• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
# 254. பயமுறுத்திய புகை.

பள்ளி
யில் ஐந்தாவது படிக்கும் போது

வகுப்பு வாத்தியார் ஒரு விந்தை புரிவார்.

வாய் வழியாகப் புகையை இழுத்து விட்டு

மூக்கு வழியாக விடுவது சர்வ சாதாரணம்.

இவர் வாய் வழியாக உள்ளே சென்ற புகையைக்

காதுகள் வழியாக வெளி விடுவார். :ear:

எல்லோருக்கும் அது அதிசயமாக இருக்கும்! :shocked:

ஆனால் எல்லோருக்கும் ஒரே சமயத்தில்

இதைச் செய்து காட்ட மாட்டார் அவர்.

யாரவது ஒருவரைத் தன் மேஜை அருகில்

வரவழைத்து இந்த விந்தையைச் செய்வார்.

"ஆ!" என்று அவர்கள் பார்க்கும்போது மெதுவாக

சிகரட்டால் அவர்கள் கையைச்
சுட்டு விடுவார். :flame:

இது அவருக்கு ஒரு விளையாட்டாம். :doh:

அவர் ஒரு சாடிஸ்ட் என்று எனக்கு இப்போது தெரிகிறது.

ஆனால் அப்போது
து யாருக்குமே தெரியவில்லை!
 
Last edited:
# 255. "நமஸ்காரம் பண்ணினால் காசு!"

விளையும் பயிர் முளையிலேயே தெரியும்; நிஜம் தான்.

அந்த சமர்த்துக் குழந்தை எங்கே போனாலும் அந்த

வீட்டுப் பெரியவர்கள் காலில் விழுந்து வணங்குவான்.

உச்சி குளிர்ந்துவிடும் அவர்களுக்கு! :happy:

இந்தக் காலத்தில் இப்படி ஒரு பிள்ளையா ???

வாய் எல்லாம் பல்லாகச் சிரித்துக் கொண்டு :becky:

ஐம்பது அல்லது நூறு ரூபாய் கொடுப்பார்கள்.

அதை பத்திரமாக வைத்துக் கொள்ளுவான்,

"யார் கண்ணா உனக்குப் பெரியவர்களை

நமஸ்காரம் பண்ணச் சொல்லிக் கொடுத்தார்கள்?"

"நமஸ்காரம் பண்ணினால் காசு கிடைக்குமே

அதனால் நானே தான் பண்ணுகிறேன்!"

எத்தனை புத்தி! எத்தனை observation! :clap2:

அவன் மிகவும் இளவயதிலேயே நல்ல வேலையில்

பணத்தை வாரிக் குவிப்பதில் என்ன அதிசயம்?
:thumb:
 
Last edited:
R.L.Stevenson.

Trusty, dusky, vivid, true, :love:

With eyes of gold and bramble-dew,

Steel true and blade straight, :laser:

The great artificer :angel:

Made my mate.
:hug:
 
# 256. One person can make a difference!

பெண்களுக்கு மாதாந்திரப் பிரச்சனை இருப்பது போலவே

எனக்கு வருடாந்திரப் பிரச்சனை ஒன்று உண்டு. :whoo:

அது மாதங்களில் சிறந்த மார்கழியில் நிகழும்!

எத்தனையோ ஆண்டுகளாகத் திருப்பாவை திரும்வெம்பாவை

கோவில்களில் பாடி வந்த எனக்கு :sing:

அவற்றைத் தவறாமல் பாட வேண்டும்.

வேறு சில மாமிகள் கோவிலுக்கு வருவதே வம்பு வளர்பதற்காக.

அந்த chat மாமிகளுக்கும் இந்தப் பாட்டு மாமிக்கும்

( இந்த காலனியில் அது தான் என் பெயர் :)

விசாலாக்ஷி ரமணி என்றால் யாருக்கும் தெரியாது!)

தேவாசுர யுத்தம் போலத் தொடர்ந்து நடக்கும். :fencing:

முதல் ஐந்து நாள் பாடினேன்.

குடத்தில் கூழாங்கற்களைப் போட்டு உருட்டுவது போலத்

தொடர்ந்து பேசவும் வெறுத்துப் போய்விட்டது!

90 நிமிடத் தூக்கத்தையும் தியாகம் செய்து

கோவிலுக்குப் போவது இதற்காகவா?

