• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...

மிக வினோதமாக மடித்துப் புடவைகளிச் சின்னக் கட்டை அளவிற்கு
மிக அழகாக எடுத்து அடுக்குகின்றனர்!


tant-saree-500x500.jpg


Photo courtesy: Google images
 
சிந்தை கவர் வடகிழக்கு இந்தியா - 29

கல்கத்தா நகரின் இரு பாலங்களையும் பற்றிக் கூறவில்லையே!
கங்கை நதி ஹூக்லி நதியாகப் பிரிந்து செல்ல, அதன் மீது இவை!

இந்த நதியும் கலங்கிய நீருடன் குப்பைகளைச் சுமந்து ஓடுகிறது!
இந்தியர் அன்னையாய்ப் போற்றும் நதிகளுக்கா இப்படி அவலம்?

பழைய பாலம் கடினமான இரும்புத் தூலங்களால் அமைந்திருக்க,
புதிய பாலம் மிக நளினமான கம்பிகளால் கட்டப்பட்டிருக்கின்றது!

இரவில் ஒளிமயமான விளக்குகள் இவற்றை அலங்கரிக்கும்! நான்
இரவில் இந்தக் காட்சியைப் பார்க்க இயலாது போனது வருத்தமே!

பழைய பாலத்தினைக் கடந்து வரும் சமயம், ஒருவன் தலையில்
பெரிய பார
த்தினைச் சுமப்பதைப் படம் எடுத்தேன்! பின்னணியில்

ஆண்களின் இயற்கை உபாதையைத் தீர்க்க ஒரு இடம் இருக்கிறது;
பெண்கள் பற்றி ஏன் எவருமே சிந்திப்பதில்லை என எண்ணினேன்!

எங்கள் பயணம் முடிவுக்கு வரும் சமயம் நெருங்கியது! அரை நாள்
எங்கள் வசம் உள்ளது; வெளியில் செல்ல விடாது மழை கொட்ட,

நான் விரும்பிய மிருகக்காட்சிசாலை விஜயம் ரத்தாகிப் போனது;
நண்பர் குடும்பத்துடன் உரையாடி மகிழ்ந்திடச் சமயம் கிடைத்தது!

விமான நிலையத்திற்குப் புறப்படும் நேரத்தில் மழையும் நின்றது;
விமான நிலையத்திலே எங்களைக் கொண்டு சேர்த்தார் ஓட்டுனர்.

பல நண்பர்களைச் சந்தித்ததும், அன்புத் தம்பியுடன் தங்கியதும்,
பல இடங்களைக் கண்டு ரசித்ததும் எங்கள் மனத்தை நிறைத்திட,

கல்கத்தாவின் புதிய பெரிய விமான நிலயத்தின் அழகை ரசித்து,
கல்கத்தா நகருக்கு விடை கொடுத்த பின், விமானம் ஏறி, இரவில்

இனிய இல்லம் வந்தோம்; இறையருள் இருந்தால் அடுத்த ஆண்டு
இன்னொரு பயணம் செல்ல விருப்பம், Kaziranga park காண்பதற்கு!

முற்றும். :pray2:

 

இறையருளால் அமைந்த ஒரு திருமணம்;
குறையாத அன்புடன் செல்லணும் பயணம்!

புதிய அனுபவங்கள் கிடைத்தால் மட்டும்,
புதிய பதிவுகள் வந்து தொடரும் மீண்டும்!

:)
 
மனிதாபிமானம்!

வயது முதிர்ந்த அன்னையுடன் செய்தோம்
பயணம் ஒன்று விமானத்தில் அன்று! முன்

இருக்கைகள் ஆறில், முன் பதிவு செய்யாமல்
இருந்தது காலியாக ஒன்றே ஒன்றுதான். அது

என் அன்னைக்கு ஒதுக்கிவிட, அவரும் அமர,
தன் முகத்திலே மந்தஹாஸத்துடன் ஒருவர்

வந்து அமர்ந்தார் அடுத்த இருக்கையில். நான்
வந்து அருகில் இருந்தால் தனக்கு உதவியென

எண்ணிய அன்னை, அவரிடம் வேண்டிய
தும்,
தன்னிருக்கையை எனக்கு அளித்து, என்னவர்

அருகில் சென்றமர்ந்தார், புன்னகை மாறாமல்!
அவரின் கால் ஒன்றை மடக்கக் கடினமென்று

உரைத்தார் அவர் பயணம் முடியும் சமயத்தில்.
உரைத்தோம் நன்றிகள் பல அவருடைய நல்ல

உள்ளத்தில் உள்ள மனிதாபிமானத்திற்கு! அவர்
உள்ளத்தில் என் அன்னை அவரின் அன்னையே!

