• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
# 264. The sleeping beauty ! :sleep:

தியானம் செய்யும் போது மூக்கின் நுனியைப்

பார்க்கவேண்டும் என்பார்கள் யோகிகள்.

படிக்கும் போதும் அப்படிப் பார்க்க முடியுமா?

படிக்க முடியுமா அப்படிப்பட்ட பார்வையால்? :confused:

என்னுடன் படித்த ஒரு மாணவி எப்போதும்

ஆழ்ந்த யோக நிலையிலேயே இருப்பார்.

பாதி மூடிய அழகிய கண்களுடனும்.

மூக்கின் நுனியில் பதித்த பார்வையுடனும்!

அப்போதே தெரிந்து கொண்டேன் நான்

தியானமும், தூக்கமும் ஒரே நாணயத்தின்

இரு பக்கங்கள் ஆகும் என்ற உண்மையை. :rolleyes:

தியான வகுப்பில் தூங்குபவர்களையும் பார்த்தது உண்டு.

Study டயத்தில் தூங்குகிறவரையும் பார்த்தது உண்டு.

மனம் விழித்து இருந்தால் அது தியானம்.

மனம் உறங்கி விட்டால் அது தூக்கம்.

ஆத்மா உறங்காது நல்லவேளை!

அல்லது permutation combination களில்

இன்னும் நிறைய possibilities உருவாகும்! :bump2:

 
# 265. மத்யம ஸ்ருதி!

சில பாடல்கள் மேலும் கீழுமாக பெரிய

ரேஞ்சில் அமைக்கப் பட்டு இருக்கும்.

சிலவோ சிறிய ரேஞ்சில் இருக்கும்;

அல்லது அதளபாதாளம் வரை போகும்!

அந்த மாதிரிப் பாடல்களைப் பாடகர்கள்

மத்யம ஸ்ருதியில் பாடுவது வழக்கம்.

ஜம் மென்று ரொம்பவும் impressive

ஆக இருக்கும் மத்யம
ஸ்ருதிப் பாடல்கள். :sing:

ஸ்ருதியை மாற்றுவதற்கு ஜஸ்ட்

பஞ்சமத்தை மத்ய
மாக மாற்றினாலே போதும்!

"ஸ ப ஸ" என்பதற்கு பதிலாக

"ப ஸ ப" என்று எளிதாக மாறிவிடும்.

"என் கச்சேரிக்கு வாங்கோ!" என்று

வருந்தி வருந்தி அழைத்தாள் ஒரு neighbour.

எலக்ட்ரானிக் தம்பூராவில் மத்யம ஸ்ருதியை

வைக்கத் தெரியாமல் திக்கித் திணறி விட்டாள்.

கடைசியில் violin வாசித்த பெண் :violin:

அந்த ஸ்ருதியை செட் பண்ணிக் கொடுத்தார்.

எந்த மாதிரி பெண்கள் எல்லாம் கச்சேரி செய்யக்

கிளம்பி வந்து விடுகிறார்கள் பாருங்கள். :doh:

இப்போதெல்லாம் ஒரு பட்டனைத் தட்டினால்

அதுவே மத்யம
ஸ்ருதிக்கு மாறிவிடுகிறது!

ஒருவேளை நிறையப் பேருக்கு இந்தப்

problem இருந்து இருக்குமோ என்னவோ?!
:noidea:
 
Si John Suckling.

Out upon it, I have lov'd
Three whole days together; :love:
And am like to love three more,
If it prove fair weather. :flame:

Why so pale and wan, fond lover?
Prithee why so pale? :pout:
Will, when looking well can't move her,
Looking ill prevail?
:rolleyes:
 
# 266. கோதுமைக் கஞ்சியும், புழுக்கும்!

அரிசியைக் கையாலே கூடத் தொடக் கூடாதாம்.

கஞ்சியும், புழுக்கும் தான் உண்ண வேண்டுமாம்.

அன்று முழுவதும் கோதுமை தானாம்.

