• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Kavithai Pookal - Anamika

Status
Not open for further replies.

anamika

Active member
1. அடையாளம் மட்டுமே !
**************

நான் எழுதும் கவிதைகள்
எல்லா இதழ்களிலும்
வெளியாகின்றன;
அதனால் என்ன ?
நீ அவற்றை
வாசிக்காத வரையில்
அவை வெற்றுத் தாள்களே.

நான் பாடும் பாடல்கள்
எல்லா இடங்களிலும்
ஒலிக்கின்றன;
அதனால் என்ன ?
நீ அவற்றை
கேட்காத வரையில்
அவை வெறும் சப்தங்களே.

நான் வரையும் ஓவியங்கள்
எல்லா வீடுகளிலும்
சிரிக்கின்றன;
அதனால் என்ன?
நீ அவற்றை
பார்க்காத வரையில்
அவை வெறும் வர்ணங்களே.

என் புகழ் பாடும் பேச்சுக்கள்
இந்த ஊரெங்கும்
மணக்கின்றன;
அதனால் என்ன?
நீ அவற்றை
ரசிக்காத வரையில்
அவை வெறும் வாக்கியங்களே.

என் பெயரை
இந்த உலகமே
உச்சரிக்கிறது;
அதனால் என்ன?
நீ அதனை
சொல்லாத வரையில்
அது வெறும்
அடையாளம் மட்டுமே!
 
2. விதைகளும் வேர்களும் - அனாமிகா
***************

விதை-
பூமிக்குள்
புதையுண்டு
தன்னைத் தானே
சிறைப்படுத்த,
புதிய செடியொன்று
பூத்து எழுந்தது,
மண் மேலே !

இலைகளும் கிளைகளும்
காற்றோடு கைகுலுக்கினாலும்
வேர்களுக்கு மட்டும்
உலகம் என்றும்
இருட்டறை தான்.

திருமணத் தோட்டத்தில்
பெண்ணும் ஒரு விதைதான்!

தனிப்பட்ட விருப்பங்களை
தனக்குள்ளே புதைத்து
தாயான பின்னர் தன்
தனித்துவத்தை மறந்து...
குடும்பத்தின் வாரிசுகள்
வானில் வலம் வந்தாலும்
அம்மாவின் உலகம்
அடுப்படி தாண்டுவதுண்டா?

கனிகளை மட்டுமே
கண்டு பாராட்டும் நாம்,
வேர்களை இனம் கண்டு
வாழ்த்துவது எப்போது?
 
Good one Anamika! But the real situation now-a-days is:

காலம் மாறுகிறது!

வேராக மறைந்து, தான் தனித்துவமின்றி
வேறாகிப் போகும் காலம், மாறிவிட்டது!

மழலையைக் காப்பகங்களில் விட்டுத் தம்,
மழலைப் பேச்சை ரசிக்காதவர், எத்தனை!

இருவர், பொருளீட்டச் செல்லும் காலமிது!
சிறுவர், பூட்டிய வீட்டை நாடும் காலமிது!

தாய்ப் பாசத்தை எதிர்நோக்கியே ஏங்காத
சேய்கள் பெருகினால், நாடு நலமாகுமே!

குறிப்பு:

எதிர்ப் பாட்டாக இதை எவரும் கருத வேண்டாம்!
ஏங்கித் தவிக்கும் பிள்ளைகளையே எண்ணினேன்!

:ballchain:
 
Kavithai pookal - விதைகளும் வேர்களும்

Dear Friends,

Thanks for your comments.

Dear Raji Ma'am,

இதில் வேர்களாக நினைத்து நான் எழுதியது முந்தைய தலைமுறை பெண்களை வைத்து - இன்று வெளியே சென்று சாதிக்கும் பெண்களுக்கு வேர் அவர்கள் தானே! 'எடிட்' செய்த இன்னொரு para உங்களுக்காக சேர்க்கிறேன்.

