சிந்தை கவர் வடகிழக்கு இந்தியா - 28
மேற்படிப்பிற்கு வேறு ஊர் செல்லும்போது தங்கிய இடம், ஒரு
மேலான இடத்தினை நம் மனதில் பிடிப்பதை மறுக்க முடியாது!
'கோமள விலாஸ்' என்பது அப்படி என்னவர் மனதைக் கவர்ந்தது!
ஆவலை அடக்க முடியாமல் அந்த விடுதியைப் பார்த்து வந்தேன்!
புதிய வரவாக Banana Leaf என்ற உணவகம் தோன்றியுள்ளது; தனது
இனிய மலரும் நினைவுகள் என்னவர் நெஞ்சை நிறைத்துவிட்டது!
தான் தங்கிய அறையை மாடிப் பகுதியிலே எனக்குச் சுட்டிக் காட்ட,
நான் எடுத்தேன் ஒரு புகைப்படம்! ஆல்பத்தில் வேண்டும் அல்லவா?
இல்லம் வந்து, அரட்டைக் கச்சேரி முடித்து, மஹாபாரதம் பார்த்து,
உள்ளம் நிறைய, நல்லிரவு கூறி, அமைதியாக உறங்கப் போனோம்!
கிறித்தவர்களான நண்பர்கள், வினாயகர் முதல் இறைகளை எல்லாம்
அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவது பிரமிக்க வைத்தது என்னை!
தொலைக்காட்சியில் வரும் எல்லா தெய்வ சீரியல்களையும், தினம்
தொடர்ந்து பார்த்து ரசிக்கின்றனர், வயதில் மூத்த அந்தத் தம்பதியர்!
மறு நாள் என்னவருடைய கல்லூரியில் மாணவர்கள் கூடுகிற தினம்!
ஒரு சின்ன ஷாப்பிங் சென்று வந்ததிடக் காலை நேரம் செலவானது!
நூல் புடவைகள் கல்கத்தா நகரின் விசேஷம்; சகோதரிகளில் இருவர்
நூல் புடவைப் பிரியைகள்; எனவே இரண்டு புடவைகள் வாங்கினேன்!
மிக வினோதமாக மடித்துப் புடவைகளிச் சின்னக் கட்டை அளவிற்கு
மிக அழகாக எடுத்து அடுக்குகின்றனர்! நாம் அமரச் சின்ன ஸ்டூல்கள்!
சலித்துக் கொள்ளாமல் மிகப் பொறுமையாகப் புடவைகளைக் காட்டி,
சளைக்காமல் அவற்றை பழையபடியே மடித்து வைக்கிறார்கள் அங்கு!
மாலை என்னவர் கல்லூரிக்குச் சென்றதால் எனக்கு ஓய்வு நேரம்தான்!
வேலை முடியுமே என உடைகளை எல்லாம் பெட்டியில் அடுக்கினேன்!
தொடரும் ....................