இரவு டிபன் தான் சாப்பிட வேண்டுமாம்.

"விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொன்னீர்களா?"

என்று கேட்டுப் பாருங்கள், "இல்லை" என்று பதில் வரும்! :nono:

"கோவிலுக்குப் போனீர்களா?" இதற்கும் பதில் "இல்லை!" :nono:

" T. V. யில் live telecast?" இதற்கும் பதில் "இல்லை!" :nono:

மனம், மொழி, மெய் என்ற எதையுமே கடவுள் மீது செலுத்தாமல்

உணவில் மட்டும் அத்தனை விதிகளையும் பின்பற்றுவது ஏன்???
:noidea:
 
# 267. "ஸ்னானம் ஜேசி நித்ர போத்தானு!"

ஐந்து வயதில் சிறு மகன் இருக்கிறான்.

ஐந்து விதமான பிரசாதங்கள் இவள் காலை

ஐந்து மணிக்குள் எப்படித் தயாரிக்கின்றாள்???

அவளிடமே கேட்டு விட்டேன் ஒரு நாள்.

டைம் மிச்சம் செய்ய அவள் பூஜைக்கு முன்தினமே

"ஸ்னானம் ஜேசி நித்ர போத்தானு!" என்றார். :sleep:

தூங்கினால் மறுபடியும் குளிக்க வேண்டாமா?
:confused:

தெரிந்து செய்கின்றாரா? அல்லது தெரியாமலா? :noidea:

சிலந்தியின், பாம்பின், யானையின் பூஜைகளை

ஏற்றுக்கொண்ட கடவுள் இதையும் ஏற்பார்!
:hail:
 
For the crown of our life as it closes
Is darkness, the fruit thereof dust, :tinfoil3:
No thorns go as deep as a rose's
And love is more cruel than lust. :evil:

I have lost , you have won this hazard; yet per chance.:first:
My loss may shine yet goodlier than your gain,
When time and God give judgement. :angel:

Algernon Charles Swinburne.
 
# 268. "அடுத்தாத்து நெய்யே....!"

புத்தாண்டை தடபுடலாக வரவேற்க வேண்டாமா?

இல்லாவிட்டால் அது கோபித்துக் கொண்டு

நம்மிடம் வராமலேயே இருந்து விடுமே!

அதற்குக் COLLECTION செய்தது "N" ஆயிரங்கள்.

உணவுக்கு மட்டும் செலவிட்டதோ "2N" ஆயிரங்கள். :hungry:
தூக்கத்தைக் கெடுத்த ORCHESTRA வுக்கு "N"
.ஆயிரங்கள்.:drum:
உபரிச் செலவு வகையில் இன்னொரு "N" ஆயிரங்கள். :popcorn:

GALA CELEBRATION செய்ய வராதவர்கள் எல்லோரும்

மாதம் மாதம் இதற்காகப் பணம் கட்டவேண்டுமாம்!

சாப்பிட்டவர்கள் யாரோ! பணம் கட்டுவதோ யாரோ!

"அடுத்தாத்து நெய்யே பொண்டாட்டி கையே" என்பது சரிதான். :rolleyes:
 
# 269. " பண்ணினவளுக்குக் காலிப் பாத்திரம்!"

கோவிலுக்கு வருபவர்கள் எல்லோருமே

பக்திமான்கள் அல்ல என்று முன்பே தெரியும்.

சிலர் வருவது "for meeting"; சிலர் "for chatting" :blabla:

சிலர் சந்தேகம் இல்லாமல் ஒன்லி "for eating" :hungry:

அவர்கள் செலவு செய்து ஒரு நாள்
கூட பூஜை செய்ய மாட்டார்கள்.

அடுத்தவன் செய்த பிரசாதத்தை

அள்ளும் போது பார்க்க வேண்டுமே! :shocked:

முன் ஜாக்கிரதையாக வீட்டில் கொஞ்சம் வைத்துவிட்டுச் சென்றால்

சுவை பார்க்க சாம்பிள் ஆவது நமக்குக் கிடைக்கும்.