கோபித்துக் கொண்டாலோ B.P. எகிறி விடும்!

கடந்த பத்து நாட்களாக silent audience தான்.

இன்று என் பூஜை நேற்றே சொல்லிவிட்டேன்

முதல் பதினைந்து பாசுரம் பாடுவேன்;

எல்லோரும் cooperate செய்யவேண்டுமென்று!

நல்ல வேளை!'chat' மாமி புரிந்து கொண்டார்.

இன்று என் பூஜைக்கு வரவில்லை.

எத்தனை அமைதி! எத்தனை discipline ?

அழகாக எல்லாமே பாட முடிந்தது

one person can make a lot of difference -

either by his presence or by his absence.
 
# 257. New dress ....a real mood lifter!

கல்லூரி நாட்கள் ஒன்றில் ஏதோ கோபம் வந்து விட்டது.

'பும்' என்று முகத்தை வைத்துக் கொண்டு

இருந்திருப்பேன் போல. :pout:

சீரியஸ் professor அன்று கேட்டார்,

"என்ன ஆயிற்று உனக்கு என்று?"

எப்போதும் அத்தனை பற்களையும் கட்டிக் கொண்டு,

வால்தனம் செய்யும் என்னை, :becky:

அப்படிப் பார்த்தது அவருக்கே தாங்கவில்லையாம்.

"எனக்கே தெரியவில்லை மிஸ்!" என்றேன்.

அன்று அவர் ஒரு நல்ல அறிவுரை கூறினார்.

அது இன்று வரையிலும் பயன் தருகிறது.

"மூட் சரியாக இல்லாவிட்டால் அன்று ஒரு

புதிய ஆடை அல்லது நல்ல ஆடை அணிந்து கொள்!

சிறிது நேரத்தில் உன் மூட் தானாகவே சரியாகிவிடும்!"

உண்மையிலேயே நியூ டிரஸ் ஒரு மூட் லிஃப்ட்டர் தான்!

அன்றிலிருந்து 'மூட் அவுட்' என்றால் 'நல்ல டிரஸ் இன்!'

நீங்களும் முயன்று பாருங்கள்; :high5:

உணர்வீர்கள் இதன் உண்மையை.
:first:
 
On the one hand a handful of ladies lead by a 'chat mami' disturb me while singing soulfully in the temple. :blabla:

On the other hand the organisers announce my name in the mike as "Paattu mami" and invite me to come forward and give them a nice song during the new year celebration! :director:

I usually avoid this since I can't stand the 120 decibel sound prevailing there and the sound of drums and other percussion instruments which seem to send shock waves through me body! :drum:

What am I supposed to make out of this???? :confused:


 
No problem :)

I got it now!
icon3.png
It is in response to my write up about

the girls letting their hair loose now a days! :mullet:

Sorry to have disturbed you. Ref. to Post # 1519.
 
R. L. Stevenson.

Politics is the only profession for which :drama:
no preparation is thought necessary. :moony:


"I have a grand memory for forgetting, David." :confused:


Is there anything in life so disenchanting
as its attainment? :rolleyes:
 
# 258. "வன்டெ ரூம் மன சேத்துல காதா?"

முன்பெல்லாம் பிள்ளையைப் பெற்றவர்கள் கை

சற்று ஓங்கி இருக்கும். LONG LONG AGO!

இப்போதோ பெண்கள் கையும் (வாயும்)

பெண்களைப் பெற்றவர்கள் கையும் ஓங்கி உள்ளன. :high5:

அம்மாவிடம் சொல்லுவேன் நான் அடிக்கடி,

"பிள்ளைகளைப் பெற்றிருக்க வேண்டிய காலத்தில்

நீங்கள் பெண்களைப் பெற்றீர்கள்.

நாங்கள் பெண்களைப் பெற்றிருக்க வேண்டிய காலத்தில்

பிள்ளைகளைப் பெற்று இருக்கிறோம் என்று"

ஆந்திர தேசத்தில் வரத
க்ஷணை பரிமாற்றம் அதிகம். :popcorn:

மகன் மெடிக்கல் / இன்ஜினியரிங் காலேஜ் சேர்ந்த உடனே

அவன் மதிப்பு 'மார்கெட்டில்' பல மடங்கு உயர்ந்து விடும்.