:clap2:
 
குளு குளு பேருந்து; கிளு கிளு ஜோடிகள்!

ஒரு சனிக்கிழமை காலை; ராகு காலம்
ஒரு பொருட்டல்ல என்று எண்ணியபடி,

பேருந்து நிறுத்தத்தில் நிற்க, குளு குளு
பேருந்து வந்தது சில நிமிடங்களிலேயே!

இன்று யோகம்தான் என்று நினைத்தபடி,
சென்று ஏற, ஒரே ஒரு இருக்கை இருக்க,

மூன்று மணி நேரத்தில் புதுச்சேரியைச்
சென்று அடையலாம் எனச் சந்தோஷம்!

இருபது நிமிடப் பயணத்திற்குப் பிறகு,
ஒரு இளவட்டக் கூட்டம் பேருந்தினுள்

ஏற விழைய, நின்றவாறே பயணித்தால்
ஏறலாமென நடத்துனர் உரைக்க, உடனே

முட்டி மோதியவாறு உள்ளே ஏறி வந்து,
ஒட்டி உறவாடும் ஜோடிகளாகப் பிரிந்து,

மாமல்லபுரம் செல்லும் பாதை அருகிலே
வாயெல்லாம் பல்லாக இறங்கிவிட்டனர்!

இந்த இளசுகள் திருமணம் ஆகாதவர்கள்;
இந்திய நாட்டுக் கலாச்சாரத்தின் வேர்கள்!

பெற்றோருக்குத் தெரிவிக்காமல் பயணம்;
பெற்றோர் அறிந்தால் அவர் மனம் பதறும்!

:hug: . . . :shocked:

 
hi

இந்த இளசுகள் திருமணம் ஆகாதவர்கள்;
இந்திய நாட்டுக் கலாச்சாரத்தின் வேர்கள்!

பெற்றோருக்குத் தெரிவிக்காமல் பயணம்;
பெற்றோர் அறிந்தால் அவர் மனம் பதறும்!

hi

after some years the word' VIRGIN' may be available ONLY in books....not in real....this is applicable for both genders....
 
Last edited:
.... after some years the word' VIRGIN' may be available ONLY in books....not in real....this is applicable for both genders....
Dear TBS Sir,

They did not appear like tambram guys and gals.

But who can confirm just by appearance?? :confused:
 
தைரிய லட்சுமி!

வெய்யில் வாட்டும் கோடையில்,
வெளியில் செல்வது மாலையில்!


கடைக்கு 'நடராஜி'யாகச் சென்று,
எடை மிக்க பொருட்கள் வாங்கி,

இனி ஓரடி நடப்பதும் கடினமாக,
தானி கிடைக்குமா எனத் தேடிட,

விரைவாக வந்த தானி ஒன்றை,
அழகாக ஓட்டியவள் ஒரு பெண்!

தக்க நேரத்தில் உதவிய அவள்,
மிக்க மரியாதை கொடுப்பவள்!

தன் செல்லுலாப் பேசி எண்ணை
என்னிடம் தந்தாள், இனி உதவ!

தானிப் பயணம் தேவையெனில்,
நானினி அழைக்கலாம் அவளை!

தானும் ஆணுக்கு நிகர் எனபதை,
தானியை ஓட்டி நிரூபித்தாள்!


குறிப்பு:
'ஆட்டோ', தமிழில் 'துள்ளுந்து' ஆகி, இப்போது 'தானி' ஆனது!
 
அதிவேக ரயிலில் அதிரடிப் பயணம்!

மூன்று பெரியவர்
கள் இரு குழந்தைகள், என
அன்று ஒரு நாள், கோவைக்குப் புறப்பாடு!

ரயிலில் பயணம் பகலில் செய்தால், அதில்
ஒயிலாய் அமர இருக்கைகள் கிடைக்கும்!

முதல் வகுப்புப் பயணம் என்றாலோ, அதில்
முதல் மரியாதையும் நமக்குக் கிடைக்கும்!

உணவு பரிமாறும் 'சதாப்தி' ரயில்; எனவே
உணவுப் பொட்டலங்கள் நிறைய இல்லை!

மிகுந்த ஆவலோடு குழந்தைகள் இருக்க,
தகுந்த உணவுகளை அவர்களுக்கு எடுத்து,

சரியான சமயம் ரயில் நிலையம் சென்று,
சரியாக எம் இருக்கைகளில்அமர்ந்தோம்.

சூடான காலைச் சிற்றுண்டியோடு, நல்ல
சூடான காபியும் பசியாறப் பரிமாறினர்!