"சகலமும் கிருஷ்ணார்ப்பணம்" என்று கொண்டு சென்றால்

"பண்ணினவ
ளுக்குப் பாத்திரம் மட்டும் தான் மிஞ்சும்!

அரைச்சவ
ளுக்கு ஆட்டுக்கல்;

சுட்ட
ளுக்கு தோசைக்கல்;

பண்ணினவ
ளுக்குப் பாத்திரம் கிடைக்கும்

எதுகை, மோனையோடு!
:rolleyes:
 
That which we are, we are;
One equal temper of heroic hearts, :high5:
Made weak by time and fate, but strong in will
To strive, to seek, to find, and not to yield. :bowl:

Every moment dies a man, :rip:
Every moment one is born. :baby:
Lord Tennyson.
 
# 270. பட்டாசு மாமி.

பட்டாசு மாமி என்று ஒரு பட்டப் பெயரா?

கேட்டவுடன் நானும் வியந்தேன், அதன் :rolleyes:

பின்புலக் கதையை அவரே கூறும்வரை!

தீபாவளிக்கும் மழைக்கும் உண்டு மிகவும் :rain:

நெருங்கியதொரு தொடர்பு அல்லவா?

பட்டாசுகளும், மத்தாப்புகளும் ஈரத்துக்கு

நமத்துப் பொய் விட்டன, வெய்யிலும் இல்லை.

மாமிக்கு வந்து ஒரு brilliant brain wave.

அத்தனை பட்டாசுகளையும், மத்தாப்புகளையும்

அழகாக அடுக்கினார் ஒரு தாம்பாளத்தில்.

அதை காஸ் அடுப்பில் வைத்துவிட்டு dining ரூம்

செல்வதற்குள் அங்கே வாண வேடிக்கை தொடங்கியது.

Aeroplane கள் பறக்கத் துவங்கின. மத்தாப்புகள் எரிய,

பட்டாசுகள் வெடிக்க, விஷ்ணுச் சக்கரம் இறங்கி ஓட,

ஒரு உள்நாட்டுக் கலவரப்பகுதி ஆகிவிட்டது அவர் வீடு.

உள்ளே சென்று அவற்றை அணைக்கவும் முடியவில்லை,

அத்தனையும் எரிந்து, வெடித்து முடிந்தபின் தான் :flame:

அறையின் அவரால் உள்ளே நுழைய முடிந்தது.

அன்றிலிருந்து அவர் பெயர் பட்டாசு மாமி.

இதுவே அந்த வீட்டு ஹாலில் நடந்திருந்தால்

furniture எல்லாம் ஒரு வழி ஆகி இருக்கும்.

பெட் ரூம் என்றால் சொல்லவே வேண்டாம். :scared:

நல்ல வேளை கிச்சனில் காஸ் சிலிண்டர்

வெடிக்காததால் ஒன்றும் ஆகவில்லை.
 
# 271. ஒட்டியாணமும், காசுமாலையும்.

அறுபது வருடங்களுக்கு முன்பு கல்யாணப் பெண்ணுக்கு

ஒட்டியாணம், காசுமாலை செய்து போடுவது வழக்கம்.

எப்படித்தான் அந்த கனத்தைச் சுமந்தார்களோ?

பிடித்த பொருள் என்றால் எடையை உணரமாட்டோமோ?

எத்தனை முறை அணிந்து கொண்டாளோ தெரியாது.

ஆனால் அது ஒரு நல்ல இன்வெஸ்ட்மென்ட்டாக இருந்தது.

எத்தனையோ செலவுகள் வந்தபோதும் அவற்றை

விற்கவோ, அடகு வைக்கவோ இல்லை அவள்.

எப்படியோ செலவினத்தை சமாளித்து வந்தாள்.