உனக்கு என்ன பிடிக்கும்?
அத்தனை விவரங்களும் உன்
அம்மாவின் விரல்நுனியில்.
அவளுக்கு என்ன பிடிக்கும்?
குடும்பத்தைக் கேளுங்கள் :
அவளுக்கென்று விருப்பங்கள்
உண்டா, என்ன?
அப்போது தான் யோசிக்கும்.

Hope my idea is clearer now.

Anamika.


Good one Anamika! But the real situation now-a-days is:

காலம் மாறுகிறது!

வேராக மறைந்து, தான் தனித்துவமின்றி
வேறாகிப் போகும் காலம், மாறிவிட்டது!

மழலையைக் காப்பகங்களில் விட்டுத் தம்,
மழலைப் பேச்சை ரசிக்காதவர், எத்தனை!

இருவர், பொருளீட்டச் செல்லும் காலமிது!
சிறுவர், பூட்டிய வீட்டை நாடும் காலமிது!

தாய்ப் பாசத்தை எதிர்நோக்கியே ஏங்காத
சேய்கள் பெருகினால், நாடு நலமாகுமே!

குறிப்பு:

எதிர்ப் பாட்டாக இதை எவரும் கருத வேண்டாம்!
ஏங்கித் தவிக்கும் பிள்ளைகளையே எண்ணினேன்!

:ballchain:
 
Yes dear Anamika! I agree to and understand what you say...

Please read my comment again:

Good one Anamika! But the real situation now-a-days is: ................
 
dear Anamika,

I suggest that you give the link to your blog of Tamil poems here for the

benefit of all the members-whether or not the poems are repeated here from

your blog.

with best wishes and regards,
Mrs.V.R.
 
3. தோழியின் பரிசுகள்
******************

முன்பு ஓர் பிறந்த நாளுக்கு
அவள் பரிசளித்த பேனாக்கள்
இன்று எழுத இயலாத நிலையில்...

மற்றுமொரு பிறந்த நாளன்று
தந்த வெள்ளி மோதிரம்
தற்போது கருத்த மோதிரமாய்...

அவள் கொடுத்த வால்பேப்பர்
வீட்டின் கடைக்குட்டி உபயத்தால்
இப்போது பேப்பர் பேப்பராய்...

அவள் கொடுத்த சாவிக்கொத்து
'அழகாய் இருக்கிறதே' என்ற
அண்ணியின் இடுப்பில்...

பிரேம் போட்ட படமொன்று
வீட்டின் வெள்ளையடிப்பு
வைபவத்தில் கடல் சென்ற காயமாய்...

ம்ம்..போனவை போகட்டுமே!

ஆண்டுகள் பல கடந்தும்
ஒவ்வொரு முறையும்
அவள் பரிசாய் அளித்த
நட்பும், நல்தோழமையும்
அழியாத மெருகோடு
அன்று போல் புதுமையாய்...
என்றும் இனிமையாய்...
எனக்கே எனக்காய்...

என் இதயத்தில் பத்திரமாய்!!!

4. ஒரு ஊமையின் கானம்

மனதைப் பிளந்து நெஞ்சில் நுழைந்து
மறுயோசனை இன்றி அரியாசனம் கொண்டாய்;
மறுநாள் உனைப்பார்க்க மகிழ்ச்சியோடு காத்திருக்க
வந்தாய் நீ ஒரு வாரம் கழித்து;
உன் மெட்டியின் அடியில் நசுங்குவது
நான் கொண்டு வந்த மலர் மட்டுமல்ல, கூடவே
என் மனதில் எழுதிய கவிதை !

To read more poems , Pls visit my blog @ www. anbudan-shakthi.blogspot.com
 
Last edited:
Dear Anamika!

Went through your blog. Nice poems and good imagination. Congrats!

But, some comments are written in - don't know how to say! - some alien language resembling Tamil (??)

நல்ல வேளை! சீத்தலைச் சாத்தனார் உயிருடன் இல்லை!