சாக்ஸ் அணியாமல் ஷூ போட்டுக் கொண்டும்,

UNDIES அணியாமல் PANTS போட்டுக் கொண்டும்,

BODICE அணியாமல் BLOUSE போட்டுக் கொண்டும்,

வாயைக் கட்டி, வயிற்றைக் காட்டி எப்படியோ

வரதக்ஷணை கொடுத்து விடுவார்கள்!

என் ஒரு நண்பிக்கு இரண்டு மகள்கள்.

அவளைத் தவிர மற்ற எல்லோரும்

அவளுக்காகக் கவலைப் பட்டார்கள்!

அவள் சிரித்துக் கொண்டே சொல்லுவாள்,

"வண்டெ ரூம் மன சேத்துல காதா?" :rolleyes:

(சமையல்அறை நம் கையில்தான் அல்லவா?)

கில்லாடிப் பெண் தான் அந்த நண்பி!

1. ஆணை ஆளுவதற்கு உணவை உபயோகிக்கலாம்.

2. உணவு சமைக்கும் அறை நம் பெண் கையில்.

3. பெண்ணோ நம் கையில்!

4. இனி என்ன கவலை எனக்கு?

என்ற அத்தனை தத்துவங்களையும்

அந்த ஒரு கேள்வியில் அடக்கி விடுவார்!

அவள் சொன்னது உண்மை தான்.

THE SHORTEST ROUTE TO A MAN 'S HEART IS

THROUGH HIS STOMACH. :hungry:

 
# 259. அளவுக்கு மிஞ்சினால் ...!

நண்பி...பெங்காலி பாபுவின் மனைவி

Tring... tring... tring...

The telephone bell ring :phone:

என்ற கவிதையின் ஆசிரியை இவர்
தான். :rolleyes:

தலைக்கு ஹேர்டை போடும் போது

நன்றாகப் பிடிக்க வேண்டும் என்று

ஒரு விபரீத வேலை செய்வார்.

இரவில் தூங்கும் முன்பு டை போட்டு
க் கொண்டு

தலைக்கு shower cap போட்டுக் கொண்டு

இரவு முழுவதும் தூங்குவார். :sleep:

"அதில் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் போடாதே!"

என்றால் "எல்லாம் எனக்குத் தெரியும்!" இது பதில்.

முடி எல்லாம் உதிர்ந்து போய் scalp தெரிந்தது.

இப்போது நம்ம ஊர் வாத்தியார் மாதிரி ஆகி இருப்பாரோ?

எச்சரிக்கை செய்தாலும் கேட்க மாட்டேன் என்பவர்களை

நம்மால் என்ன தான் செய்ய முடியும் சொல்லுங்கள்! :doh:
 
Last edited:
In some Temples strict instructions are followed and to that effect they put a Display board for
the kind attention of Devotees visiting the Temple, i.e. Code of conducts to be followed in the
Temple premises, viz.

Please maintain silence, decorum and reverence at the Sanctum to maintain the sanctity of the
temple, particularly while pooja and other ceremonies are going on.
To Switch off the Cell Phone or to leave it in the Vehicle itself
Not to gossip, talk aloud or indulge in fun and frolic inside the temple
Chant Gods holy name or recite Songs, mantra or hymns etc.
Keep the Temple premises clean
Please do not waste any Prasadam and do not throw Vibhuthi and Kumkum anywhere
in the temple premises
Dress conservatively - Grownups are advised not to wear Shorts, Bermudas or Lungis
Do not eat inside the Temple premises
Do not Prostrate or perform Namaskarams to elders inside the Temple
Do not throw waste paper inside the Temple premises
Do not apply waste oils or rub oil hands on the pillars or on walls of the temple
Do not allow children to play inside the Temple when the Pooja is going on
and so on.

If these are followed inside the temple, we can maintain the discipline
of the Temple.

Balasubramanian
Ambattur
 
Politics is not just arena. Politics has become a proud family profession
these days. If one succeeds, there are many rewards. Politics have
become a fund raiser. Good fence makes good.

Balasubramanian
Ambattur
 
R. L. Stevenson.

Even if we take matrimony at its lowest,
even if we regards it as no more than :hug:
a sort of friendship recognised by the police. :rolleyes:

Lastly (and this is, perhaps the golden rule),
no woman should marry a teetotaller, :spit:
or a man who does not smoke.
:smokin:
 
# 260. A sales girl in a shop!

அதற்கு முன்பு அவளை அங்கே நான் பார்த்ததில்லை!