ஆனால் அமெரிக்காவுக்குப் போக விரும்பியபோது

அதை விற்க நேர்ந்தது வேறு வழி இல்லாமல், பாவம்.

மகனால் டிக்கெட் அனுப்பித் தர முடியவில்லை.

இவளுக்கோ போக வேண்டும் என்ற ஆவல். :plane:

அதற்கு பலியாகின அந்த நகைகள் இரண்டும். :tsk:

இப்போது பவுன் விலை தாறுமாறாக ஏறிவிட்டதே!

இப்போது அவற்றை விற்றிருந்தால் அதே பணத்தில்

நாலு அல்லது ஐந்து அமெரிக்க ட்ரிப் அடித்திருக்கலாம்! :roll:

தினமும் ஒரு பாட்டம் அதை நினைத்து அழுகின்றாள்.

சிந்திய பாலை நினைத்து அழுது என்ன பயன் கூறுங்கள் ? :pout:

 
கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்று ஆகிவிட்டது. அன்று சென்று வந்ததை நினைத்து அமைதி கொள்ளலாம் அல்லவா? கடைசிவரை ஆபரணங்களை வைத்துகொண்டு கிடைக்கும் சந்தோஷத்தைவிட, அனுபவித்ததில் கிடைத்த சந்தோஷம் மேல். ஆசை என்பது அடுத்தாத்து மாமாவின் மீசைமேலும் பாயக்கூடும். கட்டுப்பாட்டில் கிடைக்கும் சுகம் கட்டுப்படாவிடில் கிடைக்காது.
 
"aduththaathu mama meesiayaal enna payan?"

It can serve to terrorize the kids- if he has a raavana-like mustache!

The thing is we never know whether we are making the correct decision until much later! :sad:
கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்று ஆகிவிட்டது. அன்று சென்று வந்ததை நினைத்து அமைதி கொள்ளலாம் அல்லவா? கடைசிவரை ஆபரணங்களை வைத்துகொண்டு கிடைக்கும் சந்தோஷத்தைவிட, அனுபவித்ததில் கிடைத்த சந்தோஷம் மேல். ஆசை என்பது அடுத்தாத்து மாமாவின் மீசைமேலும் பாயக்கூடும். கட்டுப்பாட்டில் கிடைக்கும் சுகம் கட்டுப்படாவிடில் கிடைக்காது.
 
Life is always of full surprises only. The entire world where we
live consists of both order and disorder. The laws of nature are
evidence of order. Yet our life is enmeshed with uncertainity,
unpredictability, insecurity, instability, randomness, etc and so on.
There is a saying that a life without surprise is a life of boredom.
We may not have to wait for the surprise to occur or appear.
When we understand the life, we expect the unexpected, thus life
is ifs and buts only.

Balasubramanian
Ambattur
 
The usual quotations will be resumed from tomorrow.

Life is full of twists and turns - like the interesting stories of O Henry.

When the tide rises and seems to be in our favour, you must make use of

it. No point in waiting till it is low tide and cry over the missed

opportunities.
 
If the occasion demands a bold step or a giant leap, be prepared to

take it / do it. After all you can't clear a wide well in two short jumps!

It really requires one giant leap!
 
# 272. For show and for use!

அவர்கள் வசித்த குவாட்டர்ஸ் மிகவும் பெரியது.

ஆனால் உள்ளே வரச்சொல்லி அழைப்பது மிகவும் அரிது!

வாசலோடு நிறுத்தி பேசி அனுப்பிவிடுவார்கள்.

என்னை ஒருமுறை உள்ளே அனுமதித்தபோது வியந்தேன்!

"கச்சிதமாக ஒரு மாடல் வீடு போல உள்ளதே!" என்று. :couch2:

யாரவது சோபாவில் அமர்ந்தால் தானே அது கலையும்!

