• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...

Seven sisters falls

IMG_1054.JPG
 
அடுத்த அதிசயம் இரு நூறு அடி உயரமான பெரிய கல்!

The top portion of the huge stone:

IMG_1061.JPG
 
மிக உயரத்திலிருந்து ஒரு நீர்வீழ்ச்சி கொட்டுகின்றது;
மிக அடர்ந்த காடு மலைப் பகுதிகளை மறைக்கின்றது!

IMG_1076.JPG
 
ஒருபுறமிருந்து பார்த்தால், பங்களாதேஷ் தெரிகின்றது!
ஒரு விசா அனுமதியும் இல்லாது எல்லை கடக்கலாம்!

IMG_1072.JPG
 
நம் கையில் பூவைப் பிடித்தால் அதன் பெரிய வடிவை
நம்மால் யூகிக்க முடியும்; அப்படியே ஒரு புகைப்படம்!

IMG_1083.JPG
 
பழைமையான கட்டிடம்; நிறம் மங்கிய பெயர்ப் பலகை;
புதுமையான பலகையின் அறிவிப்பு, 'தபால் நிலையம்'!

IMG_1085.JPG
 
சிந்தை கவர் வடகிழக்கு இந்தியா - 23

விளிம்பில் பாதுகாப்பே இல்லாத மலைப் பாதையில்
துளியும் பயமின்றி ஓட்டுகிறார் பேருந்தின் ஓட்டுனர்!

பயணம் தொடர்ந்த பொழுது வழியில், வினோதமாக,
பயணம் இருவர் மட்டும் செல்லும் குட்டிக் கார் ஒன்று!

ஓடுமா, ஓடாத அது என்று நினைத்துக் குழம்பியபோது,
ஓட்டிச் சென்றான் அந்தக் குட்டிக் காரை ஓர் இளைஞன்!

இந்தியாவில் ஒரு கற்றை நீர்வீழ்ச்சிகளில் மிக உயரமாக
இருப்பது சிரபுஞ்சியில் இருக்கும் Nohkalikai falls ஆகும்!

ஆயிரத்து நூறு அடிகள் கொட்டும் இந்த நீர்வீழ்ச்சிக்கும்
ஆவலுடன் மக்கள் கூறுகின்றார் ஒரு சோகக் கதையை!

விதவைப் பெண் 'கா லிகை'க்கு ஒரு மகள் இருந்தாள்;
விவாகம் மீண்டும் செய்து கொண்ட அவளின் கணவன்

மகளை ஒரு நாள் கொன்று சமைத்துவிட்டானாம்; தன்
மகளின் கறியையே உண்ட பின்னர் அவள் அறிந்தாள்

என்ன கொடுமை நடந்தது என்பதை; உன்மத்தமானவள்
தன் இன்னுயிரை மாய்த்தாள் மலையிலிருந்து குதித்து!

இந்த நிகழ்வால் 'Fall of Ka Likai' எனப் பெயர் பெற்றதாம்
அந்த நீர்வீழ்ச்சி! நயாகராவின் கதை நினைவில் வந்தது!

ஐந்து வினாடிகள் நீர்வீழ்ச்சியினை மூவியாக எடுத்தேன்!
இந்த நிமிடம் வரை மழையே வரவில்லை சிரபுஞ்சியில்!

சென்னைவாசிகள் வந்தால், சிரபுஞ்சியிலும் கூட மழை
தன்னை மறைத்துக் கண்ணாமூச்சி ஆடுமோ என்னமோ!

அடுத்த நிறுத்தம் புகழ் பெற்ற இராமகிருஷ்ணா மிஷன்;
கொடுத்த சில நிமிடங்களிலே வலம் வந்துவிட்டோம்!

தொடரும் ................
 
Last edited:
பயணம் தொடர்ந்த பொழுது வழியில், வினோதமாக,
பயணம் இருவர் மட்டும் செல்லும் குட்டிக் கார் ஒன்று!

IMG_1087.JPG
 
Where does the water go?

This falls seems to be mysterious! Water from this 1099 feet high falls drops into a green pond and

then seems to disappear! There is only a long path filled with stones and there is no trace of any river!

See this photo:

IMG_1101.JPG
 
சிந்தை கவர் வடகிழக்கு இந்தியா - 24

நல்ல கலாச்சாரத்தை வளர்க்கிறது R K Mission; ஆனால்
அல்லல்படுகிறார் வெளியே சில சிறுவரும் சிறுமியரும்!

