• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Bharathiyar ..

Status
Not open for further replies.
I am pained at the way two great persons - Gandhi and Bharathi - are compared and contrasted and in the process dragged into needless controversy.

Both are tall in their own right. To praise one, the other need not be belittled. I am a great lover of Bharathi. But, quoting selectively from his verses here and there, his whole persona cannot be understood correctly. The theme, context, preceding and succeeding stanzas or lines must be read and understood correctly, before any opinion could be formed about Bharathi himself.

Bharathi did not escape to Puducherry, fearing for his life. He was 'mrutyunjaya'. (He kicked even Lord Yama). He was forcibly taken/sent to Puducherry, by his close friends. One more thing. Bharathi did not clamour for any post or had any belongings to save them from the British, if he was caught. He was already in abject poverty, we all know or have read. So, what is left to lose further?

Many of his ardent followers feared that his contribution to Indian freedom movement and Tamil literature will be greatly affected, if he was imprisoned. That's why he was forced to migrate to Puducherry. I have elaborately read that Bharthi's fiery songs wherever they were sung, incited the masses and ignited their patriotic fervour.

Regarding Venkatramani's poser that he didn't fight the French or write aggressively against them sounds illogical. Why Bharathi should? The French didn't harm him nor put any restrictions on his writings. Moreover, the French were fighting the British at that time in India and were considered friendly to all forces who were fighting the British. Thus, enemy's enemy was a friend.

Regarding the interesting meeting between Mahatma and Bharathi, it has been well documented. Bharathi went to Gandhi inviting him to preside over the meeting Bharathi was to address on Triplicane (Marina) Beach. But due to other pre-occupations on the same date, Bapuji couldn't accept the invitation.

When told about this, without any second thought, Bharathi said "Thank you Mr. Gandhi. My hearty blessings to you" and left. Immediately, Gandhi enquired others around who the dynamic and charismatic person was. They all replied it was 'Subramanya Bharathi'. Hearing this, Gandhi smiled and asked others to safeguard the treasure in the interest of the nation.

Bharathi has penned a poem eulogising the virtues of Gandhi and I believe it is known to everyone. Therefore, what I want to say is, Bharathi didn't ever work against the path shown by Gandhi. He only wanted the youth to be brave, bold and patriotic.

(Oli padaitha Kanninai, Va, Va, Va!)

I once again request our friends not to harm Bharathi or Gandhi. Please leave them.
 
Last edited:
The poem "Pagaivanukkarulvai nannenje, pagaivanukkarulvai" brings out the belief Bharathi had in tolerance and non-violence.

Unfortunately, Bharathi was kept in the wilderness even after his death. Especially by the so called dravidian parties, because Bharathi was a brahmin by birth, even though he has made it amply clear in many of his poems - "Ondrendru Kottu Murasey", "Vellai nirathoru poonai engal veetil valarudhu kandeer", "Bharatha Samudhayam Vazhgave" et al - that all are equals by birth.

The dravidian parties systematically denigrated Bharathi and when it reached a crescendo, even Bharathidasan had to intervene, admonished them and even beaten some. Even the communists were in constant appreciation of Bharathi. Jeeva was a great admirer of Bharathi and he helped a lot to spread Bharathi's writings amongst the common masses, particularly the poor, labour class.

Many of the lines from Bharathi - 'Imm' endral siraivasam, 'en' endral vanavasam; nidhi migundhavar porkkuvai thareer, adhuvumatravar kasugal thareer, aanmaiyalar uzhaippinai nalguveer; thani manidhanukku unavillai enil jagathinai azhithiduvom; nalladhor veenai seidhu; anna yaavinum punniyam kodi angor ezhaikku ezhutharivithal; kadhal, kadhal, kadhal; kadhal poyin, kadhal poyin, sadhal, sadhal, sadhal; dharmathin vazhvuthanai sudhu kavvum; nenjukku needhiyum, tholukku vaalum, udhaya gyayiru oppave va, va, va - were liberally borrowed and used by many, without even acknowledging their source.

Any amount of efforts to prop up Bharathidasan, at the cost of Bharathi also failed.

When Bharathi centenary was in progress, all these groups competed with each other to claim ownership on Bharathi. This prompted me to write:

"Netru varai Bharathiyai thootriyavar ondru koodi
potra vandha karanam than enna, enna? - Avar
Matru manam kondathu 'than' minna, minna"

-This was broadcast in Sri Lankan Broadcasting Corporation radio (in 1982)

I will love to write further on Bharathi, because he is my favourite poet of all times. He only started writing in simple, lucid language, without losing the purity and beauty of Tamil in the last 500 years. He could touch great heights and became a poet of all classes and masses. The seriousness and subtlety in his writings brought forth the 'truth' (sathyam) and sincerity in him so effervescently and touchingly, that after a very long wait for centuries, a Mahakavi was born in Tamilnadu.

I am quite sure that Bharathi was much better than Rabindranath Tagore in all respects. Had Bharathi been born in Europe or USA, he would have been acclaimed as a world poet and earned many more laurels including Nobel Prize for Literature.

I just pacify myself, more than any award or prize, the best recognition to a writer is
(a) his writings reach all parts of the land/world and (b) they are translated in many international languages. Thiruvalluvar earned that distinction and Bharathi too!
 
Last edited:
I am a great lover of Bharathi. But, quoting selectively from his verses here and there, his whole persona cannot be understood correctly. The theme, context, preceding and succeeding stanzas or lines must be read and understood correctly, before any opinion could be formed about Bharathi himself.

Dear Sri Pannvalan ji,

We have been missing you for some time and if you were present regularly, we would not have been kept at dark. I always respect Bharathi for his patriotism, social reform as well as his great contribution to our mother tongue. But as you rightly said quoting few poems out of context will do more damage to the image of Bharathi. Anyway thank you for providing more information on Bharathi.

All the best
 
Bharathi made use of the story of Narasimhavatara to bring home the contents of Isavasya Upanishad. God is immanent everywhere. There is no place where He does not exist. The vedic hymn Rudram says that Rudra appears in the form of minister, trader, hunter, thief, carpenter, potter and what not. The men who stand, or sit or sleep are none but Rudra. Thus Bharathi brings out the essence of Vedas in his songs.

