• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Kavithai Pookal - Anamika

Status
Not open for further replies.
thank you raji.

the behaviour is identical in my 2 home laptops and work laptop. i can open the thread, but it is all blank.

the story in nilacharal i enjoyed. :) thank you once again good lady, for responding.
 
Hello Sir,

Nice to see you are following the link; I have completed the story here for the readers of Tambram; Hopefully your system will be o.k soon as I will be starting one of my novels; Hope you will be there to provide the 'special' effects for this link, too.

Regards and Thanks
Anamika
 
வசந்தத்திற்கு வரவேற்பு!
***********************************


ஆண்டவனின் தோட்டத்தில்
ஆண்டென்னும் பூச்செடியில்
அடுத்த மலரின் ஜனனம் - அதை
ஆவலுடன் வரவேற்போம்!


கடந்த வருடத்தின்
கசப்பான நினைவுகளை
நெஞ்சம் மறக்கட்டும் -
அவற்றில் நாம் கற்ற
பாடம் மட்டும் நினைவில்
என்றும் இருக்கட்டும்.


அதிகாலை விடியலென
ஆனந்த பூபாளமென
அரும்பொன்று மலர்ந்து
ஆண்டாக விரிகிறது! நம்
ஆசைகள் ஈடேற
ஆசி கொண்டு வருகிறது!


வருகின்ற புத்தாண்டு
வளம் சேர்க்கட்டும்!
வயலெல்லாம் விளைந்திருக்க
வாழ்வெல்லாம் உயர்ந்திருக்க
மனமெல்லாம் நிறைந்திருக்க
மங்கலமே நிலைத்திருக்க
வருகின்ற புத்தாண்டு
வளம் சேர்க்கட்டும்!


உள்ளத்தின் மகிழ்ச்சி
உதடுகளில் பரவ
இல்லங்களின் மகிழ்ச்சி
எங்கெங்கும் பரவ
வளம் சேர்க்க வரும் புத்தாண்டை
வாழ்த்தி நாம் வரவேற்போம்!!


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
 
காரணம் யார்?
....... சொல்லுங்கள்!
******************************************
கண்ணே மணியே என்
காதல் குயிலே அன்பே உன்
அருட்பார்வை இன்றேல்
அவ்வுலகம் செல்வேன் என்று சொல்லி
மையல் கொளச் செய்த
மன்னவனை நம்பி
உற்றாரை, ஊரை விட்டு
ரயில் ஏறினாள் அவரோடு!


பக்கத்தில் இருக்கைகள்!
பார்வைகளின் உரசல்கள்!!
பரவசமாகத் தான் அவள்
பயணம் தொடங்கியது!
கதிரவன் கடல் மடியில் துயில
கவலையின்றி அவளும் துயில- அவள்
காலைப்பொழுது அன்றோடு
நிரந்தரமாய் தொலைந்தது!


குப்பைகள் பெருக்க
வந்த பெண்ணொருத்தி
குப்பையாய் நினையாமல்
நீர் தெளித்து எழுப்பினாள்!
கொள்ளை போனது தன்
உள்ளம் என்றிருந்தாள் - இல்லை!
உடைமைகள், உடையவன் எல்லாமே!
நீர் பெருக்கி அவள் அழுதாள்!!


அறியாத வயதில்
தெரியாத ஊரில்
அனாதையாய் திரியும்
அழகான பெண்ணுக்கு
என்ன நடக்குமோ...
அவளுக்கும் நடந்தது!
விடுதிக்கு வந்தாள் - தினமும்
விருந்தாக்கப்பட்டாள்!!


தன் வாழ்வு தடம் மாற
என்ன காரணம் என்று
பல முறை யோசித்தாள்;
ஒரு விடையும் கிடைக்கவில்லை!
காதலிப்பதாய் சொன்ன
கயவன் காரணமா?
காதலே வேதமென்று
சொன்னவர்கள் காரணமா?


காதலனை நம்பி வந்தது
கன்னி அவள் தவறா?
காதலனே உலகமென்று
கற்பித்தவர் தவறா?
அறியா வயதில் அவள் மனதில்
அழுத்தமாய் காதல் படியும்படி
படம் எடுத்து பணம் செய்த
பாவிகள் தான் காரணமா?


செல்வதற்கு இடமில்லை;
சொல்வதற்கு உறவில்லை;
உடன் வரவும் துணையில்லை;
உணர்ச்சிகளும் ஏதுமில்லை;
விடிவுகாலம் அவளுக்கில்லை; அட,
விடிவதற்கு வாழ்க்கையே இல்லை.
விடை தெரிந்து கொள்ளவுமா
விதி அவளுக்கு இல்லை?
 
காரணம் யார்? ....... சொல்லுங்கள்!
இளம் உள்ளங்களை அலை பாய விட்டு, கேளிக்கை என்ற பெயரில் காதல் படங்களை எடுத்து, சின்னஞ்சிறுசுளைக்

கெடுப்பது, சர்வ நிச்சியமாக சினிமாதான்!

மனதை உலுக்கும் நல்ல கவிதைக்கு நன்றி ஹேமா!
 
இலக்கு
************


கையிடுக்கில்
நழுவும் மணல் போல
நழுவிக் கொண்டே இருக்கிறது
வாழ்க்கை;


ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு மணியும்
ஒவ்வொரு நிமிஷலும்
ஒவ்வொரு நொடியும்
நம் வாழ்க்கை
நழுவிக் கொண்டே இருக்கிறது -
நழுவுகிறது என்று நாம்
உணராத வண்ணமே.


ஓட்டப் பந்தய வீரன் போல
ஓடிக் கொண்டே இருக்கிறோம்,
ஒரு வித்தியாசத்தை உணராமலே!
ஓட்டப் பந்தய வீரரின்
இலக்கு அவன் நிர்ணயத்தில்.
நம்முடைய இலக்கு
இறைவன் நிர்ணயத்தில்.


சிலருக்கு நூறு மீட்டர்;
சிலருக்கு இருநூறு
சிலருக்கு ஆயிரம், ஐயாயிரம்;
வெகு சிலருக்கு மராத்தான்;
பெரும்பாலானோர்க்கு
தடை தாண்டும் ஓடுகளமாய்...
போராட்டங்களே வாழ்வாய்...


என்றைக்கு எரிபொருள் தீரும்
என்றறியாத வாகனம் நாம்...
இலக்கை நிர்ணயிப்பது
இறைவன் என்று நம்
இதயம் தெளிந்து விட்டால்,
பிணக்குக்கு இடமேது?
பிரிவினை,
வன்முறை ஏது?
 
தீர்ப்பு
*********


தாக்குதல், பறித்தல் என
தவறுகளைத் தொடர்ந்து
தைரியமாகச் செய்தவள் நீ!
ஆம்! என்னை உன்
கடைக்கண்ணால் தாக்கி வீழ்த்தினாய்!
கண்ணசைவினில் என் இதயத்தை
கன்னி நீ பறித்துக் கொண்டாய்!
இப்படி -
தவறுகளைத் தொடர்ந்து
தைரியமாகச் செய்தவள் நீ!
ஆனால் - உன் நினைவினால்
தண்டனை பெறுவதோ நான்!
என்ன தீர்ப்படி பெண்ணே, இது!


தவறு இழைக்கப்பட்ட நானே
தண்டனையும் பெறுகிறேன்! இது
இ.பி.கோவின் எந்தப் பிரிவு?!
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top