இருந்தால், அவரின் எழுத்தாணியும் மழுங்கும், குத்திக் குத்தியே!

If you have the option to delete them, please DO SO TODAY!

Best wishes,
Raji Ram :typing:
 
கவிதைப் பூக்கள் - 5 - அனாமிகா
*************

நெஞ்சின் சுமைகள்
************

நீ உடனிருந்த போது உலகைப் பார்த்து
நான் உரைத்தேன்:
"என்னவள் மட்டும் போதும்;
உலகெனக்கு வேண்டாம்" என்று.
நீ என்னை உதறிவிட்டுச் சென்ற பிறகு
உலகு என்னைப் பார்த்து உரைக்கிறது:
"அதோ போகிறான் பார்,
பைத்தியக்காரன்" என்று.

பூவிதழ்களில் எல்லாம்
தீ சுட்ட வடுக்கள்;
ஆம், என் நெஞ்சமெனும்
பூவிதழ்களில் எல்லாம்
நீ சுட்ட வடுக்கள்;
மூங்கிலில் துளை செய்தால்
புல்லாங்குழல் ஆகும்.
நீயோ, குழலையே துளைத்து
இசை வேண்டுமென்கிறாய்,
எப்படி இது சாத்தியம்?

கையிலே சுமை இருந்தால்
இறக்கி வைக்க வழியுண்டு;
நெஞ்சத்தின் சுமைகளை
இறக்கி வைக்க வழி ஏது?

உன்
நினைவென்னும்
மூட்டைகளின் பாரம்
அழுத்துகையில்
வாழ்க்கை நதியை
நான்
கடப்பது
எப்படி?
 
கவிதைப் பூக்கள் - அனாமிகா - சித்திரைப் பெண&#30

சித்திரைப் பெண்ணே, வருக !
******************

எண்ணமெல்லாம் நிறைவேற
இன்பமெல்லாம் கைகூட
மனமெல்லாம் மகிழ்ந்திருக்க
மகிழ்ச்சி எங்கும் நிறைந்திருக்க
வருகின்றாள் சித்திரைப்பெண்!
வசந்தத்தின் முத்திரைப்பொன்!!

வாசலெங்கும் வண்ணக்கோலம்
வீதியெங்கும் தோரணம்!
ஊரெங்கும் விழாக்கோலம்
உலகமெலாம் குதூகலம்!
வருகின்றாள் சித்திரைப்பெண்!
வசந்தத்தின் முத்திரைப்பொன்!!

எண்ணம் ஏற்றம் பெற்றிட
நன்மை நாடி சேர்ந்திட
அமைதி உலகில் நிரம்பிட
அன்பு, கருணை பெருகிட
வருகின்றாள் சித்திரைப்பெண்!
வாழ்த்திடுவோம்!வளம் பெறுவோம்!!
 
உன்
நினைவென்னும்
மூட்டைகளின் பாரம்
அழுத்துகையில்
வாழ்க்கை நதியை
நான்
கடப்பது
எப்படி?
Dear anamika, I just saw this. பூவிதழ்களில் தீ சுட்ட அவன், does not deserve this consideration. Cast him aside, for one who would see the beauty of குழலோசை, for there are many fish in the ocean, way too many to not have one who is a true connoisseur.

Cheers!
 
Mrs. Raji - நன்றி ; உங்களுக்கும் மற்றும் tamilbrahmins -n அனைத்து நண்பர்களுக்கும் என் சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் !!

அனாமிகா
 
.......... பூவிதழ்களில் தீ சுட்ட அவன், does not deserve this consideration. Cast him aside, for one who would see the beauty of குழலோசை, for there are many fish in the ocean, way too many to not have one who is a true connoisseur......
Dear Prof. Sir,

காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள்! என்னைப் பொறுத்தவரை,
காதலுக்குக் கண்ணும் இல்லை; அறிவும் இல்லை!!