கடவுள் எங்கே இருக்கிறார்? தூணிலும் உள்ளார், துரும்பிலும் உள்ளார் என்று சொல்கிறோம். அதற்குச் சான்றாகப் பிரகலாதன் கதையைக் கூறுகிறோம். இதை இக்கால இரணியர்கள் ஏற்றுக் கொள்வார்களா? புராணங்களைப் புளுகு என்று தள்ளும் காலம் இது. “தமிழா, தெய்வத்தை நம்பு. பயப்படாதே, உனக்கு நல்ல காலம் வருகின்றது..... வேதங்களை நம்பு. அவற்றின் பொருளைத் தெரிந்து கொண்டு பின் நம்பு. புராணங்களைக் கேட்டுப் பயனடைந்து கொள். புராணங்களை வேதங்களாக நினைத்து மடமைகள் பேசி விலங்குகள் போல நடந்து கொள்ளாதே” என்று அறிவுறுத்திய பாரதி பிரகலாதன் கதைக்குப் புதிய பொருள் தருகிறார்.

ஈசாவாஸ்ய உபநிடதம் கூறும் ‘இந்த எல்லாமே இறைவன் தான்’ என்ற கருத்தை அதில் காண்கிறார்.

சொல்லடா ஹரி என்ற கடவுள் எங்கே
சொல்லென்று இரணியனும் உறுமிக் கேட்க
நல்லதொரு மகன் சொல்வான் தூணிலுள்ளான்
நாராயணன் துரும்பிலுள்ளான் என்றான்
வல்லமைசேர் கடவுளில்லாப் பொருளொன்றில்லை
மகாசக்தி இல்லாத வஸ்து இல்லை
அல்லலில்லை அல்லலில்லை அல்லலில்லை
அனைத்துமே தெய்வமென்றால் அல்லலுண்டோ

கேளப்பா சீடனே கழுதை ஒன்றை
கீழான பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப் பார்த்திருகரமும் சிரமேற் கூப்பி
சங்கர சங்கர என்று பணிதல் வேண்டும்
கூளத்தினை மலத்தினையும் வணங்கல் வேண்டும்
கூடி நின்ற பொருனனைத்தின் கூட்டம் தெய்வம்
மீளத்தான் இதை மட்டும் விரித்துச் சொல்வேன்
விண் மட்டும் தெய்வமன்று மண்ணுமஃதே

யஜுர் வேதத்தின் ருத்ரம் என்னும் பகுதி உலகம் முழுமையையும் ருத்திர வடிவமாக வணங்குகிறது.

மந்திரி, வணிகர், தேரோட்டி, வேடர், கள்வர், விராதன், [ஒழுக்கக் கேட்டால் புறம் தள்ளப்பட்டவர்], தச்சர், குயவர், செம்படவர் என்று பல வடிவங்களில் விளங்கும் ருத்திரருக்கு வணக்கம் தெரிவிக்கும் அது, சடைமுடியர், மொட்டைத் தலையர், நிற்பவர், நடப்பவர், தூங்குபவர், அருகில் இருப்பவர், தொலைவில் இருப்பவர் என்று எவரையும் மிச்சம் வைக்காமல் இறைவனாகக் கருதி வணங்குகிறது. மனிதர் மட்டுமல்ல, நாய், குதிரை ஆகிய விலங்குகள் வடிவத்திலும் ருத்திரன் விளங்குவதாகக் கூறப்படுகிறார். தேர், ஆற்று நீர், மரங்கள் போன்ற உயிரற்ற பொருள்களாகவும் அவர் இருக்கிறார்.

இந்தக் கருத்தைப் பாரதி பின்வருமாறு பாடினார்.

சுத்த அறிவே சிவமென்றுரைத்தார் மேலோர்;
சுத்த மண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்;
வித்தகனாம் குரு சிவமென்றுரைத்தார் மேலோர்,
வித்தையிலாப் புலையனுமஃதென்னும் வேதம்;

பித்தரே அனைத்துயிருங் கடவுளென்று
பேசுவது மெய்யானால் பெண்டிரென்றும்
நித்த நுமதருகினிலே குழந்தை யென்றும்
நிற்பனவுந் தெய்வமன்றோ நிகழ்த்துவீரே?

உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன்றில்லை;
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
பயிலுமுயிர் வகைமட்டுமன்றி யிங்குப்
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;

வெயிலளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்
மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;
எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்
[பாரதி அறுபத்தாறு 15, 17, 18]
 
We can get angry only with something external and different from us. Once you understand the vedic idea that God is immanent everywhere, even in you and in the person in front, you can never be angry. Bharathi succinctly says this – everything around is God.

Whatever we see are but different appearances of One God. Bharathi identifies himself with the trees, birds, sea, stars, worms, fish, poetry, buildings, songs, falsehood and everything. He identifies himself with God who causes all these things. Thus he brings out the Upanishadic statement Aham Brahmasmi.

மனிதர்க்குக் கோபம் வருவதற்கான காரணத்தை ஆராய்கிறார் பாரதி. நம்மைச் சூழ்ந்தது எல்லாம் கடவுள், நாமும் கடவுள் என்ற எண்ணம் எப்பொழுதும் நமக்கு இருக்குமானால் நமக்குக் கோபம் வராது அல்லவா? நம்மிலும் வேறான ஒரு பொருளிடம் தானே நாம் கோபித்துக் கொள்ள முடியும். அப்படி ஒரு பொருள் எதுவும் இல்லை என்ற வேதக் கருத்தைச் சுருக்கமாக, மூன்று வார்த்தைகளில் தருகிறார். சூழ்ந்தது எல்லாம் கடவுள்.

சூழ்ந்ததெலாம் கடவுள் எனச் சுருதி சொல்லும்
நிச்சயமாம் ஞானத்தை மறத்தலாலே
சேருவதே மானிடர்க்குச் சினத்தீ நெஞ்சில்.

தன் வசன கவிதையில் பாரதி இக் கருத்தை மேலும் விளக்குகிறார்.
இவ்வுலகம் ஒன்று
ஆண், பெண், மனிதர், தேவர்,
பாம்பு, பறவை, காற்று, கடல்,
உயிர், இறப்பு இவை அனைத்தும் ஒன்றே
ஞாயிறு, வீட்டுச் சுவர், ஈ, மலை, அருவி,
குழல், கோமேதகம் இவ்வனைத்தும் ஒன்றே
இன்பம், துன்பம், பாட்டு,
வண்ணான், குருவி, மின்னல், பருத்தி
இஃதெல்லாம் ஒன்று
மூடன், புலவன்,
இரும்பு, வெட்டுக்கிளி
இவை ஒரு பொருள்
வேதம், கடல்மீன், புயற் காற்று, மல்லிகை மலர்
இவை ஒரு பொருளின் பல தோற்றம்
உள்ளதெல்லாம் ஒரே பொருள் ஒன்று
இந்த ஒன்றின் பெயர் - தான்
தானே தெய்வம்
தான் அமுதம் இறவாதது

பாரதி இக்கொள்கையைப் பின்பற்றினார். அத்வைத நிலையின் உச்ச கட்டத்தில் நின்று அவர் பாடுகிறார்.

