• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Bharathiyar ..

Status
Not open for further replies.
Children have a fondness for anything new. They greet everyday as a new day. So they are happy. Old people lose this trait and see everything as monotonous.

The story of Murugan teaching the meaning of ‘pranava’ to Siva really tells us that we have to imbibe from children the characteristic of looking at everything new.

சாதாரணமாகக் குழந்தைகள் தாம் புதுமையில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். புதிய கற்பனைகள், புதிய சிந்தனைகள், புதிய விளையாட்டுகள், புதிய நண்பர்கள் என்று நாள் தோறும் புதுமையை வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைப் பருவம் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணம் இது தான். குழந்தைகளிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது.

புராணங்களின் மெய்ப் பொருள் கண்டு பயன் பெற வேண்டும் என்ற பாரதியின் கருத்துக்கு இணங்க, ஓங்காரம் தொடர்பான ஒரு புராணக் கதையின் உட்பொருள் காண முயல்வோம்.

பிரணவத்தின் பொருள் தெரியாத பிரமனைக் குட்டிச் சிறையில் அடைத்து சிவனார் மனம் குளிர அவர் செவியில் முருகன் ஓதினார் என்று புராணம் கூறுகிறது. புதுமையைப் போற்று என்று குழந்தைகள் சொல்கின்றனர். புதியனவற்றை ஏற்க மறுக்கும் முதியவர்களே, குழந்தைகளிடம் இதைக் கற்றுக் கொள்ளுங்கள் என்பது தான் முருகனின் உபதேசம்.
See also my posting in the thread old Tamil saying.
 
I was hearing 'sangeetha saral' in FM rainbow right now the song, "thedi unnai saran adainden desa muthu mariamma" and reading your nice posts Vikrama ji...

Pranams
 
x புராணங்களின் மெய்ப் பொருள் கண்டு பயன் பெற வேண்டும் என்ற பாரதியின் கருத்துக்கு இணங்க, ஓங்காரம் தொடர்பான ஒரு புராணக் கதையின் உட்பொருள் காண முயல்வோம்.

பிரணவத்தின் பொருள் தெரியாத பிரமனைக் குட்டிச் சிறையில் அடைத்து சிவனார் மனம் குளிர அவர் செவியில் முருகன் ஓதினார் என்று புராணம் கூறுகிறது. புதுமையைப் போற்று என்று குழந்தைகள் சொல்கின்றனர். புதியனவற்றை ஏற்க மறுக்கும் முதியவர்களே, குழந்தைகளிடம் இதைக் கற்றுக் கொள்ளுங்கள் என்பது தான் முருகனின் உபதேசம்.

Namassadhasae.

Shri Vikrama ji
,

Excellent narration/interpretation/
bashyam of
Swaminathan Puranam through the vision of Bharathi. Please keep it up and continue to post treasures.

"அவரவர் இச்சையில் எவை எவை உற்றவை அவை தருவித்தருள் பெருமாளே!"
_ திருவக்கரை திருப்புகழ்
 
Even in that "Sivanar manam kulira upadesa manthram IRU sevi medilum uraitha gurunatha"

So, shanmuga has teached the meaning of pranavam not only to shiva, but also to shakti (Only the right ear is owned by him and left ear will be that of sakthi's.). So only Arunagiriar has said like this...

Bharathi has a lot and lot of wealth with him and also provides us many things to compare and conclude.

Pranams
 
In principle we feel the need to welcome changes but really we are not bold enough to give up the traditions, however bad. Bharathi deprecated this hypocrisy. There was a hue and cry when Bharathi broke the tradition and grew moustache. But he said, ‘‘These are only external symbols. The real substance of Brahminism is the Vedas. We should cherish them. We should give them a new vigour by removing the false Vedas.’’

நாம் புதுமை புதுமை என்று வாயால் பேசினாலும் பழமையை எளிதில் விட்டு விடுவதில்லை. பழமை எவ்வளவு கெடுதலாக இருந்தாலும் சம்பிரதாயத்தைக் கைவிடக் கூடாது என்கிறோம். புதிய விஷயங்களைச் சோதனை செய்து பார்க்கும் துணிவு நமக்கு இருப்பதில்லை. புதிய தேவதையை விடப் பழைய பிசாசே மேல் என்பது தான் நமது நிலை.

பாரதி புதிதாக மீசை வைத்துக் கொண்டபோது அவரது சுற்றத்தினர், “கலி முற்றிவிட்டது, தர்மமே அழிந்து விட்டது” என்று புலம்பினர். “இவை எல்லாம் புறச் சடங்குகள். பிராமணர்களின் உண்மையான சொத்து வேதம் தான். அதில் புகுந்துவிட்ட பொய்மைகளை நீக்கித் தூய்மை செய்து அதைப் புதுப் பொலிவுடன் நிலைநாட்டவேண்டும்” என்பது அவரது விருப்பம்.

