An appeal to Hindus

drsundaram

Active member
a friend of mine laments the robbery by Hindu Religious and Charitable Endowments Department, Tamil Nadu

கடுமையான விரதமிருந்து, காலில் செருப்பின்றி கொளுத்தும் வெயிலில் காற்று புகாத உடைகளுடன் வேடமணிவதற்கு தேவையான ஆபரணங்கள், ஆயுதங்களை சுமந்து கொண்டு ஒழுகும் வியர்வையுடன் ஊர் ஊராக சென்று காணிக்கை ஏற்று முத்தாரம்மனிடம் நேரடியாக கொடுத்து விட்ட மனதிருப்தியுடன் அறநிலையத்துறையின் உண்டியலில் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் கனிவான கவனத்திற்கு..
கணக்கின்றி வரும் இந்து ஆலயங்களின் வருமானத்தில் சிறிதும் பயமின்றி ஊழல் செய்து கணக்கு காட்டாது சொத்து வாங்கி குவிக்கும் அறநிலையத்துறை அதிகாரிகளின் வசதியினை பெருக்குகின்றதை அறியாத அப்பாவி பக்தனே..
குலசையில் வருகின்ற வருமானத்தில் நூற்றில் ஒரு பங்காவது குலசை ஆலய மேம்பாட்டிற்கு பயன்படுத்தியுள்ளதா அறநிலையத்துறை என என்றாவது யோசித்திருக்கின்றாயா...
வருமானம் வரும் இந்து ஆலயங்களை கையகப்படுத்தும் அறநிலையத்துறை தினசரி விளக்கேற்றி வழிபடாத நிலையில் இருக்கும் பிற இந்து ஆலயங்களின் மேம்பாட்டிற்கு அறநிலையத்துறை செய்த உழவார பணிகள் ஏதும் உண்டா..

சர்ச் வருமானத்தை கிறிஸ்தவ டயோசீசன் எடுத்து கொண்டு பள்ளி கல்லூரிகள் ஆரம்பித்து சொந்த மதத்தை சார்ந்தவர்களுக்கு மட்டும் வேலை அளித்து சிறுபான்மை என்ற பெயரில் அரசாங்கத்திடம் சம்பள சலுகையை பெற்று அவர்களுக்குள்ளாகவே முன்னேறி கொளௌகின்றனர்..
மசூதி வருமானமும் இசுலாமிய சமூகத்திற்கு மட்டும் தான்..

இந்து ஆலய வருமானத்தை மட்டும் அறநிலையத்துறை என்ற போர்வையில் ஆட்டையை போடுவது எந்த வகை நியாயமோ..

மைசூருக்கு அடுத்த படியாக மக்கள் கூடும் குலசேகரன்பட்டினம் தேவி ஸ்ரீ முத்தாரம்மன் நவராத்திரி தசரா விழாவின் போது ஆலயத்தை சுற்றிலும் 50 க்கும் மேற்பட்ட உண்டியலை வைத்து பணம் பறித்த மானம் கெட்ட இந்து அறநிலையத்துறை அதிகாரிகளே.....

பெண் பக்தைகள் இயற்கை உபாதைகளை கழிக்க ஒரு தற்காலிக கழிப்பறை கட்டியிருக்க கூடாதா.

கொளுத்தும் வெயிலில் குழந்தைகளை வைத்து கொண்டு குடி தண்ணீருக்காக தாய்மார்கள் படும் சிரமம் உங்கள் கண்களுக்கு தெரிவதில்லையா...

HR&CE துறையின் கீழ் வரும் எந்தக் கோவிலிலும் உண்டியலில் பணம் மற்றும் காணிக்கைப் பொருள் (தங்கம் வெள்ளி போன்ற) எதுவும் இனி செலுத்தாதீர்கள் ஹிந்து சொந்தங்களே!

உங்கள் பிரார்த்தனையைத் துண்டுச் சீட்டில் எழுதிப் போடுங்கள்.
அது போதும்.

நான் பல வருடங்களாகவே உண்டியலில் பணம் போடுவதை நிறுத்தி விட்டேன்.
பதிலாக அர்ச்சகருக்கு வஞ்சனையில்லாமல் தட்டில் சம்பாவனை செய்து விடுவேன்.

கோவிலை சுத்தம் செய்பவர்கள் வாத்தியக்காரர்கள் எல்லோருக்கும் குறைந்தது ஒருவருக்கு ஐம்பது ரூபாய் கொடுத்து விடுவேன்.

முழம் எத்தனை ரூபாய் சொன்னாலும் மூர்த்திக்குத் தகுந்தளவில் முழம் முழமாகப் பூ வாங்கி உள்ளே உறையும் தெய்வத்துக்குச் சாற்றி விடக் கொடுப்பேன்.

மேற்சொன்ன இவையெல்லாம் அவரவர் சௌகர்யம்.

ஆனால், உண்டியில் பணம் சேர்ப்பதை நிறுத்துவதில் சிரமமில்லையே.

நமது பணம் அறமில்லாத் துறையின் நன்றிகெட்ட மாற்றுமத விசுவாச அதிகாரிகளால் சூறையாப் படுகிறது.

இனி உண்டியில் பிரார்த்தனைச் சீட்டுகள் மட்டுமே செலுத்துவோம்.

அறமில்லாத் துறைக்குத் தக்க பாடம் புகட்டுவோம்.

இதிலாவது ஒன்றுபடுவோம் வாருங்கள்!!
 
Back
Top