காக்கைச் சிறகினிலே நந்தாலா -நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்தலாலா- நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா- நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னைத்
தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா

உலகனைத்துமாக வியாபித்து நிற்கும் பிரமம் நானே என்ற உபநிடதக் கருத்து எவ்வளவு எளிய சொற்களில் வெளிப்படுகிறது பாருங்கள்.

வானில் பறக்கின்ற புள்ளெல்லாம் நான்
மண்ணில் திரியும் மரமெல்லாம் நான்
கானிழல் வளரும் மரமெலாம் நான்.
காற்றும் புனலும் கடலுமே நான்,

விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்,
மண்ணில் கிடக்கும் புழுவெல்லாம் நான்
வாரியிலுள்ள உயிரெலாம் நான்.

கம்பனிசைத்த கவியெலாம் நான்,
காருகர் தீட்டும் உருவெலாம் நான்,
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில் நகர் கோபுரம் யாவுமே நான்

இன்னிசை மாதரிசையுளேன் நான்
இன்பத் திரள்கள் அனைத்துமே நான்,
புன்னிசை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.

மந்திரங் கோடி இயக்குவோன் நான்
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்
தந்திரங் கோடி சமைத்துளேன் நான்,
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்.

அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்,
கண்ட பல சக்திக் கணமெலாம்நான்,
காரணமாகிக் கதித்துளோன் நான்.

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்,
ஞானச் சுடர் வானில் செல்லுவோன் நான்,
ஆன பொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்கு முதற் சோதி நான்.
 
Spiritual

Dear friends

I am currently given a project of designing a cassette cover for "Tiruvembavai and Thirupalliezhuchi". Please list out some sites where i could get melodious flute music.

It would be great if i could get some suggessions for designing the cassette cover

Regards
Chandrika
 
palli ezhuchchi

The meaning of Suprapathams as told by Bhagavan Ramana.....

Our Bhagavan is not so lazy to be woken up by us . He is always
available . Then what is this palli ezhuchchi ? It is palli ezhuchchi
of our ATMAN that dwells in our heart .

You can make use of this if you like it .
 
Do not judge anybody by external appearance. Look deep into him or her. Like a flame in the midst of smoke, a pearl inside the shell, a beautiful flower blooming in unclean surroundings, God resides within every man. Parasakthi resides in the tiger coming to devour you. Worship Her, sparkling in the eyes of the tiger. (Devi Bhagavatham says, Salutations to that Devi who appears in the form of appetite in all living beings.)

All creatures are nothing but different forms of the same God. He appears both as the hunting tiger and the hunted deer and stages a drama of killing. In planning to destroy your foe, you are destroying yourself.

Sri Krishna was the charioteer of Arjuna. Bharathi says that the Duryodhana who fought against him was also Sri Krishna. His cosmic form contained both the Pandavas and the Kauravas.

Ponder over this truth and absorb it fully. If you have an iota of doubt, this will make your life a hell like a drop of poison in a pot of milk.


‘யாரையும் மேல் தோற்றத்தை மட்டும் பார்த்து மதிப்பிடக் கூடாது. ஆழ்ந்து நோக்குக. புகை நடுவில் தீ போல, சிப்பியினுள் முத்து போல, குப்பை நடுவே மலர் கொஞ்சும் குருக்கத்திக் கொடி போல, பகைவனிடத்திலும் உறைவது பிரம்ம சைதன்யமே. தின்ன வரும் புலியைப் பார். அதன் கண்ணில் தெரியும் பசியைக் கூர்ந்து நோக்கு. பராசக்தி தென்படுவாள். (எந்த தேவி எல்லா உயிரினங்களிலும் பசி வடிவில் விளங்குகிறாளோ, அந்தத் தேவிக்கு மீண்டும் மீண்டும் வணக்கம் என்று தேவி பாகவதம் கூறுவதைச் சிந்தனை செய்.) அந்தப் பராசக்தியைக் கும்பிடு.

‘எல்லா உயிர்களாகவும் இருப்பது ஒரே கடவுள் என்றால், எதிரி என்று முத்திரை குத்தி ஒருவனை அழித்து விட்டு நீ வாழ நினைப்பது எவ்வளவு பேதைமை? எதிரியை அழிப்பதன் மூலம் நீ கடவுளை அழிக்க முயல்கிறாய். நீயும் கடவுள் தானே? அதாவது உன்னையே நீ அழிக்க முற்படுகிறாய்.

‘இதெல்லாம் கடவுளின் லீலை என்பதை உணர்க. அவனே புலியாகவும் மானாகவும் வடிவெடுத்து ஒன்றை ஒன்று அழிப்பதாகத் தோற்றம் காட்டுகிறான். எதுவும் அழிவதும் இல்லை, எதுவும் அழிக்கப்படுவதும் இல்லை. மாயத் தோற்றங்களில் ஒன்று மறைகிறது, ஒரு புதிய மாயத் தோற்றம் ஏற்படுகிறது.

‘பாரதக் கதை கேட்டிருக்கிறோம். அங்கே, பார்த்த சாரதியாக வந்தது மட்டும் கண்ணன் அல்ல. அங்கு இருந்த அனைத்து மனிதர்களும் விலங்குகளும் உயிரற்ற பொருள்களும் கண்ணனே. அவனே தன்னை இப்படிப் பல கூறாக ஆக்கிக் கொண்டு பாரதப் போர் என்னும் மாயையைத் தோற்றுவித்தான். சுருக்கமாகச் சொல்லப் போனால், பார்த்த சாரதி மட்டுமல்ல, பார்த்தனும் கண்ணனே, அவனை எதிர்த்த துரியோதனனும் கண்ணனே, அவனது தம்பிகளும் கண்ணனே.