சமையல் அறையில் பளபளக்கும் பாத்திரங்கள் எல்லாம்

புகழ் பெற்ற சரவணா ஸ்டோரில் இருப்பதுபோல

உயரத்திற்குத் தகுந்தபடி நீட்டாக அடுக்கி இருந்தன! :love:

"எப்படி தினமும் எறி எல்லாம் அடுக்குவீர்கள்?" என்றால்

"அவி அன்னி ஷோ கோசரமே! இவி மேமு வாடுதுன்னவி!"

[அவை எல்லாம் வெறும் பார்வைக்காக.

இவை நான் தினமும் உபயோகிப்பவை]


என்று கரிப்பிடித்த பத்திரங்களைக் காட்டினர்

kitchen 'சிங்கிற்கு' அடியில். :shocked:

எல்லாம் இரண்டு! பார்வைக்கு ஒன்று, பணிக்கு ஒன்று!

நல்ல சிஸ்டம் தான் வருபவர்களை இம்ப்ரெஸ் செய்வதற்கு!

என்னால் வாழ முடியாது இந்த இரட்டை வாழ்க்கை!
:nono:
 
Last edited:
# 274. Gold cleaning !

நகை பாலிஷ் போடுகிறோம் என்று வந்தார்கள் இருவர்.

அம்மா எப்படி அவர்களை நம்பினார்கள் என்று தெரியவில்லை!

அப்பா ஹாஸ்பிடலில், நாங்கள் பள்ளியில், இருக்கும் போது

திண்ணையில் அமர்ந்து ஏதோ திராவகத்தில் முக்கி எடுத்துத்

துடைத்து பளபளக்கும் நகைகளை அம்மாவுடன் தந்தனர்.

பணத்தை வாங்கிக் கொண்டு போய்விட்டார்கள் அவர்கள்.

அம்மாவுக்கு செயின் கனம் குறைந்தது போலத் தோன்றியது.

அப்பாவிடம் சொல்லவும் பயம். :fear:

தெரு வியாபாரிகள் என்றாலே
அப்பாவுக்கு அலர்ஜி. :hand:

உண்மையைக் கண்டுபிடிக்காவிட்டால் அம்மாவுக்கு உறக்கம் வராது.

தட்டானிடம் சென்று நகையை எடை போட்டால்

அம்மா பயந்தது நிஜம் என்று ஆயிற்று. :doh:

பயங்கரமாக upset ஆகிவிட்டார் அவர். :whoo:

கடப்பாறையை முழுங்கிய
துபோல இருந்தார் சில நாட்கள்.

எத்தனை ஸ்மார்ட் ஆகவும், அலெர்ட் ஆகவும் இருந்தாலும்

யானைக்கு அடி சறுக்குவது போல சிலசமயம் சறுக்கி விடும்.
 
# 272. For show and for use!


எல்லாம் இரண்டு! பார்வைக்கு ஒன்று, பணிக்கு ஒன்று!

நல்ல சிஸ்டம் தான் வருபவர்களை இம்ப்ரெஸ் செய்வதற்கு!

என்னால் வாழ முடியாது இந்த இரட்டை வாழ்க்கை!
:nono:



Happy New Year, mami.

True. I agree. Neither can I live an artificial life. Many people are expert in having one at the face and another at the base. I always wonder why.
 
Happy new year to you too and to your family of S, S and S :)

I am reminded of a joke.

A man asks his wife,"If I have two faces, why will I show you this one?"

A point to ponder isn't it.
347


Well they are many people who want to impress others favourably.

This double-faced-dealing will be very helpful to them, I am sure.

For people who call a spade a spade, this arrangement is completely unnecessary.

Happy New Year, mami.

True. I agree. Neither can I live an artificial life. Many people are expert in having one at the face and another at the base. I always wonder why.
 
We generally have to face the different kinds of battles in our life, because we are
dedicated to walk along towards the spiritual life. We have to have the armour of
God to be with us always, in case of need to face the unwanted ones. Nothing
can stop us when we have God's blessings; i.e. if God is with us on our side, no
weapon fashioned against us can gain victory or succeed.

