17. அறம் செய்யான் திறம்
#260. பயன் அறியார்!
எட்டி பழுத்த, இருங்கனி வீழ்ந்தன,
ஒட்டோய நல்லறம் செய்யாதவர் செல்வம்
வட்டிகொண்டு ஈட்டியே மண்ணில் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன் அறியாரே.
எட்டி மரம் பழுத்தது. பெரிய கனிகள் தரையில் வீழ்ந்தன.
ஆனால் யாரும் அவற்றை நாடிச் செல்லவில்லை.
வட்டி வாங்கி உலகில் பெரும் பொருள் சேர்ப்பவர்
அதன் உண்மையான பயனை அறியார். அறம் செய்யார்.
அவர்கள் செல்வமும் எட்டிக் கனிகள் போன்று பயனற்றவையே