‘விசுவரூப தரிசனம் தந்து நடந்தது, நடப்பது, நடக்கப் போவது என்ற முக்காலத்தையும் காட்டின கண்ணன் தன் உடலுக்குள்ளேயே இரு திறத்துப் படைகளையும் உள்ளடக்கிக் காட்டவில்லையா? இந்த உண்மையைச் சந்தேகம் இன்றித் தெரிந்து கொண்டால் உன் உள்ளம் நிறைவு பெறும். சிறிதேனும் சந்தேகம் கொண்டால் குடம் தேனில் ஒரு துளி விஷம் என்ற கதை ஆகிவிடும்’ என்பது பாரதியின் கருத்து.

இனி அப்பாடலைப் பார்ப்போம்.

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய்

புகை நடுவினில் தீ இருப்பதைப் பூமியிற் கண்டோமே
பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான்

சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும் செய்தி அறியாயோ?
குப்பையிலே மலர் கொஞ்சும் குருக்கத்திக் கொடி வளராதோ?

உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில் உள்ள நிறைவாமோ?
தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும் சேர்த்தபின் தேனாமோ?

வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது வாழ்வுக்கு நேராமோ?
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவான் என்ற சாத்திரம் கேளாயோ?

போருக்கு வந்தங்கெதிர்த்த கௌரவர் போல வந்தானும் அவன்
நேருக்கருச்சுனன் தேரிற் கசை கொண்டு நின்றதும் கண்ணனன்றோ?

தின்ன வரும் புலி தன்னையும் அன்போடு சிந்தையிற் போற்றிடுவாய்
அன்னை பராசக்தி அவ்வுருவாயினள் அவளைக் கும்பிடுவாய்.
(Excerpts from the book –Bharathi seytha vedam)
 
Critics of Hinduism say that the varnasrama system of the Vedas was responsible for the caste divisions and their ill effects. It is not true. Vedas do not speak of castes. There was only varansrama in the vedic period.

Varnasrama contains two things, varna and asrama. Asrama is the four stages of an individual’s life- brahmacharya, the period of study, grihastha, the period of living a householder’s life, vanaprastha, the period of living in the forest as a preparation for the fourth asrama sanyasa, total renunciation.

Bharathi does not speak much of this asrama system. He merely says that the custom of becoming a sanyasin at young age is a bane which Hinduism borrowed from Buddhism. But he eulogized the system of varna greatly.

Varna means colour. This is division of people of a society based on their professions. Some have a natural flair for intellectual works, others are interested in fighting for protecting others. Some have a natural talent in wealth producing activities and others are simple enough to run errands. All the four kinds of people are necessary for the society, and like the various parts of a machine, the services of each group are indispensable.

இந்து சமயத்தைச் சாடுவோர் வேதத்தின் வர்ணாசிரம நெறி தான் சாதிப் பிரிவுகளை உண்டாக்கியது என்று கூறுவர். உண்மை அதுவல்ல. வேதம் சாதி பற்றி எதுவும் கூறவில்லை. வேத காலத்தில் சாதி இல்லை. வர்ணாசிரம முறை இருந்தது.

வர்ணாசிரமம் என்பதில் வர்ணம் ஆசிரமம் என்ற இரு சொற்கள் அடங்கியுள்ளன. இதில் ஆசிரமம் என்பது ஒரு தனி மனித வாழ்வின் வெவ்வேறு கால கட்டங்கைளக் குறிக்கும் – மாணவப் பருவம், இல்லறப் பருவம், காடு வாழ் பருவம், துறவுப் பருவம். இந்த ஆசிரம முறை பற்றிப் பாரதி எதுவும் கூறவில்லை. இளம் பருவத்தில் துறவு பூணும் முறை புத்த மதத்திலிருந்து இந்து மதத்திற்கு வந்து சேர்ந்த ஒரு கேடு என்று மட்டும் கூறுகிறார்.

ஆனால் வர்ண முறையைப் பாரதி பெரிதும் போற்றினார். வர்ணம் என்ற சொல் நிறம் என்ற பொருளுடையது. இது தொழில் அடிப்படையில் மனித சமூகத்தில் காணப்படும் பிரிவைக் காட்டுவது. ஒவ்வொரு சமூகத்திலும் நடைபெறும் தொழில்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். சிலர் அறிவுத் துறையில் (ஆசிரியர், ஆராய்ச்சியாளர்) ஈடுபடுகின்றனர். சிலர் நாட்டு மக்களைக் காக்கும் பணியிலும் (அரசு அதிகாரிகள், ராணுவத்தினர்), சிலர் வாணிபத்திலும், மற்றையோர் உற்பத்தித் தொழிலிலும் உள்ளனர். ஒரு சமூகம் சீராக இயங்க இந்த நான்கு குழுக்களும் தேவை. இவற்றில் எந்த ஒன்றும் உயர்ந்தது என்றோ தாழ்ந்தது என்றோ சொல்ல முடியாது. ஒரு யந்திரத்தின் நான்கு பாகங்கள் போல, இவை நன்கு பொருந்தி சீராக அமைந்தால் தான் சமூக யந்திரம் சிக்கலின்றி இயங்கும். இதைத் தான் பாரதி குறிப்பிடுகிறார்.

வேதமறிந்தவன் பார்ப்பான் - பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்
நீதி நிலை தவறாமல் தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்

பண்டங்கள் விற்பவன் செட்டி பிறர்
பட்டினி தீர்ப்பவன் செட்டி
தொண்டர் என்றோர் வகுப்பில்லை தொழில்
சோம்பலைப் போல் இழிவில்லை

நாலு வகுப்பும் இங்கொன்றே இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி.
 
paappa paattu

Dear Vikrama well said

ஜாதி இரண்டொழிய வேறில்லை பட்டாங்கில் உள்ளபடி -சாற்றுங்கால் -
நீதி வழுவா நெறிமுறையில்

Bharathi is an emotional poet, more human,devout , down to earth
Dear Vikrama I appreciate your -so much- interest in Bharathi.He has high respect
for Vedas and for Brahmins .பிராமணம் தவறும் இடங்களில் ஒரு ஆதங்கத்தில்
சில வேகமான சாடல்கள் , அவ்வளவே .
ஒரு சுவாரஸ்யமான கேள்வி ,பரிஷார்தமாக அல்ல ,நட்புடன்.......
பாரதியின் பாப்பா பாட்டில் ஏன் எடுத்தவுடன் ஓடி விளையாடு பாப்பா ---கூடி விளையாடு பாப்பா என்று கூறுகிறான் சொல்லமுடியுமா ?
A friendly question , not for testing you but to focus something ---
Can you say why Bharathi in his paappa paattu .. odi vilayaadu paappaa , koodi vilayadu paappaa
... so starts with that poem ?
 
