Slokam for long life

praveen

Life is a dream
Staff member
தீர்க்காயுள் தரும் ஸ்லோகம்

இத்துதியை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஜபித்து வர அபமிருத்யு என்கிற ஆயுள் கண்டம் விலகி தீர்க்காயுள் பெறலாம்.

ஸ்லோகம்

ஹஸ்தாப்யாம் கலசத்வயாம்ருத ரஸைராப்லாவயந்தம் சிரோ
த்வாப்யாம் தெள தத்தம் ம்ருகாக்ஷவலயே த்வாப்யாம் வஹந்தம் பரம்
அங்கந்யஸ்தகரத்வயாம்ருத்தரம் கைலாசகாந்தம் சிவம்

ஸ்வச்சாம்போஜகதம் நவேந்துமகுடம் தேவம் த்ரிநேத்ரம் பஜே,

- ம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம்

பொருள்:

இரண்டு கைகளில் அம்ருதத்தை ஏந்திய வரும், மற்ற இரு கைகளில் மான் மற்றும் ருத்ராக்ஷ மாலையை ஏந்தியவாறு மேலிரண்டு கைகள் மேலே ஆகாயத்தை நோக்கியும், கீழிரண்டு கைகளும் தொடையில் வைத்தவாறு தலையில் பிறை சந்திரனை அணிந்தவரும், வெள்ளை மேகம் போல் காட்சியளிக்கும் கைலாயத்தில் வசிப்பவருமான அந்த முக்கண்ணனை வணங்குகிறேன்.
 
Back
Top