குளு குளுப் பயணம் ஏ.சி.யால்; அதிலும்,
கிடு கிடு ரயில் சத்தம் காதுகளில் விழாது!

வேடிக்கை பார்த்ததாலும், குழந்தைகளின்
வேடிக்கைப் பேச்சாலும், மனம் மகிழ்ந்தது.

இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கை!
இந்தத் தத்துவம் மிக விரைவில் புரிந்தது!

தொடரும்.....
 

அதிவேக ரயிலில் அதிரடிப் பயணம் - 2


சென்ற வேகத்தால் குழந்தைகள் குதூகலிக்க,
நின்று போக எத்தனித்தது ரயில் விரைவாக!

ஒரே நொடியில் மின்விசிறிகள் எல்லம் நிற்க,
அதே நொடியில் புரிந்தது அது மின்வெட்டு என!

எங்கள் பெட்டிக்கு அடுத்து இருந்தது - அன்று
எங்கள் ரயிலின் ஜனரேட்டர் பெட்டியே ஆகும்.

ஜனரேட்டர் இணைப்பு விடுபட்டுப் போய்விட,
ஜனங்கள் திணறினர் ஜன்னல்கள் மூடியதால்!

பெட்டிகளில் தீ பரவுமென ஒரு வதந்தி பரவிட,
முட்டி மோதினர் சிலர் ரயிலை விட்டு இறங்க!

ஒரு பணியாளர் ஓடி வந்து, அது வதந்தி என்றிட,
ஒருவாறு அமைதி பெற்றனர் பயணித்தவர்கள்.

எப்படிப் பெட்டியை மீண்டும் இணைப்பதென்று,
எவரும் அறியவில்லை! பல ரயில்கள் எம்மைக்

கடந்து அதி வேகத்தில் சென்றிட, நேரம் மட்டும்
கடந்து சென்றது; ஜனரேட்டர் இணையவில்லை!

ரயிலில் இருந்து இறங்கினோம் பலர்; ஏனெனில்
ரயிலுக்குள்ளே புழுக்கம் அதிகரித்து வாட்டியது!

நான்கு மணி நேரப் போராட்டம்; பின்னர் விடிவு!
நான்கு மணிகள் தாமதம் ஆனாலும், வழியிலே

மழைச் சாரல்; மாலை நேரம்; மனதை மயக்கிட
அரைவட்ட வடிவத்தில் மிக அழகிய வானவில்!

இதைக் கண்டு மகிழத்தான் எங்கள் ரயில் - அந்த
இறைவன் திருவிளையாடலினால் நின்றதோ?

அன்புடன் சகோதரி வரவேற்க, அவளுடன் பகிர.
அன்று இருந்தன எங்களின்
புதிய அனுபவங்கள்!


இந்த அனுபவங்கள் நிறைவுற்றன. :)

 
மீண்டும் நிலவுப் பயணம்!

சொகுசுப் பேருந்தில் சென்றால்
சுகமான பயணமென நினைத்து,

நேற்று அதில் ஏறினேன்; ஆனால்
தோற்றுப் போனது என் எண்ணம்!

குப்பைக் கூளமாகத் தளம்; அதை
எப்போதுதான் சுத்தம் செய்தாரோ?

மழை வெள்ளம் தந்த சேறும்கூட
நுழைவுப் படிகளில் நிறைந்திட,

கிழித்த பல பழைய 'டிக்கட்'களும்,
கிழிந்பல 'பிஸ்கட்' உறைகளும்,

வதங்கி வாடிப்போன பூச் சரங்களும்,
வருத்தின பயணிகளின் கண்களை!

வேகத் தடைகளே இனி வேண்டாம்;
வேகம் குறையும் சாலைக் குழிகளால்!

நிலவுப் பயணம் செல்ல எவரும்
நிலவுக்குச் செல்ல வேண்டாம்!

சிங்காரச் சென்னைப் பேருந்தில்
எங்கேனும் பயணித்தால் போதும்!

மனம் தளராது பயணம் செய்யுங்கள்;
தினம் நிலவுப் பயணம் செய்யலாம்!

cheer2.gif
 
யாரிடம் போய்சொல்ல

மீண்டும் நிலவுப் பயணம்!

சொகுசுப் பேருந்தில் சென்றால்
சுகமான பயணமென நினைத்து,

நேற்று அதில் ஏறினேன்; ஆனால்
தோற்றுப் போனது என் எண்ணம்!

குப்பைக் கூளமாகத் தளம்; அதை
எப்போதுதான் சுத்தம் செய்தாரோ?