ஒரு சுவாரஸ்யமான கேள்வி ,பரிஷார்தமாக அல்ல ,நட்புடன்.......
பாரதியின் பாப்பா பாட்டில் ஏன் எடுத்தவுடன் ஓடி விளையாடு பாப்பா ---கூடி விளையாடு பாப்பா என்று கூறுகிறான் சொல்லமுடியுமா ?

Bharathi's Pappa Pattu is the epitome of all his teachings. Though seemingly addressed to a child, it is meant for all Indians, nay, the entire mankind. Bharathi lays stress on physical fitness and the primary importance he attaches to this is found in his other songs and essays also.Then his insistence on unity mentioned in the second line is also a reflection of his advice found all along his writings.

I sense you have got a better interpretation and I would like to hear it.
 
ஓடி விளையாடு பாப்பா --கூடி விளையாடு பாப்ப&#300

Dear Vikrama,
I too was not aware of the inner feeling in those lines . But one day one of my friend's daughter came , asking for a lecture to be prepared on Bharathi's Paappaa paattu for competition .
Then I attempted and found this inner meaning for those intial outburst -words in the composition .The girl got first prize that is a different story .

If you read his autobiography poem there he mentions his childhood days, where his father like other Tamil Nadu Brahmins forces Bharathi to study English medium School, never allows him to play with
other children, locks him inside during the playing times and not allows him to mix with other children . I felt that was the reason for those words of intial outburst from his emotional poem for the child .

But as you said it is a great poem with all teachings meant for the elderly too and for the mankind, a very great work too .

Thanks Vikrama continue your journey on Bharathi , who in Pondy ate out of poverty ,even narcotics to kill his hunger . Only onething , he met Ramana Maharshi during his one visit to Arunachala in
the caves but the details we could not find in any of the works published , I feel that might not have been traced out , certainly he must have written something .
Regards
 
Bharathi wrote 'Pappa Paattu' for his daughter Sakunthala. The opening line is to attract kids who without any exception are interested in games.

I have not read anywhere that Bharathi ever met Ramanar.
 
Bharathi refers to Bhagavadgetha and says, “God created four varnas and fools spoilt them.”

Bharathi’s Gnanaratham, a prose work, describing his sojourn into an imaginary Dharmalokam, makes his idea more clear.
“At birth, men are just animals. By practice, character and conduct they became classified into several varnas. Bhagavan has said that the four varnas were created by Him. It is wrong to say that only in India there are varna differences. It is there in all the countries. Only in India, it is spoilt now. In olden days, varnasram system was in good condition in India. It is supported by evidences from the Vedas, Upanishads, ithihasas and puranas. Now that the varnasram system has fallen into abuse here, is the cause of the sufferings of modern Indians."


பகவத்கீதையில் நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப்பட்டன என்று கண்ணன் கூறுவதைப் பாரதி குறிப்பிடுகிறார்.

நாலு குலங்கள் அமைத்தான் அதை
நாசமுறப் புரிந்தனர் மூடர்

பாரதியாரின் ஞானரதம் அவரது கருத்தை மேலும் தெளிவுபடுத்துகிறது.

“பிறக்கும் போது மனிதர்கள் எல்லாம் மிருகங்களாகப் பிறக்கிறார்கள். பயிற்சியினாலும் குண கர்மங்களினாலும் வெவ்வேறு வர்ணத்தினராகிறார்கள். சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகச: (நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப்பட்டன) எனப் பகவான் சொல்லியிருக்கிறார்.

“பாரத தேசத்தில் தான் வர்ணாசிரம பேதங்கள் இருப்பதாகச் சொல்வது பிழை. ஸகல தேசங்களிலும் உண்டு. ஆனால் பாரத தேசத்தில் தான் வர்ணாசிரம நெறி சீர் கெட்டுப் போயிருக்கிறது. பூர்வத்தில் பாரத தேசத்தில் வர்ணாசிரம நெறி நான் சொல்வது போலத் தான் இருந்தது. அதற்கு அந்நாட்டிலுள்ள வேதங்கள், உபநிஷத்துகள், புராணங்கள், இதிஹாஸங்கள் முதலிய ஸகல நூல்களும் ஸாக்ஷி. இப்பொழுது பாரதநாட்டைத் தவிர மற்றெல்லா நாடுகளிலும் பகவான் சொல்லிய முறை தான் நடைபெற்று வருகிறது. பாரத நாட்டில் அம்முறை தவறிவிட்டது. அது பற்றியே அந்நாட்டினர் வறுமை, நோய், அடிமைத் தனம் என்ற இழிவுகளிலே வீழ்ந்திருக்கிறார்கள்.”
 
Bharathi favoured the varna system but he insists that all varnas are equal. Like the members of a family, people of different varnas should do their duty for the welfare of the greater family, that is, society. His famous song on kittens explains his views.

Unlike caste, varna is changeable, he says. In his prose work, ‘Gnana ratham,’ the hero speaks, “My father is a kshatriya. I am a Brahmin. I have twelve sons of whom I have chosen only one for brahminical duties. I have assigned the other sons duties of other varnas according to their capabilities and tastes.

வர்ண முறையை ஆதரித்த பாரதி, வர்ணங்களுக்குள்ளே உயர்வு தாழ்வில்லை, எத்தொழில் செய்தாலும் அனைவரும் சமம் என்பதைப் பல இடங்களிலும் வலியுறுத்துகிறார்.

சீலம் அறிவு தருமம் இவை
சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்

‘ஒற்றைக் குடும்பம் தனிலே பொருள் ஓங்க வளர்ப்பவன் தந்தை, மற்றைக் கருமங்கள் செய்தே மனை வாழ்ந்திடச் செய்பவள் அன்னை, ஏவல்கள் செய்பவர் மக்கள்’ என்றிருப்பது போல, சமூகத்திலும் வெவ்வேறு தொழில் செய்வோர் ஒற்றுமையாக ஒரு குடும்பம் போல வாழ வேண்டும் என்பது அவர் கருத்து.

பாரதியின் பூனைக் குட்டிகள் பாட்டு அனைவரும் அறிந்தது.

வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை அவை
பேருக்கொரு நிறமாகும்

சாம்பல் நிறமொரு குட்டி கருஞ்
சாந்தின் நிறமொரு குட்டி
பாம்பின் நிறமொரு குட்டி வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி

எந்த நிறமிருந்தாலும் அவை
யாவும் ஒரே தரமன்றோ
இந்த நிறம் சிறிதென்றும் இஃது
ஏற்றமென்றும் சொல்லலாமோ

வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் அதில்
மானிடர் வேற்றுமை இல்லை

சாதி போல் அல்லாமல் வர்ணம் மாற்றிக் கொள்ளக் கூடியது என்பதை அவர் வலியுறுத்துகிறார். அவரது ஞானரதத்தில் தர்ம லோகம் என்ற பகுதியில் கதாநாயகன் கூறுகிறான்:–

“எனது பிதா க்ஷத்திரியர். நான் பிராமணன். என் மக்கள் பன்னிரண்டு பேர்களில் ஒருவனை மட்டுமே பிராமண காரியங்களுக்குத் தெரிந்தெடுத்திருக்கிறேன். மற்றவர்களை யெல்லாம் மற்ற மூன்று வர்ணங்களின் காரியங்களுக்கு அவரவர்களின் தகுதி, ஸ்வபாவம் முதலியவற்றைக் கருதி உரியவாறு பயிலுமாறு செய்திருக்கிறேன்.”
 
Though Bharathi favoured Varna system, he opposed caste divisions. Many people are ignorant of the fact that caste is determined by birth whereas varna is by the profession one chooses. He considers all the people of the world as belonging to one caste. In one of his verses he goes still further and declares that the birds and mountains also belong to his caste. He quotes Geetha to prove that caste divisions are a sign of ‘agnanm’. His social justice is based on Vedas.

வர்ண முறையைப் போற்றிய பாரதி சாதி முறையைத் தீவிரமாக எதிர்த்தார். வர்ணம் என்பதும் சாதி என்பதும் ஒன்றல்ல என்ற உண்மையைப் பலர் அறிவதில்லை.

வர்ணம் பிறப்பை அடிப்படையாகக் கொண்டது அல்ல. ஆனால் ஜாதி என்பது பிறப்பால் வருவது. பிறப்பின் காரணமாக ஏற்படும் பிரிவுகளைப் பாரதி அடியோடு வெறுத்தார்.

சாதிகள் இல்லையடி பாப்பா குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

மேலவர் கீழவரென்றே வெறும்
வேடத்தில் பிறப்பினில் விதிப்பனவாம்
போலிச் சுவடியை எல்லாம் இன்று
பொசுக்கி விட்டால் எவர்க்கும் நன்மை உண்டென்பான்

சாதிப் பிரிவுகள் சொல்லி அதில்
தாழ்வென்றும் மேலென்றும் சொல்வார்
நீதிப் பிரிவுகள் செய்வார் அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்

சாதிக் கொடுமைகள் வேண்டா அன்பு
தன்னில் செழித்திடும் வையம்.

மானிடச் சாதி என்ற ஒன்றைத் தான் அவர் ஒப்புக் கொள்கிறார்.

கூட்டி மானிடச் சாதியை ஒன்றெனக்
கொண்டு வைய முழுதும் பயனுறப்
பாட்டிலே அறம் காட்டு என்னும் ஓர் தெய்வம்.

..............................................ஆயிரம் சாதி
வகுப்பவர் வகுத்து மாய்க. நீரனைவரும்
தருமம் கடவுள் சத்தியம் சுதந்திரம்
என்பவை போற்ற எழுந்திடும் வீரச்
சாதி ஒன்றையே சார்ந்தவராவீர்.

மானிடர் அனைவரும் ஒரே சாதி என்ற நிலையிலிருந்து இன்னும் ஒரு படி மேலே போய்ப் பிற உயிரினங்களையும் உயிரற்றவைகளையும் கூட ஒரே சாதிக்குள் அடக்குகிறார்.

“காக்கை குருவி எங்கள் சாதி
காடும் மலையும் எங்கள் கூட்டம்”
என்று அவர் பாடும்போது அத்வைத மாமேருவின் உச்சிக்கே போய் விடுகிறார்.

கீதை முன்னுரையில் அவர், “கண்ணபிரான் ஜாதி வேற்றுமையும் அறிவு வேற்றுமையும் பார்க்கக் கூடாது என்பது மட்டுமே அன்றி எல்லா உயிர்களுக்குள்ளேயும் எவ்வித வேற்றுமையும் பாராது இருத்தலே ஞானிகளுக்கு லட்சணம்” என்கிறார்.

“பாம்பும் நாராயணன், நரியும் நாராயணன், பார்ப்பானும் கடவுளின் ரூபம், பறையனும் கடவுளின் ரூபம். இப்படியிருக்க ஒரு ஜந்து மற்றொரு ஜந்துவை எக்காரணம் பற்றியும் தாழ்வாக நினைத்தல் அஞ்ஞானத்துக்கு லட்சணம். எல்லா வேற்றுமைகளும் நீங்கி நிற்பதே ஞானம்.”

இவ்வாறு அவரது சமூகச் சமத்துவக் கொள்கையும் வேத அடிப்படையைக் கொண்டது என்பது தெரிகிறது.
 
Namassadhasae.

Shri Vikrama ji,

Your research write ups on Bharathi is coming very nice.

Pappa pattu is for all. Only pappa will not have pre-conceived notions and its mind will be a clean slate. This could also be another reason for his selecting pappa. 'Padhakam seibavarai kandal bayam kollal Agathu pappa, modhi midhiththu vidu pappa, avar mugaththil umizhndhu vidu pappa' are the characters to imbibe from everyone's childhood and after becoming grown up, the world will make most of the persons to adjust to the circumstances. His selecting pappa medium for expression of these advices quite pertinent, it seems.

Regarding varnashramam, Bharati's views are clear that castes are not coming by birth and it is based on profession and nature of the persons only. I feel you are absolutely correct in making these observations pls. It appears that Manu was some kind of a Mandal those days, but his scale was profession by execution, WHEREAS it was castes by birth, for Mandal.

Kindly continue your search for Bharathi treasures and keep us posted.

Thanks.

'அவரவர் இச்சையில் எவை எவை உற்றவை அவை தருவித்தருள்
பெருமாளே! - திருவக்கரை திருப்புகழ் '
 
Madhu vata rtayate, madhu ksharanti sindhavah, madhveer nas santhvoshdeeh

This mantra is used when we pay oblation to our great grandfather in the course of the tharpanam.This occurs in Rig Veda mandalam1, sooktam 90, verse 6,7,8.