ஒரு பெண் நீண்ட லவங்கப் பட்டைகளை விற்கின்றாள்;
சிறார்களின் கைகளில் சிறு அளவு லவங்கப் பட்டைகள்!

ஒரு கட்டு பத்து ரூபாய்தான் எனக் கெஞ்சுகிறார். அந்தச்
சிறு பருவத்தில் வறுமையின் கொடுமை! என் செய்வது?

இரண்டு கட்டுக்களை நான் வாங்கியதும், அந்தச் சிறுமி
இரண்டு கண்களையும் விரித்து, நன்றி கூறிச் சிரித்தாள்!

பாடசாலையில் கல்வி கற்கின்ற வசதியிருக்கும் சிலர்;
பாடசாலையாக உலகமே மாறிவிட, வறுமையில் சிலர்!

சமத்துவம் இல்லாதது நாம் வாழுகின்ற பூவுலகம் என்று
தத்துவம் பேச வைத்திடும் நம்மை, இந்த முரண்பாடுகள்!

ஒரு நாள் பயணத்தில் மகிழ்ச்சியும், வருத்தமும் கலந்த
ஒரு அனுபவத்தைப் பெற்று, இனிய இல்லம் வந்தோம்!

மறு நாள் ஷில்லாங் நகரிலிருந்து புறப்படுகிற சமயத்தில்,
ஒரு புடவைப் பாக்கெட்டைத் தம்பியின் மனைவி தந்திட,

நான் மயங்கிய அஸ்ஸாம் 'மேகலா புடவை' ஒன்றுதான்
நான் விரும்புகின்ற சந்தன நிறத்திலே அதனுள் இருந்தது!

எத்தனை புடவைகள் நம்மிடம் இருந்தாலும்கூட, புதியது
எத்தனை மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது! நன்றி உரைத்து,

அருகில் இருந்த நிலையத்தில் வாடகைக் காரை எடுத்து,
விரைவில் கௌஹாத்தி விமான நிலையத்தில் இறங்கி,

அன்பாக அரவணைக்கும் கல்கத்தா நண்பரின் இல்லத்தை
நன்றாக இருட்டிய சமயம் நாங்கள் சென்று அடைந்தோம்!

தொடரும் ......................
 
hi madam,

kodumaiyulum ..kodumai..varumai...athilum ilamayil varumai....migavum kodumai..i had my personal experience in veda patasalai

life...
 
hi madam,

kodumaiyulum ..kodumai..varumai...athilum ilamayil varumai....migavum kodumai..i had my personal experience in veda patasalai

life...
Dear TBS Sir,

Yes! I remember to have read in our forum.

When we were on the earlier tour to North India, we saw a few poor kids outside Pinjore Gardens in Chandigarh.

Our tourist bus guide gave Rs. 10 each to these kids and they ran to the nearby shop and bought chocolate bars

and relished it immediately! Tear filled my eyes... They spend whatever money they get to enjoy the small mercies! :sad:
 
சிந்தை கவர் வடகிழக்கு இந்தியா - 25

என் பிறந்த தேதி என்று நண்பர் அறிந்ததால், கேக் ஒன்றை
அன்புடன் அலங்கரித்து வைத்து, எங்களை அசத்திவிட்டார்!

அவர்கள் புலால் உண்ணுவது வழக்கம் எனினும், எமக்காக

அவர்களும் புலால் இல்லாது சைவ உணவையே உண்டனர்.

பழைமையான உயர் வகை மரச் சாமான்களும், பெரியதாக

அழகிய பீங்கான் ஜாடிகளும், அலங்காரத் தட்டுக்களும் என

ஒரு நல்ல அருங்காட்சியகத்தைப் போல இருந்தது இல்லம்!
ஒரு நிமிடத்தில் குறும்புக் குழந்தை ஜாடிகளை நொறுக்கும்!

இப்படி எண்ணம் ஓடியபோது, கிணுகிணுத்தது மணி ஒன்று;
இப்படிச் செய்தி வந்தது அருகில் நில நடுக்கம் வந்ததென்று!

இத்தனை பீங்கான் பொருட்கள், நில நடுக்கம் வந்துவிட்டால்
எத்தனை சேதத்தை அடையும்! நினைவே நடுங்க வைத்தது!

என்றும் நம்மைக் காக்கும் இறையை எண்ணினோம்; எமை
அன்றும் காத்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றி பாராட்டினோம்!

குளிர் சாதன வசதியோடு படுக்கை அறை ஒன்றினைத் தந்து,
குளிர்வித்தனர் அவர்கள் எமது மனதைத் தமது உபசரிப்பால்!

