வண்ண வண்ண மனிதர்கள்!

Hello RR Mam, hope you are doing good,long time no see, Wow, so nice,super maakolam,it makes me to think how long hours taken for the perfect work.congrats for his work ,Thanks for sharing with us .:) :)
 
'kOla nAyakan' in action to draw the next one! :thumb:

DSC00414.JPG
 
உப்பிட்டவரை ..............

இளம் பருவத்தில் ஏழ்மையில் உழன்ற ஒரு சிறுமி. என் அன்னை அவளுக்கு உதவ விழைந்து, எங்களுடன் அவளையும்

மதிய உணவு உண்ண அமரச் செய்வார். சில ஆண்டுகள் இந்த உதவி தொடர்ந்தது. காலம் உருண்டு ஓட, அவள் குமரிப்

பருவம் எய்த, அவளின் திருமணம் நடந்தேறியது. அவளது இல்வாழ்வு நன்கு அமைந்ததும், அவளுடைய மகனுக்கு நல்ல

மனைவி அமைந்ததும் அவளது நல்வினைப் பயனே!


அவள் வசிக்கும் கிராமத்துக் கோவிலுக்கு எங்கள் குடும்பத்தினர் வழிபடச் சென்றால், ஆவலுடன் ஓடி வந்து, அவள்

இல்லத்துக்கு அழைத்துச் சென்று, சிற்றுண்டி தயாரித்து, அன்புடன் பரிமாறுவாள். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும்,

எங்களிடம் மாறாத அன்பு கொண்டுள்ள அவள் சிறந்த பெண்மணி என்பதில் ஐயம் ஏதேனும் உண்டோ?
award_star.png
 
உப்பிட்டவரை

உப்பிட்டவரை ..............கிடைக்கின்ற உதவியின் அளவு சிறிதோ, பெரிதோ, அதன் பரிமாணம் என்னவோ, உதவுபவர் எவரோ உதவி உதவி தான்.
 
......கிடைக்கின்ற உதவியின் அளவு சிறிதோ, பெரிதோ, அதன் பரிமாணம் என்னவோ, உதவுபவர் எவரோ உதவி உதவி தான்.
தாங்கள் கூறுவது உண்மை!

அதுவும் காலத்தில் செய்யும் உதவி சாலச் சிறந்தது! :thumb:
 
It is a nice philosophy to do good without expectations of return.

most times one gets returns.

far disproportionate to the good done.

I feel happy when some I get unexpected windfall returns for deeds done years before.
 
எளிய முறைகளை ஏற்க மறுப்பவர்!

தினமும் மடிசார் அணிந்துகொள்ள வேண்டிய பெண்மணி. வயதான பின், அத்தனை கனத்தைத் தினம் சுமப்பது கடினமாகிவிட,

தன் மருமகளிடம் யோசனை கேட்டாள். புடவையில் ஒரு கஜம் சிறு பட்டை
யாக ஆகிவிட்டால், கனம் குறையுமென மருமகள்

அறிந்துகொண்டாள்.
u வடிவில் உள்ளே இருக்கும் பகுதியை இரு சிறு பட்டைகளாக மாற்றுவதே திட்டம். அவர் விருப்பம் ஆந்திர

நாட்டில் கிடைக்கும் ஆறு கஜப் புடவை என்று அறிந்த மருமகள், ஒரே போன்று இரு புடவைகளை வாங்கி, புதிய வடிவை

அமைத்துத் தந்தாள். அதைச் சில முறை ஆசையாக அணிந்தாள் அப் பெண்மணி.
ஆனால், பழைமையில் ஊறிய அவளின்

செல்ல மகன் ஒருவன், கொடியில் கிடந்த அதைப் பார்த்தவுடன், பட்டை வைத்த
ஒட்டுப் புடவையை அணியக் கூடாது என்று

கூறி, அதை அப்படியே பணிப் பெண்ணிடம் தந்துவிட்டான்!
அந்த மருமகள் வேறு யாரும் அல்ல; அடியேன்தான்! ;)

இப்போது,
அதைவிட எளிய முறையில் 'இரு நிமிட மடிசார்' வடிவமைத்து, வெற்றி கண்டுவிட்டேன்! ஆனால், இப்போதும்

அதைப் பழைமைவாதிகள் ஏற்க மறுக்கின்றனர். ஆனால், நான் அவர்களின் விமர்சனங்களுக்குக் கவலைப்படுவதே இல்லை!


குறிப்பு: நேற்று என் உறவில் ஒரு பெண், 'இரு நிமிட மடிசார்' தைத்துத் தர, அவளது புடவையைத் தந்துள்ளாள்! :)
 
பெரும் பொருள் ஈட்டுவதை எண்ணிடும் புரோஹிதர்களின் மத்தியில், உன்னதமான ஒரு மனிதர். :thumb:

அவரைப் பற்றி விரைவில்......
 
புதுவையில் ஒரு புதுமையான மனிதர்.

வைதீகத் தொழிலை வியாபாரமாக்கிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. பூஜை, புனஸ்காரம் எதுவாயினும், கான்ட்ராக்ட்

எடுத்து அதில் கமிஷன் அடிப்பதும் அதிகரித்துவிட்டது. த
ம் மக்களை எஞ்சினீயர் ஆக்கத் துடிக்கின்றது வைதீக வர்க்கம்.

இந்தக் கால கட்டத்தில், புதுவையில் ஒரு புதுமையான மனிதரைக் கண்டேன்!