ஒரு கலிகாலக் கல்யாணத்தைப் பற்றி எழுதியதில் ஒரு பகுதி இதோ:

'மன்மத பாணங்கள் எப்போது, யார் மேல் விழும்
என்பது ரகசியங்கள்! இதுதான் விதியின் சதியோ?

குலமும், கல்வியும், அழகும், வருமானமும் எனப்
பலவும் குறைந்தவனை, மன்மதனால் நாடினாள்!

என்ன செய்தாலும், எல்லாம் மறந்து, தம் பெற்றோர்
வெண்ணையாக நின்றிடுவர், என்ற நினைப்புத்தான்!'

இப்படி இருக்க, பாரம் சுமப்பது இயற்கைதானே!

:ballchain:

Regards.........
 
கவிதைப் பூக்கள் - கற்பெனப் படுவது.... - அனாமிகா
*** ***************************


அவள் போய் விட்டாளாம்!

கைத்தலம் பற்றி என்
காலடி பின்பற்றி, நான்
கைத்தடி பற்றியதும் என்
கரம் பற்றி உதவிய -

அவள் போய் விட்டாளாம்!

கல்யாண மாலை சூடி
கட்டிலாட, தொட்டிலாட்டி
கண் நிறைந்த மழலை பெற்று
கருத்தோடு வளர்த்து
கல்யாணம் செய்து வைத்து, என்
கடமைகள் அனைத்திலும்
கூடவே வந்தவள், என்
கட்டை வேகும் வரை
காத்திருக்கப் பிடிக்காமல் -

அவள் போய் விட்டாளாம்!

ஓய்வு பெற்ற பின்னும் என்னை
ஒதுக்கி வைத்து விடாமல்
ஓடி ஓடி கவனித்து
ஓய்ந்து போனதாலோ என்னவோ -
அவள் போய் விட்டாளாம்!

எந்த நிறச் சேலை
எடுக்கட்டும் எனக் கேட்ட போது
எனக்குப் பிடித்த நிறமாக
எடுத்துக் கொண்டாளே,
அன்று முதல் நேற்று வரை
அனைத்திலுமே என் விருப்பம்;
இன்று மட்டும் ஏனோ
என் விருப்பம் கேளாமல் -

அவள் போய் விட்டாளாம்!

நாம் - கல்யாணத்திற்கு முன்
காதலித்தவர்கள் அல்ல;
கைவிரல் நகம் கடித்து
கவிதை எழுதியவரல்ல;
ஆயினும் - உன் கண்களில்
நான் படித்த அன்புக் கவிதை
அற்புதமானது அன்றோ!
விழியில் கவிதை எழுதிய தேவதை -

அவள் போய் விட்டாளாம்!

நெஞ்சினிலே இடம் பிடித்து
நினைவுகளிலே இனித்து
கண்களில் நிறைந்து
கனவிலும் கைகோர்த்து
வாழ்வெனும் பாதையில்
துணையாக வந்தவள்,
பாதி வழியிலே என்னை
பரிதவிக்க விட்டு விட்டு -


அவள் போய் விட்டாளாம்!

இன்பங்களை என்
இருப்பிடத்திற்கே கொணர்ந்து
துன்பம் சூழ்ந்த நேரம்
துணை நின்று தோள் கொடுத்து
துயர் நீக்கி விழிநீர் துடைத்து
துணிவோடு தேற்றி, என்
வழியெல்லாம் ஒளியேற்றி
வாழ்வெல்லாம் மெருகேற்றிய -

அவள் போய் விட்டாளாம்!

ஒற்றைத் தண்டவாளத்தில்
ஓடும் ரயில் ஏது சொல்லு?
ஓன்றுக்கும் உதவாது;
ஒரு பயனும் கிடையாது;
ஒற்றைத் தண்டவாளமாய் என்னை
ஒடுங்கி அழ வைத்து
ஒரு மூலையிலே அமர வைத்து
ஒய்யாரமாய் வேறுலகுக்கு -

அவள் போய் விட்டாளாம்!