ஒரு பணிப்பெண், ஒரு சமையல்காரன், ஒரு தோட்டக்காரன்,
இரு காரோட்டுனர்கள், வீட்டைச் சுத்தம் செய்யவும் ஒருவன்!

வயதான அந்தத் தம்பதியரின் மகன், புகழ் பெற்ற மருத்துவர்;
வயதான பெற்றோருக்கு எல்லா வசதிகளையும் தந்துள்ளார்!

காலைக் காப்பி ஆறு மணிக்கு மேஜை மீது தயாராக இருக்க,
வேலைகள் மிகச் சுறுசுறுப்பாக நடக்கின்றன பணியாட்களால்.

விரைவில் குளித்துத் தயாராகி, சிற்றுண்டி உண்டு, ஆவலோடு
விரைந்தோம் கல்கத்தா நகரினைச் சுற்றி ஒரு வலம் வந்திட!

தொடரும் .............................

பழைமையான உயர் வகை மரச் சாமான்களும், பெரியதாக
அழகிய பீங்கான் ஜாடிகளும், அலங்காரத் தட்டுக்களும் என

ஒரு நல்ல அருங்காட்சியகத்தைப் போல இருந்தது இல்லம்!

IMG_1229.JPG
 
ஆளுக்கொரு வீடு மேதினியில்
அவசியம் வேண்டும் அளவோடு

மாடிமனை வீடு தேடியோடும்
கோடி செல்வம் கண்டோம்

அணிவகுப்பில் ஒரு அருங்காட்சியகம்
அழகுற அமைந்துவிட்ட அகம்

அகமகிழ்ந்து வரவேற்றது கண்டு
உளம் குளிர்ந்து நின்றோம்
 
சிந்தை கவர் வடகிழக்கு இந்தியா - 26

நாங்கள் எளிதில் நகர் வலம் வந்திட உதவி புரிய விழைந்த
நண்பர், தம் காரில் ஒன்றை எங்களுக்கென ஒதுக்கிவிட்டார்!

நண்பரின் குடும்பம் செல்லும் தேவாலயம் மிகவும் பெரியது!
எங்களை அங்கு முதலில் செல்லப் பணித்தார்; சென்றோம்!

உட்புறம் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை! எனவே அதன்
வெளிப்புறம் மட்டும் சில புகைப்படங்களை எடுத்தது திருப்தி!

விக்டோரியா மெமோரியல் கட்டிடம் மிக பிரமிக்க வைத்தது!
விக்டோரியா மகாராணி வாசித்த பியானோ அதில் இருந்தது!

அருமையான பல பொருட்கள், ஓவியங்கள் அங்கே இருந்தன!
பொறுமையாகப் பார்த்தால் ஒரு நாள் முழுதும் போய்விடும்!

விரைவில் வலம் ஒன்று; புகைப்பட அனுமதி உள்ளே மறுப்பு!
விரைந்தோம் ஒரு மிக முக்கியமான இடத்திற்கு! அது என்ன?

என்னவர் இள வயதில் கூடைப்பந்து விளையாடிய மைதானம்.
சின்ன மாறுதலும் இல்லாது பழைமை மாறாது அது திகழ்ந்தது!

'ஞாபகம் வருதே' பாடலைப் பாடி என்னவரைக் கிண்டல் செய்ய,
ஞாபகம் பல மலரும் நினைவுகளாய் அவருக்கு எழுந்தது நிஜம்!

பழைமையும் புதுமையும் நிறைந்தது கல்கத்தா நகரம்; இன்னும்
பழைமையான 'டிராம்' வண்டி சாலையின் நடுவில் ஓடுகின்றது!

இரு குதிரைகள் பூட்டிய வண்டி ஒய்யாரமாகப் போக, அதன் பின்
இறக்கும் தருவாயில் உள்ளது போல் விளங்கும் பேருந்து ஒன்று!

சிலைகளுக்கும் பஞ்சமில்லை இந்த நகரிலே! பல மக்கள் ஏழ்மை
நிலையில் உழல்வதைப் பார்த்தால் நெஞ்சம் கனத்துவிடுகிறது!

இந்த நகருக்கு வந்தால், காளி தேவியின் தரிசனம் வேண்டுமே!
அந்தப் புகழ் மிக்க கல்கத்தா காளி தேவி கோவிலே அடுத்ததாக!

தொடரும் ......................

Latest ads

Back
Top