மழை வெள்ளம் தந்த சேறும்கூட
நுழைவுப் படிகளில் நிறைந்திட,

கிழித்த பல பழைய 'டிக்கட்'களும்,
கிழிந்பல 'பிஸ்கட்' உறைகளும்,

வதங்கி வாடிப்போன பூச் சரங்களும்,
வருத்தின பயணிகளின் கண்களை!

வேகத் தடைகளே இனி வேண்டாம்;
வேகம் குறையும் சாலைக் குழிகளால்!

நிலவுப் பயணம் செல்ல எவரும்
நிலவுக்குச் செல்ல வேண்டாம்!

சிங்காரச் சென்னைப் பேருந்தில்
எங்கேனும் பயணித்தால் போதும்!

மனம் தளராது பயணம் செய்யுங்கள்;
தினம் நிலவுப் பயணம் செய்யலாம்!

cheer2.gif
இயற்கை ஏற்படுத்திய சதியோ
இல்லை மனிதன் விளைந்திட்ட
துன்பமோ- இந்த பெருவெள்ளம்


மமதை கொண்டோர் தோட்டத்தில்
மூன்றுநாள் சோமபான மயக்கத்தில்
மூழ்கித் திளைத்த பயனாய்-


முன்னூறு சொச்சம் உயிர்கள் -
விலையில்லா பயனாளியாய் ஆக்கப்பட்ட
சோகத்தை யாரிடம் போய்சொல்ல !
 
இயற்கை ஏற்படுத்திய சதியோ
இல்லை மனிதன் விளைந்திட்ட
துன்பமோ- இந்த பெருவெள்ளம்


மமதை கொண்டோர் தோட்டத்தில்
மூன்றுநாள் சோமபான மயக்கத்தில்
மூழ்கித் திளைத்த பயனாய்-


முன்னூறு சொச்சம் உயிர்கள் -
விலையில்லா பயனாளியாய் ஆக்கப்பட்ட
சோகத்தை யாரிடம் போய்சொல்ல !

hi


வாழ்கை என்பது முன்வினை செயலா
அல்லது பின்வுனை செயலா ...
எது எப்படி ஆனாலும்......
வலி வந்தாதான் வலி தெரியும்....

எதற்கும் எதையும் தாங்கும்
இதயம் வேண்டும் என
இறைவனிடம் வேண்டி கொள்கிறோம்...

துன்பம் என்பது சில நிமிடம் ...
அதன் வடு பல ஆண்டுகாலம் ....
 
நண்பர்களே!

புதுக் கவிதைகளுக்கு நன்றி! :)


மனித குலத்திற்கு, இறைவன்
மனமுவந்து அளித்தவற்றில்,

இரு வரங்களே முதன்மை!
மறதியும் உறக்கமும் அவை!!

:der: . . . :sleep:
 
Sorry to have troubled you, Praveen!
Time just flies and I did not realize that it was more than three months since I posted in this thread. :clock:
 
மனம் ஒப்புமா பெண்ணே

IMG_20160410_154103.jpg

சிகரம் தொடும் தேவதாரு
சிரித்து ஆடும் மந்திகள்
வண்ணப் பூக்களின் வாசம்
வளைந்து ஓடும் ஓடை


அதில் துள்ளியாடும் மான்
இதழ் விரியும் மொட்டு
தேன் சொட்டும் கூடு
தாள் வணங்கும் கொடிகள்


நெடிதுயர்ந்த சந்தன மரங்கள்
நிழல் தரும் தருக்கள்
நீங்க மறுக்கும் நிழல்
நிலவின் ஒளியில் இராகம்


கொட்டிகிடுக்கும் அழகு இங்கு
கானகத்திற்கு மட்டுமே சொந்தம்
என்ற விதிமுறை இருந்தால்
மனம் ஒப்புமா பெண்ணே?


அன்புடன் சிவசண்முகம்
7:32 AM Phoenix Arizona USA
 
கடல் கடந்து மூன்று திங்கள் ஆனாலும்,
உடன் அனுபவங்கள் பகிர விழைந்தாலும்,

இரு இளம் தளிர்கள் அன்புடன் அருகிலே
இருக்க, வருமோ க(வி)தைகள் எளிதிலே?

எனினும், விரைவில் தொடரும்..... :)
 
கடல் கடந்து மூன்று திங்கள் ஆனாலும்,
உடன் அனுபவங்கள் பகிர விழைந்தாலும்,

இரு இளம் தளிர்கள் அன்புடன் அருகிலே
இருக்க, வருமோ க(வி)தைகள் எளிதிலே?

எனினும், விரைவில் தொடரும்..... :)

Nandri
 
நெடிய பயணம்! நீண்ட நாட்கள்! மூன்று திங்கள்! மீண்டும் வருகைக்கு நன்றி!!
 

Latest ads

Back
Top