6 The winds waft sweets, the rivers pour sweets for the man who keeps the law
So may the plants be sweet for us.
7 Sweet be the night and sweet the dawns, sweet the terrestrial atmosphere;
Sweet be our Father Heaven to us.
8 May the tall tree be full of sweets for us, and full of sweets the Sun:
May our milch-kine be sweet for us.


The vedic seers found pleasure in every phenomenon of the world. What all they saw and what all they heard were a source of delight. They did not grumble that this is full of miseries.

But why is this posted in the thread talking about Bharathi? Wait till the next post.

மது வாதா ருதாயதே
மது க்ஷரந்தி ஸிந்தவ:
மாத்வீர் நஸ் ஸந்த் வோஷதீ:

மது நக்தம் உதோஷஸி
மதுமத் பார்த்திவகும் ரஜ:
மது த்யௌ ரஸ்து ந: பிதா

மதுமாந்நோ வனஸ்பதி:
மதுமாகும் அஸ்து சூர்ய:
மாத்வீர் காவோ பவந்துந: (ரிக் 1.90.6,7,8)


எங்கேயோ கேட்ட ஞாபகம் வருகிறதா. ஆம். பித்ரு தர்ப்பணத்தின் போது முப்பாட்டனார்க்கு எள்ளும் நீரும் அளிக்கும் போது இந்த மந்திரத்தைச் சொல்கிறோம். இதன் பொருள் என்ன?

இனிய காற்று வீசுகிறது. நதிகள் இனிமையாக ஓடுகின்றன. செடி கொடிகள் நமக்கு இனியனவாக இருக்கட்டும். இரவும் விடியற்காலையும் இனியவையாக உள்ளன. பூமியின் புழுதி இனிதாக உள்ளது. நமது தந்தை போன்ற ஆகாயம் இன்பம் அளிக்கட்டும். வனத்தின் மரங்கள் இன்பம் நிறைந்தவைகளாக இருக்கட்டும். சூரியன் இன்பம் தரட்டும். பசுக்கள் இனிமையான பாலை அளிக்கட்டும்.

வேத ரிஷிகள் உலக வாழ்க்கையின் ஒவ்வொரு அணுவையும் ரசித்து ரசித்து அனுபவித்தவர்கள். காணும் ஒவ்வொரு பொருளிலும், கேட்கும் ஒவ்வொரு ஒலியிலும் அவர்களுக்கு இன்பம் பொங்கி வருவது தெரிகிறது. வாழ்க்கையின் இருண்ட பகுதியையே எண்ணி, ஐயோ என் வாழ்க்கை இப்படித் துன்ப மயமாக ஆகிவிட்டதே, உலகில் எல்லாரும் வஞ்சகக்காரர்கள், எல்லாப் பொருளும் துன்பம் நிறைந்தவை என்று அஞ்சி அஞ்சிச் சாகும் மானிடப் பூச்சிகளுக்கும் அவர்களுக்கும் தான் எத்தனை வேறுபாடு.

சரி. இதற்கும் பாரதிக்கும் என்ன சம்பந்தம். அடுத்த பதிவில் இதற்கு விடை கிடைக்கும்.
 
I am reminded of

"Madhu namakku, madhu namakku, madhu namakku vinnelaam,
Madhura Mikka Hari namakku, madhuvena gathithalal"

under the caption 'madhu', by Bharathi.
 
I am reminded of

"Madhu namakku, madhu namakku, madhu namakku vinnelaam,
Madhura Mikka Hari namakku, madhuvena gathithalal"

under the caption 'madhu', by Bharathi.


How sweet! I am feeling honey in my mouth.

படிக்கும்போதே எவ்வளவு இனிக்குது ?


அதரம் மதுரம் வசனம் மதுரம்.........

...........மதுராதிபதேரகிலம் மதுரம்


எல்லாமே மதுரம்




greetings
 
இன்பமே எந்நாளும் துன்பமில்லை

Bharathi gives the essence of Vedas in just two lines- God is one. The world is a springhead of pleasure, not of miseries. Like the Vedic sages, he finds pleasure in all he saw and heard. He experiences divine joy in the wings of the crow, in the green trees, in all the sounds he hears. He places his hands in the fire and even then he feels only pleasure. His free verse titled ‘inbam’ is almost a translation of the vedic hymn cited.
வேத ரிஷிகள் போல எதிலும் இனிமை தவிர வேறொன்றையும் காணாதவர் பாரதி.
மது நமக்கு மதியுநாளும் மது நமக்கு வான மீன்
மது நமக்கு மண்ணுநீரும் மது நமக்கு மலையெலாம்

என்று மகிழ்ந்த அவர்,
இளமை இனிது, முதுமை நன்று
உயிர் நன்று, சாதல் இனிது

என்று சாவைக் கூட மகிழ்வுடன் வரவேற்கிறார்.

வேதத்தின் சாரமாக பாரதி கூறுவது இரண்டு தான்.
1 ஒன்று பரம்பொருள்.
2 உலகு இன்பக் கேணி.

ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்
உலகின்பக் கேணி என்றே
நன்று பல் வேதம் வரைந்த கை பாரத
நாயகி தன் திருக்கை


இன்ப ஊற்றாக உள்ள உலகில் துன்பமும் சிறிதளவு இருப்பது உண்மை தான். ஆனால் அதற்காகத் துவண்டு விடக் கூடாது என்பது பாரதியின் கருத்து. “நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி நலத்தை நமக்கு அளிப்பாள்” என்று நம்புமாறு ஊக்கம் தருகிறார் அவர். “துன்பமே இயற்கை என்னும் சொல்லை மறந்திடுவோம், இன்பமே வேண்டி நிற்போம் யாதும் அவள் தருவாள்” என்று கூறுகிறார். அவருக்குக் காக்கைச் சிறகினிலும், பார்க்கும் மரங்களிலும் நந்தலாலா தென்படுகிறான். கேட்கும் ஒலியில் எல்லாம் அவனது கீதமே காதில் விழுகிறது. தீக்குள் விரலை வைத்தாலும் நந்தலாலாவைத் தீண்டும் இன்பம் தோன்றுகிறது.

அவரது இந்த வசன கவிதையைப் பாருங்கள். மேற்சொன்ன வேத மந்திரத்தின் நேர் மொழிபெயர்ப்பு போலவே உள்ளது.