தன் மனத்துக்குக் கூறுவது போல, பொதுவான மக்களின் இயல்பை, அவர் கூறுகிறார். மனமெனும் பெண்ணே வாழி நீ கேளாய் என்று துவங்கும் பாடலின் ஒரு பகுதி இது.

புதியது காணிற் புலனழிந்திடுவாய்
புதியது விரும்புவாய் புதியதை அஞ்சுவாய்
அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டு போல்
பழமையாம் பொருளிற் பரிந்து போய் வீழ்வாய்
பழமையே அன்றிப் பார்மிசை ஏதும்
புதுமை காணோம் எனப் பொருமுவாய் சீச்சீ
பிணத்தினை விரும்பும் காக்கையே போல
அழுகுதல் சாதல் அஞ்சுதல் முதலிய
இழிபொருள் காணில் விரைந்து அதில் இசைவாய்
 
Shri Vikrama,
You brought out the essence of Bharathi's understanding of vedas. Bharathi has been down to earth on many issues of social significance. A great poet for all ages. Venkat
 
Durga

You are absolutely right. Your point is taken. 'Iru Sevimeethilum .pagarsey gurunatha' - Sakthi was also given the meaning of praNavam.
My special pat to Shri Vikrama ji was for his interpretation that 'All listen to what children say is the thathvam of murugan's upadesam'.
His research work on Bharathi is highly commendable.

Keep it up Shri Vikramaji.
 
Bharathi practiced what he preached. He made many innovations in his literary creations. Moreover he introduced a new mantra, ‘Om Sakthi’. This is not a Vedic mantra. They used to chant ‘Om Santhi’ at the end of every recital. But Bharathi felt that santhi, peace, (implying inaction) is not the requirement of the times but people need to be goaded into energetic action. His mantra, ‘Om Sakthi’ has caught up and is now widely used.

Though this is not a Veda mantra, it is not altogether against the spirit of the Vedas. Vivekananda says, “Upanishads tell, 'Strength, Strength, men, do not be weak.' Weakness can not be cured by weakness. Dirt can not be removed by dirt. Stand erect, be strong.” Thus Bharathi infused new life into the Vedas.


பாரதி மற்றவர்க்கு உபதேசித்ததைத் தான் நடைமுறைப்படுத்திக் காட்டினார். முந்தைய புலவர்களினின்றும் மாறுபட்டு்க் காலத்திற்கு ஏற்ற புது வகையான பாடல்கள், புது வகையான கருப் பொருள்கள் கொண்டு தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தியது போல, மானிட சமுதாயம் நலம் பெறுவதற்கான ஒரு புதிய மந்திரத்தையும் உருவாக்கினார்.

சொல் புதிது

வேத மந்திரங்களைச் சொல்லி முடிக்கும்போது, ‘எங்கும் அமைதி நிலவுவதாக’ என்று பொருள்பட ‘ஓம் சாந்தி’ என்று மும்முறை சொல்லி முடிப்பது வழக்கம். இந்தியா தாழ்வுற்றுப் பாழ்பட்டு நின்ற நிலையில் நமக்குத் தேவை செயலற்றுக் கிடக்கும் அமைதி அல்ல, செயல்படுவதற்கான வலிமையே என்று உணர்ந்து பாரதி ஓம் சக்தி என்ற புதிய மந்திரத்தை அறிமுகப்படுத்துகிறார். இம்மந்திரம் வேத வழக்கில் இல்லாதது. ஆனால் இதன் கருத்து வேத சம்மதமானதே என்பதை விவேகானந்தரின் இந்த உபநிடத மேற்கோள் மெய்ப்பிக்கிறது.

உபநிஷத் கூறுகிறது, “வலிமை, வலிமை. மனிதா, பலவீனனாக இராதே. பலவீனத்தைப் பலவீனத்தால் குணப்படுத்த முடியுமா? அழுக்கை அழுக்கால் போக்க முடியுமா? மனிதா, நிமிர்ந்து நில். வலிமையாக இரு.”

இவ்வாறு ஓம் சக்தி மந்திரம் பாரதியால் வேத நெறி அடிப்படையில் காலத்தின் தேவை கருதி உருவாக்கப்பட்டதை அறிகிறோம்.
 
Bharathi wants us to renew ourselves continuously. The way to get rid of worries is to die to the past and think of ourselves as being born only today.
சென்றதினி மீளாது மூடரே நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டா.

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வோம்
தீர்ந்தொழியும் கவலைகள், திரும்பி வாரா
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top