பயணக் க(வி)தைகள்...

The scary steps that lead to the third part of the Elephant falls.

IMG_0936.JPG
 
சிந்தை கவர் வடகிழக்கு இந்தியா - 19

என்னவர், தம்பி சார் இருவரும் பயமின்றி இறங்கிட,
என் காமரா சகிதம் நான் அங்கேயே நின்றுவிட்டேன்!

மேலே இருந்து படம் எடுத்தால், மூன்றாம் பகுதியின்
மேலான அழகு தெரியவில்லை; வேறு வழியில்லை!

வலைத் தளத்தில் 'சுட்டு'விடலாமே என்ற எண்ணம்
அலை போல வந்தது அந்த நேரத்தில், என் மனதில்!

அடுத்த நிறுத்தம் Ward's Lake என்ற பெரிய ஏரியாகும்.
எடுத்தேன் பல புகைப்படங்களை மிகவும் ஆவலுடன்.

நடை பாதை ஏரியைச் சுற்றி; நீரில் தாமரைப் பூக்கள்;
இடைவிடாது நீரிலே நீந்தி மகிழும் பல வாத்துக்கள்!

காதல் ஜோடி ஒன்று தம் அருகில் வைத்த குடையை,
காற்று அடித்து நீரிலே தள்ளிவிட, அசடு வழிந்தனர்!

சிலர் வாடகைப் படகுகளில் பவனி வந்தனர்; நாங்கள்
சில நிமிடங்களில் வலம் வந்தோம். அடுத்த நிறுத்தம்

ஏழு மாடிகள் உள்ள Don Bosco Museum; மக்களுடைய
அழகிய கலாச்சாரம் நன்றாக விளக்கப்படுகின்ற இடம்!

அதி வேகத்தில் சுற்றி வர வைத்தான் ஒரு காவலாளி,
அது மூடுகின்ற நேரம் நெருங்கிவிட்டது என்றுரைத்து!

புகைப்படம் அனுமதி இல்லை என்பதை அறியாத நான்
புகைப்படம் எடுத்தேன், காவலாளி மிரட்டும் வரையில்!

அஸ்ஸாம் மகளிர் அணியும் புடவை எளிமை; புதுமை!
அவ்வகைப் புடவையை 'மேகலா' என்று அழைக்கிறார்!

எனக்கும் அதில் ஒன்று கிடைக்கும் என நான் அறியேன்;
எனக்கு ஆச்சரியம் தரும் விதத்தில் ஒன்று கிடைத்தது!

தொடரும் ...............

 
மேலே இருந்து படம் எடுத்தால், மூன்றாம் பகுதியின்
மேலான அழகு தெரியவில்லை.............

IMG_0933.JPG
 
Last edited:
வலைத் தளத்தில் 'சுட்டு'விடலாமே!!!
icon3.png


From Google images - Third part of Elephant falls.

_13736215784.jpg
 
Ward's lake:

நடை பாதை ஏரியைச் சுற்றி; நீரில் தாமரைப் பூக்கள்;


IMG_0950.JPG
 
இடைவிடாது நீரிலே நீந்தி மகிழும் பல வாத்துக்கள்!

IMG_0958.JPG
 
காதல் ஜோடி ஒன்று தம் அருகில் வைத்த குடையை,
காற்று அடித்து நீரிலே தள்ளிவிட ...............


IMG_0957.JPG
 
சிந்தை கவர் வடகிழக்கு இந்தியா - 20

இயற்கையான நீர்வீழ்ச்சிகள் பல உள்ள ஷில்லாங்கில்,
செயற்கையாகச் செய்த பெரிய நீர் நிலையும் உள்ளது!

உமியம் ஏரி அவ்வாறு உருவானதாம்! நாங்கள் சென்ற
சமயம், படகு சவாரியை நிறுத்தும் நேரமாகிவிட்டது!

மிகப் பெரிய பரப்பாக உள்ள ஏரி; அங்கு மீன் பிடிப்பவர்
மிகச் சிறிதாகப் புகைப்படத்தில் தெரிவதிலிருந்து, நாம்

ஏரியின் அளவினை அனுமானம் செய்துகொள்ளலாம்!
ஏரியின் அழகை ரசித்த பின், இனிய இல்லம் வந்தோம்.