கண்களிலே இனி நீரில்லை;
காரணமோ தெரியவில்லை;
நெஞ்சு முழுதும் கோபம்
நினைக்க நினைக்க பொங்கியது;
என்னை விட்டு விட்டு
எப்படி நீ மட்டும் போவாய்?
என் கேள்விக்கு விடை தராது
எப்படி நீ செல்வாய்?

உணர்ச்சிகளின் தாக்கத்தில்
உள்ளே ஏதோ வலித்தது;
உயிர் வாழ ஆசையின்றி
உதடு ஊமையானது;
உயிர் ஒன்று
உயிரைத் தேடி
உயர உயரப் பறந்தது;
ஊர் முழுதும் பேசிற்று -

அவரும் போய் விட்டாராம்!

******************
 
கவிதைப் பூக்கள் - கற்பெனப் படுவது.... - அனாமிகா
*** ***************************
......................
அவரும் போய் விட்டாராம்!

Very touchy post, dear Anamika! :thumb:

புதிய விளக்கம்...

குமுறும் எரிமலை ஒன்று, உள்ளே வெடித்ததோ?
கதறும் ஓசை கேட்காது, அழுத்தி வைத்ததாலோ?

பத்தினித் தெய்வம், வாழ்வில் வந்து சேர்ந்ததால்,
பத்தினித் தன்மை, இவருக்கும் வந்து சேர்ந்ததோ?

தன்னிடம் பேசவும் ஆளில்லாது போவது அறிந்து,
'உன்னிடம் வருகிறேன்', என்று பின் சென்றாரோ?

'எண்ணெய் முந்தியா, திரி முந்தியா'; ஐயமில்லாது,
தன்னை மாய்த்துப் புதியதாய் விளக்கம் தந்தாரோ!

நட்புடன் வாழ்வில் உடன்வர, சத்தியம் செய்ததால்,
நட்புடன் இறப்பிலும், உடன் செல்ல விழைந்தாரோ?

'இவ்வுலகில் நீதான் எல்லாம்', என்று வாழ்ந்ததால்,
அவ்வுலகில் பின் தொடர, முடிவுதான் செய்தாரோ?

:plane:
 
கவிதைப் பூக்கள் - கற்பெனப் படுவது.... - அனாமிகா
*** ***************************


......என்னை
ஒதுக்கி வைத்து விடாமல்
ஓடி ஓடி கவனித்து
ஓய்ந்து போனதாலோ என்னவோ -
அவள் போய் விட்டாளாம்!

எந்த நிறச் சேலை
எடுக்கட்டும் எனக் கேட்ட போது
எனக்குப் பிடித்த நிறமாக
எடுத்துக் கொண்டாளே,
அன்று முதல் நேற்று வரை
அனைத்திலுமே என் விருப்பம்;
இன்று மட்டும் ஏனோ
என் விருப்பம் கேளாமல் -

... ******************

anamika,

i second raji's sentiments.

it is said that the loss of the spouse is the biggest shock one experiences in life.

we never recover from the loss of a child, but the shock of the loss of a spouse - nothing like this one.

God Bless.
 
கவிதைப் பூக்கள் - 5 - அனாமிகா
*************

கையிலே சுமை இருந்தால்
இறக்கி வைக்க வழியுண்டு;
நெஞ்சத்தின் சுமைகளை
இறக்கி வைக்க வழி ஏது?

உன்
நினைவென்னும்
மூட்டைகளின் பாரம்
அழுத்துகையில்
வாழ்க்கை நதியை
நான்
கடப்பது
எப்படி?

only time heals. be gentle to yourself. the process of consoling oneself is the most satisfying and poignant skillset. i learnt it from my mother.
 
இனிய கவிதையால் பதில் தந்த ராஜி அவர்களுக்கும், ஆசி வழங்கிய குஞ்சுப்பு அவர்களுக்கும்
அன்பு நன்றி !