Leucoderma என்னும் வெண்குஷ்டம் தொடங்கி இருந்தது.

கண்களைச் சுற்றியும், உதடுகளைச் சுற்றியும்

வெள்ளை வெள்ளையான திட்டுகள்.

அவள் கரிய நிற மேனியில் பயங்கர contrast! :tsk:

நாம் பேசும்போது பார்ப்பது எதிராளியின்

உதடுகளையும் கண்களையும் தான்!

அது சற்று உறுத்தலாக இருக்கும் பலருக்கு!

அமைதியாக பொருட்களை எடுத்துக் கொடுத்து

அதற்கான பில் போட்டாள் ஒரு யோகினி போல! :peace:

Accept the inevitable என்பது போல அவள் அதை

மனோரீதியாக ஏற்றுக் கொண்டு விட்டாள் என்று தோன்றியது.

முழுவதும் நிறம் மாறும் வரையில் கஷ்டம் தான்.

அவளுக்கு ஒரு வேலை போட்டுக் கொடுத்து

அவள் செலவினங்களுக்கு வழி செய்து தந்த

அந்தக் கடை முதலாளி பாராட்டுக்கு உரியவர். :thumb:

அது தொத்து வியாதி இல்லை என்று புரிந்துகொண்டு

அவளைத் திரஸ்கரிக்காத கஸ்டமர்களும் தான். :clap2:

திருமணம் என்று ஒன்று ஆகாவிட்டாலும், அவள்

யாருக்கும் ஒரு நாளும் பாரமாக இருக்கமாட்டாள்.
 
# 261. A lab assistant.

Leucoderma பெண்ணைப் பார்த்துவிட்டு வந்தால்

அடுத்துப் பார்த்தது ஒரு lab assistant girl !

எட்டாம் வகுப்புப் பெண் போல இருந்தாள்!

ஒல்லியோ ஒல்லி அவ்வளவு ஒல்லி.

இவளால் ரத்தம் எடுக்க முடியுமா??? :confused:

நடக்கும்போது பார்த்து ஷாக் ஆகிவிட்டேன்

வலது பாதம் தோசையைத் திருப்பினதுபோல

முற்றிலுமாக உல்டா
வாகத் திரும்பி இருந்தது!

போதாதா குறைக்கு இடது காலுக்கு

parallel ஆக இல்லாமல் அது

perpendicular ஆக இருந்தது! :shocked:

லேசாக நொண்டியதால் தான் தெரிந்தது

இல்லாவிட்டால் ஒன்றும் தெரிந்து இருக்காது.

வலிக்காமல் vein ஐத் தேடி ரத்தம் எடுத்தாள்.

நொந்த காலாக இருந்தாலும் தன்னுடைய

சொந்தக் காலில் நின்றாள் அந்தப் பெண். :clap2:

குறையைப் பொருட்படுத்தாமல் யாரவது

திருமணம் செய்து கொண்டால் சரிதான்!

இல்லாவிட்டால் கைவசம் நல்ல தொழில்

இருப்பதால் அவளும் பிழைத்துக் கொள்ளுவாள்.

தன்மானத்துடன் வாழ விரும்புபவர்களுக்கு

இன்று எத்தனை எத்தனை வழிகள் உள்ளன! :thumb:

 
Last edited:
A short and much needed recap!

"So let NOT this new found unedited free space go into the head.

It is best to say something IF we have something to say.

We don't have to find something since we want to say something.

There is a world of difference between these two.
"

Whether you are seventy or seventeen 70 :decision: 17.

if you cannot curtail your remarks :blabla:

you will be cut-tailed by the authority.
 
Last edited:
மன்னிக்கப் படுவதற்கும் ஒரு தகுதி வேண்டும்!

மன்னிக்கக் கூடாதவர்களை மன்னிப்பது என்பது

பாம்புக்குப் பால் வார்ப்பது போன்றதே!

தேளைத் தண்ணீரில் இருந்து முயன்று

காப்பாற்றுவதைப் போலவே.

அவை ஒரு நாளும் திருந்தா! :evil:

மீண்டும் மீண்டும் கொத்தும், கடிக்கும்!

