தூறல்
பொழிந்து முடிப்பதும்
இல்லை;
நிலம் காய
அனுமதிப்பதும் இல்லை;
இடைவிடாத தூறலாய்
எப்போதும் சாரலாய்
என் மனத்துள்
உன் நினைவுகள்!
********************
வேதனை
மனிதனே!
உன் காதலியின்
புன்னகையை
உயிர்ப்பிக்க
என் உயிரை
எடுக்கிறாயே!!
*******************
கரையேற்றம்
திருமதி ஆகி விட்ட மகள்
கல்யாணக் க்ரையில்-
பெற்றோர் கடனென்னும் கடலில்!
********************
புன்னகை
அடிதடி கலவரம்;
அலறி ஓடும் மக்கள்;
புன்னகையோடு பார்க்கிறார்
மகாத்மா--சிலையாய்!
*********************
முரண்
மரங்களை வெட்டி விட்டு
அலுவலகம் கட்டினார்கள்--
சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை!!
பொழிந்து முடிப்பதும்
இல்லை;
நிலம் காய
அனுமதிப்பதும் இல்லை;
இடைவிடாத தூறலாய்
எப்போதும் சாரலாய்
என் மனத்துள்
உன் நினைவுகள்!
********************
வேதனை
மனிதனே!
உன் காதலியின்
புன்னகையை
உயிர்ப்பிக்க
என் உயிரை
எடுக்கிறாயே!!
*******************
கரையேற்றம்
திருமதி ஆகி விட்ட மகள்
கல்யாணக் க்ரையில்-
பெற்றோர் கடனென்னும் கடலில்!
********************
புன்னகை
அடிதடி கலவரம்;
அலறி ஓடும் மக்கள்;
புன்னகையோடு பார்க்கிறார்
மகாத்மா--சிலையாய்!
*********************
முரண்
மரங்களை வெட்டி விட்டு
அலுவலகம் கட்டினார்கள்--
சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை!!