மறு நாள் காலை ஏழரை மணிக்கு ஏற்பாடு செய்திருந்த
ஒரு நாள் சுற்றுலாவை மிக விரும்பி எதிர்பார்த்தோம்!

இரு இருக்கைகளே மீதம் இருந்ததால், கடைசி வரிசை!
இருந்தாலும் கூட, பேருந்தில் அதிக ஆட்டம் இல்லை!

மலையின் குளிர் காற்று இதமாக வருட, பார்த்தோம்
மலைப் பகுதிகளில் முளைத்து எழும் புதிய வீடுகளை!

பழகாத தோற்றத்தால் பார்த்ததும் நமக்குக் கொஞ்சம்
பயம் வருவது இயற்கைதான்! அது எனக்கும் வந்தது!

அழகான Mawkdok Valley காணவே முதல் நிறுத்தம்;
அழகான பச்சை, நீல நிறங்களில் அமைந்த V வடிவம்!

இது போன்ற எல்லா இடங்களிலுமே, இறங்கிச் சென்று
இயற்கை அழகை ரசிக்க, படிக்கட்டுகள் வைத்துள்ளார்!

கடைகளில் தொப்பிகள், காபி, டீ, ஜூஸ் என்று வைத்து
இடைவிடாது வியாபாரம் செய்கின்றனர் சிலர் அங்கு!

ஏழு சின்ன நீர்வீழ்ச்சிகள் அமைந்த Eco Park அடுத்ததாக;
'ஏழு சகோதரிகள் நீர்வீழ்ச்சி' என்று பெயர் இட்டுள்ளார்!

தொடரும் ......................
 
மிகப் பெரிய பரப்பாக உள்ள ஏரி; அங்கு மீன் பிடிப்பவர்
மிகச் சிறிதாகப் புகைப்படத்தில் தெரிவதிலிருந்து, நாம்

ஏரியின் அளவினை அனுமானம் செய்துகொள்ளலாம்!

IMG_0979.JPG
 
அழகான Mawkdok Valley காணவே முதல் நிறுத்தம்;
அழகான பச்சை, நீல நிறங்களில் அமைந்த V வடிவம்!

IMG_0999.JPG
 
இது போன்ற எல்லா இடங்களிலுமே, இறங்கிச் சென்று
இயற்கை அழகை ரசிக்க, படிக்கட்டுகள் வைத்துள்ளார்!

IMG_0987.JPG
 
கடைகளில் தொப்பிகள், காபி, டீ, ஜூஸ் என்று வைத்து
இடைவிடாது வியாபாரம் செய்கின்றனர் சிலர் அங்கு!

IMG_0997.JPG
 
சிந்தை கவர் வடகிழக்கு இந்தியா - 21

மூடுபனி எழுந்து வந்து, அதன் வரவு குளிரைப் பரப்ப,
மூடுகின்றார் சில பெண்கள் தம்மைப் போர்வையால்!

சுற்றுச் சூழலைச் சுத்தமாக வைக்கக் கூறும் Eco Park;
சுற்றிவர நிறைந்த இடம்; பாலங்கள்; நீர்த் தொட்டிகள்.

மழைக் காலம் ஆரம்பமாகவில்லை; நீர் அதிகமில்லை!
விழைந்தேன் அச் சூழலைப் புகைப்படங்களில் பிடிக்க!

இயற்கையின் அழைப்புக்கு மக்கள் ஒதுங்க, சுத்தமான
இடங்கள் அமைக்காதது, நம் நாட்டின் சாபக்கேடுதான்!

சுற்றுச் சூழல் சுத்தமாக இருந்தும், அந்த ஒதுங்குமிடம்
சற்றும் சுத்தமின்றி இருந்தது வருத்தம் தந்தது நிஜம்!

இயற்கையின் அதிசயங்களில் ஒன்று குகைகள்; அதில்
செயற்கை விளக்குகள் வைத்தால் சென்றுவர எளிது!

அவ்வாறு அமைந்த குகையாகும் Mawsmai cave என்பது.
எவ்வாறு அந்த 150 மீட்டர் தூரத்தைக் கடக்க முடியும்?