அனாமிகா
 
dear poetwithnoname,

i sincerely hope the sad poem about the loss of a spouse was only an imagination.

i re-read it now. i feel.

best wishes
 
கவிதைப் பூக்கள் - உயிர்த் தூது - அனாமிகா
****************************

அனஸ்தீஸியா இல்லாமல் ஒரு
அறுவை சிகிச்சை நடந்து விட்டது!
அவள் என் இதயத்தை
அறுத்தெடுத்துப் போய் விட்டாள்!
தையல்கள் போடாமல்
தையல் அவள் போய் விட்டாள்!
வஞ்சியை வரச் சொல்ல
வாகான தூது எது?

தென்றல் அதை தூது விட்டால்
தேவி கேசமதை கலைத்து விடும்!
மேகம் அதை தூது விட்டால்
பூமேனி அது வாடி விடும்!
பூக்களையே தூது விட்டால்
புன்னகையில் மதி மயங்கி
சென்ற வேலையினை தாம் மறந்து
சிரிப்பழகில் சொக்கி நிற்கும்!

குயில் அதனை தூது விட்டால்
குரல் இனிமையில் உறங்கி விடும்!
மயில் அதனை தூது விட்டால்
மங்கை அழகில் சிலையாகும்!
வண்டு அதனை தூது விட்டால்
வண்ணப் பாதங்களை வட்டமிடும்!
இசை அதனை தூது விட்டால்
இளமயிலிடமே தனை இழக்கும்!

நிலவு அதனை தூது விட்டால்
கூந்தலிலே தொலைந்து விடும்!
விண்மீன்களை தூது விட்டால்
விழியழகில் மயங்கி விடும்!
முத்துக்களை தூது விட்டால்
முகத்தழகில் மூழ்கி விடும்!
கிள்ளை அதை தூது விட்டால்
கானங்களும் பயின்றிருக்கும்!

அன்னம் அதை தூது விட்டால்
அவள் நடையழகை பார்த்திருக்கும்!
கவிதையினை தூது விட்டால்
கன்னி அழகில் லயித்திருக்கும்!
என் துயர் உணர்ந்த தீந்தமிழே!
உயிரே! உனை தூது விட்டேன்!
அவள் அழகில் மயங்கு முன்னே என்
அழைப்பை நீ சொல்லி விடு!

அன்பென்னும் மை தொட்டு
என் உயிர்ப்பூவின் ஒரு மொட்டு
உன் வாசலுக்கு வருகிறது!
வாசம் ஏற்று நீ மகிழ்ந்தால்
வாழ்வெனக்கு நந்தவனம்!
வசந்தம் எனக்கு இல்லையென்றால்
தமிழை நீ அனுப்பிவிடு;
ஒப்பாரி பாட ஒருவராவது வேண்டும்!

*********************
 
கண்ணாடி வாழ்க்கை
*****************

எல்லோரும் என்னில்
தத்தம் முகங்களையே
பார்க்க விரும்புகின்றனர்;
என்னை
மகளாய்...
சகோதரியாய்...
மனைவியாய்...
மருமகளாய்...
அண்ணியாய்...
தாயாய்....

எல்லாக் கடமைகளையும்
சரியாகவே செய்கிறேன்;
என்றாலும்
எப்போதும்
மனசுக்குள் எழும் கேள்வி:
"என்னை நானாகவே
பார்க்க நீங்கள்
எப்போது விரும்புவீர்கள்?"

எப்போதாவது...

என் நெஞ்சுக்குள் உறைந்த கேள்வி
வார்த்தைகளாய் உருகி விட்டால்,
என் வீட்டார்களுக்கு
பிடிப்பதில்லை.

அவர்கள் மட்டுமல்ல,
கண்ணாடிகளுக்கென
சொந்த முகம்
இருப்பதை
யாருமே
விரும்புவதில்லை!
 
dear anamika,

unable to open your uravugal thread. something wrong. it comes out as blank.

are you just re printing the story from nilacharal? thank you.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top