அமைதியான தோற்றம்; வேதங்களையும் சாஸ்த்திரங்களையும் கற்ற விற்பன்னர்; வேத பாடசாலையும்,
கோசாலையும்

மிகச் சிறப்பாக நடத்துபவர்; தன் இரு புதல்வர்களும் த
ன் தொழிலைக் கற்றுத் தேற முனைபவர்; எந்தச் செயலாயினும்,

அதில் ஒரு நேர்த்தியும், கலை நயமும் மிளிர வைப்பவர்; அந்தணர்களுக்கு வழங்கும்
தானங்களையெல்லாம், சரி சமமாகப்

பங்கிட்டு, அனைவரையும் காப்பவர்; ஒவ்வொருவரின் தேவையையும்
அறிந்து, அதற்கேற்
பொருட்களை வாங்கித் திருப்தி

அளிப்பவர்; சுப காரியங்களை நடத்தி, அந்த
வருமானத்தை மட்டும் தனதாக்கி, அந்திமக் கிரியைகள் தரும் வருமானத்தைத்

தன் பாடசாலைக்கும்,
கோசாலைக்கும் இன் முகத்துடன் அளிப்பவர்; பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து, நல்லவை பல

போதிப்பவர்.
இவர் வந்து நடத்தும் எதுவாயினும், அனைவருக்கும் மன நிறைவை அளிக்கும் என்பது உறுதி!


இவரைப் போலப் பலர் மாறினால், சமுதாயம் மேன்மை அடையுமே! :thumb:
 
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்....

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.


எத்தனை உண்மையான வரிகள்! மன இறுக்க நோய் (Autism) தாக்கிய குழந்தை தனக்கு இருந்தால் அந்தத் தாய் எத்தனை

வேதனைப்படுவாள்? மற்ற குழந்தைகளைப் போல் ஓடி ஆடி விளையாடாமல், ஒதுங்கும் மகனைக் கண்டு, எத்தனை

வருத்தம் கொள்வாள்? அப்படி ஒரு தாய், தன் மகனின் இசைத் திறமையைக் கண்டு, இசையில் அவனை மூழ்கச் செய்து,

ஒரு நல்ல பாடகனாகவும் உருவாக்கி இருக்கின்றாள்.


சில ஆண்டுகளுக்கு முன், ஒரு மலையாள இசைப் போட்டியில்தான் அவன் பாடியதை நான் கேட்டேன்; வியந்தேன்!

இப்பொழுது, அவன் இளைஞனாக வளர்ந்து, நெடிய, மெலிந்த சரீரமும், இனிய கனமான சாரீரமும் பெற்று, மிக

அருமையாகப் பாடுகின்றான். முழு ஆதரவு அவன் அம்மா தருவதுதான். பாடும் சமயம் அவனுடனே மேடையில் நின்று,

பொங்கி வரும் கண்ணீரை அடக்கியபடி, மென்மையாகச் சிரித்து மகிழ்வாள் அந்தத் தாய்.

அவளை நாம் பாராட்டுவோம். :clap2:

An introduction to Sukesh Kuttan, his songs and comments by judges:
https://youtu.be/OtzmZUsy4J8
 
வினோதப் பிறவிகள் - 1

கொட்டும் மழையில், முட்டுவரை நிரம்பிய சாலை நீரில், வீட்டுப் பெரியவரைப் பால் வாங்கக் க்யூவில் நிறுத்தும் இல்லத்தரசி!

ஒரு நாள் பாலில்லாமல் சீனியர்கள் இருக்க முடியாதோ? :confused:

 
வினோதப் பிறவிகள் - 2

இஞ்சி இல்லாவிட்டால் டீ கிடையாது என்று சொல்லிக் கணவனைக் கடைக்கு விரட்டும் பெண்மணி! :whip:

ஏலக்காய் டீ அத்தனை ருசிக்காதோ? :confused:
 
வினோதப் பிறவிகள் - 3

யார் உயிர் போனால் எனக்கென்ன என்ற ஹோதாவில், E B ஆளைப் பிடித்து லஞ்சம் கொடுத்து,

மின் இணைப்பு வேண்டும் இல்லத்தரசன்! :heh:
 
வினோதப் பிறவிகள் - 4

ஆடைகள் அனைத்தையும் வெள்ளம் அடித்துச் செல்ல, மாற்றுத் துணிக்காக 'நைட்டி' வாங்கப் போனால்,

ஒரு உடை ஆயிரம் ரூபாய் என்று அடாவடி செய்யும் கடைக்காரர்! :evil:

(காஞ்சீபுரத்தில் நடந்தது) :sad:
 
வினோதப் பிறவிகள் - 5

நிவாரணம் வேண்டும் ஏழைகளுக்கு, பேப்பர் தட்டில் வெறும் சாதமும், உப்பும் இட்டுத் தரும் கொடுங்கோலர்!

(கணக்கில் எப்படி எழுதுவார்களோ?​)
 
வினோதப் பிறவிகள் - 6

நிவாரணப் பொருட்கள் செல்லும் லாரியை மடக்கி, தாம் அளித்தது போல நாடகம் ஆடும் அரசியல் அராஜகர்கள்! :mad:
 
வினோதப் பிறவிகள் - 7

தம்பி வீட்டில் மழை வெள்ளம் புகுந்தும், அடுத்த வீட்டில் பராமுகமாய் வசிக்கும் அண்ணன் குடும்பம்! :grouphug:
 
வினோதப் பிறவிகள் - 8

சேதங்களைப் பார்வையிட்ட பின், "இத்தனைதானா? சிலருக்கு இன்னும் பல பொருட்கள் வீணாகிப் போயின"

என்று வெறுப்பேற்றும் உடன் பிறப்பு! :blah:
 
வினோதப் பிறவிகள் - 9

வீட்டினுள் நீர் வடிந்தவுடன், பேத்திக்குப் பாட்டுச் சொல்லித்தரக் கேட்கும் ஆசை மிகுந்த பாட்டி! :hug:

(கிளீனிங் யார் செய்வதாம்??)
 
Back
Top