Raji Ram
Active member
உலகம் சிறியது!
உலகம் சிறியது என்பது அடிக்கடி எல்லோராலும் சொல்லப்படுவதே! நான் சில தடவைகள்
இதை உணர்ந்துள்ளேன்.
நேற்று ஒரு அனுபவம் கிடைத்தது! ஒரு பூஜைக்காக, என் உறவினர் வீட்டுக்குச்
சென்றபோது, அங்கு ஒரு பெண் (நாற்பது வயது போலத் தோற்றம்) எல்லோரிடமும்
சகஜமாகப் பேசிக்கொண்டு இருந்தாள். ஒரு மாமியிடம் தன் ஊர் மதுரை என்றவுடன்,
எனக்கு ஆர்வம் வந்தது. என்னவரின் மாவட்டம் ஆயிற்றே! ஏற்கனவே அவளிடம் நான்
பேசி இருந்தாலும், மீண்டும் சென்று, மதுரை நகரமா அல்லது ஏதேனும் சுற்றியுள்ள ஊரா,
என்று விசாரித்தேன்! அவள் பதில் சொல்லாமல், என் ஊர் மதுரையா என்று கேள்விக்
கணையைத் தொடுத்தாள். என்னவரின் ஊர் தென்கரை என்றவுடன், கண்களில் ஒரு
மின்னல் தோன்றி மறைய, யார் வீடு என்று மீண்டும் கேட்டாள். கோபால் மாமா வீடு
என்றவுடன், அமைதியாகச் சிரித்து, 'உங்கள் எதிர் வீடு என் தாத்தாவுடையது!' என்றாள்.
ஆஹா! திரை இசை மேதை T R மகாலிங்கத்தின் பேத்தியா இவள்! அப்போது பொறி
தட்டியது.... முப்பத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஒரு எட்டு வயது மதிக்கத்தக்க
சிறுமியை அவர்கள் வீட்டில் பார்த்துள்ளேன், இதே பெரிய கண்களுடன், என்று! ஆம்...
அதே கண்கள்.
'கண்டனன் சீதையைக் கண்களால்' என்று கம்பர் எழுதியது நினைவில் வந்தது! இதற்கு
எங்கள் ஆசிரியர் அமுதன் அருமையாக விளக்கம் அளிப்பார். 'அனுமன் தன் கண்களால்
சீதா தேவியைக் கண்டான்', என்ற பொருள் தோன்றினாலும், இன்னொரு
விஞ்ஞானபூர்வமான உண்மையும் உள்ளதாம். பிறக்கும் நாளிலேயே ஒருவரின்
கண்களின் அளவு நிர்ணயிக்கப்படும்! மற்ற அங்கங்கள் வயதுடன் வளர, கண்கள்
மட்டும் அதே அளவுதான் இருக்குமாம். சீதா தேவி, தலைவனைப் பிரிந்த சோகத்தால்,
புழுதி படிந்த மேனியுடன், உடல் இளைத்துத் துரும்பாகி, அடையாளம் தெரியாது
போய்விட, கண்கள் மட்டும் அதே அளவு இருந்தனவாம்! அந்தக் கண்களை வைத்து,
இவளே சீதா தேவி என அனுமன் அறிந்தாராம்!
:blah: தொடரும்.....