இலக்கு
************
கையிடுக்கில்
நழுவும் மணல் போல
நழுவிக் கொண்டே இருக்கிறது
வாழ்க்கை;
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு மணியும்
ஒவ்வொரு நிமிஷலும்
ஒவ்வொரு நொடியும்
நம் வாழ்க்கை
நழுவிக் கொண்டே இருக்கிறது -
நழுவுகிறது என்று நாம்
உணராத வண்ணமே.
ஓட்டப் பந்தய வீரன் போல
ஓடிக் கொண்டே இருக்கிறோம்,
ஒரு வித்தியாசத்தை உணராமலே!
ஓட்டப் பந்தய வீரரின்
இலக்கு அவன் நிர்ணயத்தில்.
நம்முடைய இலக்கு
இறைவன் நிர்ணயத்தில்.
சிலருக்கு நூறு மீட்டர்;
சிலருக்கு இருநூறு
சிலருக்கு ஆயிரம், ஐயாயிரம்;
வெகு சிலருக்கு மராத்தான்;
பெரும்பாலானோர்க்கு
தடை தாண்டும் ஓடுகளமாய்...
போராட்டங்களே வாழ்வாய்...
என்றைக்கு எரிபொருள் தீரும்
என்றறியாத வாகனம் நாம்...
இலக்கை நிர்ணயிப்பது
இறைவன் என்று நம்
இதயம் தெளிந்து விட்டால்,
பிணக்குக்கு இடமேது?
பிரிவினை,
வன்முறை ஏது?