nenjil uthiram kottuthadi"
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top