Balasubramanian
Ambattur
 
Lord Tennyson.

I hold it true, what'ver befall;
I feel it when I sorrow most,
"Tis better to have loved and lost
Than never to have loved at all. :tsk:

An infant crying for the light:
And with no language but a cry. :Cry:
 
# 274. LIGHT HOUSE மாமி.

அந்த மாமிக்கு வேறு எந்தப் பெயரும் பொருந்தாது.

பகலிலேயே பார்ப்பவர்கள் கண்கள் நகை வெளிச்சத்துக்குக் கூசும்!

இரவிலோ கன்னியாகுமரி தேவியின் மூக்குத்தி போல

வெகு தூரம் கலங்கரை விளக்கமாக டால் அடிக்கும்.

கிளியோபட்ராவாக நடித்த எலிசபெத் டைலர்

படப்பிடிப்பின் போது அசல் நகைகளை அணிந்திருந்தாராம்!

"எதற்கு அனாவசிய ரிஸ்க்?" என்று பிறர் கேட்டபோது,

டைரக்டர்,"அசல் நகைகளைப் போட்டுக் கொண்டா
ல் இந்த

நடிகைக்கும்
கிளியோபட்ராவின் மனோபாவம் இருக்கும்!"

என்றாராம். :drama:

கலங்கரை மாமியைப் பற்றி முற்றிலும் அறிந்துகொள்ள

இந்த ஒரு க்ளூ உங்களுக்குப் போதும் அல்லவா? :high5:

அவர் குனிந்தோ அல்லது வணங்கியோ யாருமே பார்ததில்லை.

வணங்காமுடி என்றால் சற்றும் மிகை ஆகாது.

ஒருவள் சொன்னாள்,

"மாமி குளிக்கும்போது சோப்பு கீழே விழுந்து விட்டால் கூட,

நாங்கள் யாரவது தான் போய் அதை எடுத்துத் தர வேண்டும். :doh:

அவளால் குனியவும் முடியாது! முடிந்தாலும் குனியமாட்
டாள்."

இது எப்படி இருக்கு??? :rolleyes:
 
# 275. WHAT A GREAT SACRIFICE?

அவர் வயது 65 + ! ஆனால் பார்ப்பதற்கு

ஒரு காலேஜ் ஸ்டுடென்ட் போலவும்,

இன்றைய நதியா போலவும் இருந்தார்.

இரண்டு மகன்கள், நான்கு பேரன்கள்;

கணவர் இல்லை! அம்மா, மாமா என்று உறவுகளை

ஓர் ஓல்ட் ஏஜ் ஹோம் போல ஆதரித்து வந்தார்.

எனக்கு புதிர்களின் விடை உடனே தெரிய வேண்டும்.

அவரிடமே கேட்டேன் அவர் இளமையின் ரகசியத்தை.

அவர் உப்பையும், சர்க்கரையையும் உண்பதில்லையாம்!

உப்பு இல்லாவிட்டால் காரம், புளியை உண்ண முடியாது.

இவ்வளவு பெரிய தியாகம் அவர் செய்யக் காரணம்???

ரத்த அழுத்தம், நீரிழிவு என்று எண்ணினால் அது முற்றிலும் தவறு.

அவர் உடல்நிலை நன்றாக இருந்து!பின் எதற்காக இந்தத் தியாகம்?

அப்போது இருந்த ஹீரோயின்கள்

சல்வார், கமீஸ் அணிவது வழக்கம்.

அவருக்கு அந்த உடை ரொம்பவும் பிடிக்குமாம் -

அன்றும், இன்றும் கூட!

அந்த உடை அணிய, இடை என்ற ஒன்றும் தேவை.

அதையும் அவர் அறிவர்.

உடை
யை அணிய, இடையை விரும்பி,

எடையைக் கட்டுப்படுத்தவே

அவர் செய்தாராம் இந்த மகத்தான தியாகம்.
என்ன வில் பவர்!!! :clap2:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top