இவ்வுலகம் இனியது இதிலுள்ள வான் இனிமை யுடைத்து
காற்றும் இனிது தீ இனிது நீர் இனிது நிலம் இனிது
ஞாயிறு நன்று திங்களும் நன்று
வானத்துச் சுவர்களெல்லாம் மிக இனியன
மழை இனிது மின்னல் இனிது இடி இனிது
கடல் இனிது மலை இனிது காடு இனிது
ஆறுகள் இனியன


இன்பம் என்ற இந்த வசன கவிதை முழுவதையும் படித்துப் பாருங்கள். நமக்கும் பாரதியைப் போல எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா என்று நன்றி சொல்லத் தோன்றும்.
 
Among the Vedic mantras, Bharathi liked the mantra 'om' the best. In many of his works, he makes use of this mantra.

வேத மந்திரங்களில் பாரதிக்கு மிகவும் பிடித்தமான சொல் ஓம். கந்தர்வ லோகத்தில் பிரதிமைகள் இல்லாத கோவில்களும் சில உண்டு. அங்கு ஓம் என்று ஒளி எழுத்தில் எழுதி வைத்திருப்பதாக ஞானரதம் என்ற கட்டுரையில் அவர் கூறுகிறார். பாஞ்சாலி சபதத்தின் இறை வணக்கப் பாடலில் ஓம் எனப் பெரியோர்கள் ஓதுவது தான் பிரமம் எனப்படும் அறிவும் அனந்தமும் ஆகிய நிர்மலப் பொருள் என்கிறார். இறைவனை வணங்கும் போது ஓம் எனும் பொருளை உளத்திலே நிறுத்த வேண்டும் என்று அவரது விநாயகர் நான்மணிமாலை கூறுகிறது.

ஓங்காரம் ஆசீர்வாதத்திற்கு உரிய மங்கலச் சொல் என்று பாரதி கருதியதை, “தருமன் முகமலர்ந்து வருக என்று சொல்லி ஓம் என்று ஆசீர்வதித்தான்” என்று அவரது தர்மலோகம் கூறுகிறது. ஓங்காரத்தை தியானத்திற்குரிய எளிய மந்திரமாகவும் மன அமைதி் தருவதாகவும் அவர் கருதினார் என்பது தருமலோகம் என்ற கட்டுரையில் “முனிவர்கள் இருவரும் பிரம்மத் தியானத்திலே அமர்ந்திருந்தார். நான் ஓம் என்று ஜெபித்து சாந்தி தேவியை வரிக்கலானேன்” என்று கூறுவதிலிருந்து அறியலாம்..
 
The sacred syllable ‘om’ is called ‘pranava’ which means priority to newness. The importance given to ‘om’ in Vedas suggests that we should welcome changes. That is why Hindus accepted the changes in the religion, gave up animal sacrifice, switched over to idol worship etc. Bharathi says that many books which pass by the name of Vedas are not real Vedas and he advises us to remove them and renew the good ones.

மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும் ஓங்காரத்தின் பொருள் என்ன? பதஞ்ஜலி யோக சூத்ர உரையில் பாரதி கூறுகிறார். “ஓம் என்பது பிரணவ மந்திரம். இந்த மந்திரத்துக்கு ஆகமங்கள் கோடி வகைகளில் பொருள் சொல்கின்றன. ப்ரணவம் என்ற சொல் எப்போதும் புதுமையானது என்ற பொருள் தருவது.”

ஓங்காரத்துக்கு இன்னொரு பெயர் பிரணவம் என்பது. ப்ரணவ என்ற வட சொல் ப்ர+நவ என்ற இரு சொற்களின் கூட்டு. ப்ர என்ற முன்னொட்டு முதன்மை அல்லது சிறப்பைக் குறிக்கும். நவ என்பதற்குப் புதுமை என்பது பொருள். எனவே ப்ரணவம் என்பது புதுமைக்குச் சிறப்பு என்று பொருள் தருகிறது.

புதுமைக்குச் சிறப்பு அளித்தல் என்பது, அடிப்படையை மாற்றாமல் பிற விஷயங்களில் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றம் செய்து கொள்ளுதல் ஆகும்.

பிரபஞ்சத்தில் ஒவ்வொரு பொருளும் கணம் தோறும் மாறிக் கொண்டே, புதுமை அடைந்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு பிரபஞ்சமே ஓங்கார ஸ்வரூபமாக உள்ளது. இந்த இடை விடாத மாற்றங்களின் காரண கர்த்தாவான இறைவனும் ஓங்கார ஸ்வரூபனாகக் கருதப்படுகிறான். இறைவனை முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே என்று போற்றிய மாணிக்கவாசகர் அடுத்த அடியில் பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே என்று கூறுவதை நோக்குக.

வேதத்தில் ஓங்காரத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுவதன் நோக்கம் புதுமையில் நாட்டம் கொண்டவனாக இரு என்று அறிவுறுத்துவதற்கே. அந்த அறிவுரையை ஏற்றதனால் தான் வேத சமயம் பல பல புதுமைகளை மேற்கொண்டு காலத்துக்கு ஏற்றபடி உயிர்க் கொலை வேள்விகளைத் தவிர்த்தல், உருவ வழிபாட்டை ஏற்றல் முதலான பல மாற்றங்களை அடைந்தது. வேத இலக்கியமும் வெவ்வேறு காலத்தில் புதிய புதிய நூல்களைப் பெற்று வளர்ந்திருக்கிறது. இந்த முயற்சி நின்று போய்விடாது காலம் தோறும் பழையன கழிதலும் புதியன புகுதலும் வேண்டும் என்ற கருத்தில் பாரதி வேதம் புதுமை செய் என்று அறிவுறுத்துகிறார்.
 
Shri Vikrama,

I am very much thankful for your postings here. I am hypnotized by your narrations and selections. I may look silly, but at times my eyes became moist reading some of the narration. Long back, I have read "Bhrathiyar kavithaigal" not with the same passion as that of now. What a talent, what a talent.

Great..Thanks
 
Vikrama ji,

My salutations to you... The narration is going very very nice.

While reading itself it is showing me the passion. As raman sir said, I too recited some bharathi songs, but that all for some competition or for just to kill that time. Anyhow I love bharathiar a lot. I like many of his songs. Please continue your postings sir...

Pranams
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top