சிந்தை கவர் வடகிழக்கு இந்தியா - 20
இயற்கையான நீர்வீழ்ச்சிகள் பல உள்ள ஷில்லாங்கில்,
செயற்கையாகச் செய்த பெரிய நீர் நிலையும் உள்ளது!
உமியம் ஏரி அவ்வாறு உருவானதாம்! நாங்கள் சென்ற
சமயம், படகு சவாரியை நிறுத்தும் நேரமாகிவிட்டது!
மிகப் பெரிய பரப்பாக உள்ள ஏரி; அங்கு மீன் பிடிப்பவர்
மிகச் சிறிதாகப் புகைப்படத்தில் தெரிவதிலிருந்து, நாம்
ஏரியின் அளவினை அனுமானம் செய்துகொள்ளலாம்!
ஏரியின் அழகை ரசித்த பின், இனிய இல்லம் வந்தோம்.
மறு நாள் காலை ஏழரை மணிக்கு ஏற்பாடு செய்திருந்த
ஒரு நாள் சுற்றுலாவை மிக விரும்பி எதிர்பார்த்தோம்!
இரு இருக்கைகளே மீதம் இருந்ததால், கடைசி வரிசை!
இருந்தாலும் கூட, பேருந்தில் அதிக ஆட்டம் இல்லை!
மலையின் குளிர் காற்று இதமாக வருட, பார்த்தோம்
மலைப் பகுதிகளில் முளைத்து எழும் புதிய வீடுகளை!
பழகாத தோற்றத்தால் பார்த்ததும் நமக்குக் கொஞ்சம்
பயம் வருவது இயற்கைதான்! அது எனக்கும் வந்தது!
அழகான Mawkdok Valley காணவே முதல் நிறுத்தம்;
அழகான பச்சை, நீல நிறங்களில் அமைந்த V வடிவம்!
இது போன்ற எல்லா இடங்களிலுமே, இறங்கிச் சென்று
இயற்கை அழகை ரசிக்க, படிக்கட்டுகள் வைத்துள்ளார்!
கடைகளில் தொப்பிகள், காபி, டீ, ஜூஸ் என்று வைத்து
இடைவிடாது வியாபாரம் செய்கின்றனர் சிலர் அங்கு!
ஏழு சின்ன நீர்வீழ்ச்சிகள் அமைந்த Eco Park அடுத்ததாக;
'ஏழு சகோதரிகள் நீர்வீழ்ச்சி' என்று பெயர் இட்டுள்ளார்!
தொடரும் ......................