பெரிய நுழைவாயில் இருந்தாலும், கொஞ்ச தூரத்தில்

சிறிய சந்து போல மாறிவிடுகிறது; செல்வது கடினம்!

பல வடிவப் பாறைகள் நம்மை நோக்கி நீள, அவற்றில்
சில வடிவங்கள் மிக அச்சம் கொள்ளவும் செய்கின்றன!

நம் கற்பனை வளத்துக்கு நிறையத் தீனி போடும் இடம்!
நம் தைரியத்தை எடைபோடுகின்ற பயங்கரமான இடம்!

உள்ளே சென்று வந்த வீர இளசுகள் கூறினர், ஓரிடத்தில்
உள்ளே நுழையக் குழந்தை போல் தவழ்ந்து சென்றதாக!

தைரிய லக்ஷ்மியை இன்றும் தேடுகின்ற நான், அங்கே
தைரியமாக உள்ளே நுழைவேனோ என்ன? இல்லையே!


தொடரும் ..............

 
மூடுபனி எழுந்து வந்து, அதன் வரவு குளிரைப் பரப்ப...

IMG_0995.JPG
 
சுற்றுச் சூழலைச் சுத்தமாக வைக்கக் கூறும் Eco Park;
சுற்றிவர நிறைந்த இடம்; பாலங்கள்; நீர்த் தொட்டிகள்.

IMG_1016.JPG
 
பல வடிவப் பாறைகள் நம்மை நோக்கி நீள, அவற்றில்
சில வடிவங்கள் மிக அச்சம் கொள்ளவும் செய்கின்றன!


IMG_1037.JPG
 
சிந்தை கவர் வடகிழக்கு இந்தியா - 22

மீண்டும் சில நிமிடப் பயணத்தில் Seven sisters falls
மீண்டும் வேறு கோணத்திலிருந்து கண்களில் பட்டது!

அடுத்த அதிசயம் இரு நூறு அடி உயரமான பெரிய கல்!
அதற்கு ஒரு அரக்கன் கதை மிகச் சுவையாக உள்ளது!

ஒரு கிராமத்து மக்களைத் துன்புறுத்திய ஓர் அரக்கனை,
ஒரு வினோதமான முறையில் கொன்றனராம் மக்கள்!

அவனுக்குத் தந்த உணவில் கலந்த இரும்பு ஆணிகளே
அவனுடைய இன்னுயிரைப் பறித்த காலன் ஆனதாம்!

அவன் விட்டுச் சென்ற கூடையே கல்லாக மாறியதாம்!
அவனுடைய அளவின் கற்பனையே பயத்தைத் தந்தது!

அடுத்ததாகப் பார்த்த Thangkharang பூங்காவின் மலர்கள்
கொடுத்தன அரக்கன் பற்றிய பயம் நீக்கி, மன மகிழ்வை!

எத்தனை வகைச் செம்பருத்திகள் செழிப்பாக உள்ளன!
அத்தனை வகையிலும் சிவப்புத்தான் மிகவும் பெரிது!

நம் கையில் பூவைப் பிடித்தால் அதன் பெரிய வடிவை
நம்மால் யூகிக்க முடியும்; அப்படியே ஒரு புகைப்படம்!

மிக உயரத்திலிருந்து ஒரு நீர்வீழ்ச்சி கொட்டுகின்றது;
மிக அடர்ந்த காடு மலைப் பகுதிகளை மறைக்கின்றது!

ஒருபுறமிருந்து பார்த்தால், பங்களாதேஷ் தெரிகின்றது!
ஒரு விசா அனுமதியும் இல்லாது எல்லை கடக்கலாம்!

பழைமையான கட்டிடம்; நிறம் மங்கிய பெயர்ப் பலகை;
புதுமையான பலகையின் அறிவிப்பு, 'தபால் நிலையம்'!

அதுதான மழைக்குப் பெயர் பெற்ற சிரபுஞ்சியில் உள்ள
பொதுமக்கள் சேவைக்கென இயங்கும் தபால் நிலையம்!

தொடரும் ...............

 
Back
Top