பல்லை யாராவது பிடுங்கும் வரையிலும்.
1E3


பொறாமை எத்தனை வழிகளில் வெளிப்படுகிறது; :shocked:

பொறுமையை சோதிக்கிறது பார்த்தீர்களா???

என்னைப் பற்றி எழுதியது தெரியாமலேயே நான்

வாலை ஓட்ட நறுக்கும் காட்சியைத் தந்தது எப்படி???
:moony:
 
There was an angry young man I knew.

He was at least ten years older to me.

He was always angry and irritating every one.

Never was his mind at peace or calm .

Later I found that he had many commitments in life.

His widowed mother had to be taken care of.

His four unwed sisters had to married off!

He had no chance of getting married till all these were over.

He was suffocating and wished to become free of all bonds.

But he had a little spark of conscience left in him.

Thanks to his good natured father!

He could neither desert his family nor sacrifice his happiness.

So he was always angry at everyone he came across - who had

not contributed in any way to his personal problems.

That was his life and may be he deserved it in God's eyes!
 
R. L. Stevenson.

Times are changes with him , who marries;

there are no more by-path meadows, :nono:

where you may innocently linger, :dance:

but the road lies long and straight, :laser:

and dusty to the grave.
:rip:
 
# 262. Arrange the dress cupboard.

நியூ டிரஸ் ஒரு மூட் லிஃப்ட்டர் என்றேன்.

நீங்கள் ரொம்பவும் upset ஆகி இருந்தால் :pout:

அதற்கு உண்டான ஒரே அருமருந்து இதுதான்!

பீரோவில் உள்ள ஆடைகளை எல்லாம் வெளியே எடுங்கள்.

பீரோவில் மீண்டும் அவற்றை ஒவ்வொன்றாக அடுக்குங்கள்.

100 % உத்தரவாதம் அளிக்கிறேன் நான். :high5:

அந்த வேலை முடிவதற்குள் நீங்கள் நிச்சயமாக

உற்சாகமான மூடைத் திரும்பவும் அடைந்திருப்பீர்கள்!

இதன் ரகசியம் .....???

ஒவ்வொரு ஆடைக்குப் பின்னாலும்,

ஒவ்வொரு சேலைக்குப் பின்னாலும்,

ஒரு இனிய கதை ஒளிந்து இருக்கும்.

எப்போது வாங்கினது? எதற்கு வாங்கினது?

யார் தந்தது? எங்கே வாங்கினது? என்பது போல.

அவை
மனதில் திரைப் படம் போல ஓடும் போது

மனம் மெல்ல மெல்ல தெளிவடையும்! மகிழ்வடையும்!!

நம்ப முடியவில்லையா! முயன்று பாருங்கள்

அடுத்த முறை அதிகக் கோபம் வரும்போது!

ரொம்பக் கோபம் என்றால் இன்னொரு வழி....:mad2:

அத்தனை சேலையும் வாரிப் பாயில் போட்டுவிட்டு

ஒவ்வொன்றாக மடித்து வைத்துப் பாருங்கள்!

எப்படி என்னுடைய magic வேலை செய்கிறது என்று!
:rolleyes:
 
# 263. Baby quilt!

வளர்ந்த குழந்தைகள் வீட்டை விட்டுப் போய்விடுவார்கள்.

இது நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று தான்!

ஆங்கிலத்தில் Empty Nest Syndrome என்பார்கள். :sad:

ஒரு அற்புதமான பெண்மணி ஒரு வேலை செய்தாராம்.

குழந்தை பிறந்தது முதல் அதற்கு உடை தைக்கும் துணியில்

ஒரு சிறிய சதுரம் வெட்டி வைத்துக் கொள்ளுவாராம்.

திருமண வயது வருவதற்குள்ளாக இது போன்ற

நிறைய சதுரங்கள் அவரிடம் சேர்ந்துவிடும். :bump2:

அவற்றை வைத்து ஒரு அழகிய quilt தைத்துவிடுவார்.

அதைப் பார்க்கும் போதெல்லாம் அந்தக் குழந்தை :baby:

அதை அணிந்து செய்த சேட்டைகள்

அவர் நினைவுக்கு வருமாம்.

அவர்களுடன் இருப்பது போலவே தோன்றுமாம். :hug:

என்ன ஒரு அழகிய, அதிசயக் கற்பனை இந்தப் பெண்ணுக்கு!
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top